அனுபவம்
நிகழ்வுகள்
ஜினிக்கு குர்தா, கமலுக்கு...? பிக்பாஸ் முதல் காலா வரை காஸ்ட்யூம் சீக்ரெட் சொல்லும் அனுவர்தன்!
July 27, 2017
‘காலா’வில் ரஜினிக்கு, ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கமலுக்கு, ‘விவேகம்’ படத்தில் அஜித்துக்கு என மூவருக்குமான காஸ்ட்யூம் டிசைனர் அனுவர்தன். தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களை ஆடை வடிவமைப்பால் மிளிரச்செய்யும் அனுவர்தனுடன் பேசினேன்.
“பிக் பாஸ் வாய்ப்பு பற்றி...?”
“ முதல்ல பிக் பாஸ் நிகழ்ச்சியோட ப்ரோமோ ஷூட்டுக்கு மட்டும், கமல் சாருக்கு காஸ்ட்யூம் டிசைன் பண்ணேன். முதல்முறையாக கமல் சாருக்கு டிசைன் பண்றேன்கிறதுனால எதிர்பார்ப்பு அதிகமா இருந்துச்சு. டிவி நிகழ்ச்சிக்கு காஸ்ட்யூம் டிசைன் வேற நபர்தான் பண்ணாங்க. நிகழ்ச்சி தொடங்க ஆரம்பிச்சதும், திடீர்னு விஜய் டிவியில இருந்தே கூப்பிட்டு, ‛பிக் பாஸ் முழு நிகழ்ச்சிக்கும் நீங்களே கமல் சாருக்கு காஸ்ட்யூம் டிசைன் பண்ணுங்க’-னு சொன்னாங்க. நிகழ்ச்சியில் கமல் சாருக்குத் தேவைப்படும் காஸ்ட்யூம் எல்லாமே இப்போ ரெடி.’’
“ஏதும் தீம் வைத்து டிசைன் செய்திருக்கிறீர்களா?”
“முதல்ல தீம்படியே காஸ்ட்யூம் டிசைன் பண்ணலாம்னு யோசிச்சேன். ஆனா ஸ்டைல்ஸ் கலவையா இருந்தா நல்லா இருக்கும்னு தோணுச்சு. ஒரே கல்ச்சரா இருக்கவேணாம்னு நினைச்சேன். கமல் சார் கூட வெரைட்டியா இருந்தா நல்லா இருக்கும்னு ஃபீல் பண்ணார். ஒவ்வொரு எபிசோடுக்கும் ஒவ்வொரு வெரைட்டியில் உடை ரெடி பண்ணிருக்கோம். எல்லாமே கமல் சாருக்கும் ரொம்ப பிடிச்சிடுச்சு. கமல் சாருக்கான உடைகள் சென்னையில்தான் ரெடி பண்றோம். ஆனால் சில துணி வகைகள் மட்டும் டெல்லி, இத்தாலியிலிருந்து வர வச்சிருக்கோம்.”
“ காலாவில் ரஜினிக்கு காஸ்ட்யூம் டிசைன் பண்ணிட்டு இருக்கீங்களே!”
“ ’கபாலி’க்கும் நான்தான் காஸ்ட்யூம் பண்ணிருந்தேன். அந்தப் படம் முடிந்த சமயத்துல, ' நடிக்கும் போது ஒண்ணும் தெரியலை. ஆனா ஸ்க்ரீன்ல பார்க்கும் போது ரொம்ப நல்லா வந்திருக்கு’னு ரஜினிசார் என்னைப் பாராட்டினார். அப்போவே செம சந்தோஷம். ரஜினி சாருக்கு சிம்பிளான வேட்டி, சட்டைனா கூட வெற லெவல்ல இருக்கும். ஸ்டைலிஷான எந்த மாதிரியான உடைனாலும் அவருக்கு ரொம்ப பிடிக்கும். காலாவில் ரஜினிசாருக்கும், நானா படேகர், ஹூமா குரேஷி மூன்று பேருக்கும் டிசைன் பண்ணிருக்கேன். என்ன ஹேப்பினா, காலாவும் பிக்பாஸ் நிகழ்ச்சியும் பக்கத்துப் பக்கத்து செட்ல ஷூட்டிங் போகுது. ஒரே நேரத்தில் இரண்டு லெஜண்டுகளுக்கும் வேலை செய்யுறது ரொம்ப ஆர்வமா இருக்கு. நிஜமாகவே நான் ரொம்ப லக்கினுதான் நினைக்கிறேன்.”
“ ஐடியாஸ் எங்க இருந்து பிடிக்கிறீங்க?”
“நாம பார்க்குற விஷயங்கள், கலை சார்ந்த செயல்பாடுகள்னு நிறைய இன்ஸ்பரேஷன் ஆகுறதுதான் காரணம். முக்கியமா அதிகமா டிராவல் பண்ணுவேன். ஒவ்வொரு முறை டிராவல் பண்ணும்போதும் நிறைய ஐடியாக்களோடுதான் வருவேன். நிறைய படைப்புகள் உருவாகுவதற்கு டிராவல் ரொம்ப முக்கியம்.”
அனு வர்தன்
“பிக் பாஸ் உங்களுக்குப் பிடிச்சிருக்கா?”
“உண்மைய சொல்லணும்னா டிவி அதிகமா பார்க்கமாட்டேன். ஆனா கமல்சார் வர எபிசோட் மட்டும், கமல் சாருக்காகப் பார்ப்பேன். நிறைய பேர் பேசுறதும், சோசியல் மீடியா கமென்டு எல்லாம் பார்க்கும் போதே தெரியுது, இது ரொம்ப பெரிய ஹிட். குறிப்பா ஓவியாவுக்குப் பெரிய ஆதரவு இருக்கு. ஏன்னா, பலரும் ஓவியா பற்றித்தான் நிறைய பேசுறாங்க.”
“விவேகம் படத்தில் அஜித் பார்க்க எப்படி இருப்பார்?”
“பொதுவா விஷ்ணுவோட படங்கள் மட்டும்தான் முழு படத்திற்கும் காஸ்ட்யூம் பண்ணுவேன். இப்போ விவேகம் படத்திற்கு முழுமையா காஸ்ட்யூம் பண்ணியிருக்கேன். படத்தில் செம மாஸா இருப்பார். நிறைய ஸ்டைல்ஸ் ட்ரை பண்ணியிருக்கோம். நல்லா வெயிட் குறைச்சிருக்கார்.
சினிமாவுக்கு காஸ்ட்யூம் டிசைன் எவ்வளவு முக்கியம்?
“நினைச்ச விஷயத்தை படத்தில் கொண்டுவரதுக்கு, நடிகர்களோட ஆடையமைப்பும் நிறையவே உதவும். படத்திற்கான லுக் கொடுக்கும். படத்திற்கான ஃபீல் கொண்டுவரும். ஆள் பாதி ஆடை பாதிங்கிற விஷயம்தான். கபாலியில் ரஜினி போட்ட ட்ரெஸ்ஸெல்லாம் இங்க நிறையப் பேர் போடுறாங்கங்கிறதுதான் படத்தோட வெற்றி.
“ரஜினி, கமல், அஜித் மூவருக்கும் எந்த காஸ்ட்யூம் நல்லா இருக்கும்? ”
“ரஜினி சார் குர்தா போட்டா ரொம்பப் பிடிக்கும். கமல்சார் லினின் துணியில் என்ன போட்டாலும் க்ளாசியா இருப்பார். அதுமாதிரி அஜித் சாருக்கும் ப்ளைனா சிம்பிள் டிஷர்ட் போடும்போது செமயா இருப்பார்.”

0 comments