கொஞ்சம் அடக்கி வாசிங்க: 'காலா' ரஞ்சித்திடம் கூறிய ஷங்கர்?

இயக்குனர் பா. ரஞ்சித் மீது அதிருப்தியில் உள்ளாராம் இயக்குனர் ஷங்கர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து 2.0 எனும் மெகா பட்ஜெட் படத்தை எடுத...

இயக்குனர் பா. ரஞ்சித் மீது அதிருப்தியில் உள்ளாராம் இயக்குனர் ஷங்கர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து 2.0 எனும் மெகா பட்ஜெட் படத்தை எடுத்து முடித்துள்ளார் இயக்குனர் ஷங்கர். 2.0 பட வேலைகளை முடித்த கையோடு ரஜினி பா. ரஞ்சித் இயக்கத்தில் காலா படத்தில் நடிக்க சென்றுவிட்டார்.

இந்த காரணத்தால் அனைவரும் காலா பற்றியே பேசி வருகிறார்களே தவிர 2.0 படத்தை யாரும் கண்டுகொள்ளவில்லை. ரஞ்சித் வேறு அவ்வப்போது காலா புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டு எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகிறார்.

காலா படத்திற்கு ஓவர் பப்ளிசிட்டி கொடுத்து வருவதால் ரஞ்சித் மீது ஷங்கர் கடுப்பில் உள்ளாராம். 2.0 படம் ரிலீஸாகும் வரை கொஞ்சம் அடக்கி வாசிங்க ரஞ்சித். அதன் பிறகு நீங்கள் காலாவுக்கு பிரமாண்ட பப்ளிசிட்டி கொடுக்கலாம் என்று ஷங்கர் கூறியதாக கோடம்பாகத்தில் பேசிக் கொள்கிறார்கள்.

2.0 புகைப்படம் லீக்கானபோது தான் அந்த படம் பற்றி பலருக்கும் மீண்டும் நினைவு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About