தமிழக அரசுக்கு டிவிட்டரில் வேண்டுகோள் வைத்தார் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்

தமிழக அரசு கேளிக்கை வரியை ரத்து செய்யய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த திங்கள் கிழமை முதல் காலவரையற்ற காட்சி நிறுத்தத்தில் ஈடுபட...

தமிழக அரசு கேளிக்கை வரியை ரத்து செய்யய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த திங்கள் கிழமை முதல் காலவரையற்ற காட்சி நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கின்றன தமிழக திரை அரங்குகள். தமிழ்த் திரையுலகம் இந்த கேளிக்கை வரிக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இது குறித்து தனது கருத்தை தெரிவிக்க வேண்டும் என்ற கருத்தை திரை நட்சத்திரங்கள் வலியுறுத்தி வந்தனர். நேற்றைய தினம் இயக்குனர் சேரன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு டிவிட்டரில் வேண்டுகோள் வைத்தார். அதில் " ரஜினி சார், தயவு செய்து ஜி.எஸ்.டி வரி விதிப்பு மற்றும் தமிழக அரசின் வரிக்கு எதிராக குரல் கொடுங்கள். உங்களது மதிப்புமிகுந்த குரலால் தமிழ் சினிமாவை காப்பாற்ற முயற்சி எடுங்கள்' என குறிப்பிட்டிருந்தார்.


இந்நிலையில்  அமெரிக்காவில் இருக்கும் ரஜினி,  இன்று அதிகாலையில் டிவிட்டரில் தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள் வைத்திருக்கிறார்.  தமிழ் திரையுலகில் பணிபுரியும் லட்சக்கணக்கானவர்கள் நலனை கவனத்தில் கொண்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை காக்க கேளிக்கை வரி விவகாரத்தில் திரைத்துறையினரின் கோரிக்கையை பரிசீலிக்கவும்  என தமிழக அரசிடம்  வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About