அதிகம் நம்புவார்... அதிரடியாய் மாற்றுவார்... ஜெயலலிதா எனும் இரும்பு மனுஷி!
February 23, 2018உலகின் சர்வ வல்லமை பொருந்திய நாடாக பார்க்கப்படும் நாடே ஒரு பெண்ணை அதிபராக்கி பார்க்க விரும்பாத போது, ஒரு பெண் ஒற்றை ஆளாக ஒரு மாநிலத்தை ஆட்...
உலகின் சர்வ வல்லமை பொருந்திய நாடாக பார்க்கப்படும் நாடே ஒரு பெண்ணை அதிபராக்கி பார்க்க விரும்பாத போது, ஒரு பெண் ஒற்றை ஆளாக ஒரு மாநிலத்தை ஆட்சி செய்து ஒட்டுமொத்த நாட்டையும் திரும்பிப் பார்க்க வைத்தார் என்றால் அது ஜெயலலிதாவாக மட்டுமே இருக்க முடியும். இவ்வளவு கம்பீரமான பெண் ஆளுமை இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லை என்பதால் தான் மூன்றாவது அணி இவரை பிரதமாராக்கிப் பார்க்க ஆசைப்பட்டது. சினிமா நடிகை, அரசியல்வாதி, கட்சியின் பொதுச் செயலாளர், முதல்வர் இப்படி பல முகங்கள் கொண்ட ஜெயலலிதாவின் அல்டிமேட் ஆளுமை முகம். விமர்சனங்களை தள்ளிவைத்துவிட்டுப் பார்த்தால் ஜெயலலிதாவின் ஆளுமை காண்போரை ஆச்சர்ய மூட்டும். ஜெ. வின் முதல் 20 வருடங்கள் அம்மாவின் வளர்ப்பு என்றால், அடுத்த 20 வருடங்கள் எம்.ஜி.ஆர் வளர்ப்பு. சினிமா மற்றும் அரசியலில், முதல் 40 வருடங்கள் யாரோ ஒருவரின் கண்காணிப்பிலேயே இருந்த ஜெயலலிதா, பின்னர் அனைவருடனும் சகஜமாக பழகி, கட்சி அலுவலகத்தில் அனைவருக்கும் பதில் கூறி, ஒரே மூச்சில் 20 மேடைகளில் பேசி... 1990-க்குப் பிறகு, குறுகிய வட்டம், சிலரோடு மட்டுமே நெருக்கமான பழக்கம் என பெரும்பாலும் தனியாகவே இருந்திருக்கிறார். ஜெயலலிதாவின் மேடைப்பேச்சுகளோ... கட்சி பொதுக்கூட்டங்களோ அவர், பேசும்போது குறுக்குப் பேச்சுக்கு இடமிருக்காது... சரியோ, தவறோ? ஜெயலலிதாவின் சில தீர்க்கமான முடிவுகள்... யார் என்ன சொன்னாலும் இறுதி வடிவம் ஜெயலலிதா என்ற தனி ஒரு நபரால் எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதில், ஜெயலலிதாவுக்கு நிகர் ஜெயலலிதாதான். தீர்க்கமான முடிவுகளை எடுப்பவர். இதுதான் இலக்கு என்றால் அதை அடைந்தே தீரவேண்டும் என்பது எப்போதும் ஜெயலலிதாவின் வழக்கமாக இருந்திருக்கிறது. அவமானப்பட்டு சட்டசபையிலிருந்து வெளியேற்றப்பட்ட போது முதலமைச்சராகத்தான் இந்த அவைக்குள் நுழைவேன் என்று கூறியவர் முதலமைச்சராகத்தான் நுழைந்தார். ஜெயலலிதாவுக்கு தன்னம்பிக்கை அதிகம் அதற்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் ரிஸ்க் எடுப்பார். அப்படி எடுத்த ரிஸ்க் தான் 39 தொகுதிகளிலும் தனித்து போட்டி. 39 தொகுதிகளை ஜெயித்து வொயிட்வாஷ் கொடுத்தது ஜெயலலிதாவின் ஓவர் ரிஸ்க் எடுக்கும் மனம் தான்.
நல்லதோ...கெட்டதோ அதீத நம்பிக்கை ஜெயலலிதாவுக்கு உண்டு. எல்லாமே மிகச்சரியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாய் இருப்பவர் ஜெயலலிதா.. ஆடை துவங்கி ஆட்சி வரை இதை எதிர்பார்ப்பவர் ஜெயலலிதா. வாசிப்பு பழக்கம் அதிகம் உள்ளவர். தமிழ், ஆங்கிலத்தில் சரளமாக பேசவும் எழுதவும் தெரிந்தவர். இவரது ஆங்கிலப்புலமை எந்த அளவுக்கு என்றால் சில நேரங்களில் அரசு அறிக்கையையே ஆங்கிலத்தில் தயார் செய்து தருவாரம். அதை அதிகாரிகள் தமிழில் மொழிபெயர்த்து அனுப்பி வைப்பார்களாம் அந்த அளவுக்கு ஜெயலலிதாவின் ஆங்கிலம் சிறப்பானது. ஆங்கிலம், தமிழ் தவிர மலையாளம், கன்னடம், ஹிந்தி, சமஸ்க்ருதம் நன்றாக அறிந்தவர் ஜெயலலிதா.
45 நாட்கள் காலையில் எழுந்து துளசி மாடத்தை சுற்றி வந்து சுந்தர காண்டம் படிப்பது ஜெயலலிதாவின் ஆத்மார்த்தமான பிரார்த்தனைகளில் ஒன்று. அனைவருக்கும் மரியாதை கொடுக்கும் குணம் படைத்தவர். அதேசமயம் பிடிக்கவில்லை என்றால் அருகே சேர்க்காதவர். உறவினர்கள் ஜெயலலிதா சொத்தின் மீது கொண்ட ஆசையால் தான் சொந்தங்கள் என்று யாரையுமே ஜெயலலிதா கூட சேர்க்கவில்லை.
1984 தேர்தலின் போது எம்.ஜி.ஆருக்கு உடல்நிலை சரியில்லை. அமெரிக்காவில் இருக்கிறார். தமிழகத்தில் பிரசாரம் செய்ய ஜெயலலிதாவை தவிர வேறு யாருமில்லை. ஜெயலலிதா ஒற்றை ஆளாக சூறாவளி சுற்றுப்பயணம் செய்தார். அப்போது வீடியோவாக பிரசாரங்களை பதிவு செய்ய கடலூர் பிஆர்ஓ நடராஜன் தான் வினோதகன் வீடியோ விஷனை அறிமுகம் செய்கிறார். சசிகலாவும் ஜெயலலிதாவுக்கு பின்னாளில் அறிமுகமாகிறார்.
ஜெயலலிதா சில காரணங்களுக்காக சசிகலாவை ஒதுக்கி வைத்தாலும் மற்றவர்களை போல அல்லாமல் சசிகலாவை மட்டும் திரும்ப அழைத்தார் ஜெயலலிதா. எவ்வளவு மனஸ்தாபம் இருந்தாலும் ஏன் ஜெயலலிதாவால் சசிகலாவை விட்டு பிரிய முடியவில்லை என்பதற்கு இரண்டு காரணங்கள் முக்கியமானது. முதல் விஷயம் ஒரு முக்கிய தலைவரை பற்றி ஜெயலலிதா ஏதோ மேடையில் கூறிய விஷயம் அப்போது பெரிய சர்ச்சையானது. அந்த வீடியோ பதிவு சசிகலாவிடம் மட்டுமே இருந்தது. அந்த வீடியோ வெளியாகாமல் பார்த்துக் கொண்டார் சசிகலா, இரண்டாவது விஷயம் சில சொந்த காரணங்களுக்காக இரண்டு வருடம் சசிகலா ஜெயலலிதாவை பிரியும் சூழல் வந்தும். தனித்து இருப்பதை ஜெயலலிதா விரும்ப மாட்டார் என்பதால் சொந்த காரணங்களை தவிர்த்து ஜெயலலிதாவுக்காக உடனிருந்தார் சசிகலா. இந்த இரண்டு விஷயமும் தான் சசிகலாவை விடமால் ஜெ ஆதரிக்க காரணமாயிருந்தது.
எல்லாவற்றிலும் பர்ஃபெக்ஷன் எதிர்பார்த்த ஜெயலலிதாவுக்கு உடல்நிலை பர்ஃபெக்ட்டாக இல்லை. மருத்துவர்கள் பரிந்துரையை சில நேரங்களில் தவிர்க்கும் அளவுக்கு ஜெயலலிதாவுக்கு உடல்நிலை சிக்கலாக ஆரம்பித்தது. 2008-09களில் வழக்குகள் ஏற்படுத்திய பாதிப்பு உடல்நிலையையும் பாதிக்க ஆரம்பித்தன.
தன் பலவீனத்தை காட்ட விரும்பாதவர் ஜெயலலிதா. அதனால் தான் கலைஞர் வீல் சேரில் கூச்சப்படாமல் வலம் வந்தார். ஆனால் ஜெயலலிதவால் நீண்ட நேரம் நிற்க முடியாததை கூட வெளியில் காட்ட விரும்பாதவர். அதை காட்டிக்கொண்டால் பலவீனமாகிவிடுமோ என்ற கவனம் ஜெயலலிதாவுக்கு எப்போதும் உண்டு. 2016ல் கடைசியாக பதவியேற்ற போது உடல்நிலை மிகவும் மோசமாகிவிட்டது. ஜெயலலிதாவால் ஐந்து நிமிடங்களுக்கு மேல் நிற்கவோ, சிறிது தூரத்துக்கு நடக்கவோ இயலவில்லை மொத்த அமைச்சரவையும் பதவி ஏற்கும் நிகழ்வையே, சில நிமிடங்களுக்குள் அனைவரையும் கோரஸாகப் பதவிப்பிரமாணம் எடுக்கவைக்கும் அளவுக்கு ஜெயலலிதாவுக்கு நெருக்கடி இருந்தது.
சொத்துக்குவிப்பு வழக்கு வதைத்தது, சுற்றி என்ன நடக்கிறது என்று கணிக்க முடிடியாத நிலை, சசிகலா குடும்பமும்... இதற்கெல்லாம் நடுவில் பிடிவாத குணமும், ஆணவமும் ஜெயலலிதாவின் மிகப்பெரிய எதிரிகளாக மாறியது. இவற்றில் எது ஒன்றை தவிர்த்திருந்தாலும் இன்னும் கொஞ்ச காலம் நன்றாக இருந்திருப்பார் ஜெயலலிதா.
எல்லாவற்றுக்கும் மேலாக ஜெயலலிதாவின் கணீர் குரலை இன்று அனைவருமே மிஸ் செய்கிறார்கள். கரண் தாப்பரிடம் கடுகடுத்த குரலாகட்டும், சிமி கரேவாலிடம் பாடிய மெல்லிய குரலாகட்டும்.. தமிழக தேர்தல் மேடைகளில் '' அண்ணா நாமம் வாழ்க! எம்.ஜி.ஆர் நாமம் வாழ்க! என்று கூறி செய்வீர்களா! நீங்கள் செய்வீர்களா என்று முழங்கியதாகட்டும் ஜெயலலிதாவை இன்றைய தடுமாற்ற அரசியல் சூழலில் நிச்சயமாக தமிழகம் மிஸ் செய்கிறது என்பது விமர்சனங்கள் தாண்டிய உண்மை. இன்னமும் ஏதோ ஒரு டீக்கடை அரசியலில் இந்த நீட் தேர்வு, ஜல்லிக்கட்டுகெல்லாம் அந்த அம்மா இருந்திருக்கணும், நிலமையே வேறனு பேசும் சாமானியனின் பேச்சுதான் ஜெயலலிதாவின் ஆளுமைக்கு சாட்சி. இந்தியா வியந்த இரும்பு மனுஷி ஜெயலலிதா என்பதில் துளியளவும் சந்தேகமில்லை.
நாசா வெளியிட்ட சொர்க்கத்தின் புகைப்படங்கள்! ஆச்சரியத்தில் ஆழ்த்தியது
February 23, 2018சொர்க்கத்தைக் கண்டதுண்டா என்று யார் யாரைக் கேட்டாலும் இல்லை என்றுதான் சொல்வார்கள். ஏனெனில் மனிதர்கள் அனைவரும் இறந்த பின்னர்தான் சொர்க்கத்தை...

சொர்க்கத்தைக் கண்டதுண்டா என்று யார் யாரைக் கேட்டாலும் இல்லை என்றுதான் சொல்வார்கள். ஏனெனில் மனிதர்கள் அனைவரும் இறந்த பின்னர்தான் சொர்க்கத்தைக் காணலாம் என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இறந்த பின்னர் தாம் சொர்க்கத்திற்கே சென்றிடவேண்டும் என்றும் விரும்புகிறார்கள்.
சொர்க்கம் எப்படி இருக்கும்? முன்னால் பின்னால் யாராவது அதனைப் பார்த்திருக்கிறார்களா? பார்த்தவர்கள் அதைப்பற்றிப் பேசிய கதைகள் ஏதும் உண்டா? போன்ற கேள்விகளுக்கு ஆதாரபூர்வமான தகவல்கள் இதுவரை இல்லை.
சொர்க்கம் அழகானது; அற்புதமானது அது நித்திய சுகத்தைக் கொடுக்கும் தெய்வீக வாசம் பொருந்தியது; யாரும் யாரையும் நெருக்காத சுதந்திர அலைகளைக் கொண்டது என்றெல்லாம் உலகின் பலமொழி இலக்கியங்களும் கூறியுள்ளன.
ஆம் நாம் சொர்க்கத்தைக் கண்டதில்லை, ஆனால் அதனுடன் தான் நித்தியமாக வாழ்கின்றோம். உண்டு, உடுத்து, உறங்கி உன்னதமான வாழ்வை அதனுடன் இணைந்து தான் தொடர்ந்துகொண்டிருக்கிறோம்.
அந்தச் சொர்க்கம் வேறு ஏதுமில்லை, நாம் வாழும் இந்தப் பூமித் தாய்தான். அந்த தாயவளின் புகைப்படங்களைத் தான் அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு பூமி தினத்தினை முன்னிட்டு நாசா வெளியிட்ட இந்த புகைப்படங்கள் மனிதர்களிடையே சொர்க்கம் குறித்த பேச்சுக்களைப் பேசவைத்ததென்றே சொல்லலாம். வாழும் சொர்க்கமிருக்க நிச்சயமற்ற வானகத்து சொர்க்கம் பற்றி பேசுவதில் என்ன பயன் இருக்கின்றது என்பது பற்றி பலரும் பேசியிருக்கின்றனர்.
உண்மையில் நமது பூமியின் உன்னதத்தினை நாம் எவ்வளவுக்கு பேணியிருக்கின்றோம் என்பதை சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
பூமியைக் காப்பதற்காக ஏதாவது செய்திருக்கிறோமா என்பதை சீர்தூக்கிப் பார்க்கவேண்டும். பூமியின் மேற்பரப்பில் இருக்கின்ற அத்தனையுமே அழகான காட்சிகள்தான்.
எத்தனையோ மலைகள், ஆறுகள், பள்ளத்தாக்குகள், சமவெளிகள், காடுகள், புல் வெளிகள், கடல்கள், குளங்கள் என அற்புதமான கலை அம்சங்களைக்கொண்ட வாழும் சொர்க்கமாக இந்தப் பூமி இருக்கையில் யாருமே கண்டிராத வானத்துச் சொர்க்கம்குறித்து வாய்பிழந்து நிற்பதில் யாருக்கு என்ன பயன்?
இங்கிருந்துதான் பணம் வருகிறதா? கமல் மீது புது குற்றச்சாட்டு
February 23, 2018நடிகர் கமல்ஹாசன் தன் கட்சி ஆட்சிக்கு வந்தால் இலவசங்கள் மற்றும் ஊழலை ஒழிப்பேன் என கூறிவருகிறார். இந்நிலையில் அவரது கட்சியின் இணையதளம் maiam....
இந்நிலையில் அவரது கட்சியின் இணையதளம் maiam.com வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், அதுவும் ஒரு கிறிஸ்தவ அமைப்பை சேர்ந்த ஒரு நிறுவனத்தின் பெயரில் அது பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதனால் தான் கமல் ஹிந்துக்கள் பற்றி தவறாக பேசிவருகிறார் என அதிமுகவை சேர்ந்தவர் ஆதாரங்களுடன் ட்விட்டரில் குற்றம் சாட்டியுள்ளார்.
ரஜினியுடனான படம் எப்படி இருக்கும், கதை, படப்பிடிப்பு எப்போது?- கார்த்திக் சுப்புராஜ் தகவல்
February 23, 2018ரஜினி அடுத்தடுத்து இளம் கலைஞர்களுக்கு தன்னுடைய படத்தில் வாய்ப்பு கொடுத்து வருகிறார். நேற்று இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அடுத்த...
நேற்று இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அடுத்து நடிக்க இருக்கிறார் என்ற தகவல் அனைவருக்கும் ஒரு ஆச்சரியத்தை கொடுத்தது.
தற்போது இப்படம் குறித்து கார்த்திக் சுப்புராஜ் பேட்டி கொடுத்துள்ளார். அதில், சன் பிக்சர்ஸ் இதற்கு முன் தயாரித்த எந்திரன் படம் போல் இல்லாமல் கண்டிப்பாக ரஜினி படமாக இருக்கும். பிரம்மாண்டமாக இருந்தாலும் கதையை நோக்கி செல்லும்.
படப்பிடிப்பு 2 மாதத்தில் தொடங்கி படமே இந்த வருடம் முடிந்துவிடும் என்று நினைப்பதாக கூறியுள்ளால்.
70 ஆண்டு கால டிராஃபிக் ஜாம் மர்மம்... விடைதெரியாத வரலாறு...!!
February 23, 2018பெல்ஜியத்தில், 70 ஆண்டுகளாக டிராஃபிக் ஜாமில் சிக்கி நிற்கும் கார்கள் பற்றிய மர்மம் நீடிக்கிறது. தெற்கு பெல்ஜிய பகுதியில்தான் 500 பழமையான கா...
பெல்ஜியத்தில், 70 ஆண்டுகளாக டிராஃபிக் ஜாமில் சிக்கி நிற்கும் கார்கள் பற்றிய மர்மம் நீடிக்கிறது. தெற்கு பெல்ஜிய பகுதியில்தான் 500 பழமையான கார்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கின்றன. இந்த டிராஃபிக் ஜாம் மர்மம் பற்றி பல்வேறு கதைகள் றெக்கை கட்டி பறந்தாலும், உண்மையான காரணம் இதுவரை தெளிவு செய்யப்படவில்லை. அந்த டிராஃபிக் ஜாம் மர்மம் பற்றி உலவும் பொதுவான வரலாற்றுத் தகவல்களை இந்த செய்தியில் படங்களுடன் வழங்கியுள்ளோம்.
பெல்ஜிய வனாந்திரம்
பெல்ஜியம் நாட்டின் சாட்டிலான் என்ற இடத்தில் இருக்கும் வனாந்திரத்தில்தான் இந்த கார்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. அந்த கார்கள் மழையிலும், வெயிலிலும் சிதைந்து எலும்பு கூடு போல் காட்சியளிக்கின்றன.
ரகசிய இடம்:
ஒரு பக்கம் மலைமுகடாலும், மறுபுறம் அடர்ந்த காடுகளாலும் மறைக்கப்பட்டிருக்கும் அந்த ரகசிய இடத்தை அவ்வளவு எளிதில் யாராலும் கண்டிபிடிக்க இயலாத அளவுக்கு அங்கு அத்தனை கார்களை யார் நிறுத்திச் சென்றனர் என்பதே இப்போது ஆச்சரியத் தகவல்.
போர் வீரர்களின் கார்கள்:
இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்த தருணத்தில், அங்கு பணியில் இருந்த அமெரிக்க போர் வீரர்கள் தாங்கள் பயன்படுத்திய கார்களை இந்த வனாந்திர சாலையில் ரகசியமாக நிறுத்திவிட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. அதாவது, ஒரு பக்கம் மலைமுகடும், அடர்ந்த மரங்கள் நிறைந்த அந்த சாலையை அவர்கள் தேர்ந்தெடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.
வாய்ப்பு:
அதாவது, மீண்டும் அந்த கார்களை பெறுவதற்கான வாய்ப்பு இருந்தால், எடுத்துச் செல்லலாம் என்று எண்ணி இந்த கார்களை அமெரிக்க போர் வீரர்கள், அதிகாரிகள் அங்கு ரகசியமாக விட்டுச் சென்றனராம். மேலும், நாடு திரும்பும் மகிழ்ச்சியில் இந்த கார்களை எடுத்துச் செல்வது கடினம் என்றும் எண்ணியும் இங்கே விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.
மறுப்பு:
அதேநேரத்தில், அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் கார்கள் இரண்டாம் உலகப் போர் நடந்த காலக்கட்டத்தில் தயாரிக்கப்பட்டவை அல்ல என்றும், அதற்கு பிறகான காலக்கட்டத்தில் தயாரிக்கப்பட்டதாகவும் ஒரு சாரார் தெரிவிக்கின்றனர்.
மர்மம்:
ஆனாலும், இந்த கார்களுக்கு இதுவரை யாரும் சொந்தம் கொண்டாடவில்லை. எனவே, இது அமெரிக்க போர் வீரர்கள் விட்டுச் சென்ற கார்கள்தான் என்று ஆணித்தரமாக கூறப்படுகிறது. அதாவது, போர் முடிவுக்கு வந்த மகிழ்ச்சியில் குடும்பத்தினரை காண்பதற்காக இந்த கார்களை விட்டுவிட்டு அவர்கள் சென்றதாக கூறப்படுகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்தப்படம் இளம் இயக்குனருக்கு அடித்த பிரமாண்ட வாய்ப்பு- அதிகாரப்பூர்வ தகவல்
February 23, 2018சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்து யார் இயக்கத்தில் நடிப்பார் என்று மில்லியன் டாலர் கேள்வி இருந்தது. பலரும் அட்லீ தான் என கூறி வந்தனர். ஆ...
ஆனால், யாரும் எதிர்ப்பாராத விதமாக ரஜினியின் அடுத்தப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளாராம், இதை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. இதுக்குறித்து ஏற்கனவே நம் தளத்தில் கூறியிருந்தோம்.
இப்படத்தை குறைந்த நாட்களில் எடுத்து திரைக்கு கொண்டு வர படக்குழு முடிவு செய்துள்ளதாம்.

