டிசம்பர் மாதத்தில் சந்திராயன்-2 விண்கலம் ஏவப்படும்- இஸ்ரோ

நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திராயன்-2 விண்கலத்தை அனுப்பும் இஸ்ரோவின் திட்டம் 2வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது டிசம்பர் மாதம் விண்ணில...

நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திராயன்-2 விண்கலத்தை அனுப்பும் இஸ்ரோவின் திட்டம் 2வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது டிசம்பர் மாதம் விண்ணில் ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திராயன்-2 விண்கலத்தை 800 கோடி ரூபாய் செலவில் இஸ்ரோ தயாரித்து வருகிறது. இந்த விண்கலத்துடன் நிலவின் மேற்பரப்பில் இறங்கி ஆய்வு செய்யும் ரோவர் கருவியையும் இணைத்து அனுப்ப இஸ்ரோ-வின் விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சந்திராயன்-2 விண்கலத்தை வரும் அக்டோபர் முதல் வாரத்தில் விண்ணில் செலுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில்,  இஸ்ரோ விஞ்ஞானிகள் காலநிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு தற்போது 2வது  முறையாக இதனை ஒத்தி வைத்துள்ளனர். மேலும் இந்த விண்கலம் டிசம்பர் மாதம் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோவின் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

மேலும் டிசம்பர் மாதத்தில் இஸ்ரேலும் நிலவுக்கு விண்கலத்தை அனுப்ப இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் இரு நாடுகளிடையே கடுமையான போட்டி நிலவி வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About