முகேஷ் அம்பானி வீட்டு மருமகள்- யார் இந்த பெண்?

நாட்டின் மிகப்பெரிய கோடீஸ்வரரும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிபருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானிக்கும், மிகப்பெரிய வைர வியாபாரியான ர...

நாட்டின் மிகப்பெரிய கோடீஸ்வரரும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிபருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானிக்கும், மிகப்பெரிய வைர வியாபாரியான ரோஸி புளூ டைமண்ட்ஸ் நிறுவனத்தின் அதிபர் ருஷெல் மேத்தாவின் மகள் ஸ்லோகா மேத்தாவுக்கும் நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் அதிபரான முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி (வயது26). இவர் அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்துள்ளார்.

ஆகாஷ் அம்பானிக்கும், ரோஸி புளூ டைமண்ட்ஸ் அதிபர் ருஷெல் மேத்தா, மோனா மேத்தா தம்பதியின் 3வது மகள் ஸ்லோகா மேத்தாவுக்கும் இடையே காதல் இருந்து வந்தாக தகவல்கள் வெளியாகிய நிலையில் இந்த நிகழ்வு நடந்துள்ளது.

சுலோகா மேத்தாவும் ஆகாஷ் அம்பானியும் பள்ளித் தோழர்கள் ஆவர். இவர்கள் இருவரும் முகேஷ் அம்பானியின் திருபாய் அம்பானி இண்டர்நேஷனல் பள்ளியில் ஒன்றாகப் படித்தனர்.

2009-ம் ஆண்டுப் சுலோகா மேத்தா பள்ளி படிப்பை முடித்துவிட்டு அமெரிக்காவிலுள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்

அங்கு மானுடவியல் துறையை தேர்வு செய்து 2013ம் ஆண்டு இளங்கலை பட்டம் பெற்றார்.

2014ம் லண்டனில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர் தற்போது ரோஸி ப்ளூ ஃபவுண்டேஷன் நிறுவனத்தினை நடத்தி வருகிறார்.

இந்த ரோஸி ப்ளூ டைமண்ட்ஸ் நிறுவனம் இந்தியா மட்டும் இல்லாமல் துபாய், பெல்ஜியம், அமெரிக்கா, ஜப்பான், ஹாங் காங் மற்றும் சீனா ஆகிய நாடுகளிலும் வைரம் மற்றும் நகை வியாபாரங்களைச் செய்து வருகிறது.

இந்தியாவில் மட்டும் 26 நகரங்களில் 36 கடைகளை ரோஸி ப்ளூ டைமண்ட்ஸ் நிறுவனம் நிறுவியுள்ளது.

2014ம் ஆண்டு ரோஸி ப்ளூ ஃபவுண்டேஷன் நிறுவனத்தின் இயக்குனராக இருந்த சுலோகா மேத்தா 2015ம் ஆண்டு ConnectFor எனும் நிறுவனத்தை தொடங்கினார்.

இந்த ConnectFor பெருநிறுவனங்களை நுகர்வோர்களிடம் கொண்டுசேர்க்கும் பணிகளை செய்து வருகிறது.

பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள நீரவ் மோடியின் நெருங்கிய உறவினர் சுலோகா மேத்தாவின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About