அனுபவம்
நிகழ்வுகள்
வரலாற்றில் ஒரு தலைவன் உருவாகிறான் - ஒரு விஜய் ரசிகனின் உணர்வுகள்
August 07, 2018
ஒரு மூன்று, நான்கு ஆண்டுகளுக்கு முன் விஜய்யை வெறுத்தவர்கள் கூட இப்போது ரசிக்கத் தொடங்கியுள்ளனர். காரணம் விஜய்யின் அண்மை கால செயல்பாடுகள். தன் மீதான குறைகளை சரி செய்து, முன்னேறி வந்து, தன்னை வெறுத்தவர்களிடம் பெரும் மரியாதையை சம்பாதிப்பது அனைவருக்கும் வாய்க்காது. அதுதான் விஜய்யின் பிளஸ் பாயிண்ட்.
பெரும்பாலானோருக்கு விஜய்யிடம் பிடித்ததே அவரது மவுனம் தான். ஒரு நடிகன் எப்போது பேச வேண்டும் என்பதை விட எப்போது பேசக்கூடாது என்பதை அறிய வேண்டும். அண்மையில் ரஜினி, கமல் என உச்ச நடிகர்கள் கூட சில நேரங்களில் சொதப்பி வரும் நிலையில், எப்படி பேச வேண்டும் என்ற திறமையை அழகாக கையாள்கிறார் விஜய். விமர்சனமோ, பாராட்டோ எப்போதும் போல அதை ஒரு மெல்லிய புன்னகையில் கடந்து விடுவார். ஆனால் எப்போது, எங்கு, எதை பேச வேண்டுமோ அதை நிச்சயமாக பொட்டில் அறைந்தார் போல் பேசி விடுவார்.
பண மதிப்பிழப்பின் போது அனைத்து நடிகர்களும் வாண்ட்டடாக வந்து மோடியை புகழ்ந்த நிலையில், அப்போது உடனே வாய் திறக்காமல் தீவிரமாக கண்காணித்து அதன் சாதக, பாதகங்களை சரியாக விமர்சித்த ஒரே நடிகர் விஜய் மட்டுமே. பண மதிப்பிழப்பு மட்டுமல்ல, அனிதா மரணம், மெர்சல் விவகாரம், ஜோசப் விஜய் சர்ச்சை, தற்போது தூத்துக்குடி விவகாரம் என அனைத்து சென்சிடிவ் பிரச்னைகளையும் விஜய் பொறுமையாக, சென்சிபிளாக கையாள்கிறார்.
இன்று அரசியலில் உள்ள பல தலைவர்களே விஜய்யிடம் இருந்து இந்த பக்குவத்தை கற்றுக்கொள்ள வேண்டும்.
பொதுவாக விஜய் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு அவருக்கு நடிக்கத் தெரியாது என்பதே. அவ்வாறு கூறுபவர்கள் கத்தியில் கூனி குறுகியபடி மேடையில் பரிசு வாங்கச் செல்லும் அந்த காட்சியை பாருங்கள். நிச்சயம் உங்களை உருக வைப்பார்.
அதில் என்ன ஆச்சரியம் என்றால், சினிமாவிற்கு வெளியே அவ்வளவு அமைதியாக இருக்கும் விஜய், இயக்குனர் ஆக்ஷன் என சொன்ன உடன், உடலுக்குள் ஒரு ராட்ஷசன் வந்து புகுந்து விட்டதை போல திரையில் பெர்ஃபார்ம் செய்வதெல்லாம் எந்த ஒரு நடிகரிடமும் நான் இதுவரை பார்க்காதது.
தமிழின் ஆகச்சிறந்த எண்டர்டெய்னர்களில் விஜய்யும் ஒருவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
தமிழின் உச்ச நட்சத்திரங்களான ரஜினி, கமல் இருவரும் இன்னும் 2, 3 படங்களுக்கு பின்னர் தமிழ் சினிமாவில் இருந்து மொத்தமாக ஒதுங்கி விடுவார்கள். அதற்கு பிறகு தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் என்றால் அது விஜய்யும், அஜித்தும் தான். இதில் எந்த மாற்றமும் இல்லை. இதை புரிந்து கொண்ட விஜய் தனக்கான கரியரை மிக அழகாக கட்டமைத்து வருகிறார். கதை தேர்வில் இருந்து படக்குழுவினர் தேர்வு வரை அனைத்திலும் தன் கருத்துகளை இயக்குனரிடம் பரிந்துரைத்து, நல்ல மெசேஜ் சொல்ல வேண்டும் என்ற நோக்கில் அண்மைக் காலங்களில் படங்களை செய்து வருகிறார் விஜய்.
அவரது கடைசி 10 படங்களை எடுத்துக் கொண்டால் அதில் 6,7 படம் சமூக பிரச்னைகளை பேசிய படங்கள்தான். மக்கள் பிரச்னைகளை பேசி, அவர்களுடன் எப்போதும் தொடர்பில் இருந்து, அரசியலில் கோலோச்சுதல் என்ற எம்ஜிஆரின் வழியை மிகச்சரியாக பின்பற்றி வருகிறார் விஜய்.
அதே நேரம் ஆண்டுக்கு 3 படங்கள் வரை செய்து வந்த விஜய், தற்போது ஆண்டுக்கு ஒரு படம் என்று குறைத்துக் கொண்டே வருவதெல்லாம் ரஜினியின் வழியை பின்பற்றிதான்.
எதிர்காலத்தில் அரசியலுக்கு வர உள்ள ஒரு நடிகன் தன்னுடைய சினிமா கரியரை அற்புதமாக கட்டமைக்கவும், வடிவமைக்கவும், சரியாக திட்டமிடவும் வேண்டும். அந்த கட்டமைப்பு பணிகளையும் விஜய் தொடங்கி விட்டார். ஏனெனில் சினிமா மூலம் கூறப்படும் நல்ல கருத்தே அரசியலிலும் எதிரொலிக்கும் என்ற எம்ஜிஆரின் வழியை மெல்ல, மெல்ல பின்பற்றத் தொடங்கிவிட்டார் விஜய். அதற்கான பணிகளிலும் இறங்கி விட்டார்.
ஒரு சாதாரண நடிகன் என்பதில் இருந்து இளைய தளபதியாக மாறிய விஜய், இன்று ஒரு நல்ல தலைவனுக்கான அடையாளத்தை உருவாக்கி வருகிறார்.
அண்மைக் காலங்களில் சமூகப் பொறுப்புடன் செயல்படுவது, கிடைக்கும் மேடைகளில் எல்லாம் விவசாயிகள், மக்கள் பிரச்னைகளை பேசுவது, அரசியலில் இறங்குவதற்கு முன்பாகவே அரசியலை தன்னை சுற்றி இயங்க வைப்பது, தனது ரசிகர்களை நெறிப்படுத்த, அவர்களை நேர்மறையாக சிந்திக்க வைக்க முடிந்தவரை முயல்வது, குறிப்பிட்டு பாராட்ட வேண்டிய விஷயம் என்னவெனில், சில நேரங்களில் எல்லை மீறும் ரசிகர்களை தனது முழு கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என எப்போதும் பக்குவத்துடன் செயல்படுவது அழகு.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, ஆண்டுகள் கூடக்கூட வயது ஏறிக்கொண்டே செல்பவர்கள் மத்தியில், ஆண்டுகள் கூடக் கூட வயது குறைந்து கொண்டே வரும் Reverse Ageing என்ற ஒற்றை காரணத்திற்காகவே விஜயை ரொம்ப பிடிக்கிறது. 44 வயதாகும் விஜய்யின் தோற்றம் இப்போதைய இளைஞர்களுக்கே சவால் அளிக்கக் கூடியது.
இவ்வளவு இளம் வயதில் தமிழகத்திற்கு ஒரு தலைவன் கிடைத்தால் தமிழகத்தின் தலையெழுத்து நிச்சயம் மாறும் என அவரது ரசிகர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.
அதனால், இறுதியாக, விஜய்காக நா.முத்துக்குமார் எழுதிய வரிகளை இந்த தருணத்தில் குறிப்பிட்டால் மிகையாகாது.
"பிறர் துன்பம் தன் துன்பம் போல் எண்ணினால் வரலாற்றில் ஒரு தலைவன் உருவாகுவான் ”. ஆம் தலைவன் உருவாகிறான்.

0 comments