தமிழக முதல்வருடன் ஸ்டாலின் சந்திப்பு! இதுவரையிலும் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்

சென்னை காவேரி மருத்துவமனையில் சுமார் 10 நாட்களுக்கு மேலாக கருணாநிதி சிகிச்சை பெற்று வரும் நிலையில் நேற்று ஒரு அறிவுப்பு வெளியாகி, திமுக தொண...

சென்னை காவேரி மருத்துவமனையில் சுமார் 10 நாட்களுக்கு மேலாக கருணாநிதி சிகிச்சை பெற்று வரும் நிலையில் நேற்று ஒரு அறிவுப்பு வெளியாகி, திமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தற்போது கூட கருணாநிதிக்கு மூச்சுவிடுவதில் சிரமம் இருப்பதாகவும், அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவ தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து ஸ்டாலின் சற்று நேரத்திற்கு முன்னர் தமிழக முதல்வர் பழனிச்சாமியை சந்தித்து பேசினார்.

இந்நிலையில் பாதுகாப்பு நலன் கருதி சென்னை முழுக்க பல்வேறு இடங்களில், பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது

ஆயுதப்படை காவலர்கள் 500 பேரும், தமிழக சிறப்பு காவல்படை வீரர்கள் 700 பேரும் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.
சென்னையில் உள்ள 135 காவல் நிலையங்களில் இருந்து தலா 5 காவலர்கள் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தல்.
முக்கிய ஏற்பாடுகள் செய்வது குறித்து ஸ்டாலின் மற்றும் நிர்வாகிகளுடன் தலைமை நிலைய மேலாளர்கள் ஜெயக்குமார், பத்மநாபன் ஆலோசனை.
மீண்டும் திமுக முக்கிய பொறுப்பில் முக.அழகிரி அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
24 மணி நேர கால கெடு முடியும் தருவாயில் இன்று மாலை 6 மணிக்கு பிறகு காவேரி மருத்துவமனையில் இருந்து முக்கிய அறிவுப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

கருணாநிதி உடல்நிலையில் தொடரும் பின்னடைவால் சென்னை மாநகர் முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About