அனுபவம்
சினிமா
நிகழ்வுகள்
அஜீத்தின் இப்போதைய முடிவு பின்னாளில் என்னாகப் போகிறதோ?
November 09, 2017
புடிச்சா புளியங் கொம்பு, முறிச்சா முருங்கை கம்பு’ என்று தான் நினைத்த விஷயத்தை நினைத்தபடி முடித்துக் கொள்கிற துணிச்சல் அஜீத்திற்கு உண்டு. விவேகம் படத்தின் ‘ரெவின்யூ’ சூப்பராக இருந்தாலும், ‘ரிவ்யூ’ புவர்தான். இதையடுத்து “இனிமே சிவா வேணாம்… வேணவே வேணாம்…” என்று அஜீத் ரசிகர்கள் ஒரு பக்கம் கூவிக் கொண்டிருந்தாலும், சிவாவுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முழு வேக முடிவெடுத்துவிட்டார் அஜீத்.
தனது அடுத்த படத்தையும் சிவா இயக்கத்தில் தருவதற்கு அவர் முன் வந்த நிலையில், ரசிகர்களுக்கு இருந்த அதே டவுட் மற்றும் வெறுப்பு தயாரிப்பாளர்களுக்கும் இருக்கும் அல்லவா? விவேகம் படத்தால் பெருமளவு துயரத்தில் இருந்த சத்யஜோதி தியாகராஜனுக்கு வெளியே கடன் வாங்க… பணம் புரட்ட… சிவாவின் தோல்வி இமேஜ் செட்டாகவில்லை.
இந்த நேரத்தில்தான் தமிழகத்தில் அரசியல் பின்னணியுடன் செயல்பட்டு வரும் அந்த இரண்டெழுத்து சேனல், “டோன்ட் வொர்ரி. பணம் தர்றது எங்க பொறுப்பு. இந்தப்படத்தை முதல் பிரதி அடிப்படையில் பண்ணிக் கொடுங்க” என்று கூறிவிட்டது. இந்த பொறுப்பை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டுவிட்டது சத்யஜோதி நிறுவனமும்.
“அந்த சேனலா…? இன்டர்வியூ வேணும்னு கேட்பாங்களே?” என்று முதலில் தயங்கிய அஜீத், “பிரமோஷனுக்கு அழைக்கக்கூடாது” என்ற நிபந்தனையின் பேரில் ஒப்புக் கொண்டாராம்.
படம் வெளியாகும் நேரத்தில் இதே சேனல், ஆளுங்கட்சி சேனல் ஆகிவிட்டால், அஜீத்தின் நிபந்தனை நிச்சயம் செல்லா காசாகிவிடும் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை!

0 comments