சசிகலா, திவாகரன் வீட்டில் சோதனை ஏன்? வைத்திலிங்கத்தின் 'அடடே' பதில்

யார் முறையாக வருமான வரி கட்டவில்லையோ அவர்களின் வீடுகளில் சோதனை நடப்பது இயல்புதான் என்று முதல்வர் பழனிசாமி அணியின் துணை ஒருங்கிணைப்பாளர் வ...

யார் முறையாக வருமான வரி கட்டவில்லையோ அவர்களின் வீடுகளில் சோதனை நடப்பது இயல்புதான் என்று முதல்வர் பழனிசாமி அணியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.பி தெரிவித்துள்ளார்.

வருமான வரித்துறையினரின் அதிரடி நடவடிக்கை இன்று காலை சசிகலா குடும்பத்தினர் மீது பாய்ந்தது. அதிகாலை 6.30 மணியிலிருந்து களத்தில் இறங்கிய வருமான வரித்துறையினர் சசிகலா, அவரது சகோதரர் திவாகரன் ஆகியோரின் வீடு, அலுவலகங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், வழக்கறிஞர் நாமக்கல் செந்தில் உள்ளிட்டவர்களின் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

அதோடு, ஜெயா தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் நமது எம்ஜிஆர் பத்திரிகையைக் கைப்பற்றுவோம் என்று முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானமே நிறைவேற்றப்பட்டது. தற்போது அந்த இரண்டு நிறுவனங்களிலும் சோதனை நடந்து வருகிறது.

இதனிடையே, சசிகலா மற்றும் திவாகரன் ஆகியோரின் வீடுகளில் நடந்து வரும் வருமான வரித்துறை குறித்து தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்கள் முதல்வர் பழனிசாமி அணியைச் சேர்ந்த எம்.பி வைத்திலிங்கத்திடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், யார் முறையாக வருமான வரி கட்டவில்லையோ அவர்களின் வீடுகளில் சோதனை நடப்பது இயல்புதான். ஏற்கெனவே வருமான வரி சோதனை இதுபோல் பலமுறை நடந்துள்ளது. இரட்டை இலைச் சின்னம் விவகாரத்துக்கும் சோதனைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை" என்று கூறினார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About