சினிமா
திரைவிமர்சனம்
மீசையை முறுக்கு - திரைவிமர்சனம்
July 27, 2017
தன்னம்பிக்கையோடு நம்மால் முடியும் கனவு காணுங்கள் என அப்துல் கலாம் சொன்னதை போல இசையே வாழ்க்கை என்று நம்பிக்கையோடு களமிறங்கிய ஹிப் ஹாப் ஆதியின் வாழ்க்கையை மையமாக வைத்து அவரே இசையமைத்து நடித்து இயக்கிய படம் தான் மீசையை முறுக்கு.
கதைக்களம்
விவேக்கின் இரண்டு மகன்களில் ஒருவர் ஆதி. சிறுவயதிலே இருந்தே குறும்புத்தனத்துடன் நண்பர்களோடு சுற்றி திரியும் நபர். ஆனால் இசை மீது சிறுவயதிலிருந்த ஆர்வம் அதிகம். ஸ்கூல் பருவத்திலிருந்தே நண்பன் விக்னேஷ் காந்துடன் தனது கலாட்டாக்களை அரங்கேற்றுவார்.
ஆதியின் சேட்டைகள் அதிகமானதால் விவேக் கோயம்புத்தூரில் உள்ள ஒரு இன்ஜினியரிங் கல்லூரியில் ஆதியை சேர்க்கிறார் அவருடன் விக்னேஷ் காந்தும் அதே கல்லூரியில் படிக்கிறார். ஒவ்வொரு இளைஞர்களின் கல்லூரி வாழக்கை மறக்கமுடியாதோ அதே போல் இவர்களின் கல்லூரிவாழ்க்கையும் ராக்கிங், சீனியர், ஜூனியர் சண்டைகள், ஆதியின் காதல், கல்ச்சரல் என்று ஆதியின் வாழ்க்கை நகர்கிறது.
அதே சமயம் தன்னுடைய இசைக்கான தேடுதலை கல்லூரி ஆண்டுவிழாவிலிருந்து தொடங்கிறார். இந்நேரத்தில் தான் கல்லூரி காலம் முடிந்து அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கும் போது Independant இசைமைப்பாளர் ஆக வேண்டும் என்று விவேக்கிடம் சொல்கிறார்.
மியூசிக் எல்லாம் வாழ்க்கைக்கு செட் ஆகாது என்று விவேக் சொல்ல, ஒரு வருடம் டைம் கேட்டு சென்னைக்கு கிளம்புகிறார். தன்னுடைய இசை கனவுக்கான வாழ்க்கையில் ஜெயித்தாரா? இடையில் பிரிந்த தன்னுடய காதல் ஜெயித்ததா? எப்படி சினிமாவில் இசைமைப்பாளர் ஆனார் என்பது தான் இந்த மீசையை முறுக்கு.
நடிகர், நடிகைகளின் பங்களிப்பு
ஆதி தன்னுடய இசை வாழ்க்கையின் வலிகளை மிகவும் தத்ருபவமாக நடிப்பில் வெளிப்படுத்தியுள்ளார். அவர் இசையமைத்த ஒவ்வொரு பாடலுக்கும் பின்னாடி ஒரு கதை வைத்தது இயக்குனராக ரசிக்க வைக்கிறது. தன் வாழ்க்கையை கண்முன் காண்பித்த விதம் ஒவ்வொரு இளைஞருக்கும் உத்வேகத்தை கொடுக்கும்,
நண்பராக வரும் விக்னேஷ் காமெடியில் கலக்கியுள்ளார், முக்கியமாக யூடுப் ஷாரா டைமிங் காமெடி சிறப்பு, படத்தில் நடித்த நண்பர்கள் அனைவருமே நன்றாக செய்துள்ளனர்.
ஹீரோயின் ஆத்மீகா காதலால் சிக்கித்தவிக்கும் காட்சிகள் மிக இயல்பு, யதார்த்தமான அப்பாவாக விவேக் சார் பிரதிபலிக்கிறார். வாழ்க்கை ஒரு நீச்சல் மாதிரி, நீந்தி தான் கத்துக்க முடியும், உன்னால் முடியும் அதே சமயம் படிப்பும் முக்கியம் என்று மகனுக்கு ஹீரோவாக திகழ்கிறார். விவேக் சார் நடித்ததில் இதுவும் குறிப்பிடத்தக்க கதாபாத்திரம்.
கிளாப்ஸ்
உத்வேகத்தை கொடுக்கும் திரைக்கதை,
ஆட்டம் போடவைக்கும் பாடல்கள் மற்றும் பின்னணி இசை
ஆதியின் வாழ்க்கையில் நடந்த உண்மை கதையை ரசிக்கும் விதம் கொடுத்தது
பல்ப்ஸ்
முதல் பாதியின் நீளம், கொஞ்சம் போர் அடிக்கும் பழைய காட்சிகள்
ஒர்க்கவுட் ஆகாத சில காமெடி காட்சிகள்
ஆதி இசையமைப்பாளராக ஜெயிக்க வேண்டும் என்று தன் வாழ்கையில் பட்ட கஷ்டத்தை இயக்குனராக காட்டியதில் ஜெயித்து விட்டார். முக்கியமாக கடைசியில் அந்த இரண்டு அடிமைகள் செம பினிஷிங் டச் (படம் பார்த்தவர்களுக்கு புரியும்)
மொத்தத்தில் இயக்குனராக மீசைய முறுக்கி ஜெயித்து விட்டார் ஆதி

0 comments