இந்தியா, சீனா இடையே போர் மூளும் அபாயம்!

இந்தியாவின் சிக்கிம் மாநிலம் பூடானின் டோகாலா, சீனாவின் டோங்லாங் பகுதிகள் ஒரு முனையில் சந்திக்கின்றன.  இதில் சிக்கிம் மாநில எல்லைக்குள் சீன ...

இந்தியாவின் சிக்கிம் மாநிலம் பூடானின் டோகாலா, சீனாவின் டோங்லாங் பகுதிகள் ஒரு முனையில் சந்திக்கின்றன.  இதில் சிக்கிம் மாநில எல்லைக்குள் சீன ராணுவம் அண்மையில் ஊடுருவி இந்திய ராணுவத்தின் 2 பதுங்கு குழிகளை அழித்தது. மேலும் பூடான் பகுதியை ஆக்கிரமிக்கும் வகையில் அங்கு சாலை அமைத்து வருகிறது.இந்த விவகாரம் குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜெங் சுஹாங், பெய்ஜிங்கில் நேற்று நிருபர்களிடம்,” சிக்கிம் எல்லை தொடர்பாக கடந்த 1890-ல் அன்றைய பிரிட்டிஷ் அரசுக்கும் சீனாவுக்கும் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதனை முன்னாள் பிரதமர் நேரு ஏற்றுக் கொண்டார். அடுத்து வந்த அரசுகளும் அதை பின்பற்றின. தற்போது சீன எல்லைக்குள் இந்திய வீரர்கள் ஊடுருவியுள் ளனர். இது துரோகம். எல்லையில் குவிக்கப்பட்டிருக்கும் இந்திய படைகளை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.

கடந்த 1962 போரின்போது இந்தியாவின் நிலை வேறு. தற்போ தைய நிலை வேறு என்று இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார். இதேபோல சீனாவும் முந்தைய நிலையில் இல்லை என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்”இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சீனாவின் நிலைப்பாடு குறித்து இந்திய பாதுகாப்புத் துறை வல்லுநர் பி.கே.சேகல் கூறிய போது, மிகச் சிறிய நாடான பூடானை ஆக்கிரமிக்க சீனா முயற் சிக்கிறது. பூடான் பகுதியில் இருந்து சீன ராணுவம் வெளியேற வில்லை என்றால் போர் மூள்வது உறுதி என்று தெரிவித்துள்ளார்.சீன பாதுகாப்புத் துறை வல்லுநர் ஜாவோ கேன்செங் கூறியபோது, தற்போதைய சூழ்நிலையில் இரு நாடு களிடையே போர் மூளும் அபாயம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

சீன ஊடகம் புது விளக்கம்

சீன அரசு ஊடகமான ‘குளோபல் டைம்ஸில்’ வெளியாகி உள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் அமெரிக்காவுக்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்தார். அவர் வாஷிங்டன் செல்வதற்கு 8 நாட்களுக்கு முன்பு சீன எல்லைக்குள் இந்திய ராணுவம் ஊடுருவியது.

இதன்மூலம், சீனாவின் எழுச் சியை தடுக்கும் வலிமை இந்தியா வுக்கு உள்ளது என்று அமெரிக் காவிடம் எடுத்துக் கூறி அந்த நாட்டின் ஆதரவு, நன்மதிப்பை பெற இந்தியா முயற்சித்துள்ளது.

இவ்வாறு அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About