இரண்டாவது திருமணம் எப்போது? பார்த்திபன் கூறிய கலக்கல் பதில்
June 24, 2019பார்த்திபன் எப்போதும், எதிலும் வித்தியாசத்தை எதிர்ப்பார்ப்பவர். அப்படித்தான் தற்போது படம் முழுவதும் ஒரே கதாபாத்திரத்தை வைத்து படம் ஒத்த செர...
இவரிடம் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘ஏன் சீதாவை பிரிந்த பிறகு நீங்கள் இரண்டாவது திருமணம் செய்யவில்லை?’ என்று கேட்டனர்.
அதற்கு அவர் கண்டிப்பாக என் இரண்டு மகளுக்கு திருமணம் முடிந்துவிட்டது, அடுத்து என் மகன் இருக்கிறார், அவர் திருமணம் முடிந்தது, என் திருமணம் என தன் ஸ்டைலிலேயே கலகலப்பாக பதில் சொன்னார்.
மேலும், தனக்கு திருமணம் இனி வேண்டாம், ஒரு நல்ல பார்ட்னர் இருந்தால் போதும் என்பது போலவும் பதில் அளித்தார்.
நம்பி வீட்டுக்குள்ள விட்டா இமான் அண்ணாச்சி இப்படி பண்ணலாமா?... நம்ப முடியல ... ஆனா இதான் உண்மை
June 24, 2019இமான் அண்ணாச்சிய பார்த்தாலே வடிவேலுவைப் போல சின்ன குழந்தைகளுக்கு குஷி தான். அதிலும் அவரைக் கலாய்ப்பதென்றால் அப்படி ஒரு சந்தோஷம். அவரும் இது...
அந்த அண்ணாச்சி இதற்கு சினிமாவுக்கு வருவதற்கு முன்னால் என்ன செய்து கொண்டிருந்தார்? யாரும் எதிர்பார்க்காத அவருடைய காதல் போன்ற கதையைத் தான் இந்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.
இமான் என்கிற இமானுவேல்
இமான் அண்ணாச்சியை பற்றிய சுய விவரங்கள் பெரிதாக யாருக்கும் தெரியவில்லை. இவருடைய இயற்பெயர் இமானுவேல். எல்லோரும் இமான் என்று அழைக்க ஆரம்பித்தனர். அதுவே இயற்பெயராக மாறிவிட்டது.
பிறப்பு
அண்ணாச்சி பிறந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டாரப் பகுதியில் உள்ள திருவளுதிநாடார் விளை என்னும் கிராமத்தில் தான் பிறந்தார். இவர் பிறந்தது 1968 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 7 ஆம் தேதி.
சின்னத்திரை நுழைவு
சின்னத்திரையைப் பொருத்தவரையில், முதன் முதலில் மக்கள் தொலைக்காட்சியில் தான் பணிபுரிந்தார். அதில் சொல்லுங்கண்ணே சொல்லுங்க என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். அது அவருக்குப் பெரிதாகக் கை கொடுக்கவில்லை.பிறகு சன் டீவிக்கு வந்துவிட்டார்.
சன் டீவி பயணம்
சன் டீவிக்கு வந்தபின்பு அவருக்கு கிடைத்த முதல் வாய்ப்பு மக்கள் தொலைக்காட்சியில் நடத்திய அதே சொல்லுங்கண்ணே சொல்லுங்க நிகழ்ச்சி தான். ஆனால் இந்த முறை அந்த நிகழ்ச்சி தான் இமான் அண்ணாச்சியை வெளியுலகத்துக்கும் குழந்தைகள் மத்தியிலும் கல்லூரி மாணவர்கள், பொது மக்கள் என அனைவரிடமும் மிக எளிதாகக் கொண்டு சேர்த்தது.
குட்டி சுட்டீஸ்
அதையடுத்து மழலை மாறாத சிறுவர்களுக்கான குட்டி சுட்டீஸ் என்னும் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார். அது இன்னும் நிறைய புகழைப் பெற்றுத் தந்தது. அதில் வரும் குழந்தைகள் அண்ணாச்சியை கேட்காத கேள்விகள் எல்லாம் கேட்கும். ஆனாலும் அதை சிரித்துக் கொண்டே ஏற்றுக் கொள்வார். தற்போது சீரியல் நடிகைகளை வைத்து சீனியர் சுட்டீஸ் என்ற நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறார்.
சினிமா என்ட்ரி
சினிமாவில் அண்ணாச்சி முதலில் நடித்தது சென்னைக்காதல் என்னும் திரைப்படத்தில் தான். அதன் பிறகு 2006 ஆண்டு முதல் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிவிட்டார். சென்னைக்காதலை தொடர்ந்து சுந்தர்.சியுடன்இணைந்து தலைநகரம் படத்தில் வடிவேலுவுடன் நடித்தார்.
நடித்த படங்கள்
சென்னைக்காதல், தலைநகரம் (2006), வேட்டைக்காரன் (2009), கோ (2011), நீர்ப்பறவை, பாகன் (2012), மரியான், நையாண்டி, ஜில்லா, கயல்? அதுவேற இது வேற, கோலிசோடா, என்ன சத்தம் இந்த நேரம், விடியும்வரை பேசு, காதலை தவிர வேறு ஒன்னும் இல்ல, போங்கடி நீங்களும் உங்க காதலும், பட்டைய கிளப்பணும் பாண்டியா, மெட்ராஸ், பூஜை, காக்கிச்சட்டை, புலி போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.
சீரியல்கள்
இவர்கள் திரைப்படங்கள் மட்டுமல் அல்லாது சீரியல்களிலும் நடித்திருக்கிறார். கஸ்தூரி என்ற சன் டீவி சீரியலில் தான் அண்ணாச்சி நடித்திருக்கிறார்.
குறும்படம்
அதுமட்டுமா? குறும்படமும் அண்ணாச்சியின் குறும்பைச் சொல்லும். ப்ளீஸ் குளோஸ் தி டோர் என்னும் குறும்படத்தில் நடித்திருக்கிறார்.
அண்ணாச்சிய இப்படி பண்ணினாரு?
சரி இதெல்லாம் விடுங்க. அப்படி அவர் பண்ணக் கூடாத காரியம் ஒன்று பண்ணியிருக்கறோரே அத பத்தி பார்க்கலாம்.
இவருடைய திருமணம் காதல் திருமணம். ஆனா எப்படி காதலிச்சாருன்னு தெரியுமா? இவரோட சின்ன வயசுல இவரு ஊர்ல ஒரு சின்ன ஸ்கூல் இருந்துச்சாம். அதுல மொத்தமே 2 வாத்தியாருங்க தான். அதுல ஒருத்தர் பேரு பச்சைமுத்து வாத்தியார். அவருக்கு அண்ணாச்சி மீது கொஞ்சம் அக்கறையும் பாசமும் அதிகம். அதனால் சில சமயங்களில் வீட்டுக்குக் கூட அழைத்துச் செல்வார்.
அண்ணாச்சியும் அடிக்கடி அவர் வீட்டுக்குப் போய், தன்னை நம்பின வாத்தியாரு பொண்ணையே கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணியிருக்காரு.
தும்பா திரை விமர்சனம் - வழக்கமான தமிழ் சினிமாவை பார்த்தவர்களுக்கு இது கொஞ்சம் வித்தியாசமான முயற்சி.
June 24, 2019தும்பா தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் வித்தியாசமான கதைக்களம் வரும். அந்த வகையில் புலியை மையப்படுத்திய கோலிவுட்டில் வெளிவந்துள்ள மிக அரிய ...
கதைக்களம்
டாப்சிலிப் பகுதியில் புலி சிலைகளுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலைக்கு செல்கிறார் தீனா, அவருக்கு உதவியாக கனா தர்ஷனும் வருகின்றார், இவர்களுடன் வைல்ட் லைப் போட்டோகிராபியில் ஆர்வமுள்ள கீர்த்தி பாண்டியனும் வருகின்றார்.
அந்த சமயத்தில் தும்பா என்ற புலி வனப்பகுதியில் இருந்து தப்பிக்க, அதை ஒரு சிலர் சட்டத்திற்கு விரோதமாக பிடித்து விற்க முயற்சி செய்கின்றனர்.
ஆனால், இதை அறிந்த தீனா, தர்ஷன், கீர்த்தி அந்த புலியை காப்பாற்ற களத்தில் இறங்க, பிறகு என்ன ஆனது என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
தீனா எப்போதும் தன் ஒன் லைன் கவுண்டரில் ரசிகர்களை குஷிப்படுத்துவார், அதை தான் படம் முழுவதும் செய்கின்றார், ரசிக்கவும் வைக்கின்றார்.
தர்ஷன் மட்டும் கொஞ்சம் தடுமாறுகின்றார், கனாவில் இருந்த அளவிற்கு இல்லையே பாஸ், கீர்த்தி பாண்டியனும் தன்னால் முடிந்த அளவிற்கு சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார்.
புலி சம்மந்தப்பட்ட காட்சி கிராபிக்ஸ் கொஞ்சம் சுமராக இருந்தாலும், குரங்கை காட்டுவது ஏதோ கார்டூன் போல் உள்ளது, கொஞ்சம் அதை கவனித்திருக்கலாம்.
படத்தின் பின்னணி இசை கவர்கின்றது, ஒளிப்பதிவும் நன்றாகவுள்ளது, ஆனால், பாடல்கள் மனதில் நிற்காமல் போனது வருத்தம், ஏனெனில் இதில் அனிருத்தும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில் வழக்கமான தமிழ் சினிமாவை பார்த்தவர்களுக்கு இது கொஞ்சம் வித்தியாசமான முயற்சி.
என்னய்யா.. ஓவருக்கு 7 பால் வீசுறீங்க? அம்பயரும், சேனலும் சேர்ந்து அடித்த கூத்து! #PAKvsSA
June 23, 2019பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்கா இடையே நடந்த உலகக்கோப்பை லீக் போட்டியில் குறிப்பிட்ட ஒரு ஓவரில் ஏழு பந்துகள் வீசப்பட்டது. பார்த்துக் கொண்டிருந...
பார்த்துக் கொண்டிருந்த அனைவருக்கும் இது தெரிந்தும், களத்தில் இருந்த யாரும் எதிர்ப்பு தெரிவிக்காமல், அம்பயர் சொன்னதை கேட்டு ஏழு பந்துகள் வீசினர். இதைக் கண்டு ரசிகர்களும், செய்தியாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
அங்கேயும் பிரச்சனை இல்லை
முதலில் அம்பயர் அந்த ஓவரில் எத்தனை பந்துகள் வீசப்பட்டது என கணக்கிடுவதில் ஏதோ தவறு நடந்து இருக்கலாம் என கருதப்பட்டது. ஆனால், அங்கேயும் பிரச்சனை இல்லை என்பது பின்னர் தெரிய வந்தது. என்ன தான் நடந்தது?
அந்த ஓவர்
இந்தப் போட்டியில், பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தென்னாப்பிரிக்கா அணியின் கிறிஸ் மோரிஸ் 14வது ஓவரை வீசினார். அந்த ஓவரில் ஆறு பந்துகளை வீசி முடித்தார். பாகிஸ்தான் 2 ரன்கள் எடுத்தது.
ஏழாவது பந்து
அதன் பின்னும், அம்பயர் பந்து வீச சொன்னார். கிறிஸ் மோரிஸ்-ம் அந்த ஓவரின் ஏழாவது பந்தை வீசினார். நோ பாலும் இல்லை, வைடும் இல்லை. இப்போது ஏன் கூடுதல் பந்து வீசுகிறார்கள் என அனைவரும் குழம்பினர்.
யாரும் கேட்கவில்லை
பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களோ, தென்னாப்பிரிக்கா வீரர்களோ யாருமே இது குறித்து கேள்வி கேட்கவில்லை. அம்பயர் அல்லது ஸ்கோர் கணக்கிடும் நபர் தவறு செய்து இருக்கலாம் என சிலர் கூறினார்கள். ஆனால், அதுவும் இல்லை என பின்னர் தெரிய வந்தது.
சேனல் செய்த தவறு
போட்டியை ஒளிபரப்பி வரும் சேனல் தான் அந்த ஓவரின் பந்தை சரியாக கணக்கிடுவதில் கோட்டை விட்டுள்ளது. ஆறு பந்துகள் வீசி முடித்த பின்னர், அம்பயரிடம் ஐந்து பந்துகள் தான் வீசப்பட்டுள்ளது என தகவல் சொல்லி இருக்கிறார்கள். அதை நம்பி அவரும் ஏழாவது பந்தை வீசுமாறு கூறி இருக்கிறார்.
பெரிய சொதப்பல்
இது தான் இந்த தவறுக்கு காரணம் என தெரிய வந்துள்ளது. இவ்வளவு டெக்னாலஜி இருந்தும், ஏராளமான கோணத்தில் போட்டியை வீடியோ எடுத்து லைவ்வில் ஒளிபரப்பும் நிலையிலும், ஒரு ஓவரில் எத்தனை பந்து வீசப்பட்டுள்ளது என தெரியாமல் சொதப்பியதை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பாதிப்பு இல்லை
இந்த குழப்பத்தில் நல்ல வேளையாக போட்டிக்கு பாதிப்பு ஏற்படவில்லை. 14வது ஓவரில் வீசப்பட்ட ஏழாவது பந்தில் பாகிஸ்தான் வீரர்கள் ரன் ஏதும் அடிக்கவில்லை. விக்கெட்டும் விழவில்லை. அதனால், அம்பயர் தலை தப்பியது.
அடிப்படை தவறு
ஏற்கனவே, அம்பயர்கள் சரியாக நோ பால் பார்ப்பதில்லை என்ற புகார் உள்ளது. இந்த நிலையில், சேனலில் சொன்னதை நம்பி அடிப்படை விஷயங்களில் தவறு செய்துள்ளார் அம்பயர்.
‘ரஜினியையே ஓட்டுப்போட விடாம பண்ணிட்டாங்களே!’
June 23, 2019இது வரையிலும் நடந்த அனைத்து நடிகர் சங்கத் தேர்தல்களிலும் வாக்களித்த ரஜினிகாந்த், முதன் முறையாக வாக்களிக்க முடியாமல் போனதற்காக அதிர்ச்சியும்...
நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இன்று நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற்று வருகிறது. நேரில் வர இயலாதவர்களுக்காக, முன்கூட்டியே தபால் வாக்குகள் அனுப்பப் பட்டன. திருச்சியில் பெருமளவில் உள்ள நாடக நடிகர்கள் சென்னை வந்து வாக்களிக்கும் பொருளாதார சூழ்நிலை இல்லை என்பதால் தபால் வாக்குகளையே நம்பி இருக்கின்றனர்.
மும்பையில் தர்பார் படப்பிடிப்பில் இருப்பதால், நேரில் வர இயலாது என்று தபால் வாக்கு கோரியிருந்தார் ரஜினிகாந்த். அதற்காக அவர் ஏற்கனவே நடிகர் சங்க தேர்தல் பொறுப்பாளர்களை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். ஆனால் நேற்று (சனிக்கிழமை) மாலை 6:45 க்குத்தான் அவருக்கு கிடைத்துள்ளது. அதன் பிறகு வாக்குச் சீட்டை இன்று தேர்தல் முடியும் நேரத்திற்குள் அனுப்ப இயலாது என்பதால், வெளிப்படையாக தனது அதிருப்தியை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்துக்கு மட்டுமல்லாமல் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு தபால் வாக்குகள் செல்லவில்லை அல்லது தாமதமாக சென்றுள்ளதாகக் நடிகர் சங்க உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். வாக்குப் பதிவு நடைபெறும் இடம் எது என்பதில் பிரச்சினை என்றாலும், தபால் வாக்குகளை அனுப்பி வைக்க தாமதம் செய்யத் தேவையில்லையே.
திருச்சியில் உள்ள நாடக நடிகர்கள் விஷால் அணி மீது கடும் அதிருப்தியில் உள்ளதாகத் தெரிகிறது. தனது சொந்தப் பணத்தில் நாடக நடிகர்களுக்கு உதவி செய்வேன் என்று பாக்யராஜ் கூறியிருந்தார். இது வாக்குகளைப் பெறுவதற்கான லஞ்சம் என்று பதிவாளரிடம் விஷால் அணியினர் புகார் அளித்தனர். ஆனால் அந்தப் புகார் எடுபடவில்லை. 61 உறுப்பினர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் தேர்தலை ரத்து செய்யவும் பதிவாளர் உத்தரவிட்டார்.
எந்த அணியையும் சாராத நடிகர்கள் மத்தியிலும் இந்தத் தேர்தல் குறித்து கடும் அதிருப்தி எழுந்துள்ளதாகத் தெரிகிறது. சமூகத் தளங்களில் சுபா வெங்கட் உட்பட நடிகர்கள் சிலர் தங்கள் ஆதங்கத்தை பகிர்ந்துள்ளார்கள்.
ஒரு பக்கம் கமல் முன் மொழிந்த நாசர் – விஷால் பாண்டவர் அணியினர். இன்னொரு பக்கம் ரஜினியின் ஆதரவுடன் கே.பாக்யராஜின் சுவாமி சங்கரதாஸ் அணியினர் என்ற நிலையில் ரஜினிகாந்தையே வாக்குப் பதிவு செய்ய விடாமல் செய்துள்ளனர் என்ற கருத்து மேலோங்கியுள்ளது.
நீதிமன்றத்தில் தேர்தலை நடத்த அனுமதி வாங்கிய விஷால் தரப்பினர், தபால் வாக்குகளில் ரஜினிகாந்த் உள்பட கிட்டத்தட்ட 500 வாக்குகள் பதிவாகாமல் பார்த்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. வாக்கு எண்ணிக்கைக்கும் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதற்கும் நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில், வழக்கு மீண்டும் ஜூலை 8ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
ரஜினிகாந்த் உட்பட தபாலில் வாக்களிக்க முடியாதவர்களின் குற்றச்சாட்டும் விசாரணையின் போது எழுப்பப்படும் என்று தெரிகிறது. ரஜினிகாந்த் தனது அதிருப்தியை மிகவும் வெளிப்படையாகவே குறிப்பிட்டு இருப்பதால், அவருடைய ட்வீட் கூட விசாரணையில் சாட்சியாக இடம் பெற வாய்ப்புள்ளது.
மூத்த நடிகர், இதுவரையிலும் அனைத்து தேர்தல்களிலும் வாக்களித்தவர், “தபால் வாக்குகளைப் பெறுவதற்கு முயற்சி எடுத்தேன். மிகவும் தாமதமாக வந்து சேர்ந்தது. இது நடந்திருக்கக் கூடாது. மிகவும் துரதிர்ஷ்டமானது, வருந்துகிறேன்” என்றெல்லாம் கூறியிருப்பது நீதிபதி கவனத்திற்கு கொண்டுவரப்படும் என்றும் தெரிகிறது.
முன்னாள் தலைவர் சரத்குமார், முன்னாள் செயலாளர் ராதா ரவி உள்பட்ட முன்னாள் நிர்வாகிகள் சிலர் நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கும் வாக்குரிமை இல்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.
நடிகர் சங்கத் தேர்தல் இன்று நடந்து முடிந்தாலும், சிக்கல் நீடிக்கும், சட்டப் பிரச்சனைகள் வலுக்கும் என்றே தெரிகிறது.
தலை அரிக்கிற சமயத்தில் தேங்காய் எண்ணெய் தடவலாமா? தடவினா என்ன ஆகும்?
June 23, 2019பொதுவாக குளிர்காலம் வந்துட்டாலே நம் தோல் உலர்ந்து போய் வறண்டு போக ஆரம்பித்து விடும். இதனால் அரிப்பு, சரும பிரச்சனைகள் போன்றவை எளிதாக தொற்றி...
உங்கள் சருமத்திற்கு ஈரப்பதத்தை மூட்ட பெட்ரோலியம் ஜெல்லி போன்றவற்றை பயன்படுத்துவதை தவிருங்கள். ஏனெனில் பெட்ரோலியம் ஜெல்லி, மினரல் ஆயில் போன்றவை புற்றுநோயை உருவாக்கும் சாத்தியக் கூறுகள் அதிகம்.
மேலும் இந்த வறண்ட சருமத்தை போக்க நீங்கள் ஒமேகா 3 கொழுப்பு அடங்கிய கிரில் ஆயிலை கூட பயன்படுத்தி கொள்ளலாம். இது உங்கள் சருமத்திற்கு நீங்கள் போதுமான நீர் அருந்தாவிட்டாலும் உள்ளிருந்து நல்ல போஷாக்கையும் ஈரப்பதத்தையும் தருகிறது.
தேங்காய் எண்ணெய்யின் மகத்துவம்
தேங்காய் எண்ணெய் சரும தொற்றுகளை எதிர்த்து போரிடுகிறது. சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள், சரும கோடுகள், தோல் இணைப்புத் திசு வலிமைக்கு, தோலின் மேற்பரப்பில் உள்ள இறந்த செல்களை நீக்குதல் போன்ற வேலைகளை செய்கிறது.
தேங்காய் எண்ணெய் உங்களை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. இது உலர்ந்த சருமத்திற்கு போதுமான ஈரப்பதத்தை தருகிறது. இதன் ஆன்டி பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு தன்மை சரும பாதிப்புகளை சரி செய்கிறது. சரும அழகுக்கும் உங்கள் குடல் ஆரோக்கியத்திற்கும் நிறையவே தொடர்பு உள்ளது. நல்ல ப்ரஷ்ஷான காய்கறிகள் குடல் பாக்டீரியாக்களை அதிகரிக்க செய்கிறது.
தேங்காய் எண்ணெய் சரும பராமரிப்பு
வீட்டில் இருக்கும் தேங்காய் எண்ணெய்யை வைத்தே உங்கள் சருமழகை மெறுகேற்றலாம். இந்த தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு சருமத்திற்கு என்று நிறைய ரெசிபிகளை நாம் வீட்டிலேயே செய்து பயன் பெறலாம். பாடி ஸ்க்ரப், ஹோம்மேடு டியோடிரெண்ட், டூத் பேஸ்ட், கை மற்றும் உடல் க்ரீம், லிப் பாம் ஏன் பூச்சி விரட்டி மருந்தாக கூட தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தி கொள்ளலாம்.
இது இயற்கையாகவே பாதுகாப்பான ஒன்றாகவும் உள்ளது. அழகு சாதனப் பொருட்களால் சருமத்தில் ஏற்படும் நச்சுக்களை போன்ற அபாயம் இதில் இல்லை.
பயன்படுத்தும் முறை
ஸ்கின் க்ளீன்சர்
1/2 டீ ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை உங்கள் கைகளில் எடுத்து சருமத்தை வட்ட இயக்கத்தில் நன்றாக மசாஜ் செய்யவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவி துடைத்து விடுங்கள்.
வாட்டர் ப்ரூவ் மேக்கப் ரிமூவர்
கண்களில் உள்ள கண்மை, ஐ லைனர், ஐ மேக்கப்பை கலைக்க தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தலாம். அதே நேரத்தில் எண்ணெய் கண்ணுக்குள் போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கொஞ்சமாக எண்ணெய்யை கையில் எடுத்து கண்களில் மெதுவாக மசாஜ் செய்யுங்கள். காட்டன் பஞ்சை எடுத்து துடைத்தெடுங்கள். பிறகு வெதுவெதுப்பான நீர் கொண்டு கழுவுங்கள்.
சரும மாய்ஸ்சரைசர்
கொஞ்சம் தேங்காய் எண்ணெய்யை கையில் எடுத்து சருமத்தில் முகத்தில் அப்ளே செய்து மசாஜ் செய்யுங்கள். இதனுடன் இயற்கை லோசன் அல்லது க்ரீம்களைக் கூட சேர்த்து மசாஜ் செய்யலாம்.
ஷேவிங் க்ரீம்
ஷேவிங் க்ரீமிற்கு பதிலாக தேங்காய் எண்ணெய்யை கூட நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
தோல் நோய்கள்
எக்ஸிமா, சொரியாஸில் போன்ற தீவிர சரும பிரச்சினைக்கு கூட தேங்காய் எண்ணெய் பயன்படுகிறது. இதன் ஆன்டி வைரல், ஆன்டி பாக்டீரியல் தன்மை சருமத்தின் வறண்ட உலர்ந்த தன்மையை போக்கி சருமத்திற்கு மென்மையையும், ஈரப்பதத்தையும் தருகிறது.