மக்கள் மன்றத்தினருடன் மீட்டிங்; கறுப்புத் தாடியுடன் ஷூட்டிங்! - ரஜினி பட அப்டேட்ஸ் எம்.குணா
June 05, 2018கடந்த சில நாள்களுக்கு முன்பு `இமயமலையில் ரஜினிபட ஷூட்டிங்' என்ற செய்தியை வெளியிட்டிருந்தோம். குறிப்பிட்டபடி, ஜூன் 6-ம் தேதியான நாளை கார...
வழக்கமாக ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டால், அந்தப் படம் ரிலீஸாகும் முன்பே இமயமலைக்குச் சென்று வருவது ரஜினியின் பழக்கம். இப்போதும் `காலா' வெளிவருவதற்கு முன்பாகவே இமயமலை செல்கிறார். தவிர, முன்பெல்லாம் பாபா குகைக்குச் சென்று தியானம் செய்வார், ஆன்மிகப் பயணம் மேற்கொள்வார். இந்தமுறை சினிமா படப்பிடிப்புக்காக இமயமலை செல்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் விஜய் சேதிபதியும் நடிப்பதால், இந்தப் படத்துக்கு ரஜினி ரசிகர்களைத் தாண்டி மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு படப்பிடிப்பு நடத்தவிருக்கும் லொக்கேஷன்களைத் தேடி இயக்குநர் கார்த்திக் சுப்பராஜும் ஒளிப்பதிவாளர் திருவும் இணைந்து இமயமலை, நேபாளத் தலைநகர் காட்மண்ட் ஆகிய இடங்களுக்குச் சென்றிருக்கிறார்கள். கடந்த வாரம் முழுக்க ரஜினி மற்றும் மற்ற நடிகர் நடிகைகளுக்கான காஸ்ட்யூம்கள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்றிருக்கின்றன. இப்படத்துக்கான முதல் ஷெட்யூலை ஒரு மாதத்துக்குள் முடிக்கத் திட்டமிட்டிருக்கிறது, படக்குழு. கடந்த சனிக்கிழமை ரஜினி விதவிதமான காஸ்ட்யூம்களில் தோன்றும் போட்டோஷூட் நடந்தது. `கபாலி' மற்றும் `காலா' படங்களில் தனது ஒரிஜினல் வெள்ளைத் தாடியுடன் தோன்றியவர், இப்படத்தில் கறுப்பு தாடியோடு தோன்றுகிறார்.
இமயமலையில் உள்ள டார்ஜிலிங் பகுதியில் இருக்கும் புகழ்பெற்ற கல்லூரி ஒன்றில் ஒரு மாதம் படப்பிடிப்பு நடைபெறுகிறது. `அவர் ஆன்மிகப் பயணம் செல்லும் இமயமலையில் படப்பிடிப்பு நடைபெறுவதால், இது ஏதோ சாமியார் கதை என்று யாரும் நினைக்க வேண்டாம், இது முழுக்க ரஜினி ரசிகர்ளுக்கான படம்!' என்கிறார் படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்.
ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாகத் தூத்துக்குடி சென்று திரும்பிய பிறகு, ரஜினிகாந்த் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும், அவர் சோர்ந்துவிடவில்லை. முன்பைவிட இன்னும் உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கிறார். இந்தப் படத்துக்காக ஒரு மாதம் இமயமலைக்குச் செல்வதால், அந்த இடைவெளியில் மக்கள் மன்றம் எப்படிச் செயல்பட வேண்டும் என்று திட்டமிட்டு வைத்திருக்கிறார். தமிழகம் முழுக்க மக்கள் மன்றத்தில் பொறுப்பாளர்களாக இருக்கும் முக்கியப் புள்ளிகளை சென்னைக்கு அழைத்து சந்தித்திருக்கிறார்.
தூத்துக்குடி சென்றபோது, ரஜினி மக்கள் மன்றத்தின் மாநிலச் செயலாளர் ராஜு மகாலிங்கத்தையோ மாநிலப் பொறுப்பாளர் சுதாகரையோ தன்னுடன் அழைத்துச் செல்லவில்லை. தன் உதவியாளரை மட்டும் அழைத்துச் சென்றார். தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து வரவேற்றது தொடங்கி, தூப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்தவர்கள் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது என சென்னைக்குத் திரும்பும்வரை ரஜினியுடனேயே இருந்தது, தூத்துக்குடி ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.ஜெ.ஸ்டாலின்.
தூத்துக்குடியில் மக்கள் கூட்டம் நெருக்கியடித்தபோதும், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் தனக்குப் பாதுகாப்பாகச் செயல்பட்டதற்காக ஸ்டாலினை போயஸ் கார்டன் வீட்டுக்கு அழைத்து, மாலை அணிவித்துப் பாராட்டியிருக்கிறார் ரஜினி. ஒருபக்கம் மக்கள் மன்றப் பொறுப்பாளர்களுடன் மீட்டிங், இன்னொரு பக்கம் டார்ஜிலிங்கில் நடக்கவிருக்கும் ஷூட்டிங்... என ரஜினி ரொம்பவே பிஸி!
காலா பற்றி பேசிய கமல்! அவர் செய்தது தவறில்லை - ரஜினி பேட்டி
June 04, 2018நடிகர் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் அரசியல் களத்தில் போட்டியாளர்களாக இருபார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இருவரும் இன்று கா...
கர்நாடக முதலமைச்சரை சந்துவிட்டு சென்னை வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
தடைகளை தாண்டி கர்நாடகாவில் காலா படம் வெளியாகி வெற்றி பெறும் என அவர் கூறினார்.
கமல் கர்நாடக முதலமைச்சரை சந்தித்து பேசியது பற்றி கருத்து தெரிவித்துள்ள ரஜினிகாந்த் "கமல் சந்தித்து பேசியதில் தவறில்லை. இது ஆரோக்கியமான ஒன்று. காலா படம் கர்நாடகாவில் நிச்சயம் வெளியாகும் என நினைக்கிறேன்" என பேசினார்.
`காலா வெற்றிபெற்று நல்ல வியாபாரம் ஆகும்' - கமல்ஹாசன் கருத்து..!
June 04, 2018காலா படம் திட்டமிட்டபடி வெளியாகி வெற்றிபெற்று நல்ல வியாபாரம் ஆகும் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கருத்துத் தெரிவித்துள்ளார...
காவிரி தொடர்பாக கர்நாடக முதல்வர் குமாரசாமியை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். குமாரசாமி பதவியேற்பு விழாவுக்குப் பின் இன்று இரண்டாவது முறையாகச் சந்தித்தார். அப்போது இருவரும் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினர். ஆலோசனைக்குப் பின் இருவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய கமல், ``குறுவை சாகுபடி தொடங்குவதால் காவிரியில் நீர் திறக்க நினைவூட்ட வந்தேன். இந்தச் சந்திப்பு கூட்டணிக்கானதோ திரைப்படம் தொடர்பானதோ இல்லை முற்றிலும் மக்களுக்கானது" என்றார்.
இதன்பின் சென்னைத் திரும்பிய அவர், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் ரஜினிகாந்தின் காலா படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், ``என்னுடைய படத்துக்கும் கர்நாடகாவில் தடை விதிக்கப்பட்டது. நியாயமே வெல்லும் என்பதற்கு உதாரணமாக விஸ்வரூபம் படம் வெற்றிபெற்றது. அதுபோல் காலா படம் திட்டமிட்டபடி வெளியாகி வெற்றிபெற்று நல்ல வியாபாரம் ஆகும். காவிரி விவகாரத்தில் நாம்தான் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நீதிமன்றம் சொல்லி ஒற்றுமையாக இருக்க முடியாது. ஒற்றுமைக்கான சமிஞ்கை கர்நாடகாவில் தெரிகிறது. இரு மாநிலங்களுக்கு இடையே ஒற்றுமை நிலவ யார் வேண்டுமானாலும் முயற்சி எடுக்கலாம்" என்றார்.
விஜய் அவார்ட்ஸ் - விருது வென்றவர்கள் முழு பட்டியல்
June 04, 2018ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்த விஜய் விருதுகள் நீண்ட காலத்திற்கு பிறகு இந்த வருடம் நடக்கிறது. அதில் சென்ற வருடம் சிறப்பாக பணியாற்றிய நட...
இந்த வருடம் விருது வென்றவர்களின் முழு பட்டியல் இதோ..
Best Editor : Philomin Raj (Maanagaram)
Favorite Movie : Mersal
Best Cinematography : Ravi Verman (Kaatru Veliyidai)
Best Director: Pushkar Gayatri (Vikram Vedha)
Best Supporting Actor (Male): Vivek Prasanna (Meyaadha Maan)
Best Debut (Female): Aditi Balan (Aruvi)
Best Comedian: Soori (Sangili Bungili Kadhava Thorae)
Lifetime Achievement Award: Sivakumar
Best Actor Female : Nayanthara (Aramm)
Best music director: A.R.Rahman (Kaatru Veliyidai)
Favorite Song: AalaPoran Tamizhan (Mersal)
Best Playback Singer (Male): Anirudh for Iraivaa (Velaikkaran)
Best Actor (Male): Vijay Sethupathi (Vikram Vedha)
Best Actor in negative role: S J Suryah (Spyder)
Best Choreographer: Brinda for Azhagiye in KaatruVeliyidai
Favourite Heroine: Nayanthara (Aramm)
Entertainer of the year: Dhanush
Favourite Director: Atlee (Mersal)
Best Supporting Actor (Female): Revathy (PaPaandi)
Best Debut Director: Lokesh Kanakaraj (Maanagaram)
Best Story: Rajkumar Periyasamy (Rangoon)
Best Debut (Male): Vasanth Ravi (Taramani)
Best Dialogue Writer: Suresh Sangaiah and Gurunathan (Oru Kidayin Karunai Manu)
Best Screenplay Writer : Pushkar Gayatri (Vikram Vedha)
Best Background Score: Sam CS (VikramVedha)
Best Film: Aruvi
துப்பாக்கியால் சுட்டவர்களுக்கு விஜய் அவார்ட்ஸ் கொடுக்க வேண்டும்- மேடையில் பொங்கிய பிரபலம்
June 04, 2018பிரம்மாண்டமாக நடந்து முடிந்த விஜய் விருது விழா பற்றி நிறைய தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. இப்போது சமீபத்தில் மக்களை சோகத்தில் ஆழ்த்திய து...
இப்போது சமீபத்தில் மக்களை சோகத்தில் ஆழ்த்திய துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து நடிகர் பார்த்திபன் விஜய் விருது விழா மேடையில் பேசியுள்ளார்.
அதில் அவர், விஜய் அவார்ட்ஸ் குழுவினருக்கு ஒரு வேண்டுகோள். சிறந்த முறையில் துப்பாக்கியில் சுட்டவருக்கு விருது கொடுக்க வேண்டும்.
பொது மக்களுக்கு நடுவிலே ரொம்ப தூரம் தாண்டி வேன் மீது ஏறி நின்று சரியாக குறிப்பார்த்து சுட்ட, உரிமைக்காக குரல் கொடுத்தவர்களை வாயிலேயே சுட்ட, வயித்துக்காக போராடியவர்களை வயிற்றிலேயே சுட்ட அந்த துப்பாக்கி சுடுபவருக்கு விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் விருது கொடுக்க வேண்டும்.யாரை அழைத்து கொடுக்க வேண்டுமானால் பாதிக்கப்பட்ட அந்த மக்களை மேடைக்கு அழைத்தே கொடுக்க வைக்க வேண்டும். இது எனது வேண்டுகோள்.
பிறகு சமூக விரோதிகள் அனைவரையும் சுட்டுத்தள்ளி விட வேண்டும். நான் பொதுமக்களைச் சொல்லவில்லை, சமூக விரோதிகளைச் சொல்கிறேன். இந்த மாதிரி பெரிய மேடையில் நல்ல விஷயம் சொல்ல வேண்டும் என விருப்பப்பட்டேன் என்று பேசியுள்ளார்.
தமிழர்களுக்காக போய் பேசிய கமல், கர்நாடகா முதல்வர் தந்த அதிரடி பதில்
June 04, 2018கமல் இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா நடிகர். தற்போது இவர் சினிமாவில் இருந்து முற்றிலுமாகவே வெளியேறவுள்ளார். இனி என் வேலை மக்கள் பணி ஆற்றுவத...
இனி என் வேலை மக்கள் பணி ஆற்றுவது தான் என அரசியல் கட்சி தொடங்கினார், அதற்கு மக்கள் நீதி மய்யம் என்று பெயர் வைத்தார்.
கட்சி தொடங்கி வெறுமென போஸ்ட்டர், பேனர் அடிக்காமல் தமிழக மக்களுக்காக கர்நாடகா முதலமைச்சரை சந்தித்து பேசினார்.
இதில் முக்கியமாக காவேரி பிரச்சனை குறித்து கமல் முதல்வர் குமாரசாமியிடம் பேச, அதற்கு குமாரசாமி டுவிட்டரில் ‘வரும் நாட்களில் காவேரி பிரச்சனை சுமூகமாக தீர்க்கப்படும்.
இரண்டு மாநில நலன் அறிந்து தண்ணீர் பகிர்ந்து அளிக்க பேச்சுவார்த்தை நடைபெறும்’ என்று தெரிவித்துள்ளார்.