அனுபவம்
நிகழ்வுகள்
நாசா வெளியிட்ட சொர்க்கத்தின் புகைப்படங்கள்! ஆச்சரியத்தில் ஆழ்த்தியது
February 23, 2018


இறந்த பின்னர் தாம் சொர்க்கத்திற்கே சென்றிடவேண்டும் என்றும் விரும்புகிறார்கள்.
சொர்க்கம் எப்படி இருக்கும்? முன்னால் பின்னால் யாராவது அதனைப் பார்த்திருக்கிறார்களா? பார்த்தவர்கள் அதைப்பற்றிப் பேசிய கதைகள் ஏதும் உண்டா? போன்ற கேள்விகளுக்கு ஆதாரபூர்வமான தகவல்கள் இதுவரை இல்லை.
சொர்க்கம் அழகானது; அற்புதமானது அது நித்திய சுகத்தைக் கொடுக்கும் தெய்வீக வாசம் பொருந்தியது; யாரும் யாரையும் நெருக்காத சுதந்திர அலைகளைக் கொண்டது என்றெல்லாம் உலகின் பலமொழி இலக்கியங்களும் கூறியுள்ளன.
ஆம் நாம் சொர்க்கத்தைக் கண்டதில்லை, ஆனால் அதனுடன் தான் நித்தியமாக வாழ்கின்றோம். உண்டு, உடுத்து, உறங்கி உன்னதமான வாழ்வை அதனுடன் இணைந்து தான் தொடர்ந்துகொண்டிருக்கிறோம்.
அந்தச் சொர்க்கம் வேறு ஏதுமில்லை, நாம் வாழும் இந்தப் பூமித் தாய்தான். அந்த தாயவளின் புகைப்படங்களைத் தான் அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு பூமி தினத்தினை முன்னிட்டு நாசா வெளியிட்ட இந்த புகைப்படங்கள் மனிதர்களிடையே சொர்க்கம் குறித்த பேச்சுக்களைப் பேசவைத்ததென்றே சொல்லலாம். வாழும் சொர்க்கமிருக்க நிச்சயமற்ற வானகத்து சொர்க்கம் பற்றி பேசுவதில் என்ன பயன் இருக்கின்றது என்பது பற்றி பலரும் பேசியிருக்கின்றனர்.
உண்மையில் நமது பூமியின் உன்னதத்தினை நாம் எவ்வளவுக்கு பேணியிருக்கின்றோம் என்பதை சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
பூமியைக் காப்பதற்காக ஏதாவது செய்திருக்கிறோமா என்பதை சீர்தூக்கிப் பார்க்கவேண்டும். பூமியின் மேற்பரப்பில் இருக்கின்ற அத்தனையுமே அழகான காட்சிகள்தான்.
எத்தனையோ மலைகள், ஆறுகள், பள்ளத்தாக்குகள், சமவெளிகள், காடுகள், புல் வெளிகள், கடல்கள், குளங்கள் என அற்புதமான கலை அம்சங்களைக்கொண்ட வாழும் சொர்க்கமாக இந்தப் பூமி இருக்கையில் யாருமே கண்டிராத வானத்துச் சொர்க்கம்குறித்து வாய்பிழந்து நிற்பதில் யாருக்கு என்ன பயன்?
0 comments