அனுபவம்
நிகழ்வுகள்
கர்ப்பிணி பெண்களுக்கு மார்பக புற்று நோய்! – அலெர்ட் ரிப்போர்ட்
July 05, 2017
ஒரு பெண்ணின் வாழ்க்கையில் கருத்தரித்த காலகட்டம்தான் மிக சந்தோஷமான காலம். கர்ப்ப காலத்தில் பெண்க ளின் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த மாற்றங்கள் ஏற்படுவது உண்மைதான் என்றாலும், சிலர் அந்த மாற்றங்களைக் கண்டு திகைப்படைகிறார்கள். கர்ப்ப காலத்தில் ஏற்படம் மாற்றங்கள் இயல்பானவையே.கர்ப்ப காலத்தில் கர்பிணிகள் குழந்தைக்கு சேர்த்து அதிகளவு கலோரி எடுத்து கொள்ள வேண்டும் பொதுவாக ஒரு நாளைக்கு 2,200 கலோரி மதிப்புள்ள உணவை உட்கொள்பவர், கர்ப்பிணி தாய்மாராக இருக்கும் பட்சத்தில் கூடுதலாக 300 கலோரி சத்துள்ள உணவு எடுத்துக் கொள்வது அவசியம். அதாவது, சராசரியாக சாப்பிடும் உணவோடு, வயிற்றிலிருக்கும் சேய்க்கும் சேர்த்து கூடுதலாகச் சாப்பிட வேண்டும் . அதே சமயம் கர்ப்பமாக உள்ள பெண்கள் அதிக கொழுப்புடைய உணவு பொருட்களை உட்கொண்டால் மார்பக புற்றுநோய் வர வாய்ப்புள்ளதாக ஒரு ஆய்வு கூறுகின்றது.
அதாவது கர்ப்ப காலத்தில் பெண்கள் உடல் எடையை அதிகரிக்க பல்வேறு உணவு வகைகளை அதிகம் சாப்பிடுவார்கள். இதில் பெரும்பாலும் கொழுப்பு சம்பந்தமாக உணவுகளை விரும்பியோ அல்லது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு நல்லது என்ற பெயரில் வெளுத்து வாங்குவார்கள். இது குழந்தை வளர்ச்சிக்கு உதவும் என்ற ஒரு கருத்து நிலவி வந்தாலும், இதுபோன்ற கொழுப்பு உணவுகளைத் தொடர்ந்து எடுத்து வந்தால் மார்பக புற்றுநோய் வர வாயப்பு அதிகம் உள்ளது என சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் அவர்களின் உடல் எடையை அதிகரிக்க கொழுப்பு சத்து அதிகமுள்ள உணவை எடுத்துக்கொண்டாலும் மார்பக புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடலில் ஏற்படும் திடீர் மாற்றங்களால் கொழுப்பு சக்தி அதிகரித்து அது தாய்மார்களையும் கார்ப்பிணி பெண்களையும் எளிதாகத் தாக்கி அவர்களுக்கு மார்பக புற்றுநோய் உண்டாக காரணமாகி விடுகிறது. எண்ணெய், நெய் உள்ளிட்ட கொழுப்பு வகை உணவுகளை சாப்பிடுவதால் இந்த பாதிப்பு உண்டாகிறது. இந்தநோய் தலைமுறை தலைமுறையாகவும் பரவ வாய்ப்புள்ளது எனவும் அந்த ஆய்வு கூறுகின்றது.

0 comments