பெண்களுக்கு திடீர் மாரடைப்பு வருவதற்கு முன் நடக்கும் மாற்றம்.. அடிக்கடி படபடப்பு ஏற்படுகின்றதா?

மாரடைப்பு சமீப காலங்களில் பெண்களுக்கு அதிகம் தாக்குகிறது சற்று அதிர்ச்சி அளிக்கக் கூடிய தகவல்தான். மாரடைப்பிற்கும் சாதரண வாய்வு பிடிப்பு அல...

மாரடைப்பு சமீப காலங்களில் பெண்களுக்கு அதிகம் தாக்குகிறது சற்று அதிர்ச்சி அளிக்கக் கூடிய தகவல்தான். மாரடைப்பிற்கும் சாதரண வாய்வு பிடிப்பு அல்லது வேறு ஏதாவது பாதிப்பிற்கும் வித்தியாசம் தெரியாததால் இது உடல் நிலையை மோசமாக்கிறது.

பெண்களுக்கு மாரடைப்பு வருவதற்கு முன் இந்த அறிகுறிகள் ஏதாவது இருந்தால் உடனடியாக முன்னெச்செரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளுங்கள்.

நெஞ்சு அடைத்தல்

திடீரென நெஞ்சு அடைப்பது போல் இருந்தால் இதய நோய்களுக்கான அறிகுறிகளாகவும் இருக்கலாம். உடனே பதட்டப்படாதீர்கள்.

வாய்வு பிடிப்பு இருந்தாலும் சிலசமயம் நெஞ்சை அடைத்துக் கொள்ளும். இதனையும் மாரடைப்பையும் நிறைய பேர் குழப்பிக் கொள்வதுண்டு.

நெஞ்சை அடைப்பதுடன் கூடவே மூச்சுத் திணறலும் இருந்தால் உடனடியாக மருத்துவரை பார்க்க வேண்டியது அவசியம்.

சோர்வு

சோர்வு உண்டாவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதிக வேலை, மன அழுத்தம், மற்றும் போதிய ஊட்டச்சத்து இல்லாமல் இருப்பது என சொல்லிக் கொண்டே போகலாம். சரியாக ரத்தம் இதயத்தில் பம்ப் செய்ய முடியாமல் போகும்போது சோர்வு உண்டாகிறது. எனவே அதிக சோர்வும் மாரடைப்பின் அறிகுறியாக இருக்கும்.

தசைவலி

தங்க முடியாத தசை மற்றும் தோள்பிடிப்பு இருந்தால் அது இதய நோயின் அறிகுறிகளாக இருக்கலாம். அதனை அஜாக்கிரதையாக விட்டுவிட்டால் மாரடைப்பில் கொண்டு போய்விடும்.

தூக்கமின்மை

ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும்போது, தூக்கமின்மை உண்டாகும். மன அழுத்தம், இதய பாதிப்புகள் இருக்கும்போது தூக்கமின்மை ஏற்படும். நெடு நாட்கள் தூக்கமின்மையால் அனுபவப்படுபவர்களாக இருந்தால் மாரடைப்பின் அறிகுறிகளாக இருக்கலாம்.

படபடப்பு

திடீரென படபடப்பு ஏற்படும். மனப்பதட்டம் , கை கால் நடுக்கம் ஏற்பட்டால் அது மாரடைப்பின் அறிகுறிகளில் ஒன்று. படபடப்பு சில இக்கட்டான சூழ் நிலைகளில் வருவதுண்டு. ஆனால் அதனையும் இந்த படபடப்பையும் குழப்பிக் கொள்ளக் கூடாது.

காரணமெயில்லாமல் திடீரன படபடப்பு , மற்றும் இதயத் துடிப்பு தாறுமாறாக இருந்தால் அது மாரடைப்பிர்காக சாத்தியத்தை தருகிறது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About