­
December 2016 - !...Payanam...!

சசிகலா-நடராஜன் திருமணமான சமயத்தில்.. சென்னையில், வீடியோ கடை நடத்திக் கொண்டிருந்த சசிகலாவுக்கு, போயஸ் தோட்டத்துக்குள் கால்வைக்க, கலெக்டர...

சசிகலா-நடராஜன் திருமணமான சமயத்தில்.. சென்னையில், வீடியோ கடை நடத்திக் கொண்டிருந்த சசிகலாவுக்கு, போயஸ் தோட்டத்துக்குள் கால்வைக்க, கலெக்டர் சந்திரலேகா ‘ரூட்’ போட்டுக் கொடுத்தார்; அவ்வளவுதான். ஆனால், அந்த ‘ரூட்’டில் சசிகலாவை, கச்சிதமாக, கவனமாக, பத்திரமாக 34 ஆண்டுகள் பயணம் செய்ய வைத்தவர் அவருடைய கணவர் நடராஜன்தான். நடராஜனை வைத்து ஜெயலலிதா போட்ட கணக்கு சசிகலா-ஜெயலலிதா நட்பை வளர்த்தெடுத்ததிலும் நடராஜனின் பங்கு அளவிட முடியாதது. அதற்கு குறுக்கே, எம்.ஜி.ஆர் போட்ட தடைகளையே சமார்த்தியமாக தகர்த்து எறிந்தார் நடராஜன். எப்படி என்றால், கேசட் பரிமாற்றத்துக்காக ஏற்பட்ட, சசிகலா ஜெயலலிதா அறிமுகம் கொஞ்சம் நட்பாக துளிர்விடத் தொடங்கி இருந்தது. சசிகலாவின் குடும்ப விபரங்களை ஜெயலலிதா கேட்டுத் தெரிந்துகொண்டார். “ராமநாதபுரத்தில் இருந்து ஒருங்கிணைந்த தஞ்சைக்கு தன் முன்னோர்கள் குடிபெயர்ந்த கதை; திருத்துறைப்பூண்டியில் ‘இங்கிலீஷ்’ மருந்துக் கடைக்காரர் குடும்பம் என்று தன் குடும்பத்துக்கு பெயர் வந்த கதை; தனது அண்ணன் விநோதகன் டாக்டரான கதை” என்று...

Read More

மொபைல் போன்களுக்கு சிப்-செட்கள் தயாரிப்பதில் முன்னணியில் இருக்கும் க்வால்காம் (Qualcomm) நிறுவனம், 'இந்தியாவில் பயன்படுத்தப்படும் மொபைல...

<
மொபைல் போன்களுக்கு சிப்-செட்கள் தயாரிப்பதில் முன்னணியில் இருக்கும் க்வால்காம் (Qualcomm) நிறுவனம், 'இந்தியாவில் பயன்படுத்தப்படும் மொபைல் பணப் பரிமாற்றங்களுக்கான பெரும்பாலான ஆப்-கள் பாதுகாப்பானவை இல்லை' என்று கூறியுள்ளது. 'பணப் பரிமாற்றம் செய்வதற்கு பிரத்யேகமாக மொபைல் போன்களில் வன்பொருள் (hardware) அமைப்பு பொருத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இந்தியாவில் பயன்படுத்தப்படும் ஆன்டிராய்ட் இயங்குதளத்திலான பணப் பரிமாற்ற மொபைல் ஆப்-களில் இந்த மாதிரி வசதிகள் இல்லை' என்று தெரிவித்துள்ளது.   ...

Read More

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் பெயர் மீண்டும் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கால்பந்து வீரர் பீலேவின் பயோபிக் படமான "Pele: ...

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் பெயர் மீண்டும் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கால்பந்து வீரர் பீலேவின் பயோபிக் படமான "Pele: Birth of a Legend " என்ற படத்துக்காக ஏ.ஆர். ரஹ்மானின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 89-வது ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட, இந்த பட்டியலில் 145 பேர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதிலும் பின்னணி இசை மற்றும் அதே படத்தின் "Ginga" பாடலுக்காக என இரண்டு பிரிவுகளில் ரஹ்மானின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 26-ம் தேதி பரிந்துரைக்கப்பட்டவர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும். இதையடுத்து பிப்வரி 26-ம் தேதி ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. ...

Read More

காங்கிரஸ், ராகுல் காந்தி, விஜய் மல்லையா ஆகியோரின் ட்விட்டர் பக்கங்களை ஹேக் செய்து தகவல்களை லீக் செய்த ஹேக்கர் குழுவின் பெயர் Legion. இவர்...

காங்கிரஸ், ராகுல் காந்தி, விஜய் மல்லையா ஆகியோரின் ட்விட்டர் பக்கங்களை ஹேக் செய்து தகவல்களை லீக் செய்த ஹேக்கர் குழுவின் பெயர் Legion. இவர்கள் அப்போலோ மருத்துவமனையின் சர்வர்களைக் கூட ஹேக் செய்துள்ளார்களாம். ஆனால், தகவல்களை லீக் செய்தால், இந்தியாவில் குழப்பம் ஏற்படும் என வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு பேட்டி கொடுத்துள்ளனர். இவர்களுடைய அடுத்த டார்கெட் லலித் மோடியாம்! ...

Read More

ஜெயலலிதா மரணம் அடைவதற்கு சில நிமிடங்கள் முன்பு முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழநிசாமியை சசிகலா தேர்வு செய்து வைத்திருந்ததாகவும், ஆனால் மோடிய...

<
ஜெயலலிதா மரணம் அடைவதற்கு சில நிமிடங்கள் முன்பு முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழநிசாமியை சசிகலா தேர்வு செய்து வைத்திருந்ததாகவும், ஆனால் மோடியின் மிரட்டலை அடுத்தே திடீரென பன்னீர்செல்வம் முதல்வர் பதவி ஏற்றுக்கொண்டதாகவும் ஃபேஸ்புக்கில் ஒரு பதிவு வெளிவந்துள்ளது. இது உண்மை என்றால் தமிழகத்தை மன்னார்குடி மாஃபியாக்களில் இருந்து மோடி காப்பாற்றியதற்கு அனைவரும் நன்றி சொல்ல வேண்டும். இதோ அந்த பதிவு 5-12-2016 (நேற்று முன்தினம்) “மன்னார்குடி மாஃபியா” நரேந்திர மோடி என்றால் யார் என்று புரிந்துக் கொண்டது. மாலை 5:05 PM : அதிமுக எம் எல் ஏக்கள் பன்னீர்செல்வத்தை மட்டும் தவிர்த்து விட்டு அப்பல்லோவில் சந்திக்கிறார்கள். சசிகலாதான் அதிமுக தலைவர் என்று தேர்ந்தெடுக்கவும், சசிகலா குடும்பத்தின் நெருங்கிய தொடர்புடைய எடப்பாடி பழனிசாமி புதிய முதல்வராகவும் தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்படுகிறது மாலை 5:45 PM: தில்லியில் இருந்து வரும் ஒரு அழைப்பு சசிகலா & கோ வின் இந்த...

Read More

ஜெயலலிதாவின் அதிதீவிர விசுவாசியான ராமராஜனுக்கு, எம்.பி.பதவியெல்லாம் கொடுத்து அழகு பார்த்தார் அவரும்! அந்தோ பரிதாபம். அந்த பதவியை முழுசாக கூ...

<
ஜெயலலிதாவின் அதிதீவிர விசுவாசியான ராமராஜனுக்கு, எம்.பி.பதவியெல்லாம் கொடுத்து அழகு பார்த்தார் அவரும்! அந்தோ பரிதாபம். அந்த பதவியை முழுசாக கூட அனுபவிக்க முடியாமல் துவக்க நிலையிலேயே டக் அவுட் ஆக வைத்தது விதி. தொடர்ந்து அதிமுக வின் பிரச்சார பீரங்கியாக இருந்த ராமராஜனுக்கு, சாண் ஏறினால் முழம் சறுக்குகிற அளவுக்குதான் அமைந்தது எல்லாமே! மளமளவென அம்மாவின் மனதில் மீண்டும் பிடிக்க ஆரம்பித்த நேரத்தில்தான் அந்த பலத்த ஆக்சிடென்ட். கார் விபத்தில் சிக்கி படு காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவரை சென்னைக்கு வரவழைத்து, அப்போலோவின் அனுமதித்து உயிர் பிழைக்க வைத்தார் ஜெ. மொத்த செலவையும் முதல்வரே ஏற்றுக் கொண்டது, ராமராஜன் மீது அவருக்கு இருந்த அன்பிற்கு ஒரு சின்ன எடுத்துக் காட்டு. அப்படியெல்லாம் உயிர் பிழைத்து வந்தாலும், கழகமும், தலைமையும் ஏனோ அவருக்கு ஒரு பதவியும் தராமல் வைத்திருந்தது. அண்மையில் வந்த சட்டமன்ற தேர்தலில் கூட அவருக்கு சீட் வழங்கப்படவில்லை. மாறாக...

Read More

தமிழ் சினிமா வரலாற்றை மட்டும் அல்ல, தமிழக அரசியல் வரலாற்றையும் ரஜினியைத் தவிர்த்துவிட்டு நிச்சயம் எழுதமுடியாது.  அவர் தீவிர அரசியலில்...

தமிழ் சினிமா வரலாற்றை மட்டும் அல்ல, தமிழக அரசியல் வரலாற்றையும் ரஜினியைத் தவிர்த்துவிட்டு நிச்சயம் எழுதமுடியாது.  அவர் தீவிர அரசியலில் இல்லைதான். அவர் பட வெளியீட்டு சமயத்தைத் தவிர, அவர் எப்போதும் அரசியல் பேசியதில்லைதான்... ஏன் அவர் ஒரு காலமும் தமிழகத்தின் முக்கிய நிகழ்வுகள் குறித்து அவர் திண்ணமாக, தன் கருத்தைக் கூறியதில்லைதான். ஆனால், சினிமாவில் வணிக நோக்கத்துக்காகக் கட்டமைக்கப்பட்ட ரஜினி எனும் பிம்பத்தின் நிழல், அரசியல் களத்தில் இன்னும் படர்ந்துதான் இருக்கிறது. ஒரு யுகத்தின் பழமையைக் கடந்த நிமிடத்தின் மீது, அள்ளிப் பூசும்... ஒளியின் வேகத்துடன் போட்டி போட எண்ணும் இந்தச் சமூக ஊடக காலத்திலும்... ரஜினி என்னும் பிம்பம் இன்னும் உயிர்ப்புடன்தான் இருக்கிறது. அதனால்தான் பிரதமர் வேட்பாளரே தமிழகத்துக்கு வந்தாலும், போயஸ் கார்டன் ரஜினி வீட்டுக்குச் சென்று ஒரு புகைப்படம் எடுத்து ஊடகங்களுக்கு வெளியிடுவதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார். தேர்தல் காலங்களில், சம்பந்தமே இல்லாமல் ரஜினி...

Read More

தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்துவிட்டார். தொடக்கம் முதலே அவருக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து தெளிவாகச் சொல்லப்படவில்லை என்ற ஆதங்கம...

தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்துவிட்டார். தொடக்கம் முதலே அவருக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து தெளிவாகச் சொல்லப்படவில்லை என்ற ஆதங்கம் மக்கள் மத்தியில் வலம் வருகிறது. 'பூரண நலத்துடன் முதல்வர் இருக்கிறார் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், திடீரென இதயத் துடிப்பு நின்று போனது ஏன்?' எனக் கேள்வி எழுப்புகின்றனர் மருத்துவர்கள். அப்போலோ மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா. தொடர்ந்து 75 நாட்கள் நடந்து வந்த சிகிச்சை பலன் அளிக்காமல் கடந்த 5-ம் தேதி மரணமடைந்துவிட்டார். அவரது மரணம் அ.தி.மு.கவினர் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் பலத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. "தனிநபர் விருப்பத்தையும் தாண்டி மக்கள் பணி பாதிக்கப்படும் பட்சத்தில் மக்கள் பிரதிநிதிகளின் உடல்நிலை குறித்த விஷயங்கள் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் எனச் சட்டம் சொல்கிறது. ஆனால், முதல்வர் ஜெயலலிதா விவகாரத்தில் மருத்துவமனையின் செயல்பாடுகள் அவ்வளவு திருப்தியாக இல்லை. பல கேள்விகளுக்கு பதிலே சொல்லப்படவில்லை" என...

Read More

வெங்கட் பிரபு இயக்குநராக அறிமுகமான முதல் படம் சென்னை 28.  நட்பையும் கிரிக்கெட்டையும் சுமந்து, 10 வருடம் கழித்து அதே கதை ஆனால் வேறு களத்தில்...

வெங்கட் பிரபு இயக்குநராக அறிமுகமான முதல் படம் சென்னை 28.  நட்பையும் கிரிக்கெட்டையும் சுமந்து, 10 வருடம் கழித்து அதே கதை ஆனால் வேறு களத்தில் செகண்ட் இன்னிங்ஸ் விளையாட வந்திருக்கிறது டீம்.நிஜமாகவே “தி பாய்ஸ் ஆர் பேக்” தானா...! சென்னை ஷார்க்ஸ் டீம் முதல் பாகத்தில் ராக்கர்ஸை செமி ஃபைனலில் ஜெயித்து இத்தோடு  10 வருடங்கள் ஆகிவிட்டன. ப்ளேயர்ஸ் எல்லோருமே வேறுவேறு இடத்தில் வேலை, மனைவி, குழந்தை என செட்டில் ஆகிவிடுகிறார்கள். இவர்கள் அனைவரும் ஜெய் திருமணத்திற்காக ஒன்று சேர்கிறார்கள். ஐடியில் வேலை செய்யும் ஜெய்யின் காதலி தான் சானா அல்ஃதாப். இவர்களின் திருமணத்திற்காக சென்னை 28 டீம், தேனி பக்கம் ட்ரிப் அடிக்கிறார்கள்.  அரவிந்த் ஆகாஷ் தேனியில்  ஒரு கிரிக்கெட் அணியின் கேப்டன். அவரது அணிக்கு கடும் சவாலாக எட்டு வருடங்களாக கோப்பையை வென்று கொண்டிருக்கிறது வைபவின் அணி. தனது டீம் நண்பர்கள் தேனியில் வந்து...

Read More

'காதலுக்காக ஏங்கும் ஹீரோவுக்குக் காதலி கிடைத்தாளா' என்கிற கதையே 'பறந்து செல்ல வா'. சிங்கப்பூரில் வேலைக்காகச் செல்கிறார்...

'காதலுக்காக ஏங்கும் ஹீரோவுக்குக் காதலி கிடைத்தாளா' என்கிற கதையே 'பறந்து செல்ல வா'. சிங்கப்பூரில் வேலைக்காகச் செல்கிறார் ஹீரோ லுத்ஃபுதீன். அவரின் நண்பரான சதீஷின் வீட்டில் தங்குகிறார். வந்த வேலையைப் பார்ட்டைமாகப் பார்த்துக் கொண்டு ஃபுல்டைமாகத் தனக்கு ஒரு காதலியைத் தேடி அலைகிறார். சதீஷின் காதலி தொடங்கிப் பார்க்கும் பெண் மீதெல்லாம் லவ்வோ லவ். இதற்கு இடையில் உனக்கெல்லாம் லவ்வா என நண்பர்கள் கலாய்க்க தனக்கென ஒரு காதலி இருப்பதாகப் பொய் சொல்கிறார். அலுவலக நண்பன் ஆர்.ஜே.பாலாஜி உதவியுடன் சீனப் பெண் ஒருத்தியின் ஃபேக் ஐடி உருவாக்கி ஆதாரத்தையும் காட்டுகிறார். தன் புகைப்படத்தைப் பயன்படுத்தி ஃபேக் ஐடி உருவாக்கியதை தெரிந்து கொள்ளும் அந்தச் சீனப் பெண் லுத்ஃபுதீன் மேல் கோபமாகி ஃபாலோ செய்கிறார். காதலை வைத்து நண்பர்களிடம் சீன் போடும் நேரத்தில் லுத்ஃபுதீனின் வீட்டில் அவருக்கு ஒரு பெண் பார்க்கிறார்கள் அந்தப் பெண்ணும் சிங்கப்பூரிலேயே இருக்கிறார். அவர் தான்...

Read More

முதல்வர் ஜெயலலிதா இழப்பு பலருக்கும் சோகத்தை தந்தது. கமல்ஹாசன் அமெரிக்காவில் இருந்ததால் அவரால் நேரில் அஞ்சலி செலுத்த முடியவில்லை. இந்நிலைய...

<
முதல்வர் ஜெயலலிதா இழப்பு பலருக்கும் சோகத்தை தந்தது. கமல்ஹாசன் அமெரிக்காவில் இருந்ததால் அவரால் நேரில் அஞ்சலி செலுத்த முடியவில்லை. இந்நிலையில் சார்ந்தோர்கள் அனைவருக்கும் என் இரங்கல்கள் என்று தெரிவித்திருந்தார், இதற்கு பல சர்ச்சைகள் எழுந்தது. ஆனால், தற்போது ஜெயலலிதாவிற்கு பிறகு கட்சியில் பெரும் வெற்றிடம் எழுந்துள்ளது, மக்கள் யாரும் அவருடைய தோழி சசிகலாவை ஆதரிக்கவில்லை. ஆனால், கட்சியில் எல்லோரும் அவருடைய பெயரை அடுத்த தலைமைக்கு குறிப்பிட்டுள்ளனர். இதை தான் கமல் அன்றே இப்படி குறிப்பிட்டு இருந்தார் என ரசிகர்கள் கேலி செய்து வருகின்றனர். மீண்டும் அவர் டுவிட்டை படியுங்கள் உங்களுக்கே புரியும்... சார்ந்தோர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். ...

Read More

கே.ஆர்.விஜயா சிரிப்பை, சினேகா வந்து ‘ரீ நியூ’ செய்தாரல்லவா? அதற்கு சற்றும் சளைக்காததுதான் சென்னை 28 பார்ட் 2. பழைய போர்வை துணியில் புதிய ஜீ...

கே.ஆர்.விஜயா சிரிப்பை, சினேகா வந்து ‘ரீ நியூ’ செய்தாரல்லவா? அதற்கு சற்றும் சளைக்காததுதான் சென்னை 28 பார்ட் 2. பழைய போர்வை துணியில் புதிய ஜீன்ஸ் சகிதம் வந்திருக்கும் இந்த டீமை காட்சிக்கு காட்சி கைதட்டி வரவேற்கிறது தியேட்டர். அப்பவே தெரிஞ்சுருச்சு… இந்தப்படம் பாக்ஸ் ஆபிஸ்ல, ‘ராக்ஸ்’ ஆகப் போகிற விஷயம். சென்னை 28 ன் பேச்சுலர் டீம், பத்து வருஷங்களுக்கு பின் குடும்பம் குட்டியுமாக திரிகிற நண்பர்களோடு அறிமுகம் ஆகிறது. “இவன்தாங்க அவன்… அவன்தாங்க இவன்” என்றெல்லாம் முன் அறிமுகம் கொடுக்கிற ஸ்டைல் அரத பழசு என்றாலும், வெங்கட்பிரபு தருகிற அந்த முன்னோட்டம், முதல் பார்ட் பார்க்காதவர்களுக்கு ஒரு சின்ன டிப்ஸ் ஆகக் கூட இருக்கலாம்! நண்பன் ஜெய்யின் லவ் மேரேஜ் நிச்சயதார்த்தத்திற்காக தேனிக்குப் போய் இறங்குகிறது பிரேம்ஜி. சிவா, நித்தின், உள்ளிட்ட பிரண்ட்ஸ் டீம். அதுவும் சக பத்தினிகளுடன். போன இடத்தில் பத்து வருஷத்துக்கு முன்...

Read More

அதிமுகவை சேர்ந்த சீனியர் அமைச்சர் ஒருவர் நம்மிடம் "அதிமுகவின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வராகவும் இருந்து வந்த ஜெயலலிதா இறந்து ஒரு வ...

<
அதிமுகவை சேர்ந்த சீனியர் அமைச்சர் ஒருவர் நம்மிடம் "அதிமுகவின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வராகவும் இருந்து வந்த ஜெயலலிதா இறந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை,அதற்குள் அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை பதவி ஏற்கச்சொல்லி எம்.எல்.ஏ க்கள் ,அமைச்சர்கள் என்று பல்வேறு நபர்கள் போயஸ்கார்டன் சென்று சசிகலாவை சந்தித்து பொதுச்செயலாளர் பதவி ஏற்கச்சொல்லி வற்புறுத்தி வருவதாக செய்திகள் வருகிறது.இந்த வேலையை சசிகலாவின் கணவர் நடராஜன் திட்டமிட்டுபரப்பி வருகிறார். இதில் மேல்மட்ட நபர்களுக்கு பதவியை தக்க வைக்க இப்படி சசிகலாவிடம் சரணடைந்து விடுகிறார்கள்.ஆனால் தொண்டர்கள் சசிகலாவை விரும்பவில்லை.இதனால் பல்வேறு மாவட்டங்களில் அம்மா திராவிட முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சி உருவாகி வருகிறது.இதற்கு தலைவர் விரைவில் அறிவிக்கப்படுவார்" என்றார் அதிமுகவை சேர்ந்த சீனியர் அமைச்சர் ஒருவர். ...

Read More

ஒரு சில இயக்குனர்கள் இப்படி படம் எடுத்தால் தான் ரசிகர்கள் அதிகம் ரசிப்பார்கள், அவர்கள் அந்த ரூட்டில் இருந்து கொஞ்சம் விலகினாலும் எப்போது மீ...

ஒரு சில இயக்குனர்கள் இப்படி படம் எடுத்தால் தான் ரசிகர்கள் அதிகம் ரசிப்பார்கள், அவர்கள் அந்த ரூட்டில் இருந்து கொஞ்சம் விலகினாலும் எப்போது மீண்டும் அந்த ரூட்டிற்கு வருவார்கள் என ஆவல் தோன்றும், அப்படி தான் வந்த ஏரியாவிலேயே மீண்டும் களத்தில் இறங்கி 6 அடிக்க வந்துள்ளார் வெங்கட் பிரபு, 6 அடித்தாரா? பார்ப்போம். கதைக்களம் சென்னை-28 படத்தில் நடித்தவர்கள் அனைவரும் 10 வருடம் கழித்து காட்டுவது போல் அவர்கள் வாழ்க்கை தொடங்குகின்றது. படத்தின் ஆரம்பத்திலேயே ஜெய்யின் திருமண நிச்சயத்தார்த்தம் தேனியில் நடைப்பெறுகின்றது. தேனிக்கு அனைத்து நண்பர்களும் குடும்பத்தோடு செல்ல, ஒரு இக்காட்டான சூழ்நிலையில் தேனி மாவட்டத்தில் வைபவ் நடத்தும் கிரிக்கெட் டீமுடன் மோதுகிறார்கள், வைபவ் வெற்றி பெறுவதற்காக ஜெய்யை ஒரு பெண்ணுடன் இருப்பது போல் ஒரு புகைப்படத்தை ஏற்பாடு செய்து மிரட்டுகிறார். ஜெய்க்காக அந்த பைனல் மேட்சில் தோற்றாலும், போட்டோ எப்படியோ லீக் ஆகி கல்யாணம் நின்றுவிடுகின்றது....

Read More

முதலமைச்சர் ஜெயலலிதா மறைவையடுத்து, அவர் தேர்வு செய்யப்பட்ட ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. 'முதல்வர் இடத்தில் ...

முதலமைச்சர் ஜெயலலிதா மறைவையடுத்து, அவர் தேர்வு செய்யப்பட்ட ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. 'முதல்வர் இடத்தில் தீபாவை அமர வைப்பதற்காக, அவருடைய தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட வைக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது' என்கின்றனர் அவருடைய ஆதரவாளர்கள். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காலத்தில், அவரைச் சந்திப்பதற்காக இரண்டு முறை முயற்சி செய்தார் அவரது அண்ணன் ஜெயக்குமாரின் மகள் தீபா. முதல்வரை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை. இதனால் கொந்தளித்தவர், மருத்துவமனை வாசலிலேயே ஆவேசமாகப் பேசினார். கடந்த 6-ம் தேதி முதல்வர் உடல் ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்தபோதும், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவதற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டார். இறுதிக் காரியங்களையும் தீபாவின் சகோதரர் தீபக்கும் சசிகலாவும் முன்னின்று செய்தனர். இதனால் உச்சக்கட்ட கொதிப்பில் இருக்கிறார் தீபா. அவரை முன்வைத்து சசிகலாவுக்கு எதிரான ஆட்டத்தையும் சிலர் தொடங்கியுள்ளனர். அவர்கள் நம்மிடம், "ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து வீடு,...

Read More

தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வீடுகளில் வருமான வரித்துறை நடத்திய அதிரடி ரெய்டால், அதிர்ந்து போய் இருக்கிறார்கள் அ.தி.மு.கவின் சீனியர் அமைச்சர...

தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வீடுகளில் வருமான வரித்துறை நடத்திய அதிரடி ரெய்டால், அதிர்ந்து போய் இருக்கிறார்கள் அ.தி.மு.கவின் சீனியர் அமைச்சர்கள். ' அவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட 10 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய நோட்டுகள் அனைத்தும் வங்கிகளில் இருந்து வாங்கப்படவில்லை. ரிசர்வ் வங்கி அதிகாரிகளே மாற்றிக் கொடுத்துள்ளனர்' என அதிர வைக்கின்றனர் அதிகாரிகள். சென்னை, நுங்கம்பாக்கத்தில் இருந்து நேற்று காலையில் தனியார் ட்ராவல்ஸ் வாகனத்தில் கிளம்பிய வருமான வரித்துறையின் புலனாய்வு அதிகாரிகள், தொழிலதிபர் சேகர் ரெட்டியின் தி.நகர் அலுவலகம், காட்பாடியில் உள்ள வீடு ஆகியவற்றில் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில், 100 கோடி ரூபாய் பணம் மற்றும் 120 கிலோ தங்கம் ஆகியவை பிடிபட்டதாக தகவல்கள் வெளியானது. " தமிழக அரசில் கோலோச்சும் அமைச்சர்களுக்கும் உயர் பொறுப்பில் உள்ள அதிகாரி ஒருவருக்கும் மிகவும் நெருக்கமானவராக வலம் வந்தவர் சேகர் ரெட்டி. அவரிடம் வருமான வரித்துறை பாய்ந்ததன் பின்னணியில் பல...

Read More

கடந்த சில வருடங்களாக நடிகைகளின் விவாகரத்து அனைவரையும் அதிர வைக்கிறது. தொடர்ந்து மலையாள நடிகைகள் அமலாபால் விவாகரத்து, திலீப்-காவ்யா மாதவன் இ...

கடந்த சில வருடங்களாக நடிகைகளின் விவாகரத்து அனைவரையும் அதிர வைக்கிறது. தொடர்ந்து மலையாள நடிகைகள் அமலாபால் விவாகரத்து, திலீப்-காவ்யா மாதவன் இரண்டாம் திருமணம் என அதிரவைக்கிறது. ரம்பா விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் நடிகை மீரா ஜாஸ்மின் விவாகரத்து செய்யவுள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது. மீரா ஜாஸ்மின் மீண்டும் நடிக்க வந்தது அவரது கணவர் அனில் ஜான் டைட்டஸுக்கு பிடிக்கவில்லை என்றும் இதனால் மனக்கசப்பு உள்ளதாகவும் மலையாள திரையுலகில் கிசுகிசு எழுந்துள்ளது. ...

Read More

அம்மா உடல்நிலை ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்ட நாளில் இருந்தே ஒட்டுமொத்த தமிழகத்தின் பார்வையும் ஜெ.வின் பக்கத்து வீட்டுக்காரர் பக்கம்தான் இருந்...

அம்மா உடல்நிலை ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்ட நாளில் இருந்தே ஒட்டுமொத்த தமிழகத்தின் பார்வையும் ஜெ.வின் பக்கத்து வீட்டுக்காரர் பக்கம்தான் இருந்தது. அவர்தான் ரஜினி என்பதை குட்டிக் குழந்தைகள் கூட சட்டென்று சொல்லிவிடும். கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக “வருவேன். வர வேண்டிய நேரத்தில் கண்டிப்பா வருவேன்” என்றெல்லாம் தான் நடித்து வந்த சினிமாக்களில் முன்னோட்டம் விட்டுக் கொண்டிருந்த ரஜினிக்கு, அந்த நேரம் இதுதான் என்பது தெரிந்திருக்கும். தெரிய வேண்டும் என்றெல்லாம் அவரது ரசிகர்களுக்கும் எண்ணம் இருந்தது. அதிமுகவின் சிம்ம கர்ஜனை ஓய்ந்து அமைதியாக படுத்திருக்கும் அந்த இறுதி நேரத்தில், அவருக்கு மலர் வளையம் வைக்க வந்த ரஜினியை பார்த்த மக்களும் கூட, ஓவென்று ஆரவாரம் செய்து தங்கள் அன்பை வெளிப்படுத்தியதை பார்க்க முடிந்தது. ஆனால், ரஜினி இனிமேலாவது கட்சி ஆரம்பிப்பாரா? மத்தியில் ஆளும் மோடிக்கும் ரஜினிக்கும் இருக்கும் நட்பு, இனிமேலாவது பிரயோஜனமான ஒரு திசையை நோக்கி பயணிக்குமா? என்றெல்லாம்...

Read More

ஜெயலலிதா மறைவு காரணமாக இந்தியாவே ஸ்தம்பித்து விட்டது. பல மாநில அரசுகளும் சட்டசபை நிகழ்வுகளை ரத்து செய்தன. பாராளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்...

ஜெயலலிதா மறைவு காரணமாக இந்தியாவே ஸ்தம்பித்து விட்டது. பல மாநில அரசுகளும் சட்டசபை நிகழ்வுகளை ரத்து செய்தன. பாராளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன. ஒடிஷா , கேரள அரசுகள் மூன்று நாட்கள் அரசு முறை துக்கம் அறிவித்துள்ளன. ஆந்திரா, தெலங்கான மாநிலங்களில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் தமிழகம் போலவே பாலைவனமாகின. ஆந்திராவில் சித்தூர், திருப்பதி நகரங்கள் பெரும் சோகத்தில் மூழ்கின. தெலங்கானாவில் செகந்திரபாத் நகருக்கும் ஜெயலலிதாவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. செகந்திரபாத் அருகேயுள்ள ஜெடிமட்லா கிராமத்தில்தான் ஜெயலலிதாவின் பண்ணை வீடு இருக்கிறது. இந்த பண்ணை வீட்டை ஒட்டி, தேசிய நெடுஞ்சாலை எண்.44 செல்கிறது. இந்த சாலை அருகேதான் ஜெயலலிதாவின் திராட்டைச் தோட்டம் உள்ளது. அரசியலில் நுழைவதற்கு முன்பே ஜெயலிலதா இதனை வாங்கி விட்டார். அகில இந்தியத் தலைவர்கள் அனைவருமே சென்னைக்கு வந்து ஜெயலலிதாவின் உடலுக்கு நேரடியாக அஞ்சலி செலுத்தினர். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர்...

Read More

ஜெயலலிதா, எப்போது உயில் எழுதினார், அவரது உடல் மீது வைக்கப்பட்டு இருந்த தேசிய கொடியை சசிகலா நடராஜன் வாங்கியது சரியா போன்ற கேள்விகளை ஆர்.டி.ஐ...

ஜெயலலிதா, எப்போது உயில் எழுதினார், அவரது உடல் மீது வைக்கப்பட்டு இருந்த தேசிய கொடியை சசிகலா நடராஜன் வாங்கியது சரியா போன்ற கேள்விகளை ஆர்.டி.ஐ மூலம் கேட்டுள்ளார் நெல்லை வழக்கறிஞர் பிரம்மா.  மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த 5ம் தேதி காலமானார். அவரது உடல் எம்.ஜி.ஆர். சமாதி அருகில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக மத்திய பொது தகவல் அலுவலர், ராஜ்பவனுக்கு நெல்லை வழக்கறிஞர் பிரம்மா சில கேள்விகளை ஆர்.டி.ஐ மூலம் கேட்டுள்ளார். அதன் விவரம்: * முதலமைச்சராக ஜெயலலிதா 5.12.2016ல் அப்போலோ மருத்துவமனையில் மரணம் அடைந்தார். அவரது இறுதி சடங்கு 6.12.2016ல் நடைபெற்றது. அதில் மத்திய அரசு சார்பாக கலந்து கொண்ட நபர்களின் பெயர், பணி பொறுப்பு, விவரம் தர வேண்டும். * இறுதி சடங்கில் முப்படையினர் மொத்தம் எத்தனை பேர் கலந்து கொண்டார்கள். அவர்கள் முப்படையில் என்னென்ன பணி பொறுப்பில் உள்ளார்கள் என்ற விவரம்...

Read More

ஆளுங்கட்சிக்கு நெருக்கமான புள்ளிகள் மீது வருமான வரித்துறையின் நடவடிக்கைகள் பாய ஆரம்பித்துவிட்டன. ' பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிய பின்னண...

ஆளுங்கட்சிக்கு நெருக்கமான புள்ளிகள் மீது வருமான வரித்துறையின் நடவடிக்கைகள் பாய ஆரம்பித்துவிட்டன. ' பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிய பின்னணியிலேயே தொழிலதிபர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டன' என்கின்றனர் வருமான வரித்துறை அதிகாரிகள். சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆயக்கர் பவனில் கடந்த சில நாட்களாக தீவிர விவாதம் நடந்து வந்தது. ' திங்கள்கிழமையன்று நடவடிக்கையில் இறங்கலாம்' என முடிவு செய்தனர். ' எத்தனை கார்கள் தேவைப்படும்' என்பதையும் முடிவு செய்து, தனியார் ட்ராவல் ஏஜென்சிக்குத் தகவல் கொடுத்தனர். சுமார் 15 லட்ச ரூபாய் வரையில் செலவாகலாம் என்பதைக் கணக்கிட்டுள்ளனர். இன்று நடந்த சோதனையில் புதிய ரூபாய் நோட்டுகளாக 70 கோடி ரூபாய்கள் பிடிபட்டுள்ளன. ' சென்னையில் எட்டு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 100 கிலோ தங்கம் உள்பட 90 கோடி ரூபாய் வரையில் பிடிபட்டுள்ளது. தொழிலதிபர்கள் சேகர் செட்டி, சீனிவாச ரெட்டி, பிரேம் ஆகியோரை குறிவைத்து சோதனை நடத்தப்பட்டது' என்கின்றனர்...

Read More

எத்தனை ஆத்திரம் வந்தாலும், ஆள் செத்த பின்பு கொள்வது சரியல்ல! இதுதான் நம் முன்னோர் பண்பாடு. ஆனால் முன்னோர் பெருமை முற்றாக அறிந்த கமல், அப்...

எத்தனை ஆத்திரம் வந்தாலும், ஆள் செத்த பின்பு கொள்வது சரியல்ல! இதுதான் நம் முன்னோர் பண்பாடு. ஆனால் முன்னோர் பெருமை முற்றாக அறிந்த கமல், அப்படி நடந்து கொள்ளவில்லையே என்பதுதான் அதிமுக வினரின் வருத்தமும் கவலையும்! தற்போது அமெரிக்காவிலிருக்கும் கமல், ஜெயலலிதாவின் மறைவுக்கு வந்திருக்க முடியாதுதான். ஆனால் ட்விட்டரில் தன் இரங்கலை முறையாக தெரிவித்திருக்கலாமே என்பதுதான் பலரது வேதனை. 5 ந் தேதி நள்ளிரவில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு, மறுநாள் தனது இரங்கலை ட்விட்டர் மூலம் தெரிவித்தார் கமல். அதில், சார்ந்தோர் அனைவர்க்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் என்று ஒரு வரியோடு முடித்துக் கொண்டார். இப்படி பட்டும் படாமலும், படிப்பவர் உள்ளங்களை தொட்டும் தொடாமலும் ஒரு ட்விட் தேவையா? என்று முகம் சுளித்தது தமிழகம். விஸ்வரூபம் படம் வெளியாகிற நேரத்தில் அதற்கு தடை விதித்தது தமிழக அரசு. அப்போது நான் இந்தியாவை விட்டே வெளியேறுவேன் என்றார் கமல். எப்படியோ? அந்தப்படம்...

Read More

அம்பேத்கரின் பிறந்த நாளை (ஏப்ரல் 14) தண்ணீர் தினமாக அனுசரிக்கப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நேற்று அம்பேத்கர் 61-வது நினைவுதினத்தை அ...

அம்பேத்கரின் பிறந்த நாளை (ஏப்ரல் 14) தண்ணீர் தினமாக அனுசரிக்கப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நேற்று அம்பேத்கர் 61-வது நினைவுதினத்தை அடையாளப்படுத்தும் விதமாக  தேசிய கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கில் பேசிய மத்திய நீர் வளத்துறை அமைச்சர் உமா பாரதி, ’நீர் ஆதாரங்களை நிர்வகிக்கும் அகில இந்திய கொள்கைகளில் அம்பேத்கர் முக்கிய பங்கு வகித்துள்ளார். தண்ணீர் விலைமதிப்பற்ற இயற்கை வளம். மக்களுக்கு அதின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், நாட்டின் நீர்வள பாதுகாப்பில் அம்பேத்கரின் பங்களிப்பையும் கருத்தில் கொண்டு, ஏப்ரல் 14-ம் தேதி  தண்ணீர் தினமாக அனுசரிக்கப்பட மத்திய அரசு முடிவெடுத்துள்ளது’, என பேசினார். ...

Read More

கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரருக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரியலூர் ம...

கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரருக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க கங்கைகொண்ட சோழபுரத்தில், ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டு புகழ்பெற்றுத் திகழும் பிரகதீஸ்வரர் கோயிலில் சுமார் 85 ஆண்டுகளுக்குப் பிறகு, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ம் தேதி கும்பாபிஷேகம் விழா வெகு சிறப்பாக நடைபெறுகிறது. ...

Read More

கோமளவள்ளி என்ற பெயரை அவரே மறந்திருப்பார். பிறந்ததும் ஜெ.வுக்கு சூட்டிய பெயர் அது. ஆனால் சில காலங்களுக்கு பின் ஜெயலலிதா ஆனார். ஜெயா, ஜெய், ல...

கோமளவள்ளி என்ற பெயரை அவரே மறந்திருப்பார். பிறந்ததும் ஜெ.வுக்கு சூட்டிய பெயர் அது. ஆனால் சில காலங்களுக்கு பின் ஜெயலலிதா ஆனார். ஜெயா, ஜெய், லில்லி எனப் பல பெயர்களில் பள்ளித்தோழிகளால் அழைக்கப்பட்டவர். ஆனால், அவரது அம்மாவுக்கு “அம்மு”. அதிமுகவினருக்கு மட்டுமல்ல, எதிர்க்கட்சி தலைவர்களுக்குக் கூட “அம்மா”. சர்ச் பார்க் பள்ளி மாணவி என்றுதான் பலருக்கும் தெரியும். ஆனால்,மாம்பலம் ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்துவிட்டுத்தான் மெட்ரிக் வரை சர்ச் பார்க்கில் படித்தார். “இன்னொரு வாய்ப்பு கிடைத்தால் சர்ச் பார்க்கில் படிக்க வேண்டும்” என்பதை தனது ஆசையாகச் சொல்லியிருந்தார். போயஸ் கார்டன், சிறுதாவூர், ஹைதராபாத் திராட்சைத் தோட்டம், ஊட்டி கொடநாடு எஸ்டேட் ஆகிய நான்கும் ஜெ. மாறி மாறி தங்கும் இடங்கள். சமீபகாலங்களாக ஹைதராபாத் செல்வதை நிறுத்தியிருந்தார். திடீர் ஓய்வுக்கு சிறுதாவூர். மாதக்கணக்கில் ஓய்வென்றால் கோத்தகிரியில் உள்ள கோடநாடுதான் அவரது விருப்பம். சினிமா காலத்தில் இருந்தே...

Read More

ஒற்றை ஆள், எத்தனை அவதூறுகளை தாங்க முடியும்? எவ்வளவு பகடிகளை புறந்தள்ள முடியும்? எத்தனை விமர்சனங்களை எதிர்கொள்ள முடியும்? எவ்வளவு பாரத்தை...

ஒற்றை ஆள், எத்தனை அவதூறுகளை தாங்க முடியும்? எவ்வளவு பகடிகளை புறந்தள்ள முடியும்? எத்தனை விமர்சனங்களை எதிர்கொள்ள முடியும்? எவ்வளவு பாரத்தை சுமக்க முடியும்? முடியும் நீங்கள் ஜெயலலிதாவாக இருந்தால்...! சந்தேகமே இல்லை. இந்திய அரசியலின் இரும்புப் பெண்மணிதான் இவர். தன் ஆளுமையால் தமிழகம் தொடங்கி உலகளாவிய அரசியல்வாதிகள் வரை அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர். கண்டிப்பாய் இது ஈடு செய்ய முடியாத இழப்புதான். இந்த இழப்பினால் நேர்ந்த வெற்றிடத்தை இனி நிறைய தருணங்களில் நாம் உணரத்தான் போகிறோம். பொதுக்குழு கூட்டங்கள்: தமிழகத்தின் மிகப்பெரிய கட்சியின் தலைவர் தான். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வர ஆயிரம் பேர் இருக்கிறார்கள்தான். ஆனாலும் தீராத் தனிமையில்தான் உழன்றார் ஜெ. 'நான் யாரையும் சார்ந்திருந்ததில்லை. அதற்கான கொடுப்பினை எனக்கு கடைசி வரை இல்லை. இதுதான் என் விதி, என் தலையெழுத்து' - இது 2013-ல் நடந்த கட்சி பொதுக்குழு கூட்டத்தில் ஜெ. நெகிழ்ந்து...

Read More

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் செப்டம்பர் 22-ம் ...

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் செப்டம்பர் 22-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவர், டிசம்பர் 5ம் தேதி இரவு 11.30 மணியளவில் மரணம் அடைந்தார். பொது மக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் ராஜாஜி அரங்கத்தில் இன்று வைக்கப்பட்டுள்ளது. நீண்ட வரிசையில் இருந்து பொது மக்கள் ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சென்னை மாநகராட்சி இணையதளத்தில் ஜெயலலிதாவின் இறப்பு சான்றிதழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் அவரது குடும்ப விவரங்கள் மற்றும் முகவரி, இறப்பு நேரம் உள்ளிட்ட விவரங்கள் உள்ளன. அந்த சான்றிதழில் சென்னை மாநகராட்சி சுகாதார அலுவலர் (பொறுப்பு) டாக்டர் செந்தில்நாதன் கையெழுத்திட்டுள்ளார். இந்த சான்றிதழ் 6-ம் தேதி வழங்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ...

Read More

அப்போலோ. க்ரீம்ஸ் ரோடு. கடந்த 75 நாட்களாக ஜெயலலிதாவின் முகவரி. முதலில் அறை எண் 2008ல் அனுமதிக்கப்பட்டார் என்று செய்திகளில் அடிபட்டது. பிறகு...

அப்போலோ. க்ரீம்ஸ் ரோடு. கடந்த 75 நாட்களாக ஜெயலலிதாவின் முகவரி. முதலில் அறை எண் 2008ல் அனுமதிக்கப்பட்டார் என்று செய்திகளில் அடிபட்டது. பிறகு அறை மாற்றப்பட்டார். உள்ளே அவர் எந்த அறையில் இருக்கிறார் என்று தெரியாவிட்டாலும், அப்போலோ என்ற முகவரி  அதிமுக பிரமுகர்கள், தொண்டர்கள், பத்திரிகையாளர்கள் என்று அனைவரும் வந்து சென்றுகொண்டிருந்த இடமாக இருந்தது.  ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த இத்தனை நாட்களில் முன்வாயிலுக்கு வெளியே பத்திரிகையாளர்களுக்கும், கேமராமேன்களுக்கும் அமைக்கப்பட்டிருந்த இடத்தில்தான் அவர்களுக்கு அனுமதி. மருத்துவமனை ஊழியர்கள் வெளியில் காத்திருக்கும் செய்தியாளர்களுக்கு தேவையான நேரத்தில் உணவோ, தேநீரோ தேவையென்றால் வழங்கிக் கொண்டிருந்தனர். எத்தனை முயன்றும் எளிதில் யாரும் உள்ளே நுழைந்து செய்தி சேகரிக்க முடியாத அளவுக்கு பாதுகாப்பும், கெடுபிடிகளும். ஒரே ஒருநாள் மழை பெய்தபோது, வெளியே காத்துக் கொண்டிருந்த பத்திரிகையாளர்களையும், காவலர்களையும் அப்போலோ ஊழியர்கள் உள்ளே அழைத்து அமரவைத்தனர். அப்போதும் அதற்கு மேல் அனுமதி இல்லை. 75 நாட்கள் முதல்வர் ஜெயலலிதா...

Read More

Search This Blog

Blog Archive

About