பிரபுதேவாவுக்கும் நடிகை நிக்கி கல்ராணிக்கும் திருப்பதியில் திருமணம்!

நடிகர் பிரபுதேவாவின் பெயர் நயன்தாரா, ஹன்சிகா மோத்வானி போன்றவர்களுடன் காதல் சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளது. இப்போது அவர் சக்தி சிதம்பரம் இயக்க...

நடிகர் பிரபுதேவாவின் பெயர் நயன்தாரா, ஹன்சிகா மோத்வானி போன்றவர்களுடன் காதல் சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளது. இப்போது அவர் சக்தி சிதம்பரம் இயக்கும் சார்லி சாப்ளின் 2 படத்தில் நடித்துவருகிறார்.

2002 ல் வெளியான சார்லி சாப்ளின் படத்தின் தொடர்ச்சியான இதில் நடிகை நிக்கி கல்ராணி, அடா சர்மா ஆகியோரும் நடிக்கிறார்கள். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது கோவாவில் நடைபெற்று வருகிறது.

இயக்குனர் சொல்லும் போது திருப்பதி போனால் திருப்பம் வரும் என்பார்கள். பிரபு தேவாவுக்கும், நிக்கி கல்ராணிக்கும் திருமணம் திருப்பதியில் நடைபெறும்.

அதற்காக அவர்களின் இரு குடும்பங்களும் போகும் போது, போய் வந்தபிறகும் சந்திக்கும் கலகலப்பான சம்பவங்கள் தான் சார்லி சாப்ளின் 2 படத்தின் கதை என கூறியுள்ளார்.

மேலும் தயாரிப்பாளா் டி.சிவா சொல்லும்போது உலகின் காமெடி மேதையான சார்லி சாப்ளினின் 125-வது பிறந்தநாள் விழாவாக இவ்வருடம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த தருணத்தில் இந்த படம் உருவாகுவது சாப்ளினுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இருக்கும் என்று கூறினார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About