செக்கச்சிவந்த வானம் திரை விமர்சனம் - ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் மணிரத்னம் இஸ் பேக்.
September 27, 2018தமிழ் சினிமாவில் ஒரு சிலருக்கு மட்டுமே படம் வெற்றி தோல்வி தாண்டி ஒவ்வொரு படத்திற்கான எதிர்ப்பார்ப்பும் விண்ணை முட்டும். அப்படி படத்திற்கு ப...
`` `ரத்னா ஸ்டோர்ஸ்'க்கு என்ன ஆச்சு?" டென்ஷனில் வியாபாரிகள்
September 26, 2018சென்னையின் பிரபல வியாபார நிறுவனங்களில் ரத்னா ஸ்டோர்ஸும் ஒன்று. திருநெல்வேலியிலிருந்து பாத்திரத் தொழிலை மூலதனமாகக் கொண்டு வந்த ஒரு குடும்பத்...
இந்த நிலைக்கு ஏன் தள்ளப்பட்டது என்று ரத்னா ஸ்டோர்ஸுடன் வியாபார நட்பில் இருந்த பிரபல கடைக்காரர் ஒருவர் கூறும்போது, " ரத்னா ஸ்டோர்ஸ் நிறுவனத்துக்கு 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருள்களை நாங்கள் சப்ளை செய்தோம். சில வருடங்கள் ஆகியும், பொருளுக்கு உரிய பணம் வரவில்லை. இதோ - அதோ என்று இழுத்தடித்தனர். பிறகுதான் தெரியவந்தது...அவர்கள் திவால் ஆகிவிட்டதாக வியாபாரிகள் மத்தியில் செய்தி பரவிக்கிடக்கிறது. மஞ்சள் நோட்டீஸ் கொடுத்துவிட்டார்கள் என்று கேள்விப்பட்டதும், அதிர்ந்துபோனோம். எங்களைப் போன்றவர்களிடம் வாங்கிய பொருளின் சிறு பகுதியை ரிட்டர்ன் எடுத்துப்போகச் சொல்கிறார்கள். இதனால் எங்களுக்கு பலத்த நஷ்டம். கடன் கொடுத்த வங்கிகள் நடவடிக்கை எடுத்து சட்டப்படியான நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கேள்விப்படுகிறோம். அவர்கள் தரப்பில் கடையின் வருமானத்தை நேரிடையாக எடுத்துக்கொள்ள ஏற்பாடு செய்திருக்கிறார்களாம். வங்கிகள் சரி! எங்களைப்போன்ற எத்தனையோ சிறு வியாபாரிகள் பொருள்களைக் கொடுத்துவிட்டு ஏமாந்து நிற்கிறோம். எங்களுக்கு யார் உதவுவார்கள்? " என்று சோகத்துடன் கேட்கிறார்.
இதற்கிடையில், மத்திய வருவாய்துறை அதிகாரிகள் ரத்னா ஸ்டோர்ஸ் நிறுவனத்தில் நடந்து வரும் நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள். இதுபற்றி வருமான வரித்துறையின் அதிகாரி ஒருவர் கூறும்போது, ``நல்ல நிலையில் இயங்கிவந்த நிறுவனங்களிலிருந்து கிடைத்த லாபத்தையும், கடன் வாங்கிய பணத்தையும் இடம் வாங்கிப் போட்டிருக்கிறார்கள். கடந்த சில வருடங்களாக எங்கள் துறைக்கு வரவேண்டிய வருமான வரி தொகை நிலுவையில் உள்ளது. இதுதொடர்பாக, ஏற்கெனவே எங்கள் விசாரணை வளையத்தில் வந்தவர்கள்தாம் அந்தக் கடைக்காரர்கள். அவர்களிடம் விசாரித்தபோது, நிறைய தகவல்களை சொல்லியிருக்கிறனர். அதன்பேரில் நடவடிக்கையும் எடுத்திருக்கிறோம். இப்போது வங்கிகள் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் எங்களுக்குத் தெரியும். பொறுத்திருந்திருந்து பாருங்கள். யாரை ஏமாற்றினாலும், எங்களை ஏமாற்றவே முடியாது " என்றார்.
இதுபற்றி ரத்னா ஸ்டோர்ஸின் உரிமையாளர்களில் ஒருவரிடம் பேசினோம்...
``கஷ்டப்பட்டுச் சேர்த்த எங்கள் குடும்பப் பாரம்பர்யம்தான் ரத்னா ஸ்டோர்ஸ். எங்கள் குடும்பத்தினர் ஓயாது உழைத்து கடையின் பெயரையும் பொருள் தரத்தையும் மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தினோம். உஸ்மான் ரோட்டில் தங்க நகைக்கடையை பத்து வருடங்கள் வெற்றிகரமாக நடத்தினோம். ஊர் ஊராகப் போய், மக்களின் தேவையை உணர்ந்து வீட்டுப்பொருள்களை வாங்கி வந்து விற்பனைக்கு வைத்தோம். நன்றாகத்தான் இயங்கி வந்தது. திடீரென, உஸ்மான் ரோட்டில் 26 கடைகளை சி.எம்.டி.ஏ. மூடினார்கள். அதில் எங்கள் கடையும் மாட்டி, மூன்று மாதங்கள் மூடப்பட்டது. அதைத் தொடர்ந்து, வெள்ளப்பெருக்கெடுத்து கடைக்குள் பாதிப்பை ஏற்படுத்தியது. அடுத்து, வருமானவரித் துறை ரெய்டு...என்று விழி பிதுங்கியது. வேறு வழியில்லாமல், நகைக்கடையை மூடிவிட்டோம். இதற்கிடையில், வங்கிகளில் வாங்கிய கடன் பிரச்னை குறுக்கிட்டது. ஒரு தனியார் வங்கி, எங்களுக்குச் சொந்தமான சொத்து ஒன்றை எங்களுக்குத் தகவல் தெரிவிக்காமலே விற்று பணத்தை எடுத்துக்கொண்டதோடு, மேலும் 5 கோடி ரூபாய் கட்டவேண்டும் என்று கழுத்தை இறுக்கியது. இது எங்களுக்குப் பெரிய அதிர்ச்சி. சில வங்கிகள் திட்டமிட்டு எங்கள் கடையை முடக்கும் வேலையில் இறங்கியுள்ளனர். ஜி.எஸ்.டி. வரி மற்றும் சில வரிகள் எங்கள் கடை பிசினஸுக்கு சவாலாய் அமைந்தன. சென்னையில் உள்ள தேசிய கம்பெனி டிரிபியூனல் டிவிஷன் பெஞ்ச் வரை பிரச்னை சென்றது. லிக்யூடேட்டரை நியமித்துள்ளனர். வங்கிகள் தரப்பினரையும் எங்களையும் அழைத்துப் பேசி வருகிறார். விரைவில் செட்டில்மென்ட் முடிந்துவிடும். இப்படியிருக்க.. உஸ்மான் ரோடு கடைக்கு சப்ளை செய்த டீலர்கள் 150 பேரை அழைத்து அவர்களது பொருள்களை எடுத்துப்போகச் சொல்லிவிட்டோம். நிதிச்சுமையை முடிந்தவரைச் சமாளித்து வருகிறோம். ஆனால், வங்கிகளில் குறிப்பாக ஒரு குறிப்பிட்ட தனியார் வங்கியின் டார்ச்சர் தாங்கமுடியவில்லை. கூடிய விரைவில் எல்லாம் சரியாகி பழையபடி எங்கள் கடையை நடத்துவோம் என்கிற நம்பிக்கை இருக்கிறது" என்றார்.
ஏன் இப்படித் திடீரென சரிவு ஏற்பட்டது?
ரத்னா ஸ்டோர்ஸ் தொடர்புடைய ஒருவர், ஜெயலலிதாவின் தோழி சசிகலா தரப்பினருடன் பிசினஸ் தொடர்பில் இருந்தாராம். அப்போது இவர் கொடிகட்டி பறந்தாராம். அந்த நபரும் மளமளவென்று வளர்ந்தாராம். ஆனால், திடீரென சசிகலா தரப்பில் தொடர்பு அறுந்துபோனதாம். அன்றுதான் சரிவு ஆரம்பித்ததாம். இதைச் சொல்லி ஆதங்கப்படுகிறார்கள் பாண்டி பஜாரில் உள்ள சில கடைக்காரர்கள்.
ரத்னா ஸ்டோர்ஸ் நிதிச்சுமையில் தள்ளாடுவதால், வாடிக்கையாளர்களுக்குப் பொருளாதார இழப்பில்லை என்றாலும், ஆதங்கம் இருக்கும். அதேநேரம், கடைகளுக்குப் பொருள்கள் சப்ளை செய்த சிறு வியாபாரிகள்தாம் கையைப் பிசைந்தபடி டென்ஷனில் தவிக்கிறார்கள்.
ஆஸ்கருக்கு பரிந்துரையான வில்லேஜ் ராக்ஸ்டாருக்கு ரூ.50 லட்சம் பரிசு; அசாம் அரசு கௌரவம்!
September 26, 2018வரும் 2019ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுக்கான வெளிநாட்டு மொழிப்படங்களில் பிரிவில் கலந்து கொள்ளும் இந்தியப் படங்கள், கடந்த 21ஆம் தேதி மும்பையி...
’செக்க சிவந்த வானம்’ படத்தை பார்க்க தூண்டும் 5 காரணங்கள்
September 26, 2018செக்க சிவந்த வானம் படத்தை ஏன் பார்க்க வேண்டும்..?? ‘செக்க சிவந்த வானம்’- இந்த படத்தை ரசிகர்கள் பார்க்க மணிரத்னம் என்ற ஒரு சொல் போதும் தான்....
மாதவன் படத்திற்கு சிக்கல்! விஞ்ஞானிக்கே வெடிகுண்டா?
September 23, 2018கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஒரு விஷயம் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வேடத்தில் நடிகர் மாதவன் நடிக்கப் போகிறார் ...
சாமி ஸ்கொயர் திரை விமர்சனம்
September 23, 2018சாமியின் வேட்டை தொடரும் என்று 15 வருடங்களுக்கு முன்பே இரண்டாம் பாகத்திற்கு லீட் கொடுத்து முடித்தவர் ஹரி. அதே எனர்ஜியில் 15 வருடம் கழித்து ச...
ரஜினி, அக்ஷய் மட்டும் இத்தனை கெட்டப்பா? 2.0 பற்றி புதிய தகவல்
September 14, 2018ஷங்கரின் 2.0 படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி, அக்ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் நடித்துள்ளனர். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படத்த...
150 கோடியில் தனுஷ் படம்! நல்லபடியாக நடக்குமா?
September 14, 2018லைகா வீசும் தூண்டிலில் எல்லாம், தங்க மீன்களாக சிக்குகின்றன. இன்று டாப்பில் இருக்கும் எல்லா ஹீரோக்களையும் கொக்கி போட்டு கவ்வி வரும் லைகா, தன...
தமிழ் ராக்கர்ஸ்க்கு போட்டியாக களமிறங்கிய மெட்ராஸ் ராக்கர்ஸ்: சீமராஜா ஆன்லைனில் லீக்!
September 14, 2018தமிழ் ராக்கர்ஸ்க்கு போட்டியாக களமிறங்கிய மெட்ராஸ் ராக்கர்ஸ் சீமராஜா படத்தை திருட்டுத்தனமாக வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் ...
ரஜினி, கமலுடன் நடித்து செழிப்பாக இருந்த நடிகை- இன்று 4 ஆயிரத்துக்கு கையேந்தும் நிலை! காரணம் என்ன?
September 14, 2018தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள நடிகை பிந்துகோஷ் உடல்நலக்குறைவால் பாதிக்கப்...
இமைக்கா நொடிகள் வெற்றி விழாவில் இயக்குனருக்கு குட்டு
September 07, 2018ஒரு டைரக்டர் முரண்டு பிடித்தால், படத்தின் இயக்குனருக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தி படுத்த படுக்கையாக்கிவிட முடியும். “அவருக்கென்ன…? துண்டை உ...
சூப்பர்ஸ்டார் பட டைட்டில் வெளிவந்தது - பிரம்மாண்ட மோஷன் போஸ்டர் இதோ
September 07, 2018சூப்பர்ஸ்டார் ரஜினி மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இணையும் படத்தின் தலைப்பு மாலை 6 மணிக்கு வெளியாகிறது என சன் பிக்சர்ஸ் அறிவித்ததில் இருந்து...
விஸ்வாசம் விலை என்ன? லபக்கென அமுக்கிய அறம் தயாரிப்பாளர்!
September 06, 2018ஆலமரம் கிளை விரிச்சா ஆயிரமாயிரம் குருவிகளுக்கு அதுதான் பிளாட், வில்லா! தமிழ்சினிமாவில் முன்னணி ஹீரோக்களின் படங்கள் வரும்போதெல்லாம், தியேட்ட...
நாளை வெளியாகும் 6 படங்களின் ஒரு பார்வை!
September 06, 2018சதாவின் டார்ச்லைட் உள்பட வரும் வெள்ளியன்று 6 படங்கள் வெளியாகிறது. தமிழ் சினிமாவில் வாரம் வாரம் குறைந்தது ஒரு படமாவது திரைக்கு வருவது வழக்கம...
சென்னையில் கோடியாய் கோடியாய் கொட்டும் நயன்தாராவின் இமைக்கா நொடிகள்!
September 03, 2018நயன்தாராவின் நடிப்பில் வெளியாகியுள்ள இமைக்கா நொடிகள் சென்னையில் மட்டும் ரூ.1 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. நயன்தாராவின் நடிப்பில் வ...
குப்பையில் போடும் இந்த காய்கறி தோல்களில் எவ்வளவு அற்புத நன்மைகள் தெரியுமா ?
September 03, 2018பொதுவாக வேண்டாம் என்று குப்பையில் வீசும் காய்கறிகளின் தோலை பல அற்புதம் நிறைந்துள்ளது. காய்கறிகளில் எவ்வளவு சத்துக்கள் நிறைந்துள்ளதோ அதை போல...
ரஜினிகாந்த்–விஜய் சேதுபதி சண்டை முடிவுக்கு வந்தது
September 03, 2018ரஜினிகாந்த், ‘காலா’ படத்தை முடித்த பிறகு இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் டைரக்ஷனில், புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்க...
Search This Blog
Blog Archive
- ▼ 2018 (454)