சுற்றுலாத் தலமாகிய மோடி தியானம் செய்த குகை - இன்னும் என்னல்லாம் நடக்கப்போகிறதோ...மோடிஜீ...
May 30, 2019கேதார்நாத்தில் பிரதமர் மோடி தங்கி, தியானம் செய்த குகை, பொதுமக்கள் தங்குவதற்கு வசதியாக, நாள் ஒன்றுக்கு ரூ.990க்கு வாடகைக்கு விடப்படுகிறது....
லோக்சபா தேர்தல் கடைசி கட்ட ஓட்டுப்பதிவும் முடிவடைந்த நிலையில், தேர்தல் முடிவுக்காக அனைத்துக்கட்சிகளும் காத்திருக்கின்றன. இந்நிலையில், கேதார்நாத் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்குள்ள பழமையான சிவன் கோவிலில் வழிபாடு நடத்தினார். அங்குள்ள குகையில், காவி உடையணிந்து தியானத்தில் ஈடுபட்டார். 17 மணி நேரம் அவர் தியானம் செய்தார். தியானத்தை ஊக்குவிப்பதற்காக, பிரதமர் மோடியின் பரிந்துரையின் பேரில், கேதார்நாத்தில் இக்குகைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இக்குகை, இயற்கையானது அல்ல; பாறைகளை வெட்டி பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது. மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட வசதிகளும் குகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். சிறிய கழிவறை ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கும்.
பிரதமர் மோடி தங்கிய குகை, பொதுமக்கள் தங்குவதற்கு வசதியாக, நாள் ஒன்றுக்கு ரூ.990க்கு வாடகைக்கு விடப்படுகிறது. கர்வால் மண்டல் நிவாஸ் நிகாம் இணையதளம் மூலம் இதற்காக முன்பதிவு செய்ய வேண்டும். கடந்த ஆண்டு ரூ.3,000 என குகைக்கு வாடகை நிர்ணயிக்கப்பட்ட நிலையில், பயணிகள் வருகை குறைவால் சரியாக முன்பதிவு ஆகாமல் இருந்தது. தற்போது இங்கு அதிக சுற்றுலா பயணிகள் வந்து தங்குவர் என எதிர்பார்க்கப் படுகிறது.
#Nesamani யிடம் அசிங்கப்பட்ட #ModiSarkar2 ...! உலகளவில் நேசமணிக்கு பெருகும் ஆதரவு
May 30, 2019இன்று இந்தியாவின் பிரதமராக இரண்டாவது முறையாக பதவியேற்கிறார் பிரதமர் மோடி. ஆனால் இந்தியா முழுவதும் நேசமணிக்காக பிராத்தனை நடத்தி கொண்டிருக்...
வடிவேலுவின் நேசமணி கதாபாத்திரத்தில் தலையில் சுத்தி விழுந்ததால் அவரது உடல் நிலை நலம் பெற வேண்டி பிராத்தனை நடத்தி வருகின்றனர்.
பிராத்தனை என்றால் சிறிய அளவில் எல்லாம் இல்லை. டுவிட்டரில் உலக அளவில் நம்பர் ஒன் இடத்தில் டிரெண்டாகி பிராத்தனை நடந்து வருகிறது.
#Nesamani என்ற ஹேஷ் டேக்கில் இதுவரை 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டுவிட்கள் வெளியாகியுள்ளன. ஆனால் மோடி பதவியேற்கும் நிகழ்ச்சியை விளக்கும் #ModiSarkar2 என்ற ஹேஷ் டேகில் வெறும் 18 ஆயிரம் டுவிட்கள் தான் வெளியாகியுள்ளன.
உலகளவில் நேசமணி ஹேஷ்டேக் நம்பர் 1 இடத்திலும், மோடி சர்கார் ஹேஷ்டேக் 5வது இடத்திலும் டிரெண்டாகி வருகிறது. பிரதமர் மோடி பதவியேற்கும் நேரத்திலும் இந்தியளவில் நேசமணி ஹேஷ்டேக் டிரெண்டாகி வருவது பலரை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
நேசமணி”யை உலகளவில் டிரெண்டாக்கியவர் இவர் தான்
May 30, 2019மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு தினசரி தீனி போடக் கூடியவர் நடிகர் வடிவேலு. அந்த வகையில் நேற்று உலகளவில் #PrayForNesamani என்ற ஹேஸ்டேக் டிரெண்டா...
இதற்கு பின்னணியில் இருப்பவர் ஒரு தமிழர். அதாவது, பேஸ்புக்கில் கட்டுமான நிறுவனம் ஒன்று, சுத்தியல் படத்தை பதிவிட்டு, அதற்கு தமிழில் என்ன பெயர் என்று கேள்வி எழுப்பியிருந்தது.
அதற்கு நெட்டிசன் ஒருவர், ”இதற்கு பெயர் சுத்தியல். இது விழுந்தால் டாங், டாங் என்று சத்தம் கேட்கும். இது காண்டிராக்டர் நேசமணியின் தலையில் விழுந்து, அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதிலாக #PrayForNesamani எனப் பதிவிட, பலரும் அதையே மீண்டும் பதிவிடத் தொடங்கி வைரலானது. அதாவது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கங்கள் கூட, நேசமணிக்கு பிரார்த்தனை செய்யும் வகையில் ஏராளமான பதிவுகள் இடப்பட்டு வருகின்றன.
இதன் பின்னணியில் குறும்புக்கார நெட்டிசன் விக்னேஷ் பிரபாகர். இவரை தற்போது நேசமணி பிரபாகர் என்று அழைக்கத் தொடங்கிவிட்டனர். இவர் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நான் துபாயில் பணிபுரிந்து வருகிறேன்.
விளையாட்டாக பதில் கூறினேன். இந்த அளவிற்கு டிரெண்டாகும் என்று எதிர்பார்க்க வில்லை. மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. மிக்க நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.
நீங்கள் ராயல்டி கேட்பது போன்று வடிவேலு கேட்டால்.....?
May 29, 2019இசைஞானி இளையராஜாவுக்கு ரசிகர்கள் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளனர். விஜய் சேதுபதி, த்ரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான 96 படத...
விஜய் சேதுபதி, த்ரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான 96 படத்தில் தனது பாடல்களை பயன்படுத்தியதற்கு இசைஞானி இளையராஜா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தற்போதுள்ள இசையமைப்பாளர்கள் தன் பாடல்களை பயன்படுத்துவது அவர்களின் ஆண்மையில்லாத்தனத்தை காட்டுகிறது என்று அவர் விமர்சித்தார்.
இளையராஜாவின் இந்த பேட்டி அவரின் ரசிகர்களை வருத்தம் அடைய செய்துள்ளது. ராஜா சார் உங்கள் இசைக்கு ஈடு இணையில்லை. சந்தோஷமாக இருந்தாலும் கவலையாக இருந்தாலும் உங்கள் இசையை தான் தேடுகிறோம். அப்படி நாங்கள் கொண்டாடும் இளையராஜா இது போன்ற பேட்டிகளால் விளாசப்படுவதை பார்க்க கஷ்டமாக உள்ளது.
நீங்கள் பேசியதில் தவறு இல்லை என்றாலும், நீங்கள் பயன்படுத்திய வார்த்தைகள் சரியில்லை. அதனால் நீங்கள் இனிமேல் இசை மூலம் மட்டுமே பேசுங்கள். பேட்டிகள் வேண்டாம். பேட்டி கொடுப்பதை தவிர்த்துவிடுங்கள். பேட்டிகளில் நீங்கள் மனதில் உள்ள ஆதங்கத்தை வெளிப்படுத்துவது உங்களின் இமேஜை கெடுக்கிறது என்கிறார்கள் ரசிகர்கள்.
உங்களின் ரசிகர்களான எங்களுக்கே அந்த பேட்டி பிடிக்கவில்லை. அப்படி இருக்கும்போது மற்றவர்கள் சும்மா இருப்பார்களா?. உங்கள் தரத்தை நீங்களே தாழ்த்திக் கொள்ள வேண்டாம் என்று ரசிகர்கள் அன்பு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிலரோ நீங்கள் ராயல்டி கேட்பது போன்று வடிவேலு கேட்டால் மீம்ஸ் கிரியேட்டர்கள் உள்பட பலரும் வேலையில்லாமல் போய்விடுவார்கள் என்று கலாய்த்துள்ளனர். மீம்ஸ் கிரியேட்டர்கள் இளையராஜாவை கலாய்ப்பது அவரின் ரசிகர்களை வருத்தம் அடைய வைத்துள்ளது.
என்ன நம்ம மேல பயம் போயிடுச்சோ.. தினகரனிடம் காட்டமாக கேட்ட சசிகலா!
May 29, 2019ரிசல்ட் வந்து இத்தனை நாள் கழிச்சு, இப்போதான் சசிகலாவை சென்று பார்த்துள்ளார் டிடிவி தினகரன்! அப்போது சசிகலா கேட்டாரே ஒரு கேள்வி.. என்ன பதில்...
அமமுக எப்படியும் 5 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், இடைத்தேர்தலில் எடப்பாடி ஆட்சியை கவிழ்க்கும் அளவுக்கு பெருவாரியான இடங்களில் ஜெயிக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எல்லாமே புஸ்ஸென ஆகிவிட்டது.
தேர்தல் வெற்றியை வைத்து நிறைய கணக்குகளை போட்டிருந்தார்கள் தினகரன். குளறுபடி, முறைகேடு போன்றவற்றினால் ஜெயிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றாலும், இந்த தோல்வியை எப்படி சசிகலாவிடம் சொல்வது என்ற பெரிய சிக்கல் தினகரனுக்கு வந்தது. அதனால் ரிசல்ட் வந்து இத்தனை நாள் ஆகியும் சசிகலா முகத்தில் விழிப்பதை தவிர்த்தே வந்தார்.
தேர்தல் தோல்வி
ஆனால் கடந்த ஞாயிறு அன்று, புகழேந்தி சென்று சசிகலாவை பார்த்துள்ளார். அப்போது தேர்தல் தோல்வி குறித்து நிறைய புலம்பிவிட்டாராம் சசிகலா. சிறையில் சசிகலாவை சென்று சந்தித்தை பற்றி புகழேந்தி தினகரனிடம் சொல்லி இருக்கிறார். இதை கேட்டதும், தினகரன், தன்னிடம் சொல்லாமல் எதற்காக போய் சசிகலாவை சந்தித்தீர்கள் என்று கடிந்து கொண்டிருக்கிறார்.
பயம் போயிடுமா?
இந்நிலையில்தான், அதாவது நேற்று, சசிகலாவை சந்தித்து பேசினார் தினகரன். ஏற்கனவே ரிசல்ட் வந்த நாளிலிருந்து தூக்கமின்றி அப்செட்டில் உள்ளார் சசிகலா. தினகரனை பார்த்ததும் அவர் கேட்ட முதல் கேள்வியே, "இவ்ளோ நாளா நம்ம மேல அவங்களுக்கு இருந்த பயம், இப்போ போயிடுமா?" என்பதுதான்.
விளக்கம்
இதற்கு தினகரன், "வாக்கிங் போறப்பகூட என்கிட்டயே நிறைய பேர் வந்து "சார் நாங்க உங்களுக்குதான் ஓட்டுப் போட்டோம்., இப்படி ஆயிடுச்சேன்னு" சொன்னாங்க. எனக்கும் அதிர்ச்சிதான். இது சம்பந்தமாக மீடியாவுக்கும் விஷயத்தை சொல்லி இருக்கேன். ஓட்டு மிஷின்களில் என்னமோ செய்துவிட்டார்கள் என்று பெரிய விளக்கமே கொடுத்துள்ளார். அத்துடன், கையில் கொண்டுபோன அமமுக வாக்காளர்கள் பெற்ற வாக்குகள், பூத்துகளில் ஏஜெண்ட்டுகள்கூட போட்ட ஓட்டு கூட அமமுகவுக்கு விழாதது தொடர்பான சில ஆதாரங்களை சசிகலாவிடம் காட்டி உள்ளார்.
ஐடியா
எல்லாவற்றையும் பொறுமையாக கேட்ட சசிகலா, "சரி, தேர்தல் ஆணையத்தை மட்டும் விமர்சிக்க வேணாம்" என்று அறிவுறுத்தி உள்ளார். தோல்வியால் கட்சி தாவல் நடக்காதவாறு ஒருசில விஷயங்களையும் மேற்கொள்ளுமாறு தினகரனுக்கு ஐடியா தந்தாராம் சசிகலா. அதனால் எப்படியும் ஒருசில தினங்களில் ஏதேனும் அதிரடிகள் வெளியாகலாம் என்று தெரிகிறது.
இரட்டை இலை
சசிகலாவை பொறுத்தவரை அவர் எண்ணம், சிந்தனை எல்லாமே இரட்டை இலைதான். இதற்கு முன்பு எந்த சின்னம் நின்றாலும் அது தோல்விதான் என்பதை நன்றாகவே உணர்ந்துள்ளார். அதனால் அதிமுக உரிமை கோரும் வழக்கை கையில் எடுப்பாரா, அல்லது இரு கட்சி இணைப்பு பற்றி ஏதேனும் முடிவெடுப்பாரா என்பது விரைவில் தெரியவரும்!
ஆண்மையில்லாத்தனம்! இளையராஜாவின் சர்ச்சை கருத்துக்கு பிரபல இயக்குனர் பதில்
May 29, 2019தான் இசையமைத்த பாடல்களை புதுப்படங்களில் பயன்படுத்துவதை இசைஞானி இளையராஜா கடுமையாக விமர்சித்துள்ளார். தனது பாடல்களை பயன்படுத்துவது சம்பந்தப்ப...
96 படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்தியிருந்தார்கள். இந்நிலையில் இளையராஜாவின் பேட்டியை பார்த்த 96 படக்குழுவோ, அவருக்கு ராயல்டி கொடுத்த பிறகே பாடல்களை பயன்படுத்தியதாக தெரிவித்தது. இந்நிலையில் இயக்குநர் சீனு ராமசாமி இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் ட்வீட்டில் கூறியிருப்பதாவது, 80, 90 காலகட்டங்களின் வரலாற்று கதைகளை இசைஞானி இளையராஜா அவர்களின் பாடல்கள் இல்லாமல் பதிவு செய்ய முடியாது. தமிழர்கள் வரலாற்றில் நினைவாக அவர் பாடல்கள் இருப்பது யாரும் மறுக்க முடியாது. 96 movie படத்தை அவர் பார்த்திருந்தால் வாழ்த்திருப்பார் என்றார்.
80,90 காலகட்டங்களின் வரலாற்று கதைகளை இசைஞானி இளையராஜா அவர்களின் பாடல்கள் இல்லாமல் பதிவு செய்ய முடியாது.தமிழர்கள் வரலாற்றில் நினைவாக அவர் பாடல்கள் இருப்பது யாரும் மறுக்க முடியாது 96 movie படத்தை அவர் பார்த்திருந்தால் வாழ்த்திருப்பார்.
— Seenu Ramasamy (@seenuramasamy) May 27, 2019

