சினிமா
திரைவிமர்சனம்
இப்படை வெல்லும்- நல்ல பொழுதுபோக்கு. விலை கொடுத்து டிக்கெட் வாங்கலாம்.
November 09, 2017
இப்படை வெல்லும் என சற்று திரும்பி பார்க்கும் வகையில் உதயநிதி, மஞ்சிமா நடிப்பில் வெளியாகியிருக்கும் இப்படம் திகைப்பை கூட்டுமா, போட்டி படங்களை வெல்லுமா என படையை நோக்கி செல்வோம், பார்ப்போம் இது எப்படை என்று.
கதைக்களம்
உதயநிதி ஹீரோவாக நடிக்கும் இக்கதையில் அம்மா ராதிகா பஸ் ஓட்டுனர். மகன், இரு மகள்களை காப்பாற்றி வருகிறார். உதயநிதி சாப்ட்வேர் கம்பெனியில் நல்ல சம்பளத்தில் இருக்கிறார். நன்றாக லைஃப் போய்க்கொண்டிருக்கும் இவருக்கு திடீரென வேலையை இழக்கும் சூழ்நிலை உண்டாகிவிட்டது.
தன் தோழியான மஞ்சிமாவுடன் காதல் ஒரு பக்கம். இவர்களின் காதல் போலிஸ் அதிகாரியாக இருக்கும் மஞ்சிமாவின் அண்ணன் ஆர்.கே.சுரேஷ்க்கு தெரியவர கதை சூடுபிடிக்கிறது. கல்யாணத்திற்கு முடிவெடுக்கும் இவர்கள் வாழ்க்கை குழப்பத்திற்கு நடுவே செல்ல உதயநிதி ஒரு நாள் இரவில் கார் டிரைவ் செல்லும் திடீரென விபத்து.
சோட்டா, சோட்டா என காவல் துறைக்கு பெரும் சவாலாக இருக்கும் இவருக்கு உதவி செயப்போய் உதயநிதி வலையில் சிக்குகிறார். இதே போல தான் சூரிக்கும். இருவரையும் போலிஸ் விரட்டுகிறது. இதோடு இவர்களை கொல்ல வேறொரு சதியும் போலிஸ் வட்டாரத்திற்குள் நடக்கிறது.
நடப்பது எதுவும் தெரியாமல் பதிவு திருமண அலுவலக வாசலில் காத்திருக்கிறார். கடைசியில் திருமணம் நடந்ததா, உதயநிதி, சூரி போலிஸிடமிருந்து தப்பித்தார்களா, சோட்டாவின் பின்னணி, போலிஸில் சிக்கினாரா என்பது தான் கதை.
படத்தை பற்றிய அலசல்
உதயநிதி அடுத்தடுத்து படங்களை தயாரித்தும் நடித்தும் வருகிறார். சரவணன் இருக்க பயமேன் படத்திற்கு பிறகு இப்படத்தில் மீண்டும் ஒரு சாஃப்ட் ஆன ஹீரோ. நடிப்பெல்லாம் ஓகே தான்.
ஆனால் அவர் இன்னும் முயற்சி எடுத்தால் வேறு கதாபாத்திரங்களில் ஜொலிக்கலாம். அவரின் வழக்கமான படங்கள் போல அதிகமான டூயட் எல்லாம் இப்படத்தில் இல்லை.
மஞ்சிமா தன் அண்ணன் எதிர்த்தாலும் காதலில் ஜெயிக்க வேண்டும் என காட்டும் சீரியஸ்னஸ் சில இடங்களில் சற்று தொய்வு அடைந்துவிட்டதோ என தோன்றுகிறது. ஆனால் கடைசியில் உதயநிதிக்கு ஆதரவாக இவர் செய்யும் வேலைகள் கொஞ்சம் இம்ப்பிரஷ் செய்கிறது.
உதயநிதி, சூரி காமெடி செண்டிமெண்ட் போல இப்படத்திலும் தொடர்ந்துள்ளது. ஆனால் சூரி ஆஸ்பத்திரியில் செய்யும் அலம்பல் தியேட்டரில் உட்கார்ந்திருக்கும் அனைவரையும் சிரிக்க வைத்தது.
படம் முழுக்க இவரும் ட்ராவல் ஆகிறார். இருவரும் சேர்ந்து வேறு எதையோ மனதில் வைத்து பேச காவல் துறை அதை சீரியஸாக எடுத்துக்கொண்டு செய்யும் விதம் காமெடி காட்சிகள் ஒர்க்கவுட் ஆனது.
டேனியல் பாலாஜி ஒரு தனி ட்ராக். தன் அடுத்தடுத்த பிளானால் கொஞ்சம் பதட்டம் கூட்டுகிறார். ஜெயிலில் இருந்தவர் எப்படி வெளியே வந்தார், தலைமறைவாக இருந்தவர் எப்படி போலிஸால் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டார் என கதை கொஞ்சம் ஃபாஸ்ட் மூவிங் தான்.
காட்சிகளை படமாக்கிய விதம், கோர்வை செய்தது எல்லாம் ஓகே. படத்தின் ஆரம்பத்தில் ஏதோ அறிஞர்கள், வரலாற்றில் இடம் பிடித்தவர்கள் பலரை காட்டி கதைக்குள் எதையும் வைக்கவில்லையோ என தோன்றுகிறது.
இப்படத்திற்கு இமான் தான் இசையமைத்தாரா என கேட்கவைக்கிறது. அவரும் கதைக்கு பின்னால் ஒளிந்து கொண்டாரோ என தோன்றுகிறது. இப்படத்தில் அவர் ஏதாவது ஒரு பாடலை ஹிட் லிஸ்டில் இடம்பெற செய்வாரா என்றால் கேள்வி குறி தான்.
கிளாப்ஸ்
நடிப்பில் அனைவரும் அவரவர் கொடுத்த ரோலை செய்திருக்கின்றனர். மெயினான ஒரு டெக்னாலஜி விசயம்.
அது தான் துப்பு. அதை வைத்து சஸ்பென்ஸ் மெயிண்டெயின் பண்ணியிருக்கிறார்கள்.
போர் அடிக்கும் ஃபீலிங் இல்லை. சூரி, எம்.எஸ்.பாஸ்கர் இருவரும் காமெடியில் ஸ்கோர் அள்ளுகிறார்.
ராதிகா பிள்ளைகள் மீது பெற்றவர்கள் நம்பிக்கை வைக்கவேண்டும் என ஹைலைட் செய்கிறார்.
பல்பஸ்
உதயநிதி போதும் இப்படியே ட்ராவல் ஆவோம் என ஸ்டராட்டெர்ஜி வைத்துள்ளாரோ என கேள்வி எழுகிறது.
வில்லன் சோட்டாவின் பின்னணி என கடைசியில் சொல்லாமலே விட்டுவிட்டார்கள். லிங்க் கட்டாகிவிட்டது.
சீரியாஸாக கொண்டு போய் கடைசியில் சிம்பிளாக முடித்துவிட்டார்கள்.
மொத்தத்தில் இப்படை வெல்லும் நல்ல பொழுதுபோக்கு. விலை கொடுத்து டிக்கெட் வாங்கலாம்.

0 comments