கஜினிகாந்த் திரை விமர்சனம் -"கஜினிகாந்த்'- ஒடும் தியேட்டர்களுக்கு 'ரசிகர்கள் படையெடுப்பது எப்போது ? என்பதை பொறுத்திருந்து .,பார்க்கலாம் !

கரு : ஞாபக மறதி ஹீரோவுக்கு நாயகி கூட திருமணம் ஆவதில் சிக் கல்... அதுவே இப்படக்கரு. கதை : தீவிர ரஜினி ரசிகர் "ஆடுகளம்" நரேன் .அவரு...

கரு : ஞாபக மறதி ஹீரோவுக்கு நாயகி கூட திருமணம் ஆவதில் சிக் கல்... அதுவே இப்படக்கரு.

கதை : தீவிர ரஜினி ரசிகர் "ஆடுகளம்" நரேன் .அவரும் , அவரது கர்ப்பினி மனைவி உமா பத்மநாபனும் ரஜினியின் "தர்மத்தின் தலைவன் " படம் பார்க்க போனபோது பிறந்த குழந்தை தான் ஆர்யா .அதனால் அவருக்கு ரஜினிகாந்த் என பெயர் சூட்டுகிறார்கள். அவர் பிறந்தது "தர்மத்தின் தலைவன்" படம் ஓடிக்கொண்டிருந்த தியேட்டர் என்பதாலோ என்னவோ ? அவரை ஞாபக மறதி நோய் வாட்டி வதைக்கிறது. அதனால் அவரது திருமணம் தட்டிதட்டிப் போக., அதனால் , அவரது ரஜினிகாந்த் எனும் பெயர் மருவி ., கஜினிகாந்த் என்றாகிறது.

இந்நிலையில் ,ஆர்யாவுக்கு சாயிஷாவை கண்டதும் காதல் பிறக்கிறது. ஆனால் ., சாயி ஷாவின் அப்பா சம்பத்தும் ., அப்பாவின் நண்பர்து போலீஸ் இன்ஸ்' மகனும் ஆர்யா-சாயிஷா காதலுக்கு தடையாக இருக்கின்றனர். இவர்களை விட பெரும் தடையாக இருக்கிறது ... ஆர்யாவின் ஞாபக மறதி நோய். அப்புறம் ? அப்புறமென்ன ...? தடை பல கடந்து .தன் ஞாபக மறதி நோயையும் மறந்து எப்புடி நாயகி சாயிஷாவை கரம் பிடிக்கிறார் ? என்பது தான்
"கஜினிகாந்த் "படத்தின் , கதையும் , களமும் .

காட்சிப் படுத்தல் : "இருட்டு அறையில் முரட்டு குத்து " , "ஹர ஹர மஹாதேவகி " உள்ளிட்ட "ஏ" சர்ட்டிபிகேட் படங்களை இயக்கிய சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் ,மேற்படி ,அது மாதிரி படங்களை வேறு பேனரில் தயாரித்த ' ஸ்டுடியோ கிரீன்' கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் ஆர்யா- சாயிஷா நடிக்க வெளிவந்திருக்கும் "யு " சர்டிபிகேட் படமான "கஜினிகாந்த்." தின் கதையில் இருக்கும் "பெப்"
காட்சிப்படுத்தவில்துளியும் இல்லாதது குறை .

கதாநாயகர் :ஆர்யா., அசத்தல்ய்யா எனும் அளவிற்கு நடித்திருக்கிறார். மறதிக்கு பிராண்ட் அம்பாசிடராகவும் , யூத் ஐகானாகவும் பிய்த்து பெடலெடுத்து இருக்கிறார் ஆர்யா. ஆனால் , ஞாபக மறதி எனும் கதையை "பலே பலே மாஹோ டி " எனும் தெலுங்கு படத்தில் இருந்து அப்பட டைட்டிலுக்கு நன்றி கார்டு போடாமலேயே கதாசிரியர் மாருதி தாசரியிடம் கதையை வாங்கி ., அவரது பெயரை மட்டும் டைட்டில் கார்டில் போட்டதில் காட்டிய சாமர்த்தியத்தை இப்பட இயக்குனர்., காட்சிப்படுத்தல்களில்.... காட்டாததும் ,காமெடி எனும் பெயரில் கடித்திருப்பதும் பெரும் போரய்யா.

கதாநாயகி : சாயிஷாவும் சரியான சாய்ஸய்யா .... எனும் அளவிற்கு ஆர்யாவுடன் செம்ம நெருக்கம் , கிறக்கம் காட்டி ரசிகனை ஒரு மாதிரி திருப்திபடுத்துகிறார்.

காமெடியன்ஸ் : ஆர்யாவின் காமெடி நண்பர்களாக வரும் கருணாகரன் , சதீஷ் , "நான் கடவுள்"ராஜேந்திரன் மூவரும் 'யு' சர்டிபிகேட் படம் என்றாலும் இயக்குனரின் இரட்டைஅர்த்த வசனங்களுக்கு பெரிதும் உதவி இருக்கின்றனர்.
இரட்டை அர்த்த வசனங்களாவது பரவாயில்லை ...அந்த சதீஷின்.., "பாத்ரூம் போனனா .... ... தண்ணியா வந்துச் சு , தண்ணி வரலை டி ஷு பேப்பர் எடுத்துதொடைச்சுகிட்டு.." எனும் இயற்கை உபாதை கடி ... எல்லாம் கொடுமையோ கொடுமை.

.இந்நேரம் எல்லா லைட்டும் ஆஃப் பண்ணியிருப்பாங்க ,

பிற நட்சத்திரங்கள் : சாயிஷாவின் அப்பாவாக சம்பத் , அண்ணி நீலிமாராணி, ஆர்யாவின் அப்பா "ஆடுகளம் " நரேன் , அம்மா உமா பத்மனாபன் , . , வயதான டெல்லி கணேஷ் சுலோட்சனா தம்பதிகள் , காளி வெங்கட் , மதுமிதா ,
ஹீரோவின் போலி அப்பா சிவசங்கர் மாஸ்டர், நண்பர் 'அம்மா'வெங்கட்.., ராகுல் தாத்தா.... உள்ளிட்ட அனைவரும் தங்கள் கேரக்டரை டைரக்டர் சொன்னபடி செய்திருக்கின்றனர்.

தொழில்நுட்பகலைஞர்கள் : பிரசன்னா ஜி.கே வின் படத்தொகுப்பில் படம் கொஞ்சம் நீளம் ஜாஸ்தி. .பள்ளுவின் ஒவிய ஒளிப்பதிவும் பாடல்களும் ஓ.கே. பாலமுரளி பாலு இசையில், "ஓ பெண்ணே பெண்ணே நீயாரோ....", "ஆரியனே பல மாயங்கள் புரிந்தாய் ..." , " ஹுல லாலா.. ஹூல லாலா ... ஹேய் மாமா ..." , ."ஸலீப் ஸ்லீப் ஸ்லீப்பிங் கெண்ட மீனப் போல ...சீம கருவமுள்ள ப்போல ... " உள்ளிட்ட பாடல்களும் அவை படமாக்கப்பட்டிருக்கும் விதமும் ஆறுதல். ஆனால் புதுமுக இன்ஸ்'பெக்டர் வில்லனுக்கு எல்லாம் மிரட்டும் ரீ ரெக்கார்டிங் ஜாஸ்திங்கோ.

பலம் : ஆர்யாவும் ., சாயி ஷாவும் தான் பலம். . "இந்நேரம் எல்லா லைட்டும் ஆஃப் பண்ணியிருப்பாங்க" எனும் டபுள் மீனிங் டயலாக்கு களும் பெரும் பலம்.

பலவீனம் : நாயகரும் , நாயகியும் ஒரு .கோயிலுகுள் கட்டிப் பிடித்து முத்தம்.... கொடுப்பது உள்ளிட்ட காட்சிகளும் , இரட்டை அர்த்த வசனங்களும் பலவீனம்.

இயக்கம் : சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் ., ஆங்காங்கே , "ரஜினி ரொம்ப நல்லவன்... எந்த வேலை கொடுத்தாலும் ரொம்ப நல்லா செய்வான் .சார் ", "குச்சு புடி நடனம் பற்றி., குச்சிய ,எப்படி புடிச்ச என்னடா அது ஒரு கலைதானா ?", "அந்த காலத்துல நான்
போடாததா ? . " என- ராகுல் தாத்தா கேரம் விளையாட்டில் கேட்கும் இடம் ., உள்ளிட்ட " "ஏ" ரக வசனங்கள் இயக்குனரின் முந்தைய படங்களை ஞாபகப்படுத்தி அவர் யார் ? என்கிறது. இது பல மா , பலவீனமா ..? இயக்குனருக்கே வெளிச்சம்!

தனக்கு பார்த்த ஒரு பெண்ணை அவள் திருமணத்திற்கு சம்மாதிக்காததால் பிராத்தல் கேஸில் போட அழைத்து வரும் காட்சியில் , போலீஸ் வாயிலாக ., தப்பு தண்டா செய்ய நினைக்கும் , போலீஸ்காரங்களுக்கே நம்ம இயக்குனர் ஐடியா கொடுப்பார் போலயே ... என நக்கலடிக்க வைக்கிறது!

ஆக மொத்தத்தில் ., இயக்குனரின்
முந்தைய "ஏ" சர்டிபிகேட் படங்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில்., இந்த 'யு' சர்டிபிகேட் படம் இல்லாதது ....அவரை மீண்டும் 'ஏ' படங்களையே எடுக்கத் தூண்டும் அதை கே.ஈ.ஞானவேல்ராஜாவே யே ..தயாரிக்க தூண்டும் என்பது மட்டும் நிச்சயம்.

பைனல்" பன்ச் " : "கஜினிகாந்த்'- ஒடும் தியேட்டர்களுக்கு 'ரசிகர்கள் படையெடுப்பது எப்போது ? என்பதை பொறுத்திருந்து .,பார்க்கலாம் !

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About