தமிழகத்தில் 15 ஆண்டுகளாகக் குப்பை ஆட்சி நடக்கிறது! கமல் காட்டம்

தமிழகத்தில் 15 வருடமாகக் குப்பை ஆட்சி நடைபெற்று வருவதாக நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மும்பையில் நட...

தமிழகத்தில் 15 வருடமாகக் குப்பை ஆட்சி நடைபெற்று வருவதாக நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மும்பையில் நடந்த தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் (India Today Conclave) பேசிய கமல்ஹாசன், நான் எனக்கான நேரத்தை
வாழ்ந்து முடித்து விட்டேன். தற்போது புதிய வாழ்வைத் தொடங்கியுள்ளேன். தமிழகத்தில் 15 வருடமாகக் குப்பை ஆட்சி
நடைபெற்று வருகிறது. அடுத்த தேர்தலில் எங்கள் கட்சி வெற்றி பெறவே முயற்சி செய்வோம். பணம் சம்பாதிக்க நான் அரசியலில் இறங்கவில்லை. மக்கள் நீதி மய்யம் எனக்கானது இல்லை; மக்களுக்கான கட்சி. அரசியலிலிருந்து பின்வாங்கும் எண்ணம் இனி எனக்கு இல்லை. என் மாநிலத்திற்காகவும், மக்களுக்காகவும் சேவை செய்தபடியே இறக்க விரும்புகிறேன்.

நான், தி.மு.க தலைவர் கருணாநிதி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோரின்
அரசியலில் நான் ரசிக்கின்ற விசயங்கள் அதிகம் உள்ளது. அதனாலேயே அவர்களைச் சந்தித்தேன். விரைவில் கர்நாடக முதல்வர்
சித்தராமையாவையும் சந்திக்க உள்ளேன். நான் பாஜக-விற்கு எதிரானவன் இல்லை, மக்களுக்கு எதிராகச் செயல்படும் அனைத்துக் கட்சி, பிராண்ட் என எந்த வித்தியாசமும் பார்க்காமல் அனைத்துக்கும் எதிரானவன். வருங்காலத்தில் ஒருவேளை எனது கட்சி மக்களுக்கு எதிராக செயல்பட்டால் நான் எனது கட்சிக்கும் எதிரானவன்'' எனக் கூறினார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About