வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் பட பாணியில் காப்பியடித்த ஐ.பி.எஸ் அதிகாரி!
October 30, 2017மத்தியப் பணியாளர் தேர்வு வாரியம் (UPSC) நடத்தும் ஐ.ஏ.எஸ் மெயின் தேர்வில் காப்பியடித்த ஐ.பி.எஸ் அதிகாரி ஷபீர் கரிம் என்பவர் பிடிபட்டார். சென...
சென்னை மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதிய ஷபீர் கரிம், ப்ளூடூத் ஹெட்செட் மூலம் மனைவியிடம் கேள்விகளுக்கான பதிலைப் பெற்று எழுதியதாகத் தெரிகிறது. தேர்வறைக் கண்காணிப்பாளர் அளித்த புகாரின் பேரில், அவரிடம் எழும்பூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஐ.ஏ.எஸ் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 420-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஹைதராபாத்திலிருந்து உதவிய அவரின் மனைவியிடமும் விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிகிறது.
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவரான ஷபீர் கரிம், நெல்லை மாவட்டம் ஏர்வாடி காவல்நிலையத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஜூலை வரை பயிற்சியில் இருந்தவர். தற்போது முசௌரியில் பயிற்சியில் இருந்த அவர், யு.பி.எஸ்.சி தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டபோது பிடிபட்டார். சரண் இயக்கத்தில் கமல் நடித்து வெளியான வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில், மருத்துவத் தேர்வு ஒன்றை ப்ளூடூத் ஹெட் செட் மூலம் கிரேஸி மோகனிடமிருந்து பதில்களைப் பெற்று கமல் எழுதுவதுபோல் காட்சி ஒன்று இடம்பெற்றிருக்கும்.
சொப்பன சுந்தரி கார்! சோகமாயிருச்சே சார்!
October 30, 2017ஐயோ பாவம்… தமிழ்சினிமாவின் சொப்பன சுந்தரிகளில் ஒருவரான அமலா பால் கடும் சிக்கலுக்கு ஆளாகியிருக்கிறார். (சட்டத்தின் சந்து பொந்துகளில் புகுந்த...
ஐயோ பாவம்… தமிழ்சினிமாவின் சொப்பன சுந்தரிகளில் ஒருவரான அமலா பால் கடும் சிக்கலுக்கு ஆளாகியிருக்கிறார். (சட்டத்தின் சந்து பொந்துகளில் புகுந்து அவரை காப்பாற்றிவிட ஒரு பெரும் கூட்டம் இந்நேரம் தயாராகியிருக்கும்) ஆசைப்பட்ட பென்ஸ் காரை, அனுபவிப்பதற்குள் வந்தது சிக்கல். அவர் பல லட்ச ரூபாய் வரி ஏய்ப்பு செய்துவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.குற்றம் நடந்தது என்ன?
பாண்டிச்சேரிக்கு துணை மாநிலம் என்கிற அந்தஸ்து உண்டு. பிரெஞ்ச் ஆதிக்கத்துடன் சந்தோஷமாக இருக்கும் இம்மாநிலத்தில் பல்வேறு பொருட்களுக்கு வரி கம்மி. முக்கியமாக கார், ஸ்கூட்டர் போன்ற வாகனங்களுக்கு இந்தியாவின் மற்ற மாநிலங்களில் போடப்படும் வரியை விட பல மடங்கு குறைவு. இதை பயன்படுத்தி பாண்டிச்சேரியில் ஒரு போலி முகவரியை தயார் செய்து அந்த முகவரியை காட்டி பென்ஸ் காரை பர்சேஸ் செய்துவிட்டார் அமலாபால். (ஐடியா கொடுத்த புண்ணியவானுக்கும் சேர்த்து ஃபெயின் போடுங்க மை லார்ட்)
கேரளாவில் இந்த காரை ஓட்டி வந்த அவரது தில்லுமுல்லு சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. சம்பந்தப்பட்ட முகவரியிலிருக்கும் பேச்சுலர் பையன், எனக்கு அமலா பால் யாரென்றே தெரியாது என்று கூறிவிட, படக்கென்று அமுக்கிவிட்டனர் அதிகாரிகள். அமலாபால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இப்படி வரி ஏய்ப்பு செய்தால் குறைந்த பட்சம் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்குமாம்.
இந்தியாவின் சட்ட திட்டத்தின் மீது அபார நம்பிக்கை கொண்ட மக்கள், இந்த செய்தியை எப்படி எடுத்துக் கொள்வார்களோ? அது கிடக்கட்டும்… அந்த காரின் அடிப்படை விபரங்கள் கீழே-
Vehicle Number : PY05D 0500
Owner Name : AMALA PAUL
Registration Authority : Registration Authority: oulgaret
Registration Date: 09-Aug-2017, Age:0 Years & 2 Months old
Vehicle Model : MERCEDES BENZ INDIA LTD, MERCEDES-BENZ S350 D L
Vehicle Class : L.M.V. (CAR) (LMV)
Vehicle Type : DIESEL
Chasis No : L.M.V. (CAR) (LMV)
Engine No : 642861419XXXXX (RTO has masked the engine no for security reasons)
வெடி வைக்கும் வடிவேல்! துடிதுடிக்கும் ஷங்கர்! இம்சை அரசனின் ‘இம்சை’!
October 30, 2017‘ஒனக்கு வந்தா ரத்தம்… எனக்கு வந்தா தக்காளி சட்னியா?’ தமிழ் கூறும் நல்லுலகத்தின் திருக்குறளாகிவிட்ட இந்த ரெண்டு வார்த்தைக்குள், அயோடக்ஸ், அன...
தமிழ் கூறும் நல்லுலகத்தின் திருக்குறளாகிவிட்ட இந்த ரெண்டு வார்த்தைக்குள், அயோடக்ஸ், அனாசின் உள்ளிட்ட அத்தனை வலி நிவாரணிகளையும் குழைத்து அடித்த பெருமை வடிவேலுவுக்கு மட்டுமே உண்டு.
அதே டயலாக்கை அவருக்கே ரிப்பீட் அடிக்க வேண்டிய கட்டாயத்திலிருக்கிறது தமிழ்சினிமா. ஏன்? ‘இம்சை அரசன்’ வடிவேலு தரும் இம்சைகள் அப்படி. அதுவும் இந்தியாவே உச்சந்தலையில் வைத்துக் கொண்டாடும் டைரக்டர் ஷங்கர், வடிவேலுவிடம் சிக்கிக்கொண்டு தவிக்கிற கொடுமை இருக்கிறதே… வற்றிய குளம் நிரம்பி, வாளை மீனே துள்ளுகிற அளவுக்கு கண்ணீர் நிரம்பிய கண்றாவி அது!
வடிவேலுவுக்கு ஹீரோ அந்தஸ்தை கொடுத்த முதல் படம் இம்சை அரசன் 23 ம் புலிகேசி. ஏறத்தாழ ரஜினி படத்தின் ஓப்பனிங். அதே அளவுக்கு கலெக்ஷன் என்று இன்டஸ்ட்ரியையே திரும்பி பார்க்க வைத்த படம் அது. அதற்கப்புறம் சிம்புதேவன் இயக்கிய படங்களும் ஓடவில்லை. வடிவேலு தனிப்பட்ட முறையில் ட்ரை பண்ணிய இந்திரலோகத்தில் நா அழகப்பன், எலி மாதிரியான படங்களும் சர்வ நாசம் ஆனதுதான் மிச்சம். நடுவில் சில வருஷங்கள் வன வாசம் போயிருந்த வடிவேலு கத்திசண்டை படத்தின் மூலம் திரும்ப என்ட்ரி கொடுத்தும், துளி பிரயோஜனம் இல்லை.
அண்மையில் வந்த ‘மெர்சல்’ படத்திலும் கூட, வடிவேலுவின் பர்பாமென்ஸ் ஜீரோவுக்கும் மேலே. சில்லரைக்கும் கீழே.
இந்த உண்மைகள் எதுவும் புரியாத வடிவேலு, தான் டாப்பில் இருந்த நாட்களை இப்பவும் நினைத்துக் கொண்டு கொடுக்கிற இம்சைகள்தான் இந்த கட்டுரையின் மெயின் பகீர்.
ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் படம் எடுப்பதை நிறுத்தி பல வருஷங்கள் ஆகிவிட்டது. இந்த நிலையில் மீண்டும் அவரை அணுகிய டைரக்டர் சிம்புதேவன், “இம்சை அரசன் 23 ம் புலிகேசி படத்தின் பார்ட் 2 எடுக்கலாம்” என்று யோசனை கூற, ஷங்கரும் சம்மதித்தார். இவருடன் இணைந்து படத்தை தயாரிக்க முன் வந்தது லைக்கா நிறுவனம். சில பல பேச்சு வார்த்தைகளுக்குப் பின், வடிவேலுவுக்கு 3 கோடி சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு ஒரு கோடி அட்வான்ஸ் வழங்கப்பட்டது. 2016 ம் ஆண்டுக்குள் படத்தை முடித்துவிடுவதாக திட்டம் போட்டார்கள்.
பூஜைக்காக ஒரு நாள் குறித்து விட்டு காலை எட்டு மணிக்கு வருவதாக ஒப்புக் கொண்டு கிளம்பினார் வடிவேலு. எட்டு மணிக்கெல்லாம் யூனிட்டே வந்து காத்திருக்க… பத்து மணி வரை அந்தப்பக்கமே வரவில்லை வடிவேலு. ‘ஷங்கர் சாரே வந்து காத்திருக்கார்’ என்று தகவல் போன பின்பும் நோ ரெஸ்பான்ஸ். 2.0 படத்தின் வேலைகளை போட்டுவிட்டு, வடிவேலுவுக்காக சுமார் மூன்று மணி நேரம் காத்திருந்தார் ஷங்கர். இப்படி முதல் நாள் ஷுட்டிங்கே முணுமுணுப்புடன் துவங்க, எவ்வித கோபத்தையும் காட்டிக் கொள்ளாமல் கிளம்பிப் போனாராம் ஷங்கர்.
அதற்கப்புறமும் படப்பிடிப்புக்கு வரவேயில்லை வடிவேலு. ‘கதையை முழுசா கேட்கணும். அதுல இதை மாற்றணும். அதை மாற்றணும்’ என்று சொல்லி சொல்லியே நாட்களை கடத்தி வந்திருக்கிறார். அதற்குள் வடிவேலும் வேறு வேறு படங்களில் நடிக்கக் கிளம்ப… சும்மாவே போனது நாட்கள். மறுபடியும் பேச்சு வார்த்தை துவங்கி வடிவேலுவை கொண்டு வர முயன்ற சிம்புதேவனுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. ‘இன்னும் இரண்டு கோடி அதிகம் கொடுத்தால் வர்றேன்’ என்றாராம் வடிவேலு. எப்படியோ பேசி அந்த இரண்டு கோடியை ஒரு கோடியாக குறைத்து மேலும் கொஞ்சம் அட்வான்ஸ் கொடுத்து மீண்டும் படப்பிடிப்புக்கு நாள் குறித்திருக்கிறார்கள்.
ஈவிபி ஸ்டூடியோஸ், மற்றும் அடையாறில் இன்னொரு இடத்தில் செட் என்று இரண்டு செட்டுகள் போடப்பட்டன. இவ்விரண்டு செட்டுகளிலும் சேர்த்தே சுமார் ஆறு நாட்கள் மட்டும் நடித்துக் கொடுத்த வடிவேலு சொல்லாமல் கொள்ளாமல் ஊருக்கு போய்விட, படக்குழுவினருக்கு பேரதிர்ச்சி. ‘மியூசிக் டைரக்டர் ஜிப்ரான் பிடிக்கல. அவரை மாற்று. லிரிக் பிடிக்கல. அவரை மாற்று. கதையில் இந்த சீன் பிடிக்கல. அதை மாற்று’ என்று வடிவேலு தருகிற இம்சைகள் சிம்புதேவனை நிலைய குலைய வைத்துவிட்டதாம்.
நடுவில் ‘எம்.ஜி.ஆருக்கு ஜோடியா நடிச்ச வெண்ணிறாடை நிர்மலாதான் எனக்கு அம்மாவா நடிக்கணும்’ என்று அடம் பிடித்த வடிவேலுவை சமாளிக்க முடியாமல், நடிப்பதையே விட்டுவிட்டு வீட்டில் ஓய்வெடுத்து வந்த வெண்ணிறாடை நிர்மலாவை கமிட் பண்ணியிருக்கிறார்கள். தினப்படி 40 ஆயிரம் தந்தால் நடிக்கலாம் என்று சம்மதித்த அவருக்கு சில லட்சங்கள் கொடுக்கப்பட்டுவிட்டன. ஆனால் ஒரு நாள் கூட இருவரையும் வைத்து ஷுட்டிங் எடுக்க முடியவில்லையாம் சிம்புதேவனுக்கு.
வடிவேலுவுடன் நடிக்கும் நட்சத்திரங்கள் லிஸ்ட்டிலிருந்த கருணாஸ், கஞ்சா கருப்பு, யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன் பெயர்களையெல்லாம் அடித்து திருத்திய வடிவேலு, ‘இவனுங்க எவனையும் நான் கண்லயே பார்க்கக் கூடாது’ என்று கூறியதால், அந்த ஏரியாவிலும் யாரை பில்லப் பண்ணுவது என்று குழம்பிப் போன சிம்புதேவன், ஒரு நாள் ஷங்கரை சந்தித்து எல்லாவற்றையும் குமுறலோடு கொட்டித் தீர்த்தாராம்.
இவர் சொல்வதற்கு முன்பே எல்லா இம்சைகளையும் கேள்விப்பட்டிருந்த ஷங்கர், வடிவேலுவை தொடர்பு கொள்ள முயன்று அதுவும் தோல்வியில் முடிய… சில தினங்களுக்கு முன் தயாரிப்பாளர் சங்கத்திற்கு நேரடியாகவே வந்துவிட்டாராம்.
பொதுவாக இன்டஸ்ட்ரியில் டாப்பில் இருக்கிற ரஜினி, கமல், விஜய், அஜீத் போன்ற நடிகர்களும், ஷங்கர் மணிரத்னம் போன்ற இயக்குனர்களும் தங்கள் பிரச்சனைகளை வீட்டிலிருந்தபடியே சரி செய்து கொள்வார்கள். ஆனால் ஷங்கர் நேரடியாகவே தயாரிப்பாளர் சங்கத்திற்கு வந்தார் என்றால், அதன் வீரியம் எப்படியிருக்கும்? தகவலை கேள்விப்பட்ட விஷால் ஓடோடி வந்தாராம் சங்கத்திற்கு.
நடந்த கதை அத்தனையையும் விஷாலிடம் விவரித்த ஷங்கர், “இந்தப் படத்தால் எனக்கு பல கோடிகள் நஷ்டம். போனால் போகட்டும்… வடிவேலுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சுமார் இரண்டரை கோடி பணத்தை திரும்ப வாங்கிக் கொடுங்க. நான் வேறோரு ஹீரோவை வைத்து இந்தப்படத்தை முடித்துக் கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறாராம்.
நடிகர் சங்கத் தேர்தலில் விஷாலுக்கு உறுதுணையாக நின்றவர் வடிவேலு. தொழில் நேர்மைக்கும், வகிக்கிற பதவிக்கும் பெருமை சேர்க்கிறவர் விஷால். விருப்பு வெறுப்பை ஒதுக்கி வைத்துவிட்டு தீர்ப்பு சொல்ல வேண்டிய இக்கட்டில் இருக்கிறார் விஷால்.
எப்படி தீரப்போகிறதோ இந்த பிரச்சனை?
பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினி ஆனார் BiggBoss புகழ் ஜுலி
October 30, 2017BiggBoss என்ற நிகழ்ச்சி மூலம் பலரின் கோபத்திற்கு ஆளானவர் ஜுலி. வீர தமிழச்சி என்று ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பாராட்டப்பட்ட இவர் இந்த ந...
இவர் அடுத்த என்ன செய்ய போகிறார் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் ஜுலி கலைஞர் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியின் தொகுப்பாளராக கமிட்டாகியுள்ளார்.
திங்கள் முதல் வெள்ளி வரை அவரது ஷோ ஒளிபரப்பாக இருக்கிறதாம். ஜுலி தொகுத்து வழங்க இருக்கும் அந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக கலா மாஸ்டர் மற்றும் நடிகர் கோகுல் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
மோகன் லாலுக்காக இப்படி ஒரு ஏற்பாடா? பிரம்மாண்ட மகாபாரதம், லேட்டஸ்ட் அப்டேட்
October 30, 2017பாகுபலி 2 படத்தை தொடர்ந்து இதிகாசமான மகாபாரதத்தை படமாக எடுக்கப்போவதாக தகவல்கள் வெளியானது. அப்படத்தை விட அதிமான ரூ 1000 கோடி பட்ஜெட் இப்படத்...
பாகுபலி 2 படத்தை தொடர்ந்து இதிகாசமான மகாபாரதத்தை படமாக எடுக்கப்போவதாக தகவல்கள் வெளியானது. அப்படத்தை விட அதிமான ரூ 1000 கோடி பட்ஜெட் இப்படத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.இதில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் பீமனாக நடிக்க இருக்கிறார். இப்படம் குறித்த விஷயத்தை இயக்குனர் ஸ்ரீகுமார் சமீபத்தில் பகிர்ந்துள்ளார்.
இதில் அவர் தற்போது இப்படத்திற்கான முன் கட்ட வேலைகள் நடந்துவருவதாகவும், விரைவில் வரும் ஜனவரி 19 ம் தேதி இப்படத்தில் முழுமையாக என்னை அர்பணிக்கப்போகிறேன் என அவர் கூறியுள்ளார்.
மேலும் இப்படத்திற்காக அவர் இன்னும் 15 கிலோ எடையை அதிகரித்துள்ளாராம். மேலும் 30 வயது போன்ற தோற்றம் இருக்குமாறு உடலை வடிவமைப்பதற்காக பிரான்ஸ் நாட்டு நிபுணர் ஒருவரை நியமித்துள்ளார்களாம்.
அதே இயக்குனருடன் ஒடியான படத்தில் மோகன் லால் நடித்து வருகிறார். இப்படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.
திடீரென நடந்த நடிகர் விக்ரம் மகள் திருமணம்- காரணம் என்ன
October 30, 2017நடிகர் விக்ரம் மகள் அக்சிதா திருமணம் வரும் நவம்பர் மாதம் 1ம் தேதி என்று நிறைய தகவல்கள் வந்தன. அவர்களது திருமணத்தை கலைஞர் கருணாநிதி அவர்கள் ...
நடிகர் விக்ரம் மகள் அக்சிதா திருமணம் வரும் நவம்பர் மாதம் 1ம் தேதி என்று நிறைய தகவல்கள் வந்தன. அவர்களது திருமணத்தை கலைஞர் கருணாநிதி அவர்கள் முன்னிலையில் நடக்க இருக்கிறது என்று கூறப்பட்டது.இந்த நிலையில் மனுரஞ்சித், அக்சிதா திருமணம் இன்று காலை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்தில் நெருங்கிய உறவினர்கள் மத்தியில் நடந்துள்ளது.
இந்த திருமண விழாவில் கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார்.
பிரபலங்களை அழைக்காததற்கும், வீட்டில் திருமணம் நடந்ததற்கும் கருணாநிதி தான் காரணமாம். ஏனெனில் அவரது முன்னிலையில் திருமணம் நடக்க வேண்டும் என்று உறவினர்கள் விரும்பியதாலும், அவருக்கு தொற்று நோய் இருப்பதால் யாருக்கும் பரவ கூடாது என்பதற்காகவும் தான் திருமணம் இப்படி நடந்துள்ளதாம்.