­
November 2017 - !...Payanam...!

எந்த பக்கம் தலை வைத்து படுக்க வேண்டும்? தன்னுடைய சொந்த வீட்டில் கிழக்கு திசையில் தலை வைத்து படுக்க வேண்டும். மாமனார் வீட்டில் தெ...

எந்த பக்கம் தலை வைத்து படுக்க வேண்டும்? தன்னுடைய சொந்த வீட்டில் கிழக்கு திசையில் தலை வைத்து படுக்க வேண்டும். மாமனார் வீட்டில் தெற்கு திசையில் தலை வைத்து படுக்க வேண்டும், வெளியூரில் தங்கும்போது மேற்கு திசையில் தலை வைத்து படுக்க வேண்டும்,  ஆனால் எக்காரணம் கொண்டும் எப்போதும் வடக்கு திசையில் தலை வைத்து படுக்கக் கூடாது என்று கூறுகின்றனர் சான்றோர்கள். கெட்ட கனவு வருகிறதா: சிலருக்கு அடிக்கடி கெட்ட கனவுகள் வந்து தொல்லை கொடுக்கும் அவர்களின் அலைபாயும் மனது தெளிந்த நீரோடை போல் இருந்தால் அந்த பிரச்சினை வரவே வராது. அதற்கு ஒரு சுலோகமும் உள்ளது. ராமம் கிருஷ்ணம் ஹனுமந்தம்வைணதேயம் விருகோதரம் சயனே,யஸ் ஸ்மரேன் நித்யம்துஸ்வட்னம் தஸ்ய நஸ்யதி. தூங்கும் முன் இந்த சுலோகத்தை சில முறை மனதார கூறி பிரார்த்தனை செய்யுங்கள். ஆழ்ந்த தூக்கம் வரும். கெட்ட கனவுகள் வரவே வராது ...

Read More

சமையலறை பூச்சிகளை இயற்கை முறையில் அழிக்க சில வழிகள்!!! ஒரு வீட்டின் மிக முக்கியமான பகுதியாக சமையலறை விளங்குகின்றது. வீட்டில் உள்ள விர...

<
சமையலறை பூச்சிகளை இயற்கை முறையில் அழிக்க சில வழிகள்!!! ஒரு வீட்டின் மிக முக்கியமான பகுதியாக சமையலறை விளங்குகின்றது. வீட்டில் உள்ள விருந்தாளிகள் தங்கும் அறைக்கு நாம் சில நாட்கள் செல்லாமல் இருக்கக்கூடும் அல்லது மிகுந்த குளிர் காலத்தில் வீட்டின் மாடிக்கும் கூட செல்லாமல் இருக்கலாம். ஆனால் யாராலும் சமையலறைக்கு செல்லாமல் இருக்க முடியாது. ஆகையால் தான் வீட்டின் மற்ற பகுதியில் நாம் செலுத்தும் கவனத்தை சமையல் அறையில் சற்றே அதிகமாக செலுத்த வேண்டும். மற்ற அறைகளை போல் இதையும் அழகாக வைக்க வேண்டும். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சமையலறை சாதனங்களையும் நவீன கட்டமைப்புடன் சமையல் அறையையும் நாம் அலங்கரிப்பது வீட்டிற்கு மேலும் அழகூட்டும். இவைகளை செய்தால் மட்டும் போதாது, அவற்றை எந்த வித பூச்சிகளும் பாழ்படுத்தாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு என்ன செய்வது? பெருமளவில் பணம் செலவு செய்து பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தும் போது அவை பூச்சிகளுக்கு மட்டுமின்றி...

Read More

சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கந்துவட்டி கொடுமை தான் தயாரிப்பாளர் அசோக் குமார் தற்கொலைக்கு காரணம் என கூறப்பட்டுவரும் நிலையில், அவரால்...

சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கந்துவட்டி கொடுமை தான் தயாரிப்பாளர் அசோக் குமார் தற்கொலைக்கு காரணம் என கூறப்பட்டுவரும் நிலையில், அவரால் நடுத்தெருவுக்கு வந்த காக்கா முட்டை இயக்குனர் மணிகண்டன் பற்றிய அதிர்ச்சி தகவல்வெளியாகியுள்ளது .ஆண்டவன் கட்டளை படத்தை ஃபர்ஸ்ட் காப்பி முறையில் ரூ.5.5 கோடிக்கு செய்து கொடுப்பதாக அன்புச்செழியனுடன் மணிகண்டன் ஒப்பந்தம் போட்டுள்ளார்.தனியாக சம்பளம் ஏதும் பேசாமல் லாபத்தில் 40% ஷேர் என்று மணிகண்டனுடன் அன்புச்செழியன் ஒப்பந்தம் செய்திருக்கிறார்.படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நன்றாக சென்ற நிலையில் தன் 40% பங்கை இயக்குனர் கேட்டிருக்கிறார், ஆனால் படம் ஓடவில்லை என கூறிவிட்டாராம் அன்புச்செழியன்.பின்னர் படத்தின் டிவி உரிமை, டிஜிட்டல் உரிமை விற்று அதிக பணம் ஈட்டியுள்ளார் அன்புச்செழியன். இருப்பினும் தற்போதுவரை மணிகண்டனுக்கு தர வேண்டிய காசை கொடுக்கவில்லையாம், முறையான கணக்கும் காட்டவில்லையாம்.இதனால் தற்போது பணகஷ்டத்தில் இருக்கும் மணிகண்டன் ஸ்க்ரிப்ட் எழுதுவது போன்ற சின்னசின்ன வேலைகளை செய்து...

Read More

உலக அழகியாக மகுடம் சூட்டப்பட்டுள்ள இந்தியாவின் மனுஷி சில்லர், தனக்கு எந்த நடிகரின் திரைப்படத்தில் நடிக்க விருப்பம் என்பதைக் கூறியுள்ளார். ச...

உலக அழகியாக மகுடம் சூட்டப்பட்டுள்ள இந்தியாவின் மனுஷி சில்லர், தனக்கு எந்த நடிகரின் திரைப்படத்தில் நடிக்க விருப்பம் என்பதைக் கூறியுள்ளார். சீனாவின் சான்யா சிட்டியில், நவம்பர் 18-ம் தேதி உலக அழகிப் போட்டி நடைபெற்றது.  அதில், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மனுஷி சில்லர் (20) உலக அழகியாகப் பட்டம் சூட்டப்பட்டார். மருத்துவக் கல்லூரி மாணவியான இவர், இறுதிப்போட்டியில் இங்கிலாந்து, பிரான்ஸ், கென்யா, மெக்ஸிகோ நாடுகளின் அழகிகளைத் தோற்கடித்து பட்டம் வென்றார்.  இவர், இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவில் பிரபலமாகிவருகிறார். இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த மனுஷி சில்லர், தனக்கு எந்த நடிகரின் படத்தில் நடிக்கப் பிடிக்கும் என்பதுகுறித்து மனம்திறந்து பேசியுள்ளார். `எனக்கு, இந்தித் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில், அமீர் கானின் திரைப்படத்தில் நடிக்க விரும்புகிறேன். அவர் திரைப்படங்களில் தோன்றும் கதாபாத்திரங்கள் மிகவும் நன்றாகவும் சவாலானதாகவும் இருக்கின்றன. அவரது திரைப்படங்கள், மக்களிடம் நேர்மறையான முறையில் கனெக்ட் ஆகிறது என்று...

Read More

நல்லா வாழ்ந்த சசிகுமாருக்கு குரு வைத்த ஸ்குருதான் தாரை தப்பட்டை. ‘பத்தரை கோடியில் முடிச்சுரலாம்டா…’ என்று உரிமையோடு காதில் ஓதி, பட்ஜெட்டை 3...

<
நல்லா வாழ்ந்த சசிகுமாருக்கு குரு வைத்த ஸ்குருதான் தாரை தப்பட்டை. ‘பத்தரை கோடியில் முடிச்சுரலாம்டா…’ என்று உரிமையோடு காதில் ஓதி, பட்ஜெட்டை 30 கோடிக்கு மேல் ஏற்றிவிட்டிருந்தார் பாலா. அந்த நேரத்தில் மதுரை அன்புச்செழியனிடம் வாங்கிய கடன்தான் வாலும், கொடுக்குமாக முளைத்து சசிகுமாரை சந்தியில் இழுத்துவிட்டிருக்கிறது.அவரது அத்தை மகன் அசோக் குமாரும் இந்த கடன் விவகாரத்தால்தான் தற்கொலை செய்து கொண்டார். சரி போகட்டும்… நாம் மேலே சொன்ன தலைப்புக்கு வருவோம்.தாரை தப்பட்டைக்கு பொதுமக்கள் கொடுத்த மரியாதைதான் ஊருக்கே தெரியுமே? இந்த நிலையில் இந்த படத்தை ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு விற்க முயன்றார்களாம். அந்தப்படமா? வேணாம் சார்… என்று எடுத்த எடுப்பிலேயே என்ட் கார்டு போட்டுவிட்டது சேனல். இருந்தாலும், பின்னாளில் சேனலுக்கும் நமக்குமான ரிலேஷன்ஷிப்பாவது வலுக்குமே என்று எண்ணிய சசிகுமார், ‘பணமே வேணாம்ணே. சும்மா போட்டுக்கோங்க’ என்று சேனல் சிஇஓ விடம் சொல்ல, ‘இருக்கட்டும் சார். நமக்கு விருப்பமில்ல’ என்று...

Read More

கடந்த பல வருடங்களாக விளக்கெண்ணையில் வாழைப் பழத்தை பிசைந்து மக்களுக்கு ஊட்டி வருகிறார் ரஜினி. ‘வருவேன்… வந்தாலும் வருவேன்’ டைப்பான இவரது அரச...

<
கடந்த பல வருடங்களாக விளக்கெண்ணையில் வாழைப் பழத்தை பிசைந்து மக்களுக்கு ஊட்டி வருகிறார் ரஜினி. ‘வருவேன்… வந்தாலும் வருவேன்’ டைப்பான இவரது அரசியல் பிரவேச பூச்சாண்டியை இனியும் நம்புவதற்கு தயாராக இல்லை மகாஜனங்கள். ஆனால் யாருமே எதிர்பாராத திசையிலிருந்து உள்ளே குதித்த கமல், அரசியல்வாதிகளுக்கு நாள்தோறும் கிலி ஏற்படுத்தி வருகிறார். இவர்களுக்கு இடையேயான இந்த வேற்றுமைக்கான ஆதரவும் எதிர்ப்பும் இப்போது வெளிப்பட்டுள்ளது.குமுதம் வார இதழும் நியூஸ் 7 தொலைக்காட்சியும் இணைந்து மக்களிடம் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தியிருக்கிறார்கள். அதில் ரஜினி, கமல், விஜய் குறித்த அரசியல் கேள்விகளுக்கு நெற்றிப் பொட்டில் அடித்தது போல வாக்களித்து கமல்ஹாசனை கை தட்டி வரவேற்கிறார்கள் மக்கள்.திமுக- அதிமுக வுக்கு சவாலாக இருக்கப் போகும் நடிகர் யார்? என்ற கேள்விக்கு ஏராளமான வாக்காளர்கள் கமலுக்கே ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். கமலுடன் ஒப்பிட்டால் பல மடங்கு சரிந்தேயிருக்கிறது ரஜினியின் வாய்ஸ்.மூன்றாவது இடத்திலிருக்கிறார் விஜய். ...

Read More

இயக்குனர் சங்கர் ரூ 400 கோடி செலவில் ரஜினி நடித்துள்ள எந்திரன் 2.0 படம் வெளியாகவுள்ளது. இப்படம் வெளியான 25 நாட்களில் இனி நீங்களும் வீடியோ ஸ...

இயக்குனர் சங்கர் ரூ 400 கோடி செலவில் ரஜினி நடித்துள்ள எந்திரன் 2.0 படம் வெளியாகவுள்ளது. இப்படம் வெளியான 25 நாட்களில் இனி நீங்களும் வீடியோ ஸ்ட்ரீமிங்க் மூலம் நீங்களும் பார்கலாம்.படங்களை டிஜிட்டல் முறையில் வெளியிடும் அமேசான் பிரைம் நிறுவனம் தற்போது 2.0 படத்தின் உரிமத்தை பெற்றுள்ளது. இத்தகவலை படத்தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.ஏற்கனவே அதே நிறுவனம் தீரன் அதிகாரம் ஒன்று, துப்பறிவாளன், கபாலி, தெறி, வேலையில்லா பட்டதாரி 2, சி 3, மாநகரம், துருவங்கள் 16, காற்று வெளியிடை, காஷ்மோரா, ஜோக்கர் என பல படங்களில் உரிமையையும் பெற்றுள்ளது. ...

Read More

ஹரி இயக்கத்தில் வெளியான சாமி படம் இன்னும் பலரால் மறக்க முடியாது. 2003 ல் ரூ 5 கோடி பட்ஜெட்டில் வெளியாகி ரூ 30 கோடி வசூலை பாக்ஸ் ஆஃபிஸில் ...

ஹரி இயக்கத்தில் வெளியான சாமி படம் இன்னும் பலரால் மறக்க முடியாது. 2003 ல் ரூ 5 கோடி பட்ஜெட்டில் வெளியாகி ரூ 30 கோடி வசூலை பாக்ஸ் ஆஃபிஸில் வசூல் அள்ளியது.இந்நிலையில் சாமி 2 மீண்டும் எடுப்பதற்காக வேலைகள் தொடங்கியது. முதலில் ஓகே சொன்ன திரிஷா பின் இப்படத்திலிந்து திடீரென விலகினார்.ஆனால் இதற்காக படக்குழு சார்பாக தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதற்கு அவர் படத்தில் ஒரு காட்சியில் கூட நான் நடிக்கவில்லை. எனவே அதிலிருந்து விலக உரிமையுள்ளது.வாங்கிய பணத்தை திரும்ப கொடுத்துவிடுகிறேன். என்னுடைய சொந்த காரணங்களுக்காக படத்திலிருந்து விலகி விட்டேன் என அவர் கூறினார். ...

Read More

தயவு செய்து நண்பர்களுடன் இத்தகவலை பகிர்ந்துகொள்ளுங்கள்.... படத்தில் காட்டப்பட்டுள்ளது போல் மேலே இருந்து பெட்ரோல் நிரப்புமிடத்தில் நீங...

தயவு செய்து நண்பர்களுடன் இத்தகவலை பகிர்ந்துகொள்ளுங்கள்.... படத்தில் காட்டப்பட்டுள்ளது போல் மேலே இருந்து பெட்ரோல் நிரப்புமிடத்தில் நீங்கள் பெட்ரோல் போட்டுக்கொள்கிறீர்களா...? உங்களுக்கான எச்சரிக்கை இது... நீங்கள் ஏமாற்றப்படுகிறீர்கள்... இது போன்ற இடங்களில் மீட்டர் பெட்ரோல் நிரப்பும் நாசில் மீது இருக்கும்... பெட்ரோல் நிரப்பும் நபர் உங்களிடம் எவ்வளவு என்று கேட்பார்... நீங்கள் 100.00 ரூபாய் அல்லது 200.00 ரூபாய் என்று கூறுவீர்கள்... மீட்டரில் இரண்டு வரிசைகளில் எண்கள் ஓடும்... முதலில் உள்ளது லிட்டர் அளவு... அதற்குக் கீழே உள்ளது தொகை... பெட்ரோல் நிரப்பத் தொடங்குகையில் 0.0000 என்று இரண்டு வரிசைகளிலும் இருக்கும்... நீங்கள் நூறு ரூபாய் என்று கூறினால் பெட்ரோல் நிரப்பத் தொடங்கியதும் லிட்டர் அளவு வருமிடத்தில் 1.0000 என்று வந்ததும் பெட்ரோல் நிரப்பும் நபர் நிறுத்தி விடுவார்... நமக்கு அது ஒரு லிட்டர் என்பது தெரியாமல் நகர்ந்துவிடுவோம்... அவ்வளவுதான் 100.00 ரூபாய்க்கு 30.00 ரூபாய் உங்களிடமிருந்துஉங்கள் அனுமதியுடன்...

Read More

  கண்டு கொள்வாய் சொல்லுகின்றேன் . . . . உலகோர்க் கெல்லாம் காரமா மூலியடா பங்கம்பாளை கொண்டு . . . . வந்து உன் மனையில் வைத்திருந்தால்...

  கண்டு கொள்வாய் சொல்லுகின்றேன் . . . . உலகோர்க் கெல்லாம் காரமா மூலியடா பங்கம்பாளை கொண்டு . . . . வந்து உன் மனையில் வைத்திருந்தால் கொடிய விடம் அணுகாது குடியோடிப்போம் . . . . நன்றானநாகதாளிக்கிழங்கு தானும் நன்மனையிலிருக்க விடம் நாடாதப்பா . . . . அன்றான ஆகாசகருடன் மூலி அம்மனை யிலிருக்க விடமற்றுப்போம் - சித்தர் பாடல். ஆடு தீண்டாப்பாளை, நாகதாளிக் கிழங்கு, ஆகாச கருடன் கிழங்கு, சிறியா நங்கை, இம் மூலிகைகளை வீட்டில் வளர்த்து வந்தால் இதன் வாசனைக்கு விச ஜந்துக்கள், பாம்புகளை நெருங்க விடாது என்கிறது பாடல். பாம்பு வீட்டினுள் வந்துவிட்டால் சோற்றுக் கஞ்சியில் உப்பைக் கரைத்து அதனுடன் பூண்டை அரைத்துக் கரைத்து இதில் சிறிது மண்ணெண்ணெய் சிறிது கலந்து பாம்பு இருக்கும் பகுதியில் சுற்றி தெளித்து விட பாம்பு சீராது ,கடிக்காது, ஓடாது அங்கேயே...

Read More

கமல்ஹாசன் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் கடும் வைரலாகி வருகின்றது. இதில் கமல்ஹாசன் ரசிகர் ஒருவரை தாக்குவது போல் தெரிகின்றது. இந்த சம்பவம்...

கமல்ஹாசன் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் கடும் வைரலாகி வருகின்றது. இதில் கமல்ஹாசன் ரசிகர் ஒருவரை தாக்குவது போல் தெரிகின்றது.இந்த சம்பவம் நடந்து பல வருடம் கழித்து தற்போது சமூக வலைத்தளத்தை சுற்றி வருகின்றது, இதற்கு கமல் தரப்பி விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.இதில் ‘கமல் அவர்களுக்கு காலில் விழுவது பிடிக்காது, அவரை கமல் தள்ளி தான் விடுவார், ஆனால், அடிப்பது போல் சித்தரித்துள்ளனர்’ என்று கூறியுள்ளனர்.மேலும், அதை உற்று கவணிக்கும் போது அந்த போலிஸ்க்காரர் தான் அவரை தள்ளி விடுகிறார், கமலின் கை அவரை காலில் விழ வேண்டாம் என்று சைகை காட்டுவது போல் தான் இருக்கும்.ஆனால், சிலர் அதை தங்களுக்கு சாதகமாக எடிட்டிங் செய்து வெளியிட்டுள்ளனர் என்பது தெரிகின்றது. ...

Read More

ஹாலிவுட் படங்கள் எந்த லெவலில் எடுக்கப்படும் என்பது ஆங்கில பட பிரியர்களுக்கு நன்கு தெரியும். சமீபத்தில் வெளியான படம் ரசிகர்களை கவர்ந்த படம் ...

ஹாலிவுட் படங்கள் எந்த லெவலில் எடுக்கப்படும் என்பது ஆங்கில பட பிரியர்களுக்கு நன்கு தெரியும். சமீபத்தில் வெளியான படம் ரசிகர்களை கவர்ந்த படம் ஜஸ்டிஸ் லீக்.இதில் சூப்பர் மேனாக நடித்தவர் ஹென்றி கவில். இதில் மீசையை கிளீன் ஷேவ் செய்திருப்பார். இங்கு தான் விசயமே இருக்கிறது. இவரே மிஷன் இம்பாசிபிள் 6 படத்திலும் நடித்துள்ளார்.இந்த பட கேரக்டரில் நடிக்க மீசை வைக்க வேண்டிய கட்டாயமாம். மீசையில்லாமல் நடிக்க படக்குழு அனுமதிக்கவில்லையாம். எனவே ஹென்றி மிஷன் இம்பாசிபிள் படம் முழுக்க மீசையுடன் நடித்திருப்பார்.ஆனால் ஜஸ்டிஸ் லீக் படத்தில் அதே லுக்கில் தான் நடித்து இருந்ததால் இப்படக்குழு படத்தில் அவரின் மீசையை CGI கிராஃபிக்ஸ் மூலம் நீக்கி கிளீன் ஷேவ் போல் காண்பித்திருக்கிறார்கள்.இதற்காக அவர்கள் செலவு செய்த தொகை நம் நாட்டு மதிப்பில் ரூ 125 கோடி. அதாவது $25 million. ஹாலிவுட்டில் இது லேட்டஸ்ட் அட்ராசிட்டி ஆகியுள்ளது. ...

Read More

1930- 1980 வரை பிறந்த நம்மை போன்றவர்களை இந்த கால குழந்தைகள் அல்லது இந்த ஜெனரேஷன் மக்கள நம்மைபற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் ...

<
1930- 1980 வரை பிறந்த நம்மை போன்றவர்களை இந்த கால குழந்தைகள் அல்லது இந்த ஜெனரேஷன் மக்கள நம்மைபற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே WE ARE AWESOME !!!! OUR LIFE IS A LIVING PROOF · தனி படுக்கையில் அல்ல அம்மா அப்பாக்கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான் · எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை. · கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை. · புத்தகங்களை சுமக்கும்பொதிமாடுகளாகஇருந்ததில்லை. · சைக்கிள் ஒட்டும் போது ஹெல்மேட் மாட்டி ஒட்டி விளையாண்டது இல்லை. · பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரே விளையாட்டுதான் ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்ப்பதில்லை. · நாங்கள் விளையாடியது நிஜ நண்பர்களிடம் தான் நெட் நண்பர்களிடம் இல்லை. · தாகம் எடுத்தால் தெரு குழாய்க்களில்...

Read More

தலைவலி வந்துவிட்டால் போதும், உடனே மாத்திரை போடும் பழக்கம் பலரிடம் உள்ளது. அதுவும் "பெனடோல்' பலரிடமும் கைவசம் இருக்கும் தலைவ...

தலைவலி வந்துவிட்டால் போதும், உடனே மாத்திரை போடும் பழக்கம் பலரிடம் உள்ளது. அதுவும் "பெனடோல்' பலரிடமும் கைவசம் இருக்கும் தலைவலிக்கு வலி நிவாரணியாக விழங்கும் "பெய்ன்கில்லர்'எல்லாம், உடலுக்கு கேடானது. 40 வயதைத் தாண்டினால், நரம்புத் தளர்ச்சியில் கொண்டு போய் விட்டு விடும் என்பது பலருக்கு தெரிவதில்லை. அதிலும், "மைக்ரேன்' என்று சொல்லப் படும், ஒற்றைத் தலைவலி வந்து விட்டால் போதும், உயிரே போகும் அளவுக்கு வலி இருக்கும். அமெரிக்காவில், தலைவலி ஆராய்ச்சிக்காகவே, "தேசிய தலைவலி ஆராய்ச்சி பவுண் டேஷன்' என்ற அமைப்பு உள்ளது. தலைவலியைப் போக்க, பல ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட ஆய்வு முடிவுகளை வைத்து, பத்து எளிய வழிகளை இவ்வமைப்பு தொகுத்து வெளியிட்டுள்ளது. அவை என்ன தெரியுமா? * அமெரிக்காவில், "பீவர் பியூ' என்ற மூலிகை கிடைக்கிறது. ஒரு சில நாள் தொடர்ந்து அதை சாப்பிட்டு வந்தால், தலைவலி திரும்பியே பார்க்காது. நம்மிடம் சுக்கு முதல் ஏகப்பட்ட மூலிகைகள்...

Read More

ஆசிரியர் வகுப்பறைக்குள் நுழைந்தார். மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ப்ளரை எடுத்து தூக்கிக் காட்டினார். “இது எவ்வளவு வெயிட் இருக்கும்?” 100...

ஆசிரியர் வகுப்பறைக்குள் நுழைந்தார். மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ப்ளரை எடுத்து தூக்கிக் காட்டினார். “இது எவ்வளவு வெயிட் இருக்கும்?” 100 கிராம், 50 கிராம் என்று மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு எடையை சொன்னார்கள். “இதோட சரியான எடை எனக்கும் தெரியாது. ஆனா என்னோட கேள்வி அதுவல்ல” வாத்தியார் தொடர்ந்தார். “இதை அப்படியே நான் கையிலே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா என்ன ஆகும்?”  “ஒண்ணுமே ஆகாது சார்”  ”வெரிகுட். ஆனா ஒரு மணி நேரம் இப்படியே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா...?”  “உங்க கை வலிக்கும் சார்”  “ஒருநாள் முழுக்க இப்படியே வெச்சிருந்தேன்னா...”  “உங்க கை அப்படியே மரத்துடும் சார்”  “வெரி வெரி குட். ஒரு மணி நேரத்துலே என் கை வலிக்கறதுக்கும், ஒரு நாளிலே மரத்துப் போகிற அளவுக்கு மாறுறதுக்கு இந்த தம்ப்ளரோட வெயிட் கூடிக்கிட்டே போகுமா என்ன?”  “இல்லை சார். அது வந்து...”  “எனக்கு கை வலிக்காம, மரத்துடாம ஆகணும்னா நான் என்ன பண்ணனும்?”...

Read More

மரியாதை நிமித்தமாகவும், அன்பை வெளிப்படுத்துவதாகவும் மலர்களைக் கொடுப்பது உலகெங்கும் ஆண்டாண்டு கால வழக்கமாக உள்ளது. கொடுக்கும் மலர்களின் வண...

<
மரியாதை நிமித்தமாகவும், அன்பை வெளிப்படுத்துவதாகவும் மலர்களைக் கொடுப்பது உலகெங்கும் ஆண்டாண்டு கால வழக்கமாக உள்ளது. கொடுக்கும் மலர்களின் வண்ணம் ஒவ்வொன்றுக்கும் ஓர் அர்த்தம் உண்டு. உதாரணமாக, சிவப்பு மலர்கள் காதல், மரியாதை, நேசம், தைரியம் ஆகியவற்றையும்,  இளஞ்சிவப்பு வண்ண மலர்கள் முழுமையான மகிழ்ச்சி, நளினம், நன்றியுணர்வு அல்லது பாராட்டு ஆகியவற்றோடு நேசத்துக்கான விண்ணப்பமாகவும் கருதப்படுகின்றன. வெள்ளைநிறப் பூக்கள், கள்ளங்கபடமற்ற தன்மை, தூய்மை, ரகசியம் அல்லது மவுனம் ஆகியவற்றையும்,  பீச் அல்லது பவழ வண்ண மலர்கள் உற்சாகம், ஆசை, மகிழ்ச்சியான அடக்கம், வெட்கம் ஆகியவற்றையும் வெளிப்படுத்துகின்றன.  கருஞ்சிவப்பு வண்ணம், நேசத்தோடு கூடிய நம்பிக்கை, கற்பு ஆகியவற்றை அறிவிக்கிறது. விதவிதமான பூக்கள், அதைப் பெறுபவர் களுக்கு உரிய ஒரு தனியான செய்தியையும் வெளிப்படுத்துகின்றன.  ரோஜா மலர்கள், `நான் உன்னை விரும்புகிறேன் என்பதைத் தெரிந்துகொள்’ என்றும், கார்னேஷன் பூக்கள், `நீ அழகாக இருக்கிறாய், உன்னைப் பார்த்து நான் பெருமிதம் அடைகிறேன்’ என்றும்,  டபோடில்...

Read More

அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று தான் துண்டு. இத்தகைய துண்டை புதிதாக வாங்கி, ஒரு மாதத்திற்கு பின் பார்த்தால், அதனை எப்போது வாங்கின...

<
அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று தான் துண்டு. இத்தகைய துண்டை புதிதாக வாங்கி, ஒரு மாதத்திற்கு பின் பார்த்தால், அதனை எப்போது வாங்கினோம் என்று யோசிக்கும் வகையில் துண்டில் அழுக்கு மற்றும் கறையானது படிந்திருக்கும். இத்தகைய துண்டானது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதிலும் உடலை துடைக்கப் பயன்படுத்தும் துண்டாகட்டும் அல்லது சமையலறையை சுத்தம் செய்ய பயன்படும் துண்டு ஆகட்டும், எதுவானாலும், இவற்றில் படியும் கறைகள் மற்றும் அழுக்குகளைப் போக்குவது என்பது கடினமான ஒன்று. அதிலும் அத்தகைய கறைகளைப் போக்க பெரும்பாலானோர் பின்பற்றும் ஒரு செயல் தான், சுடு தண்ணீரில் துண்டை ஊற வைத்து, சோப்பு போட்டு பிரஷ் கொண்டு தேய்த்து துவைப்பது. இருப்பினும், சில நேரங்களில் துண்டில் உள்ள கறைகள் அவ்வளவு எளிதில் நீங்காமல் இருக்கும். அதுமட்டுமின்றி, இவ்வாறு தேய்ப்பதால் துண்டில் இருந்து நூலானது வெளிவர ஆரம்பிக்கும். ஆகவே துண்டு பாழாகாமல் இருக்கவும், துண்டில் உள்ள கறைகளை எளிதில்...

Read More

  பொதுவாக நாம் சமைக்க பயன்படும், சமைத்த பொருட்களை பிரிட்ஜில் வைத்து பல நாட்களுக்கு பாதுகாக்கிறோம். ஆனால், சில பொருட்களை பிரிட்ஜ் எனப்ப...

<
  பொதுவாக நாம் சமைக்க பயன்படும், சமைத்த பொருட்களை பிரிட்ஜில் வைத்து பல நாட்களுக்கு பாதுகாக்கிறோம். ஆனால், சில பொருட்களை பிரிட்ஜ் எனப்படும் குளிர்பதனப் பெட்டியில் வைக்கக் கூடாது. வைக்கக் கூடாது மட்டும் அல்ல, வைக்கவேக் கூடாது என்றும் சொல்லலாம். அது போன்ற போருட்களின் பட்டியலை பார்க்கலாம். வெங்காயம் வெங்காயம் பொதுவாக காற்றோட்டமான சூழ்நிலையில் இருக்க வேண்டும். பாலீதீன் பையில் அடைத்து விற்கப்படும் வெங்காயத்தையும் நான் வாங்கி வீட்டுக்கு கொண்டு வந்த பிறகு அதனை காற்றோட்டமாக வைக்க வேண்டும். பூண்டு பூண்டை எப்போதுமே பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அப்படி வைத்தால் அது பூரணம் பிடிக்க ஆரம்பித்துவிடும். அதனை காற்றோட்டமான சூழலில் வைக்க வேண்டும். பூண்டுகளை வாங்கி வந்ததும், அதனை தனித்தனி பல்லாக பிரித்து எடுத்து வைக்கலாம். உருளைக் கிழங்கு உருளைக் கிழங்குகளை பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அதுபோலவே அதனை கழுவியும் எடுத்து வைக்கக் கூடாது. உருளைக் கிழங்குகளில் பச்சை...

Read More

வாயை சுத்தமாக வைத்துக் கொள்ளவும், பிளேக்கை அகற்றவும் தினசரி பல் துலக்குவது அவசியம். வாயின் சுகாதாரத்தைப் பேணுவதற்கு டூத் பிரஷை சரியான ...

வாயை சுத்தமாக வைத்துக் கொள்ளவும், பிளேக்கை அகற்றவும் தினசரி பல் துலக்குவது அவசியம். வாயின் சுகாதாரத்தைப் பேணுவதற்கு டூத் பிரஷை சரியான முறையில் பராமரிப்பது மிகவும் அவசியம். மேலும் 3-4 மாதங்களுக்கு ஒரு முறை அல்லது பிரிஸில்கள் தேய ஆரம்பித்தவுடன் டூத் பிரஷை மாற்றுவது அவசியம் என்று டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள். அதுமட்டுமின்றி, உங்கள் டூத் பிரஷ், கிருமிகளின் பண்ணையாக இருக்கிறது என்று இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அதிலும் மூடி வைக்கப்படாத ஒரு டூத் பிரஷில் 100 மில்லியன் பாக்டீரியாக்கள் வசிக்கின்றன. வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும் ஈ-கோலி பாக்டீரியாவும், தோல் தொற்று நோயை ஏற்படுத்தும் ஸ்டாபில்கோலி பாக்டீரியாவும் இதில் அடங்கும். உங்கள் டூத் பிரஷில் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருப்பது என்ன தெரியுமா? ஏராளமான கிருமிகளின் பண்ணையே அதற்குள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். மூடி வைக்கப்படாத ஒரு டூத்பிரஷில் 100 மில்லியன் பாக்டீரியாக்கள் வசிக்கின்றன. வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும்...

Read More

ஆப்பிள் நிறுவனம் என்றாலே ஐபோன், ஐபேட், ஐமேக், ஸ்டீவ் ஜாப்ஸ் என்று நினைக்காதீர்கள். ஆப்பிள் நிறுவனம் பற்றி உங்களுக்கு தெரிந்திராத பல விஷயங...

ஆப்பிள் நிறுவனம் என்றாலே ஐபோன், ஐபேட், ஐமேக், ஸ்டீவ் ஜாப்ஸ் என்று நினைக்காதீர்கள். ஆப்பிள் நிறுவனம் பற்றி உங்களுக்கு தெரிந்திராத பல விஷயங்கள் இருக்கின்றது. அந்த வகையில் ஆப்பிள் நிறுவனம் குறித்து நீங்கள் அறிந்திராத சில வியப்பூட்டும் விஷயங்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்... ஆப்பிள் நிறுவனத்தின் காலாண்டு லாபம் ஐபோன்களில் இருந்து மட்டும் சுமார் 51.2 பில்லியன் டாலர்கள், இது யாஹூவின் மொத்த லாபத்தை விட அதிகம் ஆகும். யாஹூ நிறுவனத்தின் மொத்த லாபம் சுமார் 45.5 பில்லியன் டாலர்கள் தான். ஆப்பிள் ஐபோன் காலாண்டு லாபம் கூகுளின் மொத்த வருமானத்தை விட மூன்று மடங்கு அதிகமாக இருக்கின்றது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தை விட ஆப்பிளின் ஐபோன் காலாண்டு லாபம் இரு மடங்கு அதிகமாகும். மைக்ரோசாப்ட் நோக்கியாவை விட ஆப்பிள் 7 மடங்கு அதிக போன்களை விற்றுள்ளது. 2011 ஆம் நிதி ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் சுமார் 74.5...

Read More

பல மாதங்கள் முன்பு நடிகர் விஜயகாந்த் உடல்நிலை மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கிட்டத்தட்ட ஒரு மாதகால சிகிச்சைக்கு பிறக...

பல மாதங்கள் முன்பு நடிகர் விஜயகாந்த் உடல்நிலை மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கிட்டத்தட்ட ஒரு மாதகால சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார்.இந்நிலையில் விஜயகாந்த் இன்னும் ஒரு வாரத்தில் சிங்கப்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் இன்னும் ஒரு வாரத்திற்குள் அட்மிட் ஆகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது."விஜயகாந்த் ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனைக்காக செல்வது வழக்கம். அதேப்போல இந்த ஆண்டும் மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூரிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு ஒருவாரத்துக்குள் செல்லவுள்ளார்" என தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.இந்நிலையில் நடிகர் சங்க தலைவர் நாசர் மற்றும் நிர்வாகிகள் இன்று விஜயகாந்தை நேரில் சந்தித்துள்ளனர். ...

Read More

நடிகர் பிரகாஷ்ராஜ் தற்போது மோடி மற்றும் மத்திய அரசை வெளிப்படையாகவே விமர்சித்து வருகிறார். இந்நிலையில் மைசூர் எம்.பி Pratap Simha சமீபத்தில்...

<
நடிகர் பிரகாஷ்ராஜ் தற்போது மோடி மற்றும் மத்திய அரசை வெளிப்படையாகவே விமர்சித்து வருகிறார். இந்நிலையில் மைசூர் எம்.பி Pratap Simha சமீபத்தில் ட்விட்டரில் பிரகாஷ் ராஜை விமர்சித்திருந்தார்."மகன் இறந்த துக்கம் இல்லாமல், மனைவியை விட்டுவிட்டு டான்சர் பின்னால் ஓடிய நீ மோடி/யோகி யை விமர்சிக்கலாமா" என கூறியிருந்தார்.இதற்காக பிரகாஷ் ராஜ் தற்போது அவருக்கு லீகல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். "என்னை ட்ரோல் செய்பவர்கள் சமூக வலைத்தளங்களில் முகமூடிக்கு பின்னால் ஒளிந்துகொண்டிருப்பவர்கள்.ஆனால் இப்போதெல்லாம் பெரிய பதவியில் இருப்பவர்களே வெளிப்படையாக ட்ரோல் செய்கின்றனர். அதனால் மன்னிப்பு கோரும்படி சட்டபூர்வமாக நோட்டீஸ் அனுப்பியுள்ளேன்" என பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார். ...

Read More

சமீபகாலமாக இணையத்தில் அதிகமாகப் பார்க்க முடிந்த சொல் “பிட்காயின்”. இது ஒரு டிஜிட்டல் கரன்ஸி என்பதால் நிஜ உலகில் இருப்பதை விட, விர்ச்சுவல் உ...

<
சமீபகாலமாக இணையத்தில் அதிகமாகப் பார்க்க முடிந்த சொல் “பிட்காயின்”. இது ஒரு டிஜிட்டல் கரன்ஸி என்பதால் நிஜ உலகில் இருப்பதை விட, விர்ச்சுவல் உலகில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது. “எதிர்காலம் இவைதான். நிஜ கரன்ஸிகளை விட இவை பலம் வாய்ந்தவை” என்கிறார் பில் கேட்ஸ். இன்றைய தேதியில் ஒரு பிட்காயினின் மதிப்பு 7000 அமெரிக்க டாலர்கள். இந்திய ரூபாயில் 4,80,000. 2016ல் இதன் மதிப்பு 60,000 மட்டும்தான். ஒரே ஆண்டில் 8 மடங்கு முன்னேற்றம்.அடிப்படையில் டிஜிட்டல் கரன்ஸிக்கும் பிட்காயின் போன்ற க்ரிப்டோகரன்ஸிக்கும் வித்தியாசம் உண்டு. இந்தியா கூடத்தான் டிஜிட்டல் கரன்ஸிக்கு மாறிவிட்டது என நினைக்க வேண்டாம். அது நிஜ கரன்ஸியின் டிஜிட்டல் வடிவம். அதாவது, 100 ரூபாய் நோட்டை கையில் எடுத்துச் செல்லாமல் டிஜிட்டலாக பரிவர்த்தனை செய்கிறோம். ஆனால், 100 ரூபாய் என்பது தாளாலான நோட்டுதான். ஆனால், க்ரிப்டோகரன்ஸி எனப்படுபவை முழுமையான டிஜிட்டல் கரன்ஸி. அவை டிஜிட்டலாக...

Read More

தமிழக அரசின்  ஆவின் பால் கடல் கடந்து இன்று சிங்கப்பூரில் விற்பனையை தொடங்கி, அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சி நேற்ற...

தமிழக அரசின்  ஆவின் பால் கடல் கடந்து இன்று சிங்கப்பூரில் விற்பனையை தொடங்கி, அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சி நேற்று சிங்கப்பூரில் நடந்தது. இந்த முயற்சியில் முழு மூச்சில் ஈடுபட்டு சாதித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு பல்வேறு தளங்களிலிருந்தும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளன.இது ஒருபுறமிருக்க, உணவு பாதுகாப்பு அலுவலர் ஒருவர், அதிகாலையில் எழுந்து பால் வியாபாரிகளை வழிநிறுத்தி, அவர்கள் விற்பனைக்கு கொண்டு செல்லும் பாலின் தரத்தை ஆய்வு செய்து வருகிறார். இவரின் பணியை மக்கள் வெகுவாக பாராட்டுகிறார்கள்.‎புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பேரூராட்சியில் பணிபுரியும் உணவு பாதுகாப்பு அலுவலர் ராமநாதன், இவர் தனது ஆய்வுப் பணிகளை அதிகாலையில் ஆரம்பித்துவிடுகிறார். ஆலங்குடி அதைச் சுற்றியுள்ள பகுதியில் உள்ள மக்கள் இன்னமும் அன்றாடம் கறக்கப்படும் கறவைப் பாலைத்தான் தங்களது தேவைகளுக்குப் பயன்படுத்தி வருகின்றனர்.‎இதனால்,பெரிய கேன்களில் பால்பண்ணையிலிருந்து கறக்கப்படும் பாலை சேகரித்து, விற்பனை செய்யும் வியாபாரிகள் ஆலங்குடி பகுதியில் அதிகமாக...

Read More

 தொண்டையில் சளி உண்டாவதையும், அதனால் ஏற்படும் தொந்தரவுகளையும் பெரும்பாலானோர் அனுபவித்திருப்போம். அதிலும் தொண்டையில் சளி இருந்தால் மூச...

<
 தொண்டையில் சளி உண்டாவதையும், அதனால் ஏற்படும் தொந்தரவுகளையும் பெரும்பாலானோர் அனுபவித்திருப்போம். அதிலும் தொண்டையில் சளி இருந்தால் மூச்சு விடவே சிரமமாக இருக்கும். சுவாசமானது இயல்பாக இல்லையென்றால் அன்றாட தேவைகள் பூர்த்தி செய்யப்படாமல் இருக்கும். ஆவி பிடித்தல்  தொண்டை சளி இறுகி இருந்தால், அப்போது சூடான நீரில் ஆவி பிடித்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும். தண்ணீர்  கபம் மற்றும் சளியை தளர்த்த வேண்டுமெனில், தினமும் குறைந்தது எட்டு டம்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும். இது உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. சுத்தமான மூக்கு  தொண்டையில் சளி தேங்காமல் இருக்க, மூக்கினை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். உப்புத் தண்ணீர்  சளி இருக்கும் போது வெதுவெதுப்பான தண்ணீருடன் உப்பைச் சேர்த்து அடிக்கடி வாய் கொப்பளிக்க வேண்டும். இதனால் தொண்டையில் உள்ள கிருமிகள் அழிந்து, தொண்டை கரகரப்பு நீங்கும். யூகலிப்டஸ் எண்ணெய்  கபத்தைத் தளர்த்தவும் மற்றும் சளியின் இறுக்கத்தை போக்கவும், சிறிது யூகலிப்டஸ்...

Read More

23 முறை கேட்ட கேள்வி:- வசதியான வீடு ஒன்றின் வரவேற்பறை அது! 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில...

23 முறை கேட்ட கேள்வி:- வசதியான வீடு ஒன்றின் வரவேற்பறை அது! 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். மூதாட்டியான அவரது மனைவி அவருக்கருகில் அமர்ந்து தனது இடுங்கியக் கண்களால் திருமறையை ஓதிக் கொண்டிருக்கிறார். நன்கு படித்து, பெரிய பதவியில் இருக்கும் 45 வயதுடைய அவர்களின் மகனும் தனது லேப்-டாப்பில் ஏதோ வேலை செய்துக் கொண்டிருக்கிறார். திடீரென ஒரு காகம் முதியவரின் அருகிலிருந்த சன்னலில் வந்து அமர்ந்தது. “என்ன இது?” என்று கேட்டார் முதியவர். லேப்-டாப்பிலிருந்து கண்களை விளக்கிய மகன் சொன்னார், “அது ஒரு காகம்” சில நிமிடங்கள் கழிந்தன. அந்த முதியவர் மீண்டும் கேட்டார், “என்ன இது?” “இப்பத்தானே சொன்னேன், அது ஒரு காகம்” என்றார் மகன். சிறிது நேரம் கழித்து மூன்றாம் முறையாக அந்த முதியவர் தன் மகனிடம் கேட்டார், “என்ன இது?” சற்று எரிச்சலான குரலில் மகன் பதிலளித்தார்,...

Read More

உலகம் போற்ற ஆட்சி செய்த இராஜராஜனின் ஆட்சி அமைப்பு..! இதில் ஆட்சி முறை அமைப்பும், இன்று மாவட்டங்கள் இருப்பது போன்று அன்று எப்படி மண்...

உலகம் போற்ற ஆட்சி செய்த இராஜராஜனின் ஆட்சி அமைப்பு..! இதில் ஆட்சி முறை அமைப்பும், இன்று மாவட்டங்கள் இருப்பது போன்று அன்று எப்படி மண்டலங்களாக ஆட்சிப் பிரிவுகள் இருந்தன என்பதும், ஆட்சிக்கு உறுதுணையாக இருந்த அலுவலர்களைப் பற்றியும் அறிந்துகொள்வோம். 1. இராஜராஜன் காலத்து நாட்டுப் பிரிவு - மண்டலங்கள். 2. அதிராசராச மண்டலம் (சேலம் மாவட்ட்த் தென்பகுதி - கோவை - திருச்சி மாவட்டங்கள்). 3. இராசராசப் பாண்டி மண்டலம் (மதுரை - இராமநாதபுரம் - திருநெல்வேலி மாவட்டங்கள்). 4. செயங்கொண்ட சோழ மண்டலம் (தென்னார்க்காடு - செங்கற்பட்டு - வடவார்க்காடு - சித்னர் மாவட்டங்கள்). 5. சோழ மண்டலம் (தஞ்சாவூர் மாவட்டம் - திருச்சி மாவட்ட கிழக்குப் பகுதி). 6. நிகரிலி சோழ மண்டலம் (மைவரின் தென்பகுதி - பெல்லாரி மாவட்டம்). 7. மலை மண்டலம் (திருவாங்கூர் - கொச்சி உள்ளடங்கிய சேரநாட்டு மேற்கு கடற்கரைப் பகுதி)....

Read More

அஜீத்தை கடவுளாக பார்க்கும் ரசிகர்களால் கூட, விவேகம் படத்தை ஓட வைக்க முடியவில்லை. கூட்டிக் கழித்து கணக்கு போட்டு பார்த்தால், அவ்வளவும் அன்பு...

<
அஜீத்தை கடவுளாக பார்க்கும் ரசிகர்களால் கூட, விவேகம் படத்தை ஓட வைக்க முடியவில்லை. கூட்டிக் கழித்து கணக்கு போட்டு பார்த்தால், அவ்வளவும் அன்புச்செழியனின் வட்டிக்கு கூட தேறாத அளவுக்குதான் வசூல்! இருந்தாலும் படம் வெளிவந்த ஒரு வாரம் வரைக்கும் இந்திய திரையுலக சரித்திரத்தையே புரட்டிப் போட்ட படம் விவேகம் என்றெல்லாம் கூறி வந்தனர் ரசிகர்கள். ஆசை வேறு. நிஜம் வேறு என்பதை உணர்த்துகிற அறிவிப்புகளில் ஒன்றுதான் விசுவாசம்.அதே சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திற்கு நஷ்டத்தை சரி செய்யும் விதத்தில் கால்ஷீட் கொடுத்திருக்கிறார் அஜீத். இந்த புதிய படத்தின் தலைப்புதான் விசுவாசம். கடந்த சில வாரங்களாக சினிமா பிரமுகர்களே கூட தனியார் தொலைக்காட்சி விவாதங்களில் விவேகம் நஷ்டம் என்று சொல்லி வருவதும் அதை சத்யஜோதி தியாகராஜன் கண்டு கொள்ளாமலிருப்பதும் சில பல விஷயங்களை மவுனமாக அறிவித்து வருகிறது.இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். தன் படங்கள் வரும்போதெல்லாம் அப்படத்தின் தலைப்பை அறிவிக்கவே மாதக்...

Read More

விலைமதிக்க முடியாத பொக்கிஷத்தைத் தேடி, கரடி, கழுதைப்புலி, காண்டாமிருகமெல்லாம் வாழும் அடர்ந்த காட்டுக்குள் ஐந்து பேர் சாகசப் பயணம் செல்லும் ...

விலைமதிக்க முடியாத பொக்கிஷத்தைத் தேடி, கரடி, கழுதைப்புலி, காண்டாமிருகமெல்லாம் வாழும் அடர்ந்த காட்டுக்குள் ஐந்து பேர் சாகசப் பயணம் செல்லும் அதே இந்தியானா ஜோன்ஸின் இந்தியன் வெர்ஷன்தான் இந்திரஜித். இந்தியானா ஜோன்ஸ் - இந்திரஜித். டைட்டிலுக்கான காரணம் புரியுதா மக்களே...பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சூரியனிலிருந்து ஒரு துகள் பிரிந்து, பூமியை வந்து சேர்கிறது. பொதுவாக விண்கல் விழும் இடங்களில் புல், பூண்டுகூட முளைக்காது என்றுதான் ஹாலிவுட்காரர்கள் பயமுறுத்துவார்கள். ஆனால், இந்தப் படத்தில் விண்கலம் விழும் இடத்தில் புல், பூண்டு மட்டுமல்ல பூவெல்லாம் மலர்கிறது. அந்த அளவுக்கு பாஸிட்டிவ் பவர் கொண்ட அற்புதமான, ஆச்சரியமான, அதிசயமான கல். அதன் மருத்துவ சக்தியைச் சரியாகப் பயன்படுத்தினால், இப்போதுள்ள இந்தியாவை அடுத்துவரும் 400 ஆண்டுகளுக்கு நோய்-ஃப்ரீ நாடாக மாற்றலாம். எனவே, அதைத் தேடிக் கண்டுபிடித்து நாட்டின் சேவைக்காகப் பயன்படுத்த ஒரு ஹீரோ குழுவும் தனது தேவைக்காக பயன்படுத்த வில்லன் குழுவும் மூட்டை...

Read More

பாரதிராஜா காலத்திலிருந்தே கிராமத்துக் கதையை மண்வாசனையோடு முதல் படத்தை எடுக்க வேண்டும் என்ற ஆசை கோலிவுட்டின் பெரும்பான்மை உதவி இயக்குநர்களுக...

பாரதிராஜா காலத்திலிருந்தே கிராமத்துக் கதையை மண்வாசனையோடு முதல் படத்தை எடுக்க வேண்டும் என்ற ஆசை கோலிவுட்டின் பெரும்பான்மை உதவி இயக்குநர்களுக்கு உண்டு. அந்தவகையில் தஞ்சை மண்ணையும் மக்களையும் மையப்படுத்தி 'வீரையன்' திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் படத்தின் இயக்குநர் பரீத். அந்த முயற்சி எந்தளவுக்கு வொர்க் அவுட் ஆகியிருக்கிறது?தன் சொத்துகளை எல்லாம் இழந்து தம்பிகளைப் படிக்க வைக்கிறார் 'வீரையன்' ஆடுகளம் நரேன். படித்தத் திமிரில் அண்ணனை மதிக்காமல் தம்பிகள் முறைக்க, 'உங்களைவிட பெரியாளா என் பையனை மாத்திக் காட்டுறேன்டா' எனச் சவால்விட்டு பையனைப் படிக்க வைக்கிறார். இன்னொருபுறம் ஊருக்குள் சின்னச் சின்ன திருட்டுகளைச் செய்து அடிவாங்கித் திரிகிற இனிகோ பிரபாகர், 'கயல்' வின்சென்ட், ப்ரீத்திஷா கூட்டணி. அப்படி அடிப்பவர்களில் வேல.ராமமூர்த்தியின் வீட்டு டிரைவரும் ஒருவர். பதிலுக்குப் பழிவாங்க அந்த டிரைவரும் ஊர்ப்பெரியவரான வேல.ராமமூர்த்தியின் மகளும் ஓடிப்போக இருக்கும் விஷயத்தைச் சபையில் சொல்லிவிடுகிறார்கள் இந்த மூவரும். அவமானத்தில் வேல.ராமமூர்த்தியின் மகள் தூக்கில் தொங்க,...

Read More

சென்னை, தி.நகரிலுள்ள சர் பிட்டி.தியாகராய ஹாலில் `அறம்', `விழித்திரு', `ஜோக்கர்' படங்களின் இயக்குநர்கள் கோபி நயினார், மீரா கதிரவ...

அபூர்வ விண்கல் ஒன்றை தேடிச் செல்லும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் இடைவிடாத பயணமே 'இந்திரஜித்'! மத்திய தொல்லியல் ஆராய்ச்சித் துறை ...

அபூர்வ விண்கல் ஒன்றை தேடிச் செல்லும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் இடைவிடாத பயணமே 'இந்திரஜித்'!மத்திய தொல்லியல் ஆராய்ச்சித் துறை இயக்குநராக இருந்த சச்சின் கடேகர் அதற்குப் பிறகு பேராசிரியராகத் தன் பணியைத் தொடங்குகிறார். சில மாணவர்கள் உதவியுடன் அபூர்வமும், அதிசயமும் உள்ள விண்கல் ஒன்றைத் தேடும் முயற்சியில் ஈடுபடுகிறார். இதை அறிந்துகொள்ளும் தொல்லியல் துறை இயக்குநர் சுதான்ஷு பாண்டே அதற்குத் தடையாக இருக்கிறார். இந்நிலையில் சச்சினின் மாணவர் குழுவில் கவுதம் கார்த்திக் இணைகிறார். விண்கல் இருக்கும் இடத்தை எப்படி கண்டறிகிறார்கள், விண்கல்லை தேடிச் செல்வதற்கான இலக்கு என்ன, அந்தப் பயணத்தில் யாருக்கு என்ன நேர்கிறது, அதற்குப் பிறகான விளைவுகள் என்ன என்பது மீதிக் கதை.'சக்கரகட்டி' தந்த இயக்குநர் கலாபிரபு நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'இந்திரஜித்' மூலம் களம் இறங்கியிருக்கிறார். விண்கல் தொடர்பான அந்த கதையின் முடிச்சு சுவாரசியம் மிகுந்தது. ஆனால், அதை முழுமையாக ரசிகர்களுக்குக் கடத்துவதில் இயக்குநர் தவறியிருக்கிறார்.கவுதம் கார்த்திக்...

Read More

“அய்யோ! அவர் அப்படித்தான்… நீங்கள் அவருடையதைப் பிடுங்கிக்கொண்டு ஆர்ப்பரிக்கலாம்; ஆனால், அடுத்த ஆராய்ச்சிக்குச் செல்ல அவர் தயங்கியதேயில்லை.....

<
“அய்யோ! அவர் அப்படித்தான்…நீங்கள் அவருடையதைப் பிடுங்கிக்கொண்டு ஆர்ப்பரிக்கலாம்;ஆனால், அடுத்த ஆராய்ச்சிக்குச் செல்ல அவர் தயங்கியதேயில்லை... கலகக்கார கலைஞனிடம் பஞ்சம் ஏது..?” - தமிழ்த் திரைக்களத்தில் ‘அறம்’ விதைத்திருக்கிற இயக்குநர் கோபி நயினார் பற்றி அவர் மகன் எழுதியிருந்த வரிகள் இவை. நம்மிடம் அந்தக் ‘கலகக்கார கலைஞன்’ பேசியபின்புதான் தெரிந்தது அவர் மனதில் அடக்கிவைத்துள்ளவற்றில் ஒரு துளிதான் ‘அறம்’ திரைப்படமாக வெளிவந்திருக்கிறது. தற்கால அரசியல் முதல் தண்ணீர் அரசியல் வரை அலசுகிறார்...தாக்கத்தை ஏற்படுத்திய ‘நண்டு’!“என்னுடைய சிறுவயது மாலை நேரங்கள் முழுவதும் இடதுசாரிகள் வகுப்புகளில்தான் கழிந்தன. எட்டாவது படிக்கும்போது என் கைகளில் கொடுக்கப்பட்ட ‘சிலந்தியும் - ஈயும்’, ‘தாய்’, ‘உலகைக் குலுக்கிய பத்து நாள்கள்’ போன்ற இடதுசாரி இலக்கியங்கள் ஏற்படுத்தியத் தாக்கங்கள்தான் இன்றளவும் என்னுள் எரிந்துகொண்டிருக்கிறது. ஒரு சிறந்த ஜனநாயகத்தைக் கலைகள்தான் பேசும் என்பதைப் புரிந்துகொண்ட வயது அது. கிராமங்களில் அரசு வைத்திருக்கும் டி.வி-யில் நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்காகப் பக்கத்து ஊர்களுக்குப் பறப்போம்....

Read More

சர்க்கரை நோய் பரம்பரை வியாதியா? ஆம். பெற்றோர் இருவருக்கும் சர்க்கரை நோய் இருந்தால், குழந்தைகளுக்கு வரும் வாய்ப்பு 80 சதவீதம் உண்டு....

சர்க்கரை நோய் பரம்பரை வியாதியா? ஆம். பெற்றோர் இருவருக்கும் சர்க்கரை நோய் இருந்தால், குழந்தைகளுக்கு வரும் வாய்ப்பு 80 சதவீதம் உண்டு. பெற்றோரில் ஒருவருக்கு இருந்தால் 50 சதவீத வாய்ப்பு உண்டு. பெற்றோருக்கு சர்க்கரை நோய் ஏற்பட்ட வயதில் இருந்து 5 முதல் 10 ஆண்டுகள் முன்பாகவே குழந்தைகளுக்கு வந்து விடுகிறது. சர்க்கரை நோயின் அறிகுறிகள் என்ன? அதிக சிறுநீர்ப் போக்கு. அதிக தாகம் மற்றும் பசி. மூன்று மாதங்களில் முன்பு இருந்த எடையில் இருந்து 10 சதவீதம் வரை, உடல் எடை இழப்பு. ஆறாத புண், அதிக தூக்கம், பாத எரிச்சல். அத்துடன் கை, கால் குடைச்சல், இடுப்பு வலி, நெஞ்சுவலி, பல்வலி, பல்வேர் வீக்கம், பல்லில் ரத்தக்கசிவு, தலைவலி, வலிப்பு நோய், தோள்பட்டை வலி, ஆண் உறுப்பில் தோல் வெடிப்பு, வெள்ளைப்படுதல், படர்தாமரை, அதிக வியர்வை, குதிங்காலில் வலி, முழங்கை வலி, காது நரம்பு பாதிப்பு...

Read More

சமையலை எளிதாக்க இல்லத்தரசிகளுக்கு சில டிப்ஸ். * அரிசியை நன்கு ஊறவைத்து பின் வேகவைத்தால் சீக்கிரமாக வேகும். * இட்லி, இடியாப்பம், புட...

<
சமையலை எளிதாக்க இல்லத்தரசிகளுக்கு சில டிப்ஸ். * அரிசியை நன்கு ஊறவைத்து பின் வேகவைத்தால் சீக்கிரமாக வேகும். * இட்லி, இடியாப்பம், புட்டு எண்ணையில்லாச் சப்பாத்தி ஆகியவற்றிற்கு முதலிடம் கொடுப்பது உடலுக்கு நல்லது. * ஒரு நேரத்திற்கு ஒரே வகைக் காய் நல்லது. * கீரை வகைகளை, அரை வேக்காட்டில் இறக்க வேண்டும். * எண்ணெய்விட்டு தாளித்து பின் காய்களை வேக வைத்து பொரியல் செய்வது வழக்கம். அதற்குப் பதிலாக தேவையான அளவு தண்ணீர் மட்டுமே விட்டு காய்களையும் மசாலாச் சாமான்களையும் சேர்த்து வேகவேகக் கிளற வேண்டும். பச்சை நிறம் மாறும் முன்பே தேங்காய்த்துருவலை வேண்டிய அளவு சேர்த்து கிளறி இறக்கிவிட வேண்டும், தேங்காயை வேகவிடக் கூடாது. * குழம்புச் சாதத்தை குறைத்து மோர்சாதத்தைக் கூட்ட வேண்டும். * காரம், புளி, உப்பு மிகக் கெடுதல் குறைத்து கொள்வது நல்லது. * தேங்காய் வெந்தால் கொழுப்புக் கூடும். பச்சையாக...

Read More

கோடம்பாக்கத்தின் குபேர வங்கிதான் பைனான்சியர் அன்புச்செழியன். அவர் கதவை மூடிவிட்டால் அவ்வளவுதான்… தமிழ் திரையுலகமே காலி. இந்த நிஜத்தை வேறு வ...

<
கோடம்பாக்கத்தின் குபேர வங்கிதான் பைனான்சியர் அன்புச்செழியன். அவர் கதவை மூடிவிட்டால் அவ்வளவுதான்… தமிழ் திரையுலகமே காலி. இந்த நிஜத்தை வேறு வேறு வார்த்தைகளால் ஒலிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் தமிழ்சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்கள் பலர். ‘நான் வாங்குனேன். நல்லாயிருக்கேன். அப்ப நீங்க?’ என்று விளம்பரத்தில் வரும் அப்பாஸ்கள் போல இவர்கள் வரிசை கட்டி பேசுவது வேடிக்கையாக இருந்தாலும், அவரவர்கள் வாயால் வருகிற கமென்ட்டுகள் எதுவும் புறக்கணிக்க தகுந்ததல்ல. விஜய் ஆன்ட்டனி, சுந்தர்சி, தேவயானி, சீனு ராமசாமி, லிங்கா புகழ் சிங்காரவேலன், இன்னும் நாளைக்கும் அதற்கு மறுநாளும் ஆடியோவை வெளியிடப் போகிற அன்பு உள்ளங்கள் என அத்தனை பேரும் சொல்லி வைத்தார் போல, ‘அன்பண்ணன் போல வருமா?’ என்றே பேசுகிறார்கள். பேசப்போகிறார்கள்.இதெல்லாம் எதற்கு? அன்புச்செழியனை அரக்கன் என்று வர்ணிக்கும் இன்னொரு கோஷ்டியால் அவரது இமேஜ் இறங்கிவிடக் கூடாதே என்பதற்காக. அதைவிட முக்கியம் காவல்துறை அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன் இத்தகைய ஆடியோக்கள்...

Read More

நடிகை அமலா பால் சமீபத்தில் சொகுசு கார் வாங்கியதில் கேரள அரசுக்கு முறையாக வரி செலுத்தவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. குறைவான வரிக்காக பாண்...

நடிகை அமலா பால் சமீபத்தில் சொகுசு கார் வாங்கியதில் கேரள அரசுக்கு முறையாக வரி செலுத்தவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. குறைவான வரிக்காக பாண்டிச்சேரியில் உள்ள ஒரு முகவரி கொடுத்து கார் வாங்கியது அம்பலமானது. இது குறித்து அவரும் அதை மறுத்து கருத்து வெளியிட்டிருந்தார்.ஆனால் தற்போது போலிஸ் விசாரணையில் துப்பு துலங்கியுள்ளது. இதில் பாண்டிச்சேரி முகவரியில் அவர் வீடு எடுத்தது உண்மை தானாம். வீட்டின் மூன்றாம் மாடியில் வெறும் ஒரே ஒரு அறை மட்டுமே கொண்டதாம்.இதற்கு அக்ரிமென்ட் போடப்பட்டுள்ளது என கூறிய அந்த வீட்டின் உரிமையாளர் போலிஸாரிடம் அதற்கான ஆவணங்கள் எதையும் கொடுக்கவில்லையாம். ...

Read More

சினிமாவில் கவர்ச்சிக்கும் இடம் கொடுக்கப்படும். இது படத்திற்கு ஒரு மசாலா போல கொடுக்கப்பட்டாலும் சில நேரங்களில் அது படத்தில் பெரிய தாக்கத்தை ...

சினிமாவில் கவர்ச்சிக்கும் இடம் கொடுக்கப்படும். இது படத்திற்கு ஒரு மசாலா போல கொடுக்கப்பட்டாலும் சில நேரங்களில் அது படத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் கவர்ச்சியை கதையாக வைத்து ராய் லட்சுமி நடிப்பில் ஜூலி 2 ஹிந்தியில் எடுக்கப்பட்டு தமிழில் டப்பாகி வந்துள்ளது. வந்துள்ளது. சரி இந்த ஜூலி எப்படிப்பட்டவள் என்பதை பார்ப்போம். கதைக்களம் நடிகை ராய் லட்சுமி தான் இப்படத்தின் ஹீரோவும், ஹீரோயினியும். ஒரு ஹீரோயினை மையப்படுத்திய படம் வந்துள்ளது ஜூலி 2. இவர் பிறப்பிலேயே சந்தேகம் எழுகிறது. அம்மா இரண்டாவது திருமணம் செய்து வாழ அந்த சித்தப்பாவால் இன்னல்களுக்கு ஆளாகிறார் அவர். வீட்டை விட்டு விரட்டப்படும் நிலைக்கு தள்ளப்படும் ஜூலி ஒரு பெண்ணிடம் அடைக்கலம் புகுந்து விடுகிறார். சினிமாவில் நடிக்க வேண்டும் என ஏகப்பட்ட கனவு. ஆசை அதற்கான பல முயற்சிகளை எடுக்க வைத்துள்ளது. ஆனால் வாய்ப்பு கிடைக்கும் வேளையில் சினிமாவில் இருக்கும் சில காமுகர்களிடம்...

Read More

கௌதம் கார்த்திக் ஆரம்ப காலத்தில் தவறான படங்களின் தேர்வினால் மிகவும் தடுமாறினார். பின் அதை சுதாரித்துக்கொண்டு ரங்கூன், இவன் தந்திரன், ஹரஹர ம...

கௌதம் கார்த்திக் ஆரம்ப காலத்தில் தவறான படங்களின் தேர்வினால் மிகவும் தடுமாறினார். பின் அதை சுதாரித்துக்கொண்டு ரங்கூன், இவன் தந்திரன், ஹரஹர மஹாதேவகி என தொடர் ஹிட் படங்களை கொடுத்து தனக்கென்று ஒரு பெயரை சம்பாதித்துவிட்டார். தற்போது இந்திரஜித் மூலம் அந்த பெயரை தக்க வைத்தாரா? பார்ப்போம்.கதைக்களம்தமிழ் சினிமாவின் அட்வென்ஜர்ஸ் கதைகள் வருவது அரிதிலும் அரிது. ஹாலிவுட்டில் புதையலை தேடும் இண்டியானா ஜோன்ஸ் வகை படங்கள் பலவற்றை பார்த்திருப்போம். அதேபோல் தமிழில் எடுக்க முயற்சித்துள்ள படம் தான் இந்திரஜித்.பல ஆயிரம் வருடங்களுக்கு முன் சூரியனில் இருந்து ஒரு துகள் வெடித்து பூமிக்கு வர, அதன் மூலம் எந்த விதமான வரண்ட நிலமும் செழிப்பாகின்றது.அதை வைத்து மனிதர்களுக்கு நோயே இல்லாத வாழ்க்கையை உருவாக்கலாம் என்பதை சில விஞ்ஞானிகள் கண்டுபிடிக்க, அதை தொடர்ந்து அந்த கல்லை தேடி இரண்டு கூட்டம் கிளம்புகின்றது.அதில் ஒரு கூட்டத்தில் கௌதம் கார்த்திக்கும் இருக்க, இறுதியில் அந்த...

Read More

Search This Blog

Blog Archive

About