கமலின் மனநிலை சரியில்லை, மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் : பிரபல அரசியல் கட்சி தலைவர்

நடிகர் கமல்ஹாசன் ஒரு பிரபல வார இதழில் எழுதிய கட்டுரையில் ஹிந்துக்கள் தீவிரவாதிகள் என குறிப்பிட்டிருந்தார். அதற்கு தற்போது பெரிய அளவில் எதிர...

நடிகர் கமல்ஹாசன் ஒரு பிரபல வார இதழில் எழுதிய கட்டுரையில் ஹிந்துக்கள் தீவிரவாதிகள் என குறிப்பிட்டிருந்தார். அதற்கு தற்போது பெரிய அளவில் எதிர்ப்பு எழுந்துள்ளது.

கமல் கூறியிருப்பவதாவது..

”கலாசாரம், பண்டிகை, இறை வழிபாடு என, பல வழிகளில் பழமையை பரப்ப, சிலர் முயன்று வருகின்றனர். ஒரு தலைமுறையே, ஜாதி வித்தியாசம் தெரியாமல் வளர்ந்து வரும் வேளையில், பழமைவாதிகள், அவர்களுக்குள் புகுந்து, ஜாதி வித்தியாசங்களை போதிக்க துவங்கி உள்ளனர். இதுவரை, வாதங்களால் செய்த விஷயங்கள், முடியாமல் போகவே, வன்முறையால் நிகழ்த்த ஆரம்பித்து விட்டனர். 'எங்கே ஓர் இந்து தீவிர வாதியை காட்டுங்கள்' என்ற சவாலை, அவர்களால் விட முடியாது. அந்த அளவுக்கு, அவர்கள் கூட்டத்திலும், தீவிரவாதம் பரவி இருக்கிறது" என கமல் கூறியுள்ளார்.

கமலின் இந்த கருத்துக்கு பாஜகாவை சேர்ந்த தலைவர் Vinay Katiyar "கமல் மன்னிப்பு கேட்க வேண்டும். அவரின் மனநிலை சரியில்லை - மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும்" என கூறியுள்ளார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About