70 ஆண்டு கால டிராஃபிக் ஜாம் மர்மம்... விடைதெரியாத வரலாறு...!!

பெல்ஜியத்தில், 70 ஆண்டுகளாக டிராஃபிக் ஜாமில் சிக்கி நிற்கும் கார்கள் பற்றிய மர்மம் நீடிக்கிறது. தெற்கு பெல்ஜிய பகுதியில்தான் 500 பழமையான கா...

பெல்ஜியத்தில், 70 ஆண்டுகளாக டிராஃபிக் ஜாமில் சிக்கி நிற்கும் கார்கள் பற்றிய மர்மம் நீடிக்கிறது. தெற்கு பெல்ஜிய பகுதியில்தான் 500 பழமையான கார்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கின்றன.

இந்த டிராஃபிக் ஜாம் மர்மம் பற்றி பல்வேறு கதைகள் றெக்கை கட்டி பறந்தாலும், உண்மையான காரணம் இதுவரை தெளிவு செய்யப்படவில்லை. அந்த டிராஃபிக் ஜாம் மர்மம் பற்றி உலவும் பொதுவான வரலாற்றுத் தகவல்களை இந்த செய்தியில் படங்களுடன் வழங்கியுள்ளோம்.

பெல்ஜிய வனாந்திரம்
பெல்ஜியம் நாட்டின் சாட்டிலான் என்ற இடத்தில் இருக்கும் வனாந்திரத்தில்தான் இந்த கார்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. அந்த கார்கள் மழையிலும், வெயிலிலும் சிதைந்து எலும்பு கூடு போல் காட்சியளிக்கின்றன.

ரகசிய இடம்:
ஒரு பக்கம் மலைமுகடாலும், மறுபுறம் அடர்ந்த காடுகளாலும் மறைக்கப்பட்டிருக்கும் அந்த ரகசிய இடத்தை அவ்வளவு எளிதில் யாராலும் கண்டிபிடிக்க இயலாத அளவுக்கு அங்கு அத்தனை கார்களை யார் நிறுத்திச் சென்றனர் என்பதே இப்போது ஆச்சரியத் தகவல்.

போர் வீரர்களின் கார்கள்:
இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்த தருணத்தில், அங்கு பணியில் இருந்த அமெரிக்க போர் வீரர்கள் தாங்கள் பயன்படுத்திய கார்களை இந்த வனாந்திர சாலையில் ரகசியமாக நிறுத்திவிட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. அதாவது, ஒரு பக்கம் மலைமுகடும், அடர்ந்த மரங்கள் நிறைந்த அந்த சாலையை அவர்கள் தேர்ந்தெடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.

வாய்ப்பு:
அதாவது, மீண்டும் அந்த கார்களை பெறுவதற்கான வாய்ப்பு இருந்தால், எடுத்துச் செல்லலாம் என்று எண்ணி இந்த கார்களை அமெரிக்க போர் வீரர்கள், அதிகாரிகள் அங்கு ரகசியமாக விட்டுச் சென்றனராம். மேலும், நாடு திரும்பும் மகிழ்ச்சியில் இந்த கார்களை எடுத்துச் செல்வது கடினம் என்றும் எண்ணியும் இங்கே விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.

மறுப்பு:
அதேநேரத்தில், அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் கார்கள் இரண்டாம் உலகப் போர் நடந்த காலக்கட்டத்தில் தயாரிக்கப்பட்டவை அல்ல என்றும், அதற்கு பிறகான காலக்கட்டத்தில் தயாரிக்கப்பட்டதாகவும் ஒரு சாரார் தெரிவிக்கின்றனர்.

மர்மம்:
ஆனாலும், இந்த கார்களுக்கு இதுவரை யாரும் சொந்தம் கொண்டாடவில்லை. எனவே, இது அமெரிக்க போர் வீரர்கள் விட்டுச் சென்ற கார்கள்தான் என்று ஆணித்தரமாக கூறப்படுகிறது. அதாவது, போர் முடிவுக்கு வந்த மகிழ்ச்சியில் குடும்பத்தினரை காண்பதற்காக இந்த கார்களை விட்டுவிட்டு அவர்கள் சென்றதாக கூறப்படுகிறது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About