­
November 2016 - !...Payanam...!

செல்லாத நோட்டை வச்சு சீட்டுக்கம்பெனி கூட ஆரம்பிக்கலாம். ரஜினி படத்தை தயாரிப்பது அதைவிட பெரும் சிக்கல் என்கிற மாய நதியை ஓட விடுகிறது ஊர்! ‘ல...

செல்லாத நோட்டை வச்சு சீட்டுக்கம்பெனி கூட ஆரம்பிக்கலாம். ரஜினி படத்தை தயாரிப்பது அதைவிட பெரும் சிக்கல் என்கிற மாய நதியை ஓட விடுகிறது ஊர்! ‘லிங்கவாவுல நஷ்டம், கொடுக்கலேன்னா தற்கொலை’ என்று கிளம்பிய விநியோகஸ்தர்கள் இன்னமும் அந்த பஞ்சாயத்து தீரவில்லை என்று கூறிவரும் நிலையில், அடுத்த பஞ்சாயத்தை ஆரம்பித்துவிட்டது ஒரு கூட்டம். இது கபாலி பஞ்சாயத்து. 2.0 படப்பிடிப்பில் இருந்த ரஜினியிடம் ஒரு நீண்ட அழுகாச்சி கடிதத்தையும் வழங்கியிருக்கிறது அது! ‘ஆகட்டும் பார்க்கலாம்’ என்று கூறியிருக்கிறாராம் ரஜினி. இது ஒரு புறமிருக்க, தயாரிப்பாளர் தாணு தரப்பில் சொல்லப்படும் விளக்கம் என்ன? “கபாலி படம் வெற்றிகரமாக 150 நாட்களைத் தாண்டிய பிறகு நஷ்டம் என்று கூறிப் பணம் கேட்பதை எங்காவது பார்த்திருக்கிறீர்களா? சினிமா தொழிலே ஆபத்தானதாக, எந்த உத்தரவாதமும் இல்லாத ஒன்றாக மாறிவிட்டது. இனி இந்தத் தொழிலை எப்படி நம்பிக்கையுடன் தொடர்வது என்றே தெரியவில்லை. இது வியாபாரமல்ல. மிரட்டல்.. ப்ளாக்மெயில்…...

Read More

வங்கக் கடலில் உருவாகியுள்ள நாடா புயல் தமிழக வட கடலோர பகுதியை நோக்கி முன்னேறி வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் ஒன்றாம் தேதி மழை போல இருக்குமா?...

வங்கக் கடலில் உருவாகியுள்ள நாடா புயல் தமிழக வட கடலோர பகுதியை நோக்கி முன்னேறி வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் ஒன்றாம் தேதி மழை போல இருக்குமா? என்ற அச்சம் எழுந்துள்ளது. வரும் இரண்டு நாட்களில் எவ்வளவு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதுபற்றி விரிவாக பார்க்கலாம். புயல்களுக்கு பெயர் வைக்கும் வழக்கம் 2004-ம் ஆண்டு பின்பற்றப்படுகிறது. அது முதல் பெயர்வைக்கப்படும் 45-வது புயல் நாடா புயலாகும். இந்த புயலுக்கு நாடா என பெயர் தந்தது ஓமன் நாடாகும். நாடா புயலினால் இன்று மாலை முதலே மழை இருக்கக் கூடும். புயல் வலுவாக இருப்பதால் கியாண்ட் புயலைப் போல யூ டர்ன் போட வாய்ப்பில்லை. டிசம்பர் 2-ம் தேதி அதிகாலை வேதாரண்யம் மற்றும் புதுச்சேரிக்கு இடையே கரையை கடக்கும். குறிப்பாக கடலூருக்கு அருகில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் ஒன்றாம் தேதி அதிகாலை...

Read More

கிராமங்களில், புதுமணத் தம்பதியரை விருந்துக்கு அழைப்பதிலேயே தொடங்கிவிடும், புதுப்பெண்ணை மசக்கைக்குத் தள்ளும் ஏற்பாடு. விருந்து மெனுவில் தலைவ...

<
கிராமங்களில், புதுமணத் தம்பதியரை விருந்துக்கு அழைப்பதிலேயே தொடங்கிவிடும், புதுப்பெண்ணை மசக்கைக்குத் தள்ளும் ஏற்பாடு. விருந்து மெனுவில் தலைவாழை இலை தொடங்கி வெற்றிலை வரை இடம்பெற்றிருக்கும். கருத்தரிப்புக்கு உதவும் சில உணவுகள் இங்கே... பெண்ணுக்கு மாதவிடாய் சுழற்சி ஒழுங்கற்று இருந்தால், முதலில் அதைச் சீராக்க சிறப்பு உணவு அவசியம். இன்று, பெரும்பாலும் சீரற்ற மாதவிடாய்க்கு சினைப்பை நீர்க்கட்டிதான் முதல் காரணமாகச் (Polycystic Ovary Syndrom) சொல்லப்படுகிறது. அதற்காக ரத்த இன்சுலின் அளவைக் குறைக்கும் மருந்துகளும் பரிந்துரைக்கப்படுகின்றன. உண்மையில், மாதவிடாய் நாட்களின் ஒழுங்கின்மை தவிர, வேறு பிரச்னைகள் சினைப்பை நீர்க்கட்டிகளால் கிடையாது. கருமுட்டையானது கர்ப்பப்பையைப் பற்றும் நாள் தாமதப்படுவதுதான் ஒழுங்கற்ற மாதவிடாய்க்குக் காரணமே தவிர, மலட்டுத் தன்மைக்கு சினைப்பை நீர்க்கட்டிகள் ஒருபோதும் காரணமாயிருக்காது. `பாலி சிஸ்டிக் ஓவரி’ என்று தெரிந்தால், செய்யவேண்டியது எல்லாம் உணவில் நேரடி இனிப்புப் பண்டங்களைத் தவிர்ப்பதும், நார்ச்சத்து நிறைய உள்ள கீரைகள், லோ கிளைசிமிக் (Low Glycemic...

Read More

`காலைக் கடன்’... இந்த வார்த்தையை யார் முதலில் அழகாகச் செதுக்கினார்கள் என்பது தெரியவில்லை. உடனே இந்தக் கடனை பைசல் செய்யாவிட்டால், வட்டியைக் ...

<
`காலைக் கடன்’... இந்த வார்த்தையை யார் முதலில் அழகாகச் செதுக்கினார்கள் என்பது தெரியவில்லை. உடனே இந்தக் கடனை பைசல் செய்யாவிட்டால், வட்டியைக் குட்டியாகப் போட்டு வாழ்வையே சிதைத்துவிடும். மலச்சிக்கல், கடன் சுமையைப்போல பல நோய்களைப் பிரசவித்து, நம் நல்வாழ்வுக்கே சிக்கலைத் தந்துவிடும். இன்றைக்கு நன்கு விளம்பரப்படுத்தப்பட்டு, அலங்காரமாக விற்கப்படும் `ரெடி டு ஈட்’ உணவுகளில் பெருவாரியானவை, நம் ஜீரண நலத்துக்குச் சிக்கலை ஏற்படுத்துபவை. காலை எழுந்ததும், எந்தப் பிரச்னையும் இல்லாமல் மலத்தை வெளியேற்றும் பழக்கத்தைச் சிதைப்பவை. நவீன மருத்துவம், வாரத்துக்குக் குறைந்தபட்சம் மூன்று நாட்களாவது மலம் கழிக்கவில்லை அல்லது இறுகியவலியுடன் கூடிய மலம் கழித்தலை மட்டும்தான் ‘மலச்சிக்கல்’ என வரையறுக்கிறது. ஆனால், பாரம்பர்ய மருத்துவம் அனைத்துமே, எந்த மெனக்கெடலும் இல்லாத சிக்கலற்ற காலை நேர மலம் கழித்தலை மிக ஆணித்தரமாக அறிவுறுத்துகின்றன. ‘கட்டளைக் கலித்துறை’ நூல், நாள் ஒன்றுக்கு மூன்று முறை மலம் கழிப்பது நல்லது என்கிறது. சித்த...

Read More

வடகிழக்குப் பருவமழை கடந்த அக்டோபர் 30-ம் தேதி தொடங்கியது. பெரிதாக மழையைத் தராமல் ஒரு மாதம் கடந்து விட்ட நிலையில் இப்போது உருவாகி இருக்கும் ...

வடகிழக்குப் பருவமழை கடந்த அக்டோபர் 30-ம் தேதி தொடங்கியது. பெரிதாக மழையைத் தராமல் ஒரு மாதம் கடந்து விட்ட நிலையில் இப்போது உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இது புயல் ஆகவும் மாற உள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் இருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்  அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாறக்கூடும் என்பதுதான் சென்னை வானிலை மையத்தின் லேட்டஸ்ட் எச்சரிக்கை. காற்றழுத்த தாழ்வு மண்டலம் எங்கே இருக்கிறது? தென்கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 15 கி.மீ வேகத்தில் மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்துள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. சென்னையில்  இருந்து தென் கிழக்காக 830 கி.மீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து கிழக்கு தென் கிழக்காக 780 கி.மீ தொலைவிலும் இலங்கை திரிகோணமலையில் இருந்து  கிழக்கு...

Read More

டிவியில் நடக்கும் 'குடும்பப் பஞ்சாயத்து' ஷோக்கள் குறித்து நடிகையும் இயக்குநருமான ஸ்ரீப்ரியாவின் கருத்துகள் இணையத்தை பரபரப்பாக்கியு...

வள்ளுவர் குடும்பம் என்னும் சமூக ஊடகக் குழுமம் சார்பில் சென்னை நாரத கான சபாவில் நாட்டுக்குறள் இசைவிழா நடைபெற்றது. ஒடிசா மாநிலத்தில் கூடுதல் ...

வள்ளுவர் குடும்பம் என்னும் சமூக ஊடகக் குழுமம் சார்பில் சென்னை நாரத கான சபாவில் நாட்டுக்குறள் இசைவிழா நடைபெற்றது. ஒடிசா மாநிலத்தில் கூடுதல் தலைமைச் செயலாளராக இருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரியும் தமிழ்க்கவிஞருமான ஆர்.பாலகிருஷ்ணன் திருக்குறள் இன்பத்துப் பாலை அடிப்படையாகக் கொண்டு எழுதிய நாட்டுப்புறப் பாடல்களுக்கு தாஜ்நூர் இசையமைத்த ஒலிப்பேழை வெளியீட்டு நிகழ்ச்சி மற்றும் இசைஅரங்கேற்றம் நடைபெற்றது. நாட்டுக்குறள் ஒலிப்பேழையை கவிஞர் வைரமுத்து வெளியிட திருச்சியை சேர்ந்த தங்கமணி தவமணி என்னும் அடிப்படைத் தொழிலாளி பெற்றோர்களின் குழந்தைகளான சூரியா, உமா, காவ்யா ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இந்த விழாவில் நாட்டுக்குறள் ஒவியப் பாடல் நூலும் வெளியிடப்பட்டது. ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி கடற்கரையில் வள்ளுவருக்கு மணற்சிற்பம் அமைத்து மரியாதை செலுத்திய உலகப் புகழ்பெற்ற இந்திய மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் நடிகர் சிவக்குமாரால் கௌரவிக்கப்பட்டார். சுதர்சன் பட்நாயக் உருவாக்கிய திருக்குறள் பற்றிய மணல் ஓவிய அசைவூட்டுப்படம் திரையிடப்பட்டது. கவிஞர் வைரமுத்து, இயக்குநர்...

Read More

இயற்கை விவசாயத்தில் கியூபா நாட்டை உலகிற்கே முன்னுதாரணமாக மாற்றியவர் மறைந்த தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோ. உலகின் சிறியதொரு நாட்டில் அவர் நடத்தி...

இயற்கை விவசாயத்தில் கியூபா நாட்டை உலகிற்கே முன்னுதாரணமாக மாற்றியவர் மறைந்த தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோ. உலகின் சிறியதொரு நாட்டில் அவர் நடத்திய மாபெரும் இயற்கை புரட்சி பற்றிய அந்த வரலாறை பசுமை விகடனில் பகிர்ந்திருந்தார் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார். நாம் அனைவருமே அறிந்து கொள்ள வேண்டிய, அந்த வரலாறு இதுதான். அமெரிக்காவிலிருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சின்னஞ்சிறு நாடு கியூபா. அந்த குட்டி நாடு வேளாண்மையில் கடந்து வந்துள்ள பாதையை கொஞ்சம் உற்று நோக்கினால், அது நமக்கு ஒரு பாடமாக அமைய முடியும். 1959-ம் ஆண்டு ஃபிடல் காஸ்ட்ரோ தலைமையிலான அரசு, கியூபா நாட்டில் பதவி ஏற்றது. கம்யூனிஸ சோவியத் ரஷ்யாவின் கூட்டுக்கார நாடான கியூபா மீது, அமெரிக்காவுக்கு ஏக எரிச்சல். 'நமக்கு அருகாமையில் ஒரு குட்டித் தீவு கியூபா. ஆனால், நமக்கு அடிபணியாமல் கம்யூனிஸம் பேசிக் கொண்டிருக்கிறதே?' என்று பொருமிய அமெரிக்கா, கடும்...

Read More

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி வரிமான வரி சட்டத்திருத்த மசோதாவை, மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார். இதையடுத்து வருமான வரி சட்டத்திருத்த...

<
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி வரிமான வரி சட்டத்திருத்த மசோதாவை, மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார். இதையடுத்து வருமான வரி சட்டத்திருத்த மசோதா மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, கணக்கில் வராத வருமானத்துக்கு 30% வரி, 33% கூடுதல் வரி, 10% அபராதம் விதிக்கப்படும். வங்கிகளில் ரூ.2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்து, டிசம்பர் 30-ம் தேதிக்கு முன் தாமாக வந்து தகவல் தருபவர்களுக்கு இந்த வரி விதிக்கப்படும். டிசம்பர் 30-ம் தேதிக்கு பிறகு கறுப்புப் பணம்  குறித்து வருமான வரித்துறை கண்டுபிடித்தால் அவர்களுக்கு 75% வரி, 10% அபராதம் விதிக்கப்படும். மேலும் கணக்கில் வராமல் டெபாசிட் செய்த தொகையில் 25% பணத்தை நான்கு ஆண்டுகளுக்கு வெளியில் எடுக்க முடியாது. எதிர்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.    மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி வரிமான வரி சட்டத்திருத்த மசோதாவை, மக்களவையில் நேற்று...

Read More

கடந்த நவம்பர் 25-ம் தேதி இரவில். கியூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோ தொலைக்காட்சியில் தோன்றினார். ஏதோ முக்கியமான செய்திதான் என்று  மக்கள் எதிர்பார...

கடந்த நவம்பர் 25-ம் தேதி இரவில். கியூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோ தொலைக்காட்சியில் தோன்றினார். ஏதோ முக்கியமான செய்திதான் என்று  மக்கள் எதிர்பார்க்கின்றனர்.  ‘கியூபா புரட்சியின் காமென்டர் இன் சீஃப் மறைந்து விட்டார். தொடர்ந்து வெற்றியை நோக்கி செல்லுங்கள் 'என்ற ஃபிடலின் புகழ்பெற்ற பொன்மொழியுடன் ரவுல் காஸ்ட்ரோ அறிவித்த போது, கியூபா மக்கள் மட்டுமல்ல, அர்ஜென்டினாவில் இருந்த மரடோனாவும் குலுங்கி அழத் தொடங்கி விட்டார். சர்ச்சைகளுக்குப் பெயர் போன ஒரு புகழ்பெற்ற கால்பந்து வீரர், ஒரு நாட்டின் தலைவர் ஒருவர் மறைவுக்கு கண்ணீர் வீடுகிறார் என்றால், அதன் பின்னணி பலமானது. கடந்த 1959-ம் ஆம் ஆண்டு சேகுவராவுடன் சேர்ந்து கியூபா புரட்சியில் ஈடுபட்டு, படிஸ்டாவை ஆட்சியில் இருந்து அகற்றிய ஃபிடல் கியூபா மக்களின் வாழ்க்கையில் மட்டுமல்ல மரடோனாவின் வாழ்விலும் மலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.. மரடோனா இன்று உயிருடன் இருக்கிறார் என்றால் அதற்கு  ஃபிடலும் ஒரு காரணம். கடந்த 1986-ம் ஆண்டு...

Read More

சில வாரங்களுக்கு முன்பு வரை ரூ.225 வரை விற்ற துவரம் பருப்பு முதல் அனைத்து பருப்பு வகைகளின் விலைகள் தற்போது இறங்கு முகத்தில் உள்ளன. கடந்த 8-...

சில வாரங்களுக்கு முன்பு வரை ரூ.225 வரை விற்ற துவரம் பருப்பு முதல் அனைத்து பருப்பு வகைகளின் விலைகள் தற்போது இறங்கு முகத்தில் உள்ளன. கடந்த 8-ம் தேதி முதல் 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்தியாவில் புழங்கிய பணத்தில் 85 சதவிகித பணத்தை செல்லாது என அறிவித்ததால் பெரும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. அதன் பின்னர் இந்திய ரிசர்வ் வங்கி புதிய 2000 ரூபாய் தாளை வெளியிட்டாலும் மக்களிடையே பணத்தட்டுப்பாடும் தீர்ந்தபாடில்லாமல்தான் இருக்கிறது. பழைய ரூபாய்களை மாற்றி புதிய 2000 ரூபாய் பெற்றவர்களுக்கு சில்லறை கிடைக்காமல் மற்றொரு பெரும் சிக்கல் ஏற்பட்டது. கடந்த வாரத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய 500 ரூபாய் தாளும் இன்னும் சரிவர விநியோகிப்படவில்லை. பணத்தட்டுப்பாடு நிலவுவதால் கடைகளில் நடைபெறும் அன்றாட வியாபாரம் பெருமளவு சரிந்து விட்டன. இந்நிலையில் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி குறைந்து...

Read More

'புரட்சிக்காரர், போராளி, கம்யூனிச நாயகன் வல்லாதிக்கத்துக்கு எதிராக நின்றவர், அமெரிக்காவின் 638 கொலை முயற்சிகளை முறியடித்த வீரன், இவைதான...

சில பிளாஷ்பேக்குகளை நினைத்துப் பார்க்க மண்டையை குடைந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. வினாடி நேரம் போதும். நடிகர் சங்கத் தேர்தலில் நாசர் அணிக்...

சில பிளாஷ்பேக்குகளை நினைத்துப் பார்க்க மண்டையை குடைந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. வினாடி நேரம் போதும். நடிகர் சங்கத் தேர்தலில் நாசர் அணிக்கு எதிராக களமாற்றியவர் தயாரிப்பாளர் தாணு என்பதை நினைத்துப் பார்ப்பதும் அப்படியொரு கஷ்டமில்லாத பிளாஷ்பேக்தான்! ‘தேர்தல் நேரத்து கோபம், ரிசல்டோடு போச்சு’ என்பதைப் போல இப்போது ஒரு நல்ல காரியம் நடந்திருக்கிறது. யெஸ்… நடிகர் சங்கத் தலைவர் நாசரின் மகன் லுத்புதீன் ஹீரோவாக நடித்திருக்கும் ‘பறந்து செல்ல வா’ படத்தை தமிழகம் முழுக்க வெளியிடுகிறார் கலைப்புலி தாணு. சுமார் 400க்கும் மேற்பட்ட தியேட்டர்கள் இப்பவே ரெடியாம். தனபால் பத்மநாபன் இயக்கத்தில், லுத்புதீன், ஐஸ்வர்யா ராஜேஷ், சிங்கப்பூர் நடிகை நரேலி நடித்திருக்கும் இப்படம் டிசம்பர் 9 ந் தேதி திரைக்கு வருகிறது. முழுக்க முழுக்க சிங்கப்பூரில் படமாக்கப்பட்டிருக்கும் இப்படம், காதலும் மோதலும் சேர்ந்த கமர்ஷியல் கலவை. ஏ.ஆர்.ரஹ்மானால் அதிகம் புகழப்பட்ட ஜோஸ்வா ஸ்ரீதர் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். (நடுவுல...

Read More

ஊதறது சங்கு, ஓதுறது மந்திரம்னு ஒரேயடியா அட்வைஸ் பண்ற படங்களை, போஸ்டரில் கூட பார்க்க தயாராக இல்லை ஜனங்கள். வெட்டி அரட்டையா இருந்தாலும் பரவால...

ஊதறது சங்கு, ஓதுறது மந்திரம்னு ஒரேயடியா அட்வைஸ் பண்ற படங்களை, போஸ்டரில் கூட பார்க்க தயாராக இல்லை ஜனங்கள். வெட்டி அரட்டையா இருந்தாலும் பரவால்ல… கருத்து சொல்லாதே கந்தசாமின்னு ஒவ்வொரு டைரக்டரையும் பில்டரில் போட்டு வடிகட்டினால், இப்படத்தின் இயக்குனர் ஆர்.சங்கரபாண்டி மாதிரி நிமிஷத்துக்கு பத்து பேர் கூட கிடைப்பார்கள். பட்டதாரி அப்படியொரு ‘வெட்டி அரட்டை! ’ வேலை கிடைக்கல. நாங்க என்ன பண்ணுறதாம் என்று நினைத்துக் கொண்டு ஊர் சுற்றும் ஐந்து நண்பர்கள். இதில் நால்வருக்கு ‘காதலிக்கணும். எவளையாவது காதலிக்கணும்’ என்பதே லட்சியமாக இருக்கிறது. ஹீரோ அபி சரவணனுக்கு மட்டும், லேடீ என்றால் ‘போடி போடீய்…’ என்கிற அளவுக்கு வெறுப்பு. அது தெரியாத துளசி செடி ஒன்று அவரையே சுற்றி சுற்றி வர, அதன் மீது ஆசிட் ஊற்றாத குறையாக ஆத்திரப்படுகிறது சரவணன் மனசு. ஏன்? இன்னாத்துக்கு? என்பதுதான் கதையம்சம் கூடிய செகன்ட் ஹாஃப்! முதல் பாதி முழுக்க...

Read More

நமது ஊரில் ஒரு குடும்பத்திற்கு ஒரு மாடும் முருங்கை மரமும் இருந்தால் போதும், அந்தக் குடும்பம் வாழ்க்கையில் முன்னேறிவிடும் என சொல்வது வழக்க...

நமது ஊரில் ஒரு குடும்பத்திற்கு ஒரு மாடும் முருங்கை மரமும் இருந்தால் போதும், அந்தக் குடும்பம் வாழ்க்கையில் முன்னேறிவிடும் என சொல்வது வழக்கம். ‘‘முருங்கை இந்தியாவின் நாட்டுப் பயிர். இதன் இலைகளில் ஏராளமான சத்துக்களும், மருத்துவக் குணங்களும் உள்ளன. கியூபா மக்கள் முருங்கையைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" என இதே அறிவுரையை சில ஆண்டுகளுக்கு முன்னால் கியூபா நாட்டின் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ தன் மக்களுக்கும் சொல்லியிருக்கிறார். உலக வல்லரசு என மார்தட்டிக்கொண்டிருக்கும் அமெரிக்காவிற்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர்தான், கியூபா மாவீரன் ஃபிடல் காஸ்ட்ரோ. கம்யூனிசம் பற்றி தெரிந்திருக்கும் அளவிற்கு விவசாயத்தை பற்றியும் நன்கு அறிந்து வைத்திருந்தார். உலக அளவில் இயற்கை விவசாயத்தில் கியூபாதான் முன்னிலை வகிக்கிறது. இன்று நாம் அமைக்கும் வீட்டுத்தோட்டத்திற்கும் அவர்கள்தான் முன்னோடி. ஆனால், சில நாட்களுக்கு முன்னால் வீட்டுக்கு ஒரு முருங்கை மரத்தை வளர்க்க சொல்லி கியூபா அரசே அறிவித்தது. முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ...

Read More

டெக்னாலஜி விபரீதங்களின் சாத்தியக்கூறுகளை வைத்து கதை பண்ணுவதில் ஹாலிவுட் எப்போதும் ஒரு அடி முன்னில் தான் இருக்கிறது. இதற்கு முன் வந்த ஹெர், ...

டெக்னாலஜி விபரீதங்களின் சாத்தியக்கூறுகளை வைத்து கதை பண்ணுவதில் ஹாலிவுட் எப்போதும் ஒரு அடி முன்னில் தான் இருக்கிறது. இதற்கு முன் வந்த ஹெர், செக்ஸ் டேப் எனப் பல படங்களில் இதை உணர்வுப்பூர்வமாகவோ, டெக்னிகலாகவோ பதிவு செய்து கொண்டேதான் இருக்கிறார்கள். இதில் இன்னொரு பிரச்னையை எடுத்து முன் வைத்திருக்கிறது நெர்வ் படம். 2012ல் ஜேன் ரியான் எழுதிய 'NERVE' என்கிற "டெக்னோ த்ரில்லர்" ஜானரைச் சேர்ந்த நாவலின் திரைவடிவம் தான் படம். ஜூலை மாதமே அமெரிக்காவில் வெளியாகிவிட்ட படம் இப்போது தான் இங்கு வெளியாகியிருக்கிறது. வீ என்கிற வீனஸ் டெல்மானிகோ (எம்மா ராபர்ட்ஸ்)வுக்கு இயல்பிலேயே எந்த விஷயத்துக்கும் சின்ன தயக்கம், பயம். தனக்கு கல்லூரியில் அட்மிஷன் கிடைத்திருப்பதைக் கூட, அம்மா மறுத்துவிடுவாரோ என்கிற பயத்தில் சொல்லத் தயங்குகிறாள். வீனஸின் தோழி சிட்னி, நெர்வ் என்னும் ஆன்லைன் ரியாலிட்டி கேம் பற்றி அறிமுகம் கொடுக்கிறாள். (அது என்ன கேம்? பின்னால்...

Read More

ஏ.வி.எம் தயாரித்த ‘களத்தூர் கண்ணம்மா’தான் கமல் அறிமுகமான முதல் படம். சிறுவன் கமல் பாடும் ‘அம்மாவும் நீயே… அப்பாவும் நீயே’ பாடலை இப்போது ப...

ஏ.வி.எம் தயாரித்த ‘களத்தூர் கண்ணம்மா’தான் கமல் அறிமுகமான முதல் படம். சிறுவன் கமல் பாடும் ‘அம்மாவும் நீயே… அப்பாவும் நீயே’ பாடலை இப்போது பார்த்தால் கூட, ‘கொழந்தே என்னமா இருக்கான்?’ என்று நெட்டி முறித்து கன்னத்தில் வைத்துக் கொள்ளும் உலகம்! பேபி கமல் வளர்ந்து பெரிய கமல் ஆன பிறகும் கூட, அவருக்கும் ஏ.வி.எம்முக்குமான அன்பும் மரியாதையும் அப்படியேதான் இருக்கிறது. கமல் மார்க்கெட்டில் அதே பலத்தோடு இருக்கிறார். ஆனால் ஏ.வி.எம்தான்… ‘இந்த கொடூரமான கால கட்டத்தில் படம் எடுப்பதைவிட, பில்டிங் கட்டி வாடகைக்கு விடலாம்’ என்று புளோர்களை இடித்துக் கொண்டிருக்கிறது. இப்படி கமல் விஸ்வரூபம் எடுத்து நிற்கையில், விரக்தியோடு வேறு தொழில் பார்க்கலாமா ஏ.வி.எம்? கமலே இந்த நிறுவனத்தை அழைத்து கால்ஷீட் கொடுத்திருக்கிறார். கமல்ஹாசனை வைத்து காமெடி படங்களாக எடுத்து, அதை மார்க்கெட்டில் ஆஹா ஓஹோவென ஓட வைத்த டைரக்டர் மௌலிதான் இந்தப்படத்தை இயக்கப் போகிறார். படத்திற்கு ‘மெய்யப்பன்’...

Read More

சில விஐபிகள் சந்தித்துக் கொள்ளும் போதெல்லாம், ‘இதுக்காகதான் மீட் பண்ணினோம்’ என்று ஒரு காரணத்தை சொல்வார்கள். அந்த சந்திப்பின் பின்னணியில் ...

சில விஐபிகள் சந்தித்துக் கொள்ளும் போதெல்லாம், ‘இதுக்காகதான் மீட் பண்ணினோம்’ என்று ஒரு காரணத்தை சொல்வார்கள். அந்த சந்திப்பின் பின்னணியில் இருக்கும் நிஜம் தன்னை மறந்து எப்போதாவது வெடிக்கும். அரசியல்வாதிகள் மட்டுமல்ல, சினிமாக்காரர்களின் சந்திப்புகள் கூட, சமயங்களில் வரலாற்று சிறப்பு மிக்க குழப்பத்தை உருவாக்கும். அப்படிதான் கமல் ரஜினி சந்திப்பு நடந்திருக்கிறது. கமலின் உடல் நலம் பற்றி பேசதான் ரஜினி போனார் என்பதாக பல்வேறு மட்டங்களில் சமாளிக்கப்பட்டு வந்தாலும், நிஜம் அதுவல்ல என்கிறது ரகசிய தகவல்கள். பின் எதற்காக இந்த சந்திப்பு? மறுபடியும் கவுதமியில் இருந்துதான் இந்த பிரச்சனையை அணுக வேண்டியிருக்கிறது. கமலை விட்டுப் பிரிந்த கவுதமி, சும்மாயில்லாமல் பிரதமர் மோடியை சந்தித்தார் அல்லவா? அந்த சந்திப்பு அவ்வளவு எளிதாக நடந்துவிடவில்லையாம். ஏற்கனவே பிஜேபி யில் பொறுப்பில் இருந்தவர்தான் கவுதமி. ஆனால், அந்த காலம் வேறு. இப்போது பிரதமரை சந்திப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல என்று அவருக்கு ஈசியாக...

Read More

ரஜினி என்றால் உங்கள் நினைவுக்கு உடனே வருவது?  ஸ்டைல்..வேகம்... நடிப்பு... எளிமை... 2.0 ? இன்னும் நிறைய வரலாம். ஆனால், அதில் நிச்சயம் அவ...

ரஜினி என்றால் உங்கள் நினைவுக்கு உடனே வருவது?  ஸ்டைல்..வேகம்... நடிப்பு... எளிமை... 2.0 ? இன்னும் நிறைய வரலாம். ஆனால், அதில் நிச்சயம் அவரது மேடைப்பேச்சும் இருக்கும். ரஜினியின் குட்டி கதைகள் அத்தனையும் வைரல் மெட்டீரியல். பெரும்பாலான சமயங்களில் அவர் இருக்கும் சூழலை அழகாய் பிரதிபலிக்கும் அந்தக் கதைகள். ரஜினி பல்வேறு நிகழ்ச்சிகளில் சொன்ன கதைகளில் சில... 1) தவளை கதை. மொத்தம் மூணு தவளைங்க ஒரு மலைக்கு மேல இருந்த கோயிலுக்கு போக முடிவு பண்ணுச்சாம்.  இருந்ததாம். ஒரு மலைக்கு முன்னால் மூன்றும் ஒன்று கூடியதாம். பாம்பு, மிருகங்கள்னு பல ஆபத்துகள் நிறைந்த மலை அது. அதுவும் இல்லாம, தவளைங்க மலைக்கு மேல போக விடாம சில சக்திகளும் தடுக்க நினைச்சுதாம். முதல்ல ஒரு தவளை மேல ஏற போச்சு. பின்னால இருந்து போகாத போகாதன்னு ஒரு குரல். அதையும் கண்டுக்காம மலையேறின தவளைக்கு அடுத்த குரல்...

Read More

வாட்ஸ்-ஆப் சில தினங்களுக்கு முன்பு வீடியோ காலிங் வசதியை அறிமுகப்படுத்தியது. இதையடுத்து, அந்நிறுவனம், ஷேர் செய்யப்படும் வீடியோக்களை தரவிறக்...

வாட்ஸ்-ஆப் சில தினங்களுக்கு முன்பு வீடியோ காலிங் வசதியை அறிமுகப்படுத்தியது. இதையடுத்து, அந்நிறுவனம், ஷேர் செய்யப்படும் வீடியோக்களை தரவிறக்கம் செய்யும்போதே ப்ளே செய்து பார்க்கும் வசதியை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த வசதியின் மூலம், முழு வீடியோவையும் தரவிறக்கும் செய்யும் வரை காத்திருக்காமல் ப்லே செய்து பார்க்க முடியும். இதன் மூலம், தேவை இல்லாத வீடியோக்களை முழுவதுமாக தரவிறக்கம் செய்யாமல் தவிர்க்கும் வாய்ப்பு கிடைக்கும். இந்த வசதியை வாட்ஸ்-ஆப் விரைவில் வெளியிட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ...

Read More

இதைப்பற்றி நாம் பேசுவதால் என்ன பலன் கிடைக்கும் என தெரியவில்லை. அப்படி நாம் பேசுவதால் பலன் கிடைக்கும் என்றால், பல அடுக்கு கொண்ட மாடி ஒன்றின்...

இதைப்பற்றி நாம் பேசுவதால் என்ன பலன் கிடைக்கும் என தெரியவில்லை. அப்படி நாம் பேசுவதால் பலன் கிடைக்கும் என்றால், பல அடுக்கு கொண்ட மாடி ஒன்றின் மேல் இருந்து நாயை கீழே விட்டெறிந்த சம்பவத்தை பற்றி நாம் பேசிய பேச்சுக்கு, இந்த சம்பவம் நடந்திருக்காது. நடந்திருக்கவும் கூடாது. நாயை மாடியில் இருந்து தூக்கி எரிந்த மருத்துவ மாணவர்களின் கொடூர செயல் கண்டனத்துக்குள்ளான அதே சூழலில், மருத்துவ மாணவர்களின் மனநிலையும் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. மற்றவர்களின் துன்பத்தை தன் துன்பமாய் தாங்கி, சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டிய மருத்துவக்கல்லூரி மாணவர்கள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்? என்ற கேள்வியை மிக அழுத்தமாய் பதிவு செய்திருந்தது அந்த சம்பவம். ஆனால் அதன் மீது எழுப்பப்பட்ட கேள்விகளும், மருத்துவ மாணவர்களின் மனநிலை எப்படி இருக்க வேண்டும் என்ற தலைப்பில் நடந்த விவாதமும் எந்த பலனையும் அளிக்கவில்லை என்பதை இன்னொரு சம்பவம் மூலம் உணர்த்தி இருக்கிறார்கள் மருத்துவ...

Read More

ஜீவா-காஜல் அகர்வால் இருவருமே தற்போது ஹிட் கொடுத்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார்கள். இந்நிலையில் யாருமிக்க பயமே படத்தை இயக்கிய டிகே ...

ஜீவா-காஜல் அகர்வால் இருவருமே தற்போது ஹிட் கொடுத்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார்கள். இந்நிலையில் யாருமிக்க பயமே படத்தை இயக்கிய டிகே இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் வெளிவந்துள்ள படம் கவலை வேண்டாம். இப்படம் ஜீவா-காஜலுக்கு ஹிட் கொடுத்ததா, பார்ப்போம். கதைக்களம் படத்தின் ஆரம்பத்திலேயே ஜீவா-காஜல் ப்ரேக் அப்புடன் தொடங்குகின்றது. ஜீவா சொந்த ஊரில் இதையெல்லாம் மறந்து நண்பர்களுடன் ஜாலியாக இருக்கின்றார். காஜல் தன் ஸ்டேட்டஸுக்கு ஏற்ற மாப்பிள்ளையாக பாபி சிம்ஹாவை தேர்ந்தெடுக்கின்றார், அதற்காக ஜீவாவிடம் விவாகரத்து வாங்க செல்கின்றார். நண்பர்கள் கொடுக்கும் யோசனையால் ஜீவா ஒரு வாரம் என்னுடன் மனைவியாக சேர்ந்து வாழ் என்று சொல்ல, அதன் பிறகு காஜல் எடுக்கும் முடிவு என்ன? என்பதே இந்த கவலை வேண்டாம். படத்தை பற்றிய அலசல் ஜீவா இது தான் நம்ம ரூட்டுன்னு பல வருஷம் கழிச்சு பிடிச்சிருக்கிறார். பெரும்பாலும் என்றென்றும் புன்னகை சாயல் நிறையவே தெரிகின்றது, என்ன...

Read More

இன்றைக்கு சர்ச்சையானாலும் எந்த சலசலப்பானாலும் அது சினிமா சினிமா சினிமா...தமிழுலகின் சகல உணர்ச்சிகளும் சினிமாவாகவே மக்களுக்கு உள்ளது. பல பத்...

இன்றைக்கு சர்ச்சையானாலும் எந்த சலசலப்பானாலும் அது சினிமா சினிமா சினிமா...தமிழுலகின் சகல உணர்ச்சிகளும் சினிமாவாகவே மக்களுக்கு உள்ளது. பல பத்து ஆண்டுகளுக்கு முன் அந்த இடத்தை இசையுலகம் பற்றியிருந்தது. ஆம் இசையுலகில் ஆரோக்கியமான சர்ச்சைகளும் சலசலப்புகளும் எழுந்து இசையுலகத்துக்கு அது புது ரத்தம் பாய்ச்சிய நாட்கள் அவை. இந்த சர்ச்சை வளையத்துக்குள் சிக்காத இசைமேதைகள் கிடையாது. எரியும் நெருப்பில் சுப்புடு என்ற மனிதர் வேறு எண்ணெய் ஊற்றிக்கொண்டிருந்தது தனிக்கதை. 70 களில் கர்நாடக இசையுலகில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியடைந்துவந்த இளைஞரான மறைந்த பாலமுரளி கிருஷ்ணாவும் 70 களின் இறுதியில் அப்படி ஓர் சர்ச்சைக்குள் சிக்கினார்.  கிட்டதட்ட ஒரு வருடங்கள் அது இசையுலகில் கொழுந்துவிட்டு எரிந்தது அந்த விவகாரம். பரபரப்பான அந்த சர்ச்சைக்கு வித்திட்டது அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆரின் அறிவிப்பு ஆம் 1978-ம் ஆண்டு அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். 'பாரம்பரியம் குன்றாமல் புதிய தமிழ்ப்பாடல்கள் மற்றும் தமிழ்க்...

Read More

நீண்டகாலமாகவே பேராசிரியர் பணிக்குத் திரும்ப வேண்டும் என உறுதியாக இருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் பேராசிரிய...

நீண்டகாலமாகவே பேராசிரியர் பணிக்குத் திரும்ப வேண்டும் என உறுதியாக இருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக பணிபுரிய இருக்கிறார். " மாநிலங்களவை எம்.பியாக இருப்பதால், ஒப்புதலுக்காக மத்திய அரசிடம் விண்ணப்பித்தார். அவரது வேண்டுகோள் ஏற்கப்பட்டுவிட்டது" என்கின்றனர் காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில். காங்கிரஸ் அரசில் பத்தாண்டு காலம் பிரதமராக கோலோச்சிய டாக்டர் மன்மோகன் சிங், சிறந்த பொருளாதார அறிஞராகப் பார்க்கப்பட்டவர். 1971-ம் ஆண்டு மத்திய வர்த்தக அமைச்சகத்தின் பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அடுத்தாண்டே நிதித்துறை தலைமை பொருளாதார ஆலோசகராகப் பதவி உயர்த்தப்பட்டார். நிதி அமைச்சக செயலாளர், திட்டக் குழுவின் துணைத் தலைவர், இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர், பிரதமரின் ஆலோசகர், பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் என அவர் வகிக்காத பதவிகளே இல்லை. பிரதமர் நரசிம்மராவ் காலத்தில், மத்திய நிதியமைச்சராகப் பதவி வகித்தார். சிறந்த சிந்தனையாளராகவும் எளிதில் யாரும் அணுகக் கூடிய வகையில்...

Read More

உலக அளவில் பரவும் தன்மை இல்லாத நோய்களால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சர்க்கரை நோய், உடல் பருமன் மற்றும் இதய நோய்கள்...

உலக அளவில் பரவும் தன்மை இல்லாத நோய்களால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சர்க்கரை நோய், உடல் பருமன் மற்றும் இதய நோய்கள். இந்நோய்களின் பெருக்கத்துக்கு முக்கிய காரணம், சர்க்கரை கலந்த குளிர்பானங்கள், செயற்கை ஜூஸ் வகைகளால் தான் என்று உலக சுகாதார மையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலே சொன்ன நோய் வகைகளால் ஏற்படும் மரணங்களுக்கு 80% சர்க்கரை கலந்த பானங்களால் தான் காரணியாக இருக்கின்றனவாம். 6.6 கோடி சர்க்கரை நோய் பாதிக்கப்பட்டவர்களுடன், உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது இந்தியா. கூடிய விரைவில் சர்க்கரை நோயாளிகளின் தலைமை இடமாக இந்தியா மாறும் வாய்ப்பு அதிகம் என்கின்றன ஆய்வுகள். இந்தியாவுக்கு மட்டும் அல்ல உலக நாடுகள் அனைத்துக்கும் ஒரு எச்சரிக்கை மணியையும், இவ்வகை நோய்களை கட்டுப்படுத்தும் சில ஆலோசனைகளையும் உலக சுகாதார மையம் முன்வைத்துள்ளது. ஏன் பாட்டிலில் அடைக்கப்பட்ட பானங்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்க...

Read More

நரேந்திர மோடி அறிவிப்பு நாட்டு மக்களை மட்டுமல்ல தமிழ் சினிமாவையே கடும் உலுக்கு உலுக்கி இருக்கிறது.  ஆயிரம், ஐநூறு ரூபாய்கள் செல்லாது என்ற அ...

நரேந்திர மோடி அறிவிப்பு நாட்டு மக்களை மட்டுமல்ல தமிழ் சினிமாவையே கடும் உலுக்கு உலுக்கி இருக்கிறது.  ஆயிரம், ஐநூறு ரூபாய்கள் செல்லாது என்ற அறிவிப்பால் வெளியூரில் நடந்த படப்பிடிப்புகள், சென்னையில் நடந்து கொண்டிருந்த படப்பிடிப்புகள் அனைத்தும் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. தற்போது  மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் படத்தின்  படப்பிடிப்பும், சந்தானம் ஹீரோவாக நடித்துவரும் 'ஓடி ஓடி உழைக்கணும்' திரைப்படத்தின் படப்பிடிப்பும் மட்டுமே நடந்து வருகிறது. விஜய் நடிக்கும் 'பைரவா' படமும், சூர்யாவின் 'சிங்கம் -3' படங்களின்  போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன.                                                    இந்திய, தமிழ் சினிமாவில் நடித்துவரும் முன்னணி நடிகர்கள், நடிகைகள் பெரும்பாலும் தனது சம்பளத்தில் பாதிப் பணத்தை...

Read More

Search This Blog

Blog Archive

About