தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்.. அவன் யார்?

 தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்.. அவன் யார்? 1. தட்டான் தட்டாதவன் 2. குட்டைப் பையன் வாமனன் குழப்பமா இருக்கா.. ...

 தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்.. அவன் யார்?

1. தட்டான்

தட்டாதவன்

2. குட்டைப் பையன்

வாமனன்

குழப்பமா இருக்கா..

நம்ம மஹாபலிச் சக்கரவர்த்தி இருக்காரே அதாங்க நம்ம ஓணம் பண்டிகை ஹீரோ , அவர் 99 அசுவமேத யாகம் செஞ்சு முடிச்சிட்டு நூறாவது அசுவமேத யாகம் செய்யறார். அவரிடம் சென்று யார் தானம் கேட்டாலும் தட்டாமல் தருவதால் அவரே தட்டான் ஆவார் .

அதென்னங்க சட்டை போடுவது?
சட்டை எதுக்காகப் போடறோம்? நெஞ்சை மறைக்கப் போடுகிறோம்..

அப்படின்னா தட்டானுக்கு சட்டை போடுவது என்றால்?

தட்டாமல் தரும் மஹாபலி சக்கரவர்த்தி ஈகை நெஞ்சை மறைப்பது.. அதாவது தானம் தரமுடியாதபடிக்குத் தடுப்பது.

நம்ம சுக்ராச்சாரியார் என்ன செய்யறார்? மஹாபலிச் சக்ரவர்த்தியை தடுக்கிறார். எச்சரிக்கிறார். அதையும் மீறி அவன் தானம் தர நீர் வார்க்க முயற்சிக்கையில் சிறுவண்டாய் மாறி நீர் வராதபடிக்கு அடிக்கிறார்.

அப்ப நம்ம குட்டை பையன் வாமனர் என்ன செய்யறார். ஒரு குச்சியை (கட்டை) எடுத்து தலையில் குத்திவிட சுக்ராச்சாரியருக்கு ஒரு கண் ஊனமாகிடுது.

அதாங்க

தட்டானுக்குச் சட்டை போட்டால்
குட்டைப் பையன்
கட்டையால் அடிப்பான்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About