வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் பட பாணியில் காப்பியடித்த ஐ.பி.எஸ் அதிகாரி!

மத்தியப் பணியாளர் தேர்வு வாரியம் (UPSC) நடத்தும் ஐ.ஏ.எஸ் மெயின் தேர்வில் காப்பியடித்த ஐ.பி.எஸ் அதிகாரி ஷபீர் கரிம் என்பவர் பிடிபட்டார். சென...

மத்தியப் பணியாளர் தேர்வு வாரியம் (UPSC) நடத்தும் ஐ.ஏ.எஸ் மெயின் தேர்வில் காப்பியடித்த ஐ.பி.எஸ் அதிகாரி ஷபீர் கரிம் என்பவர் பிடிபட்டார்.

சென்னை மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதிய ஷபீர் கரிம், ப்ளூடூத் ஹெட்செட் மூலம் மனைவியிடம் கேள்விகளுக்கான பதிலைப் பெற்று எழுதியதாகத் தெரிகிறது. தேர்வறைக் கண்காணிப்பாளர் அளித்த புகாரின் பேரில், அவரிடம் எழும்பூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஐ.ஏ.எஸ் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 420-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஹைதராபாத்திலிருந்து உதவிய அவரின் மனைவியிடமும் விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிகிறது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவரான ஷபீர் கரிம், நெல்லை மாவட்டம் ஏர்வாடி காவல்நிலையத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஜூலை வரை பயிற்சியில் இருந்தவர். தற்போது முசௌரியில் பயிற்சியில் இருந்த அவர், யு.பி.எஸ்.சி தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டபோது பிடிபட்டார். சரண் இயக்கத்தில் கமல் நடித்து வெளியான வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில், மருத்துவத் தேர்வு ஒன்றை ப்ளூடூத் ஹெட் செட் மூலம் கிரேஸி மோகனிடமிருந்து பதில்களைப் பெற்று கமல் எழுதுவதுபோல் காட்சி ஒன்று இடம்பெற்றிருக்கும்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About