6 அத்தியாயம் திரைவிமர்சனம்

சில படங்கள் தியேட்டர்களில் வருவது வெளியே அவ்வளவாக தெரிவதில்லை. சிறு படஜெட் படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதே திண்டாட்டம் என்ற சூழ்நிலையில் ஒர...

சில படங்கள் தியேட்டர்களில் வருவது வெளியே அவ்வளவாக தெரிவதில்லை. சிறு படஜெட் படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதே திண்டாட்டம் என்ற சூழ்நிலையில் ஒரு சில படங்கள் எப்படியோ வந்துவிடுகிறது.

ஆனாலும் ஏற்கனவே பார்த்து பழகிய சில முகங்களுக்காக படம் பார்க்க தோன்றலாம். தற்போது 6 ம் அத்தியாயம் வந்துள்ளது. இந்த அத்தியாயம் புது அத்தியாயம் படைக்குமா என பார்க்கலாம்.

முதல் அத்தியாயத்தில் நடிகர் தமன் ஒரு விசித்திரமான மனிதர். ஏதாவது ஒரு ஆபத்து நிகழப்போகிறது என்றால் முன் கூட்டியே அவருக்குள் காட்சிகளாக ஓடுகிறது. இதை சொன்னால் அவரை குடும்பத்தில் பைத்தியகாரன் என்பார்கள். இதனால் மனநல மருத்துவரை சந்திக்கப்போவார். அங்கு நடப்பதோ வேறு என்கிறார்.

இரண்டாம் அத்தியாயம். சாலையோர சிக்னலில் பொருட்கள் விற்கும் சிறுமியை ஒருவர் தன்னுடன் அழைத்து சென்று அவளை அடைய நினைக்கிறார். பின் அவள் என்ன ஆனாள் என்பதுதான்.

மூன்றாம் அத்தியாயம். இதில் கோலி சோடா கிஷோருடன் இரு நண்பர்கள் ஒன்றாக தங்குகிறார்கள். கிஷோர் ஒரு பெண்ணிடம் தன் காதலை வெளிப்படுத்த செல்கிறார். காதலால் அவருக்கு விபரீதம். கதை இங்கேயும் ட்விஸ்ட்.

நான்காம் அத்தியாயம் ராஜா ராணி சீரியல் கார்த்திக் தன் மாமா வீட்டிற்கு விருந்தாளியாக செல்கிறார். ஸ்கிரிப்ட் எழுவதில் ஆர்வமிருக்கும் அவர் தனிமையாக உட்கார்ந்து தன் வேலையை செய்ய நினைக்கையில் ஒரு அமானுஷ்ய அனுபவம். பின் என்ன நடந்தது?

5 ம் அத்தியாயம் ஆஃபிஸ் சீரியல் நடிகர் திருமணத்திற்காக வரன் தேடுகிறார். பெண்களை சந்திக்கும் ஏதோ ஒரு சக்தி அவரின் வாழ்க்கையில் விளையாடுவதால் ஒவ்வொரு முறையும் தோற்கிறார். எந்த ஜென்ம வினையோ தான்? பின் அவருக்கு கல்யாணம் ஆனதா?

6 ம் அத்தியாயம் நடிகர் வினோத் கிஷன் ஒரு தீவிர புத்தக பிரியர். படிக்கும் போது தனக்குள் கிடைக்கும் அனுபவத்தை ஓவியமாக தீட்டுவதில் அத்தனை பெரிய ஆர்வம் அவருக்கு.

தனக்கு வரும் ஓவிய ஆர்டரை முடிக்கும் வேளையில் ஏதோ ஒரு விசயம் அதை முடிக்க விடாமல் செய்கிறது.

இப்படி 6 அத்தியாயங்களில் கடைசியில் அவர்கள் என்ன ஆனார்கள், எதனால் இப்படியானது என்பதே கதை.

படத்தை பற்றிய அலசல்

நடிகர் தமன் தான் முதல் அத்தியாத்தின் சூப்பர் ஹீரோ. அவருக்குள் இப்படி ஒரு வித்தியாசமான அனுபவமா என கேட்க தோன்றும். ஆனால் அவருக்கு தோன்றுவது ஹாலுசினேசன் என்று சொன்னால் பொருந்தாது.

நடிகர் கிஷோர்க்கு ஒரு சின்ன ரோல் போல தான். ஆனால் காதல் தோல்வி ஒரு பக்கம், நண்பர்களின் சதி மறுப்பக்கம் என மாட்டிகொள்கிறார். கடைசியில் அவருக்கு இப்படியே என்றால் திணறியது போல் இருந்தது.

நடிகர் ராஜா ராணி கார்த்திக்கு சிறிது காட்சிகள் தான். ஆனால் இவருக்கு நடக்கும் அமானுஷ்யமா இல்லை அதிசயமா, மன பிரம்மையா என படத்தில் பாருங்கள். அவரின் ரோல் ஓகே தான்.

நடிகர் வினோத் கிஷன் சமீபத்தில் இதுபோன்ற கேரக்டர் ரோல்களில் நன்றாக நடித்துவருகிறார். சின்ன வயசு சூர்யாவாகவும், அஜித்துக்கு தமிவியாகவும் நடித்தவராச்சே. நன்றாக தான் இதிலும் நடித்திருக்கிறார்.

ஆஃபிஸ் சீரியல் நடிகரின் காட்சிகள் படத்திற்கு கொஞ்சம் காமெடித்துவத்தை கொடுத்துள்ளது. அவர் காமெடி செய்யாமல் இயல்பாகவே பேசுவது போல இருந்தாலும் பார்க்கும் நமக்கு இயல்பாகவே சிரிப்பு வந்துவிடும். அதிலும் இவருக்கு வந்த சாபம் நாய் பிழைப்பு தான்.

கிளாப்ஸ்

6 ம் அத்தியாயம் நல்ல எண்டர்டெயின் மெண்ட். அடுத்து என்ன நடக்கும் என உள்ளுக்குள் கேட்கவைக்கிறது.

ஹாரர் படத்திற்கு ஏற்ற பின்னணி இசை. புரியும்படியான காட்சிகள் நகர்வு.

ஆசிக் பிரியாணி கிடைக்காவிட்டாலும் அம்மா உணவகம் சாப்பாடாவது கிடைக்கட்டுமே என்ற பஞ்ச் ஒரு ஸ்பார்க்.

பல்பஸ்

இயக்குனர்கள் மற்ற 5 அத்தியாயங்களில் ஆழமான விசயங்களை கொடுத்திருக்கலாம்.

படத்தை சீரியஸ்னஸ் இருக்கலாம். பாடலும் இருந்தால் எண்டர்டெயின்மெண்ட் தானே.

கிளைமாக்ஸில் கொஞ்சம் சொதப்பலோ என தோன்றுகிறது.

மொத்தத்தில் 6 அத்தியாயம் எது மாதிரியும் இல்லாத புதுமாதிரி. ஓகே ரகம்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About