சீரியலில் நடிக்கும் பாபி சிம்ஹா! படவாய்ப்பு குறைந்தது காரணமா?

தேசிய விருது வென்ற நடிகர் பாபி சிம்ஹாவிற்கு தற்போது கைவசம் பல படங்கள் உள்ளன. வில்லன், ஹீரோ என இரண்டு ட்ராக்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்...

தேசிய விருது வென்ற நடிகர் பாபி சிம்ஹாவிற்கு தற்போது கைவசம் பல படங்கள் உள்ளன. வில்லன், ஹீரோ என இரண்டு ட்ராக்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் அவர். தற்போது விக்ரமின் சாமி 2 பட ஷூட்டிங்கில் பிஸியாக நடித்துவருகிறார்.

இந்நிலையில் அடுத்து பாபி சிம்ஹா ஒரு வெப் சீரியலில் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் அவருக்கு ‘ஜிகர்தண்டா’ படத்தைப் போல பயங்கர வில்லன் கேரக்டர் என்று கூறப்படுகிறது. பாபி சிம்ஹா ஜோடியாக பார்வதி நாயர் நடிக்க, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த சீரியலை தயாரிக்கிறது.

சமீபத்தில் தான் நடிகர் மாதவன் நடித்த Breathe வெப் சீரியல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. அதை பின்பற்றித்தான் தற்போது வெப் சீரியல் தயாரிக்கும் முனைப்பில் ட்ரீம் வாரியர் நிறுவனம் இறங்கியுள்ளது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About