ஒரு எலுமிச்சை பழம் 7,600 ரூபாயாம்... அப்படியென்னதான் இருக்குது?

இந்தியாவில் ஈரோட்டு மாவட்டத்தில் எலுமிச்சை பழம் ஒன்று ரூ. 7,600க்கு ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறது. சண்முகம் என்ற ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ந...

இந்தியாவில் ஈரோட்டு மாவட்டத்தில் எலுமிச்சை பழம் ஒன்று ரூ. 7,600க்கு ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறது. சண்முகம் என்ற ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த நபர் இதை ஏலம் எடுத்து இருக்கிறார்.

இதே எலுமிச்சை பழத்துடன் இன்னும் சில சின்ன சின்ன பொருட்களும் ஏலம் விடப்பட்டு உள்ளது. தேங்காய், பூ, மாலை, வாழைப்பழம் ஆகியவையும் ஏலம் விடப்பட்டு உள்ளது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் இந்தியாவில் எலுமிச்சை பழம் ஒன்று இவ்வளவு ரூபாய்க்கு ஏலம் போனது இதுவே முதல்முறை.

சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு முழுக்க சிவராத்திரி கொண்டாடப்பட்டது. அதேபோல் சிவகிரியில் இருக்கும் பழந்திண்ணி கருப்பன்னன் கோவிலிலும் சிவராத்திரி மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அப்போதே இந்த ஏலம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

அந்த சிவராத்திரியில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் எல்லாம் ஏலம் விடப்பட்டு உள்ளது. பூஜையில் இருந்த தாம்பூல தட்டு தொடங்கி, தேங்காய், வாழைப்பழம் எல்லாம் ஏலம் போய் இருக்கிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் இந்த பொருட்களை ஏலம் எடுக்க வந்துள்ளனர்.

இந்த ஏலத்தில் அதிகபட்சமாக எலுமிச்சை பழம் ஒன்று 7,600க்கு ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறது. இது அங்கு பூஜைக்கு, கடவுளின் அடியில் வைத்து படைக்கப்பட்டு உள்ளது. ஓலப்பாளையம் என்ற கிராமத்தை சேர்ந்த சண்முகம் என்ற நபர் இதை வாங்கியுள்ளார்.

இந்த எலுமிச்சைக்கு நிறைய சிறப்பம்சம் இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல இன்னும் சில பொருட்கள் 5000 ரூபாய் வரை ஏலம் போய் இருக்கிறது. இதை ஏலம் எடுப்பதால் வாழக்கையில் நிறைய பலன் உருவாகும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About