பெண்புலியை கட்டி வைக்காதீங்க சிங்கம் - சூர்யாவுக்கு அறிவுரை கூறிய சிவகுமார்

தமிழ் சினிமாவின் சினிமா குடும்பம் என்றால் சிவாஜி அடுத்ததாக சிவகுமார் குடும்பத்தை தான் கூற வேண்டும். சூர்யாவை திருமணம் செய்தபிறகு நடிப்பிலிர...

தமிழ் சினிமாவின் சினிமா குடும்பம் என்றால் சிவாஜி அடுத்ததாக சிவகுமார் குடும்பத்தை தான் கூற வேண்டும்.

சூர்யாவை திருமணம் செய்தபிறகு நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்த ஜோதிகா மீண்டும் நல்ல கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்தவகையில் இந்த வாரம் இவர் நடிப்பில் வெளியாகி பாராட்டை பெற்ற படம் நாச்சியார்.

இப்படத்தை அவரது மாமனார் சிவகுமார் பாராட்டியுள்ளார். இதோ அவர் கூறியது.

பார்வையாளர்களின் மனதை லேசாகவும், பாரமாகவும் மாற்றி மாற்றி ஆக்கி ஒரு balanced திரைக்கதையை 100 நிமிட நேரத்தில் சொன்ன பாலாவின் come backஐ வாழ்த்தி வரவேற்போம்.

ஜிவி.பிரகாஷ் இனிமேல் துஷ்டப்பயல் கேரக்டர்களில் நடிக்க கூடாது. அந்தளவு அவரை ஒரு ஜென்டில்மேனாக நம் மனதில் குடியேற வைத்துவிட்டார் பாலா. அரசியாக நடித்த அந்த இளம் தேவதையை எங்கே கண்டுபிடித்தாரோ... ? அற்புதமான மொழி பேசும் கண்களும் அது காட்டும் பாவனைகளும்... அடடா...

நாச்சியார் என்ற போலிஸ் அதிகாரியாக நடித்த புதுமுகம் ஜோதிகாவுக்கு ரெட் கார்ப்பெட் வரவேற்பை தரவேண்டும். குழம்ப வேண்டாம். உண்மையாகவே ஜோதிகாவின் புதியதொரு முகத்தைதான் கண்டு பிரமித்தேன். சூப்பர் போலிஸாக எப்படி நடிக்க வேண்டும் என்று சிங்கத்துக்கே பாடம் எடுத்துள்ளார். (பெண்புலியை வீட்டிலேயே கட்டி வைக்காதீங்க சூர்யா... ) ஒளிப்பதிவு பிரமாதம்.

முதல் ஃப்ரேமில் தன் இசை ராஜாங்கத்தை ஆரம்பித்த இசைஞானி இளையராஜா கடைசி நொடிவரை அதை நிலைநாட்டி கதைக்களத்துக்குள் நம்மை வாழ வைத்தார் என்பதை மறக்கவே முடியாது என்றும் கூறியுள்ளார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About