கருணாநிதி எப்படி கலைஞரானார் தெரியுமா?

 தமிழக அரசியலில் என்றைக்கும் தவிர்க்க முடியாத ஒரு பெயர் கலைஞர் கருணாநிதி. போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்ற பெருமைக்குரியவர் ...

 தமிழக அரசியலில் என்றைக்கும் தவிர்க்க முடியாத ஒரு பெயர் கலைஞர் கருணாநிதி.

போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்ற பெருமைக்குரியவர் கருணாநிதி. 1957ஆம் ஆண்டு குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு வென்று முதல் முறையாக சட்டமன்றத்தில் அடியெடுத்து வைத்தார். அப்போதிருந்து இன்று வரை சட்டமன்ற உறுப்பினாராக நீடிக்கிறார். திமுக துவக்கப்பட்டதிலிருந்து அக்கட்சியில் தீவிரமாக செயல்பட்டுவரும் கருணாநிதி, திமுக தலைவராக ஐம்பதாவது ஆண்டிலும் அடியெடுத்து வைத்துவிட்டார்.

கருணாநிதி கட்சியின் தலைமைப் பதவியில் இருந்தபோது, திமுக இரண்டு முறை பெரும் பிளவுகளைச் சந்தித்தது. 1972 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். தலைமையில் கட்சி பிளவுபட்டு, அ.தி.மு.க. உருவானது. 1993 ஆம் ஆண்டு வைகோ தலைமையில் கட்சி பிளவைச் சந்தித்தது. இந்த இரண்டு பிரிவுகளை மீறியும், கட்சி பலவீனமடையாமல் காப்பாற்றி மீண்டும் மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்குக் கொண்டுவந்த பெருமை கருணாநிதியையே சாரும்

அரசியல் வாழ்க்கைக்கு அப்பாற்பட்டு கருணாநிதிக்கு இன்னொரு முகமும் உண்டு. கலை, இலக்கிய துறைகளில் இடையறாத எழுத்துப்பணி, அவரை ஒரு படைப்பாளியாக உலகம் அடையாளம் கண்டுகொள்ள உதவியது. முரசொலியில் அவர் எழுதிய உடன்பிறப்புக்குக் கடிதம், உலக அளவில் நீண்ட காலமாக வெளிவரும் தொடர்களில் ஒன்றாகக் கருதப்பட்டது. தூக்குமேடை நாடகத்தின் போது எம்ஆர் ராதா, கருணாநிதிக்கு அளித்த கலைஞர் என்ற பட்டம் இந்நாள் வரைக்கும் அவரது ஆதரவாளர்களால் அன்போடு அழைக்கப்படுகிறது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About