இந்தியாவுக்கு அடுத்த மிரட்டல்... பிரம்மபுத்ரா நதியை சீனாவுக்குள் திருப்பத் திட்டம்!

திபெத்திலிருந்து பிரம்மபுத்ரா நதியை சீனப் பகுதிக்குள் திருப்ப 1000 கிலோ மீட்டர் நீளத்துக்கு சுரங்கப்பாதை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது. பிரம...

திபெத்திலிருந்து பிரம்மபுத்ரா நதியை சீனப் பகுதிக்குள் திருப்ப 1000 கிலோ மீட்டர் நீளத்துக்கு சுரங்கப்பாதை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது.

பிரமபுத்திரா நதியை திருப்ப திட்டம்.

உலகிலேயே உயர்ந்த பீடபூமியான திபெத்தில் உற்பத்தியாகி, அருணாச்சலப்பிரதேசம், அஸ்ஸாம் வழியாகப் பாய்ந்து, வங்கதேசத்தில் கடலில் சேர்கிறது பிரம்மபுத்ரா நதி. 2,900 கிலோ மீட்டர் நீளம்கொண்ட இந்த நதி, லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம்.

பிரம்மபுத்ரா நதியை வடமேற்கு சீனாவில் உள்ள ஜின்ஜியாங் மாகாணத்துக்குத் திருப்பி விட, 1000 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கத் திட்டமிட்டுள்ளது அந்நாடு. இந்த சுரங்கப்பாதை அமையும்பட்சத்தில், உலகிலேயே அதிக நீளமானதாக இது  இருக்கும். பிரம்மபுத்ராவை சீனாவுக்குள் திருப்புவதை சீனா தனது லட்சியத் திட்டம் என்று சொல்கிறது.

இதற்கு முன்னோட்டமாக, 600 கி.மீ நீளத்துக்கு சுரங்கம் ஒன்றை யூனான் மாகாணத்தில் சீனா வெட்டிவருகிறது. சுரங்கம் வெட்டும் பணிகள், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கியது என 'சைனா மார்னிங் போஸ்ட்'  பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. பிரம்மபுத்ரா திருப்பப்பட்டால், ஜின்யாங் மாகாணம் கலிஃபோர்னியா போல மாறிவிடும் என்றும் அந்தப் பத்திரிகை சொல்கிறது.

ஏற்கெனவே, திபெத் பீடபூமியில் பிரம்மபுத்ரா நதியில் அணைகள், நீர் மின்நிலையங்கள் கட்டி,  இந்தியாவுக்கு வரும் தண்ணீரின் அளவை சீனா குறைத்துள்ளது. 'மின்சார உற்பத்திக்காக மட்டுமே பிரம்மபுத்ராவில் அணை கட்டுவதாகவும் நீரின் அளவை குறைக்கவில்லை' என்று சீனா மறுப்பது வாடிக்கை. இந்த சுரங்கத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், இந்தியாவுக்குக் கிடைக்கும் தண்ணீரின் அளவு வெகுவாகக் குறைந்துவிடும். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள், வங்கதேசம் ஆகியவை பெரிதும் பாதிப்புக்குள்ளாகும்.

லியானிங் மாகாணத்தில் Dahuofang water project திட்டத்துக்காக 85 கிலோ மீட்டர் நீளமுள்ள சுரங்கம் வெட்டியுள்ளது அந்நாடு. தற்போது, சீனாவில் இதுதான் மிகப் பெரிய சுரங்கம்.  நியூயார்க் நகருக்கு குடிநீர் வழங்கும் திட்டத்துக்காக 137 கிலோ மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதை உள்ளது. உலகளவில் இந்த சுரங்கம்தான் நீளமானது.

சுரங்கப்பாதை ஆராய்ச்சியாளர் வாங் வீ, சுரங்கம் அமைப்பதில் தலைசிறந்த நிபுணரான வாங் மெங்சூ உள்ளிட்ட 100 பேர் கொண்ட குழு, 1000 கி.மீ நீளமுள்ள சுரங்கப்பாதை மாதிரியைத் தயாரித்துள்ளது. திபெத்தில் சங்ரி கன்ட்ரி என்ற  பகுதியில் பிரம்மபுத்ரா நதிக்குள் செயற்கைத் தீவு ஏற்படுத்தி, அங்கிருந்து  சுரங்கப்பாதை தொடங்க உள்ளது.

பிரம்மபுத்ரா தண்ணீரைக்கொண்டு ஜியாங் கியாங் மாகாணத்தில் உள்ள டக்லிமாகன் பாலைவனப்பகுதியைச் செழுமையாக்குவது என்பது சீனா வின் எண்ணம். இதற்காக, 150 பில்லியன் அமெரிக்க டாலர்களைச் செலவிடப் போவதாகவும் சொல்லப்படுகிறது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About