உடல் எடையை குறைக்க உதவும் கோடைக்கால காய்கறிகள் !

உண்ணும் உணவை முற்றிலும் குறைப்பதன் மூலமோ அல்லது எந்நேரமும் உடற்பயிற்சியில் ஈடுபடுவதன் மூலமோ உடல் எடையை ஆரோக்கியமாக குறைக்க முடியாது. உடல் எ...

உண்ணும் உணவை முற்றிலும் குறைப்பதன் மூலமோ அல்லது எந்நேரமும் உடற்பயிற்சியில் ஈடுபடுவதன் மூலமோ உடல் எடையை ஆரோக்கியமாக குறைக்க முடியாது. உடல் எடையை ஆரோக்கியமாக குறைக்க வேண்டுமானால், நல்ல சரியான உணவுகளை சரியான அளவில் உட்கொண்டு வர வேண்டும். அதிலும் கலோரிகள் குறைவாக இருக்கும் உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். உடலில் தங்கியுள்ள கொழுப்புக்களை கரைக்க பல உணவுப் பொருட்கள் உள்ளன. பழங்களில் எலுமிச்சை, ஆரஞ்சு, பெர்ரிப் பழங்கள் போன்றவை கொழுப்புக்களை கரைக்கக்கூடியவை. அதேப் போல் காய்கறிகளில் கூட சில காய்கறிகள் கொழுப்புக்களை கரைத்து, உடல் எடையை குறைக்க உதவும்.

அடிவயிற்றில் தங்கியுள்ள கொழுப்பை குறைக்க வேண்டுமா? இதோ 10 வழிகள்! அதிலும் கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டது. இக்காலத்தில் கலோரிகள் குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாகவும் நிறைந்த காய்கறிகள் விலை மலிவில் அதிகம் கிடைக்கும். இதனால் அவற்றை தினமும் உணவில் சேர்த்து, சரியான உடற்பயிற்சிகளை செய்து வர, உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள் கரைந்து, உடல் நன்கு ஸ்லிம்மாக இருக்கும். சரி, இப்போது உடல் எடையை குறைக்க உதவும் கோடைக்கால காய்கறிகளைப் பார்ப்போம்.

1.பாகற்காய் :
இந்த கசப்பான காய்கறியானது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைப்பதுடன், உடல் எடையையும் குறைக்க உதவும்.

2.வெள்ளரிக்காய் :
வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகமாகவும், கலோரி குறைவாகவும் உள்ளதால், இதனை கோடையில் அதிகம் சாப்பிட்டால், உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.

3.பசலைக்கீரை :
பசலைக்கீரை கூட உடல் எடையை குறைக்க உதவும் உணவுப் பொருட்களில் ஒன்று. மேலும் இதில் கலோரிகள் குறைவாக இருப்பதால், இது உடல் எடையைக் குறைக்க உதவும்.

4.சுரைக்காய் :
சுரைக்காயில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், இதனை உணவில் சேர்த்தால், அது அடிக்கடி பசி ஏற்படுவதைத் தடுக்கும். மேலும் சுரைக்காயில் உள்ள சாற்றினை வடிகட்டாமல், அதனை சாப்பிட்டால் தான், அதில் உள்ள முழு சத்தும் கிடைக்கும்.

5.ப்ராக்கோலி :
ப்ராக்கோலியை சேக வைத்து சாப்பிட்டால், அதில் உள்ள முழு சத்துக்களும் கிடைத்து, உடல் எடையை குறைக்க உதவியாக இருக்கும்.

6.பீன்ஸ் :
பீன்ஸில் உடல் எடையைக் குறைக்க தேவையான வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளது. மேலும் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் எளிதில் உடல் எடையைக் குறைக்க உதவும்.

7.குடைமிளகாய் :
குடைமிளகாயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள் உடல் எடையை குறைக்க உதவுவதுடன், உடலை ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவும்.

8.வெங்காயம் :
எப்பேற்பட்டவரையும் அழ வைக்கும் வெங்காயம் கூட, உடலில் தங்கியுள்ள கொழுப்புக்களை கரைக்கும் சக்தியைக் கொண்டது. மேலும் இது உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலை குறைக்க வல்லது.

9.முட்டைக்கோஸ் :
பச்சை இலைக்காய்கறிகளுள் ஒன்றான முட்டைக்கோஸில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் உள்ளதால், இதனை உட்கொள்ள, நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருப்பதால், உடல் எடையைக் குறைக்கும்.

10.கேரட் :
கண்களுக்கு மிகவும் நல்லது என்று சொல்லப்படும் கேரட்டில் உள்ள சத்துக்கள் கண்களுக்கு மட்டுமின்றி, உடல் எடையை குறைக்கவும் உதவியாக இருக்கும்.

11.செலரி :
டயட்டில் செலரி சேர்த்தால், அதில் உள்ள நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து, வயிற்றை நிரப்புவதுடன், உடலில் தங்கியுள்ள தேவையற்ற கொழுப்புக்களை கரைக்கும்.

12.தக்காளி :
தக்காளி ஆண்களுக்கு மிகவும் நல்லது. மேலும் உடல் எடையை குறைக்க, குடலியக்கத்தை சீராக்க மற்றும் அழகான சருமத்தைப் பெற தக்காளியை சாப்பிட வேண்டும். 

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About