ரஜினிகாந்துடன் நடித்த நாய்க்கு ரூ.2 கோடி விலை

ரஜினிகாந்த் தாதாவாக நடித்துள்ள ‘காலா’ படத்தில் அவருடன் ஒரு நாயும் நடித்து இருக்கிறது. அதற்கு மணி என்று பெயர் வைத்துள்ளனர். நாற்காலியில் ரஜி...

ரஜினிகாந்த் தாதாவாக நடித்துள்ள ‘காலா’ படத்தில் அவருடன் ஒரு நாயும் நடித்து இருக்கிறது. அதற்கு மணி என்று பெயர் வைத்துள்ளனர். நாற்காலியில் ரஜினிகாந்த் கம்பீரமாக அமர்ந்து இருப்பது போன்றும் அருகில் அந்த நாய் நிற்பது போன்றும் படங்கள் வெளிவந்துள்ளன. படம் முழுக்க ரஜினியுடன் அந்த நாய் நடித்து இருக்கிறது.

படப்பிடிப்பை தொடங்கும்போது 30 நாய்களை வரவழைத்து தேர்வு நடந்துள்ளது. இறுதியாக மணி என்ற நாய்க்கு ரஜினியுடன் நடிக்கும் அதிர்ஷ்டம் அடித்துள்ளது. இது சாதாரண நாட்டு வகையை சேர்ந்த நாய். விசேஷ பயிற்சிகள் அளித்து ரஜினியுடன் நடிக்க வைத்ததாகவும் அந்த காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர்.

காலா படத்தில் நடித்ததால் ரஜினி ரசிகர்கள் மத்தியில் மணி நாய் பிரபலமாகி உள்ளது. அந்த நாயை வாங்கி வளர்க்க ஆர்வம் காட்டுகின்றனர். வெளிநாட்டு ரசிகர்கள், தங்களுக்கு நாயை வளர்க்க தரும்படி உரிமையாளரிடம் பேரம் பேசுகிறார்கள். ரூ.2 கோடி வரை அவர்கள் விலை பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அதன் உரிமையாளர் விலைக்கு கொடுக்க விரும்பவில்லை.

காலா படத்துக்கு பிறகு மேலும் 4 படங்களில் நடிக்க அந்த நாய்க்கு, வாய்ப்புகள் வந்துள்ளன.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About