குட் நியூஸ், எல் நினோ முடிந்தது - நல்ல மழை பெய்யும்!
May 11, 2017கடந்த இரண்டாண்டுகளாக, இந்திய தீபகற்பப் பகுதியையும் தெற்காசியப் பகுதியையும் வாட்டிவதைத்த எல் நினோ பருவநிலை முடிவடைந்துவிட்டதாக ஆஸ்திரேலிய வா...
'இந்த ஆண்டு இந்தியாவில் வழக்கத்தைவிட அதிக மழையை எதிர்பார்க்கலாம். இந்தியப் பருவகால மழையின்மூலம் மட்டுமே விவசாயத்துக்குத் தேவையான 70 சதவிகிதத்தைப் பெறுகிறோம். பருத்தி, சோளம், அரிசி, கரும்பு போன்றவற்றின் விளைச்சலுக்கு இந்த மழையின் தேவை மிகவும் முக்கியம். போதுமான மழையில்லாமல் இவற்றின் விளைச்சல் பாதிக்கப்பட்டிருந்தது. கடந்த ஏப்ரல் 18-ம் தேதி வரையான எங்கள் மதிப்பீட்டின்படி, வரப்போகும் பருவத்தை 96 சதவிகிதம் கணித்துள்ளோம். நல்லதொரு பருவகாலத்துக்கான சாதகமான சூழ்நிலை உருவாகிவருகிறது என்றே சொல்லலாம்' என்று தெரிவித்துள்ளார்.
பருவத்தில் பொய்த்துப்போகும் மழை, காட்டுத்தீ, வறட்சி, திடீர் வெள்ளம் போன்றவை எல் நினோவின் செயல்பாடுகளாகச் சொல்லப்படும். அதெல்லாமே இந்தியாவில் நடந்ததாக ஆஸ்திரேலிய வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கையும் எல்நினோவின் செயல் எனச் சொல்லும் அது, இந்த ஆண்டு வழக்கத்தைவிட அதிகமான மழை பொழிவதற்கான அனைத்து அறிகுறிகளும் தென்படத் துவங்கிவிட்டதாகத் தனது அறிக்கையில் கூறியுள்ளது.
எங்க அம்மா ராணி.....திரைவிமர்சனம்
May 11, 2017தமிழ் சினிமாவில் ஹீரோயின்களை மைப்படுத்தி வரும் படங்கள் வெகு குறைவு. அந்த வகையில் தொடர்ந்து தரமான படங்களாக தேர்ந்தெடுத்து நடிப்பவர் தன்ஷிகா....
கதைக்களம்
தன்ஷிகா மலேசியாவில் ஒருவரை திருமணம் செய்து இரட்டை குழந்தைகளுக்கு அம்மாவாக இந்தியா திரும்ப முடியாமல் தவித்து வருகின்றார், தன்ஷிகாவின் கணவர் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல, அவர் எங்கு இருக்கின்றார் என தெரியாத நிலை.
இந்நிலையில் தன்ஷிகாவின் மூத்த மகள் கொடிய நோயால் பாதிக்கப்பட்டு இறக்க, இரட்டையர்கள் என்பதால் அந்த நோய் அடுத்தவருக்கும் பரவுகின்றது.
ஏதாவது குளிர் பிரதேசம் சென்றால் அவரை காப்பாற்றலாம் என சொல்ல, வேறு இடத்திற்கு தன்ஷிகா தன் மகளுடன் குடிபெயர்கின்றார்.
அந்த இடத்தில் பல அமானுஷிய விஷயங்கள் நடக்க, அதன் பின் என்ன ஆனது என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
தன்ஷிகா இதற்கு முன் பரதேசி படத்திலேயே ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்தவர் தான், இதில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்துள்ளார், வளரும் போதே இப்படி துணிந்து நடிப்பது கண்டிப்பாக மனம் திறந்து பாராட்டாலாம், அவரும் தன் நடிப்பை சிறப்பாக கொடுத்துள்ளார்.
படத்தில் இரட்டையர்களாக நடித்த குழந்தைகள் வர்ணிகா, வர்ஷா, இதில் வர்ணிகாவே படத்தில் பல காட்சிகளில் வருவதால் அதிகம் கவர்கின்றார், குட்டி குட்டி எக்ஸ்பிரஷன்களில் மனதை கொள்ளை கொள்கின்றார்.
முதல் பாதி கொஞ்சம் எமோஷ்னலாக செல்ல, இரண்டாம் பாதி என்ன ஆகப்போகின்றதோ என எதிர்ப்பார்க்க, அடுத்தடுத்து வரும் அமானுஷிய காட்சிகள் படத்தில் எந்த இடத்திலும் ஒட்டவில்லை.
அதிலும் குழந்தைக்கு ஆவி பிடிக்கின்றது போன்ற காட்சிகள், அந்த ஆவியை தன்ஷிகா ஏற்றுக்கொள்வது என யதார்த்தம் மீறிய விஷயம். கிளைமேக்ஸ் நோ கமெண்ட்ஸ்.
இளையராஜாவின் பின்னணி இசை படத்தின் மிகப்பெரிய பலம். ஒளிப்பதிவு மலேசியாவில் அழகாக படம் பிடித்து காட்டியுள்ளது, முன் பாதியில் காட்டிய எமோஷ்னல், யதார்த்தத்தை இரண்டாம் பாதியிலும் காட்டியிருக்கலாம் பாணி.
க்ளாப்ஸ்
தன்ஷிகா படத்தின் முதல் பாதி.
இளையராஜ பின்னணி இசை. குழந்தைகளின் நடிப்பு
பல்ப்ஸ்
இரண்டாம் பாதி, நம்பக்கத்தன்மை இல்லாத கிளைமேக்ஸ்.
மொத்தத்தில் உறவிற்கான முக்கியத்துவத்தை அழகாக காட்டியிருந்தாலும், இன்னும் கொஞ்சம் யதார்த்தமாக கொண்டு சென்றிருந்தால் இன்னுமே பலராலும் ரசிக்கப்பட்டு இருப்பார் இந்த ராணி.
பாகுபலி-2விற்கு பாக்ஸ் ஆபிஸில் விழுந்த முதல் அடி
May 11, 2017பாகுபலி-2 உலகம் முழுவதும் செம்ம வசூல் செய்துவிட்டது. படம் ரூ 1200 கோடி வரை வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. இ...
இந்நிலையில் இப்படம் தொடர்ந்து 10 நாட்களாக இந்தியா முழுவதும் அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ் புல் காட்சிகள் தான்.
ஆனால், நேற்று முதன் முறையாக தமிழகத்தில் பல பகுதியில் உள்ள திரையரங்குகளிலும் கூட்டம் முதல் இரண்டு காட்சிக்கு குறையத்தொடங்கியதாம்.
இதனால் திரையரங்க உரிமையாளர்கள் அதிர்ச்சியாக, அதை தொடர்ந்து மாலை நேர காட்சி வழக்கம் போல் ஹவுஸ் புல் தான்.
இன்னும் இரண்டு வாரத்திற்கு பாகுபலி-2 தவிர வேறு எந்த படங்களின் மீதும் திரையரங்க உரிமையாளர்கள் கவனம் செலுத்துவது போல் தெரியவில்லை.
பாகுபலி படத்தில் பிரபாஸ், ராணா, ரம்யாகிருஷ்ணன், தமன்னாவிற்கு பதில் முதலில் இவர்கள் தான் நடிக்கவிருந்தார்களா?
May 05, 2017பாகுபலி இந்திய சினிமாவின் பெருமை என பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தில் முதலில் நடிக்க பல நடிகர், நடிகைகளுடன் பேச்சு வார்த...
இதில் பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு ஹிரித்திக் ரோஷன், ராணா கதாபாத்திரத்திற்கு ஜான் ஆபிரஹாமிடம் தான் பேச்சு வார்த்தை நடந்ததாக கூறப்படுகின்றது.
மேலும், ரம்யா கிருஷ்ணன் கதாபாத்திரத்திற்கு முதலில் ஸ்ரீதேவியிடம் தான் பேச்சு வார்த்தை நடந்தது, அதேபோல் தமன்னாவிற்கு சோனம் கபூர் தான் முதல் சாய்ஸாக இருந்ததாம்.
ஆனால், படம் ரிலிஸிற்கு பிறகு இவர்களை தவிர வேறு யார் நடித்திருந்தாலும், இத்தனை நன்றாக படம் வந்திருக்காது என படம் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
கமலின் டிவி நிகழ்ச்சிக்கு இவ்வளவு பட்ஜெட்டா?
May 05, 2017பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியை தமிழில் நடிகர் கமல்ஹாசன் விரைவில் அதே பெயரில் நடத்தவுள்ளார். அந்...
அந்த நிகழ்ச்சிக்காக தற்போது 1 கோடி ருபாய் செலவில் ஒரு பிரமாண்ட செட் போடப்பட்டுள்ளதாம். 15 பிரபலங்கள் ஒரே வீட்டில் 100 நாட்கள் வசிப்பார்கள். அதில் யார் கடைசிவரை இருக்கிறார்க்ளோ அவர்களே வெற்றியாளர்.
தற்போது வந்துள்ள தகவல்படி இந்த நிகழ்ச்சியில் இரண்டு அரசியல்வாதிகள் மற்றும் இரண்டு கிரிக்கெட் வீரர்கள் இருப்பார்கள். மற்ற போட்டியாளர்கள் பற்றி விரைவில் அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிர வைக்கும் பாகுபலி-2 இடைவேளை காட்சி இந்த நடிகரின் புகழை உதாரணமாக வைத்து தான் உருவானதாம்
May 05, 2017பாகுபலி-2 உலகம் முழுவதும் வசூல் மழை பொழிகின்றது. இப்படத்தின் வசூல் இன்னும் இரண்டு தினங்களில் ரூ 1000 கோடியை தாண்டும். இந்நிலையில் இப்படத்...
இந்நிலையில் இப்படத்தில் பலராலும் கொண்டாட்டப்பட்டு வருவது இடைவேளை காட்சி தான்.
இந்த காட்சியில் ராணா பதவியேற்க, எல்லோரும் பாகுபலி...பாகுபலி என்று சொல்ல இந்த காட்சி பெரும் வரவேற்பு கிடைத்தது.
இந்த காட்சி தெலுங்கு நடிகர் பவன் கல்யாணை மனதில் வைத்து தான் உருவாக்கப்பட்டதாம், ஏனெனில் எந்த ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழா என்றாலும் இவர் பெயர் சொன்னால் விசில் சத்தம் விண்ணைத்தொடும்.
அதனாலேயே அந்த காட்சியை அப்படி வடிவமைத்தேன் என பாகுபலி கதையாசிரியர் விஜயந்திரபிரசாத் கூறியுள்ளார்.
பாகுபலி-2விற்கு முன்பு அதிக கூட்டம் வந்தது இந்த படத்திற்கு தானாம்
May 04, 2017பாகுபலி-2 தமிழகத்தில் வசூல் புரட்சி நடத்தி வருகின்றது. இப்படம் தமிழகத்தில் இதுவரை எந்த படமும் செய்யாத வசூல் புரட்சியை செய்துள்ளது. இந்நில...
இந்நிலையில் இப்படத்திற்கு குடும்பம் குடும்பமாக மக்கள் வந்து செல்வதாக விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் தெரிவித்துள்ளனர்.
இதுவரை அதிக மக்கள் பார்த்த திரைப்படம் என்ற பெருமையை பாகுபலி-2 பெற்றுள்ளது.
இதற்கு முன் இவ்வளவு கூட்டம் வந்தது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படையப்பா படத்திற்கு தான் என பல விநியோகஸ்தர்கள் கூறியுள்ளனர்.
இந்த நடிகருடன் ராஜமௌலி இணைந்தால் அவதார் சாதனை முறியடித்துவிடலாம்! பிரபல இயக்குனர்
May 03, 2017பாகுபலி படத்தின் மூலம் ராஜமௌலியால் இந்திய படங்களின் சாதனையை மட்டுமே முறியடிக்க முடியும், இந்த நடிகரை வைத்து படமாக்கினால் உலக அளவில் பாக்ஸ்ஆ...
ரஜினியுடன் ராஜமௌலி கைகோர்த்தால் அவதார் படம் இரண்டாவது இடத்திற்கு வந்துவிடும் என பிரேமம் புகழ் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலேயே நம்பர் 1, 6 நாட்களில் பாகுபலி-2 இமாலய வசூல் சாதனை
May 03, 2017பாகுபலி-2 இந்தியாவே அதிரும் வகையில் வசூல் செய்து வருகின்றது. இப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து தான் வருகின்றது. இந்நிலையில் இப்ப...
இந்நிலையில் இப்படம் இந்தியாவின் நம்பர் 1 வசூலான PK மற்றும் தங்கல் சாதனையை முறியடித்துள்ளது.
அதிலும் படம் வெளிவந்த 6 நாட்களில் இச்சாதனையை இப்படம் நிகழ்த்தியுள்ளது, பாகுபலி-2 6 நாட்களில் உலகம் முழுவதும் ரூ 785 கோடி வசூல் செய்துள்ளது.
இதில் இந்தியாவில் மட்டுமே ரூ 630 கோடி, வெளிநாடுகளில் ரூ 155 கோடி என வசூல் செய்துள்ளது
பாகுபலி 2 படத்தின் குறைகளை சுட்டிக்காட்டிய இளம் இயக்குனர்- பதிலடி கொடுத்த எஸ்.எஸ். ராஜமௌலி
May 03, 2017பாகுபலி 2 படத்தை ரசிக்க முடியுமே தவிர படத்தை குற்றம் கூற முடியாது. அந்த அளவிற்கு பிரம்மாண்டத்தின் மூலம் ரசிகர்களை வாய் பிளக்க வைத்துவ...
பாகுபலி 2 படத்தை ரசிக்க முடியுமே தவிர படத்தை குற்றம் கூற முடியாது. அந்த அளவிற்கு பிரம்மாண்டத்தின் மூலம் ரசிகர்களை வாய் பிளக்க வைத்துவிட்டார் இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி.
படத்தை பார்த்த ரசிகர்கள் மட்டுமில்லாது பிரபலங்களும் தங்களது கருத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் பாகுபலி 2 படத்தில் 5 தவறுகள் என்று கூறி படத்தை பற்றி பெருமையாக பேசியிருந்தார். இதனை பார்த்த பலரும் விக்னேஷ் சிவனை பாராட்டி வந்தனர்.
தற்போது விக்னேஷ் சிவனின் இந்த வித்தியாசமான டுவிட்டை பார்த்த ராஜமௌலி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அவருக்கு மிகவும் நன்றி என கூறியுள்ளார்.
2.0வில் ஐஸ்வர்யா ராய் இருக்கிறாரா, இல்லையா? புதிய தகவல்
May 03, 2017எந்திரன் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தவர் ஐஸ்வர்யா ராய். அவர் மீது சிட்டி ரோபோ காதல் கொண்டதால் ஏற்பட்ட பிரச்சனைகளையே அந்த படத்தில...
தற்போது எந்திரன் அடுத்த பாகம் 2.0 என்ற பெயரில் எடுத்துவருகிறார் ஷங்கர். எமி ஜாக்சன் தான் ஹிரோயின்.
இந்நிலையில் முதல் பாகத்தில் நடித்த ஐஸ்வர்யா ராய் 2.0வில் இருப்பாரா என்ற கேள்வி ரசிகர்கள் அனைவரது மனதிலும் உள்ளது.
தற்போது வந்துள்ள தகவல்படி ஐஸ்வர்யா ராயுடன் வசீகரன் போனில் பேசும் காட்சிகள் மட்டும் இருக்கும் என கூறப்படுகிறது.
உண்மையிலேயே 120 கோடி கொடுத்ததா பாகுபலி டீம்?
May 03, 2017நக்சல் தாக்குதலில் இறந்த 25 CRPF வீரர்கள் குடும்பத்திற்கு பாகுபலி டீம் 120 கோடி ரூபாய் கொடிதிருபதாக நேற்று தகவல் பரவியது. பாகுபலி 2 படத்தின...
ஆனால் தற்போது அது முற்றிலும் வதந்தி என்பது உறுதியாகியுள்ளது.
ட்விட்டரில் யாரோ ஒருவர் கற்பனையாக போட்ட செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகிவிட்டது. அதை பாகுபலி டீமில் யாருமே இதுவரை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Search This Blog
Blog Archive
- ► 2018 (454)
- ▼ 2017 (521)