Fidaa - திரைவிமர்சனம்

மலரே புகழ் சாய் பல்லவி முதன்முதலாக தெலுங்கில் நடித்திருக்கும் படம் Fidaa. சேகர் கம்முல்யா இயக்கியிருக்கும் இப்படத்தில் வருண் தேஜ் நாயகனாக ந...

மலரே புகழ் சாய் பல்லவி முதன்முதலாக தெலுங்கில் நடித்திருக்கும் படம் Fidaa. சேகர் கம்முல்யா இயக்கியிருக்கும் இப்படத்தில் வருண் தேஜ் நாயகனாக நடித்திருக்கிறார். இன்று வெளியாகி இருக்கும் இப்படம் எப்படி இருக்கிறது வாங்க பார்ப்போம்.

கதைக்களம்

காதல், பிரிவு, மீண்டும் காதல் இது வழக்கமாக படங்களில் இருப்பது தான். USAவில் படித்துவரும் வருண் (வருண் தேஜ்) தனது அண்ணனின் திருமணத்திற்காக இந்தியா வருகிறார். வந்த இடத்தில் அண்ணன் திருமணம் செய்துகொள்ள போகும் அண்ணியின் தங்கை பானுமதி (சாய் பல்லவி) மீது காதலில் விழுகிறார்.

இருவருக்குள்ளும் சில சுவாரஸ்ய விஷயங்கள் நடக்கிறது. சில விஷயங்களால் திருமண முடிவில் வருண், பானுமதி இடையில் பிரிவு ஏற்படுகிறது. கடைசியில் இவர்கள் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பது கதை.

படத்தை பற்றிய அலசல்

தெலுங்கு மொழி தெரியாத சாய் பல்லவி தெலுங்கானா உச்சரிப்பில் அசத்தியுள்ளார். வழக்கமான கிராமப்புற பாணியில் காமெடிகள் இடம்பெற்றிருக்கிறது. வருண், சாய் பல்லவி தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் அழகாக நடித்துக் கொடுத்துள்ளனர்.

க்ளாப்ஸ்

சாய் பல்லவியின் தெலுங்கு உச்சரிப்பு, புடவையில் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

முதல் பாதியில் வரும் காமெடி காட்சிகள்.

பல்ப்ஸ்

இரண்டாம் பாதி கொஞ்சம் மெதுவாக செல்கிறது. முதல் பாதியில் இருந்த காமெடி இரண்டாம் பாதியில் சுத்தமாக இல்லை.

மொத்தத்தில் மலர் டீச்சருக்காகவே இந்த படத்தை திரையில் பார்க்கலாம்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About