ஜிஎஸ்டி குழப்பங்கள்; வந்தாச்சு புதிய செயலி!

ஜிஎஸ்டி குழப்பங்களுக்கு தீர்வு சொல்லும் விதமாக புதிய மொபைல் செயலி ஒன்றை மத்திய அரசு  அறிமுகம் செய்திருக்கிறது. கடந்த ஜூலை 1 ஆம் தேதி ஜிஎஸ்ட...

ஜிஎஸ்டி குழப்பங்களுக்கு தீர்வு சொல்லும் விதமாக புதிய மொபைல் செயலி ஒன்றை மத்திய அரசு  அறிமுகம் செய்திருக்கிறது.

கடந்த ஜூலை 1 ஆம் தேதி ஜிஎஸ்டி அமலானது முதல் குழப்பங்களும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மத்திய அரசும் பல்வேறு அறிவிப்புகளை தொடர்ந்து அறிவித்து வந்தாலும் ஒரு தெளிவான புரிதல் பொதுமக்களுக்கு இன்னமும் கிடைக்கவில்லை. இதில்  முக்கியமானது எந்த எந்த பொருள்களுக்கு எவ்வளவு வரி என்ற குழப்பம்.

இந்நிலையில் மத்திய அரசாங்கம் நேற்று புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ஜிஎஸ்டி ரேட்ஸ் ஃபைண்டர் (GST Rates Finder) என பெயரிடப்பட்டுள்ள இந்த செயலியை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தொடங்கி வைத்தார். இந்த செயலி மூலம் எந்த பொருள்களுக்கும் சேவைகளுக்கும் எத்தனை சதவிகிதம் வரி என்பதை தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயலியை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியில் சுங்கத் துறை அதிகாரிகளும் உடனிருந்தனர். மத்திய சுங்கத் துறை தலைவர் வனஜா சர்னா மற்றும் சந்தீப் ராவல் ஆகியோர்தான் இந்த செயலியினை உருவாக்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About