விவாகரத்துப் பெற்றார் ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா..!

ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யாவுக்கும் அவரது கணவர் அஸ்வினுக்கும் விவாகரத்து வழங்கி சென்னைக் குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டது. ரஜினிகாந்த்த...

ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யாவுக்கும் அவரது கணவர் அஸ்வினுக்கும் விவாகரத்து வழங்கி சென்னைக் குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டது.

ரஜினிகாந்த்தின் இளைய மகள் சௌந்தர்யாவுக்கும், சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் அஸ்வினுக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. திருமணம் நடந்த சில ஆண்டுகளிலேயே சௌந்தர்யாவுக்கும், அவரது கணவர் அஸ்வினுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனால், இருவரும் பிரிந்து வாழ்ந்துவந்தனர். இந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் இருவரும் விவாகரத்துக் கோரினர்.

அது தொடர்பான வழக்கு, நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது. கடந்த மாதம் 23-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றத்தில் ஆஜரான சௌந்தர்யாவும் அஸ்வினும் பிரிந்து வாழும் முடிவில் மாற்றமில்லை என மனுத்தாக்கல் செய்தனர். இந்த நிலையில், அந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. மனுவை ஏற்று, ரஜினி மகள் சௌந்தர்யாவுக்கும் அஸ்வினுக்கும் விவாகரத்து வழங்கி சென்னைக் குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About