திரைவிமர்சனம் - கொடிவீரன் பேமிலி ஆடியன்ஸ் மனதை வெல்கிறான்.
December 07, 2017சசிகுமார் மிகுந்த துயரத்தை தாண்டி கொடி வீரன் படத்தை எப்படியோ இன்று ரிலிஸ் செய்துவிட்டார். சமீப காலமாக தோல்வியை சந்தித்து வந்த இவருக்கு நம்ப...
கதைக்களம்
சசிகுமார் சிறு வயதிலேயே தன் தாயை இழக்கின்றார். அன்றிலிருந்து தன் தங்கையை அவர் தான் பார்த்துக்கொள்கின்றார். தன் தங்கைக்கு ஒன்று என்றால் ஊரே எதிர்த்து வந்தாலும் உண்டு, இல்லை என்று பார்த்துவிடுவார்.
அப்படியிருக்க அதே ஊரில் பசுபதி அவருடைய தங்கை கணவனுடன் சேர்ந்து கொண்டு பல நாச வேலைகளை செய்து வருகின்றார். இதை அந்த ஊர் வருவாய் துறை அதிகாரி விதார்த் தட்டி கேட்கின்றார்.
விதார்த்திற்கும் சசிகுமார் தங்கைக்கும் திருமணம் நடக்க, பிறகு என்ன தன் மச்சான் பிரச்சனை இனி என் பிரச்சனை என சசிகுமார் இவர்களை காப்பாற்ற செய்யும் வேலையே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
சசிகுமார் பிரம்மா, பலே வெள்ளையத்தேவா என பல ரூட்டில் சென்று நமக்கு இது தான் சரி என்று கிராமத்து வீரனாக களம் இறங்கிவிட்டார். தன் தங்கைக்காக எதையும் செய்யும் தைரியம், தன் மச்சானுக்காக எதிரிகளை வெட்டி சாய்க்கும் வீரம் என தனக்கே உரிய ஸ்டைலில் கலக்கியுள்ளார். ஆனால், படம் முழுவதும் இவரை 10 பேர் 10 பன்ச் பேசி பில்டப் செய்துக்கொண்டே இருக்கின்றார்கள், அது தான் ஏன் என்று தெரியவில்லை.
பசுபதி நீண்ட இடைவேளைக்கு பிறகு மிரட்டல் வில்லனாக கலக்கியுள்ளார். ஆனால், சமீபத்தில் வந்த கருப்பன் படத்தின் சாயல் மிகவும் அப்பட்டமாக தெரிகின்றது, ஏன் கதையிலேயே தெரிகின்றது. படத்தின் மிகப்பெரும் பலமே செண்டிமெண்ட் காட்சிகள் தான்.
பசுபதி தன் தங்கை பூர்ணா மீது உயிராக இருக்கின்றார், சசிகுமார் தன் தங்கை சனுஷா மீது உயிராக இருக்கின்றார். இவர்கள் இருவரின் பாசத்தில் வென்றது யார் என்ற ஒன்லைனை மிகவும் ஜனரஞ்சகமாக சொல்ல முயற்சித்துள்ளார் முத்தையா? ஆனால், படத்தில் எதற்கு இத்தனை வெட்டுக்குத்து, அதிலும் பாடல் வரிகளில் எல்லாம் ‘உன் தலையை வெட்டி வைப்பேன்’ என்று படம் முழுவதும் வன்முறை தலைவிரித்து ஆடுகின்றது.
படத்தில் பெண்களுக்கான காட்சிகள் மிகவும் அழுத்தமாக உள்ளது, சனுஷா ரேணிகுண்டாவிற்கு பிறகு ஒரு நல்ல கதாபாத்திரம், அதிலும் கிளைமேக்ஸில் பூர்ணாவிடம் சென்று சசிகுமாருக்காக பேசும் காட்சியில் கவர்கின்றார். பூர்ணாவிற்கும் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு அழுத்தமான கதாபாத்திரம், மிரட்டியுள்ளார்.
கதிரின் ஒளிப்பதிவில் கிராமத்து பகுதிகளை கண்முன் கொண்டு வந்துள்ளார். ரகுநந்தன் இசையும் நம்மை அப்படியே அந்த காட்சிகளுக்குள் இழுத்து செல்கின்றது, பின்னணியில் அசத்தியுள்ளார்.
க்ளாப்ஸ்
படத்தின் இரண்டாம் பாதி விதார்த்திற்கு என்ன ஆகும், சசிகுமார் காப்பற்றுவாரா என்ற பரபரப்பு தொற்றிக்கொள்கின்றது.
செண்டிமெண்ட் காட்சிகள் ரசிக்க வைக்கின்றது.
பல்ப்ஸ்
படம் முழுவதும் வரும் வன்முறை காட்சிகள், இன்னும் இதே கதைக்களத்தில் முத்தையா எத்தனை படம் தான் எடுப்பார் என கேட்க தோன்றுகின்றது.
மொத்தத்தில் கொடிவீரன் பேமிலி ஆடியன்ஸ் மனதை வெல்கிறான்.
சொல்வதெல்லாம் உண்மை 1500-வது எபிசோடில் நடந்த கூத்து இது தான்
December 07, 2017சொல்வதெல்லாம் உண்மை என்ற எபிசோட் தமிழகத்தில் எல்லோருக்கும் தெரியும். அந்த அளவிற்கு எலோராலும் அறியப்பட்ட நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் மூலம்...
இந்த நிகழ்ச்சியில் மூலம் பலர் குறைகள் தீர்க்கப்பட்டுள்ளது, ஏன் ஒருவர் கொலை செய்தது கூட தெரிய வந்தது.
இந்நிலையில் இந்த எபிசோர் 1500-வது எபிசோட் சமீபத்தில் வந்தது, இதனால் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு ஸ்பெஷல் சர்ப்ரைஸ் கொடுக்க, அவருடைய கணவரையே வரவைத்தனர்.
மேலும், லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பதிலாக அவரை விஜய் தொலைக்காட்சியில் கிண்டல் செய்த ராமரையே அழைத்து வந்து நிகழ்ச்சியை கலகலப்பாக்கினர்.
சர்ச்சையை கிளப்பிய பட போஸ்டர் !
December 06, 2017ஒரு படத்தின் வெற்றிக்கு சர்ச்சை மிக அவசியம் என கருதப்படும் இந்த காலத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகன் பற்றிய ’12-12-1950′ என...
ஜெயில் ‘பரோல்’ என்பதை மையமாக வைத்து பின்னப்பட்டுள்ள இப்படத்தின் சமீபத்தைய போஸ்டரில் இப்படத்தின் ரிலீஸ் தேதி பற்றியும் பரோல் பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதில் ‘பரோல்’ என்ற வார்த்தையை விரும்பாத சிலர் இப்பட தயாரிப்பாளர்களை தொடர்பு கொண்டு தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி மிரட்டியுள்ளனர்.
இதே போல், சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் இன்னொரு போஸ்டரில், தமிழ் திரையுலம் மூலம் தமிழ் நாட்டின் முதலமைச்சரான நபர்களின் பெயரை குறிப்பிட்டு, அந்த வரிசையில் இப்பட தலைப்பான ’12-12-1950′ யையும் குறிப்பிடப்பட்டது. இந்த போஸ்டரும் பெரும் வரவேற்பை பெற்று பேசப்பட்டது. ஒரு படம் வெற்றி பெற தேவைப்படும் சர்ச்சைகள் ’12-12-1950′ படத்திற்கு நிறையவே கிடைத்துவருகிறது எனக்கூறலாம்.
” படத்தின் மைய்யக்கருத்தை மக்களிடம் கொண்டு பொய் சேர்க்கவேண்டும் என்பதே எங்களது நோக்கம். ‘பரோல்’ என்பது இப்பட கதையின் முக்கிய பங்காகும். ‘பரோல்’ என்ற விஷயம் நமது ஊரில் மிகவும் பேசப்படும் ஒரு தலைப்பாக தற்பொழுது மாறியுள்ளதால்தான் இந்த சர்ச்சையே. இது தற்செயலாக நடந்துள்ள விஷயமே தவிர திட்டமிட்டு நடத்தப்பட்ட செயல் அல்ல. இப்படத்தை வெளியிடுவதற்கு விநியோகத்தார்கள்ளிடையே இருக்கும் ஆர்வம் எங்களுக்கு மிகவும் சந்தோஷத்தை தந்துள்ளது. எந்த ஒரு நடிகரின் ரசிகனும் ரசித்து கொண்டாடப்படும் படம் தான் ’12-12-1950′ ” என்றார் இப்படத்தின் இணை தயாரிப்பாளர் யாகூப் அலி.
வெரி ஸாரி விஜய் ஆண்டனி..! - அண்ணாதுரை விமர்சனம்
December 06, 2017காதலி இறந்துப்போனதால் குடிப்பழகத்திற்கு அடிமையாகி போன ஒருவனின் வாழ்க்கையும், அவனைச் சார்ந்தவர்களின் வாழ்க்கையும் எப்படியெல்லாம் தடைமாறுகிறத...
அண்ணன் அண்ணாதுரை மற்றும் தம்பி தம்பிதுரை என இரட்டை வேடங்களில் விஜய் ஆண்டனி. `தாடி வைத்திருந்தால் அண்ணன், ஷேவ் பண்ணியிருந்தால் தம்பி' எனும் அதே பழைய ஃபார்மட்டில் வந்துபோகிறார். இரண்டு கதாபாத்திரங்களும் இடையே முகத்தில் உள்ள முடியைத் தவிர, வேறு எந்த வித்தியாசத்தையும் விஜய் அண்ணன் காட்டவில்லை. வசன உச்சரிப்பு, உடல்மொழி போன்றவற்றிலும் முந்தைய படங்களில் என்ன செய்தாரோ, அதையே செய்திருக்கிறார். எந்த வித்தியாசமும் காட்டவில்லை. படத்தின் நாயகிகளாக வரும் மூவரில் டயானாவும், ஜுவல் மேரியும் விஜய் ஆண்டனியின் மூத்த அக்காவை போலவும், மகிமா கடைசி தங்கையைப் போலவும் இருக்கின்றனர். நாயகிகளின் பாத்திரத்தைவிட, திரையிலேயே தோன்றாத `எஸ்தர்' கதாபாத்திரம் மனதில் நிற்கின்றது. டபுள் ஹீரோக்களுக்கு ட்ர்பிள் வில்லன்கள். ராதாராவிக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் அவர் பெயரைவிட சிறியது. விஜய் ஆண்டனியின் அப்பாவாக நளினிகாந்த் நடித்திருக்கிறார். பயப்படவேண்டாம், அவர் பெயர் அப்பாதுரை இல்லை. விஜய் ஆண்டனியின் நண்பனாக காளிவெங்கட், தனக்கு கொடுக்கபட்ட கதாபாத்திரத்தில் குறையில்லாமல் நடித்திருக்கிறார்.
படத்திற்குள் உலாவிக் கொண்டிருக்கும் பத்து-பதினைந்து கதைகளையும் பிடித்து எசகுபிசகாக லின்க் அடித்ததில் எக்குதப்பாய் வந்திருக்கிறது திரைக்கதை. எங்கோ ஆரம்பித்து, எங்கெங்கேயோ செல்கிறது படம். திரைக்கதையில் நடக்கும் ஒவ்வொரு மாற்றத்திற்கும் எந்தவித அழுத்தமான காரணங்களும் சொல்லப்படவில்லை. ஒரு காட்சியில் அண்ணன் விஜய் ஆண்டனி, தம்பியைப் பற்றி ’அவன் சின்னப் பையண்டா. இன்னும் அவன் வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கலை’ என பல வயது மூத்தவரைப் போல் பேசிக்கொண்டிருப்பார். இருவரும் இரட்டையர்கள் என்று படத்தில் குறிப்பிடுவார்கள். ’இந்த ஊர் பழி சொல்லுமே தவிர வழி சொல்லாது’, ’நீ செத்துப்போனு சொன்னாலே செத்துப் போயிருவேன், போனு தானே சொல்ற... போறேன்’ என வசனங்களுக்காக மெனக்கெட்டிருக்கிறார் இயக்குநர். ஆனால், படத்திற்கும் கதைக்கும் கதாபாத்திரக்கும் வசனங்கள் ஒட்டவேயில்லை. வட்டிக்காரரிடம் கையொப்பம் போட்டுக்கொடுத்த வெற்றுப் பத்திரத்தை எப்படி மறப்பார்கள், அண்ணாதுரை எதற்காக சம்பந்தேமேயில்லாமல் தம்பிதுரையை போல் மாறுகிறார், ஜூவல் மேரி என்ன ஆனார் என ஏகப்பட்ட கேள்விகள் தொக்கி நிற்கின்றன.
வீண் அலப்பறைகள் ஏதும் இல்லாத ஒளிப்பதிவால், படத்திற்கு ப்ளஸ் மார்க் சேர்த்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் தில்ராஜ். `ஈ.எம்.ஐ' பாடலில் வரும் விஷுவல் எஃபெக்ட்ஸும் கான்செப்டும் செம. விஜய் ஆண்டனியின் இசையில் பாடல்கள் அவ்வளவாக ஈர்க்கவில்லை. பின்னணி இசையும் ஓ.கேதான். இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, இந்த படத்தின் நடிகர் மட்டுமல்ல, படத்தொகுப்பாளரும் கூட. பிசிறில்லாமல் தொகுத்திருக்கிறார். அதேபோல், படத்தை இரண்டு மணி நேரங்களாக சுருக்கியதற்கும் படத்தொகுப்பாளர் விஜய் ஆண்டனிக்கு கோடானக் கோடி நன்றிகள். குழப்பமான கதையும், அழுத்தமே இல்லாத திரைக்கதையும், ஸின்க் ஆகாத வசனங்களும் அண்ணாதுரையை மட்டுமல்ல, நம்மையும் படாதபாடு படுத்திவிடுகிறது.
வரலட்சுமியை அதிமுக வுக்கு இழுக்க முயற்சி? ஆபரேஷன் விஷால் ஆரம்பம்!
December 06, 2017எரிச்சல் முறைச்சல் புகைச்சல் பழிவாங்கல் தண்டித்தல் போன்ற துர் குண விஷயத்தில் அம்மாவை மிஞ்ச ஆளில்லை. ஜெ.வின் துணிச்சலாகவே கருதப்பட்ட இத்தகைய...
விஷாலுக்கு ஆதரவாக கையெழுத்திட்டவர்களில் ஒரு பெண்மணி கிட்டதட்ட கடத்தப்பட்டு சிறை வைக்காத நிலைமைதான். எப்படியோ அடக்குமுறைகளை கையாண்டு விஷாலின் மனுவை தள்ளுபடி செய்துவிட்டார்கள். இப்போது அடுத்த ஸ்டெப் அரங்கேற தொடங்கியிருக்கிறது.
விஷாலை நோகடிக்க வேண்டும் என்றால், அவர் கல்யாணம் செய்து கொள்ளப் போவதாக சொல்லப்படும் வரலட்சுமியை அதிமுக வுக்குள் கொண்டு வந்தால்தான் சரியாக இருக்கும். அதற்கான காய்கள் வெகு கச்சிதமாக நடத்தப்பட்டு வருகிறதாம். விஷாலை காதலித்து வந்தாலும், அப்பா சரத்குமாரிடம் மிகுந்த அன்பும் வைத்திருக்கிறார் வரலட்சுமி. இந்த அதிமுக தூதுவிடு படலம் அப்பாவுக்கும் தெரியும் என்கிறார்கள்.
வெட்டுப்புலி ஆட்டத்தில் வரலட்சுமி சிக்கிக் கொண்டால், அவுட் ஆகப் போகிறவர் விஷால்தான்.
குடும்பத்துல குழப்பம் விளைவிக்கறதுல இப்படியொரு அற்ப சந்தோஷமா? முதல்ல ஆட்சிப்பணியை கவனிங்க ஐயா மாருங்களா….!
இளையதளபதியிடம் அசிங்கப்பட்டாரா ஜுலி!... நடந்தது என்ன?..
December 06, 2017இளையதளபதி நடிக்கும் படத்தில் ஜுலி நடிக்கவுள்ளதாக தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவருடன் தங்கை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக வ...
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் வெறுப்பினை சம்பாதித்த ஜுலி விஜய் 62 படத்தில் நடக்கவிருப்பதாக படக்குழு இன்னும் உறுதிசெய்யவில்லை.
சமீபத்தில் ஆர்யா தன்னை திருமணம் செய்து கொள்ள விரும்புபவர்கள் இந்த நம்பருக்கு தொடர்பு கொள்ளலாம் என்று ஒரு காணொளியினை வெளியிட்டார். ஜுலி, ஆர்யாவிற்கு போன் செய்து அசிங்கப்பட்ட காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
தற்போது விஜய்யுடன் நடிப்பதாக வெளியான தகவலை சாதகமாக்கிய ஜுலி, விஜய்க்கு போன் செய்ததாகவும், ஆனால் அவர் எந்தவொரு மரியாதை கொடுக்காமல் உடனே போனை வைத்துவிட்டார் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியாத நிலையில், ஜுலி விஜய்யுடன் சேர்ந்து நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
விஜய்-முருகதாஸிற்கு இது மிக முக்கியமான படம், ஏன் தெரியுமா?
December 06, 2017விஜய்-முருகதாஸ் கூட்டணி இணைகின்றது என்றாலே ரசிகர்களிடம் ஒரு ஆவல் வந்துவிடும். அந்த வகையில் இந்த கூட்டணி தற்போது மூன்றாவது முறையாக இணைந்துள்...
இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது, இந்நிலையில் விஜய்-முருகதாஸ் இவர்கள் கூட்டணியில் இதற்கு முன் வந்த துப்பாக்கி, கத்தி இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட் ஆனது.
இதை தொடர்ந்து இந்த முறை ஹாட்ரிக் ஹிட் கொடுத்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றது இந்த கூட்டணி, அதே நேரத்தில் முருகதாஸிற்கு கடந்த இரண்டு படங்களுமே தோல்வி.
அதனால், அவரும் மீண்டு எழ வேண்டும் என்ற உற்சாகத்திலேயே இப்படத்திற்கு திரைக்கதை அமைக்கு பணியில் இருக்கின்றாராம்.
எது எப்படியோ தளபதி படம் நன்றாக வந்தால் சரி என்பதே தளபதி ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு.
என்னை நிற்கவிடவில்லை, ஆனால் இவரை ஜெயிக்க வைப்பேன் - விஷாலின் அதிரடி முடிவு
December 05, 2017ஆர்கே நகர் தேர்தலில் விஷால் திடிரென களமிறங்க தொடங்கியதிலிருந்து எதிர்ப்பு வந்தவண்ணம் உள்ளன. தயாரிப்பு சங்க உறுப்பினர்கள் ஒருபக்கம் போராட்டம...
தயாரிப்பு சங்க உறுப்பினர்கள் ஒருபக்கம் போராட்டம் செய்து கொண்டிருக்க மறுபக்கம் விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. மீண்டும் ஏற்பதாக கூறப்பட்டு சில மணி நேரத்தில் மறுபடி நிராகரிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
இது திட்டமிட்ட சதி என்று கூறிய விஷால், மக்களுக்கு நல்லது செய்ய முடிவெடுத்ததற்கு இதுதான் தண்டனையா என்று ஆதங்கத்துடன் கூறினார்.
இதனையடுத்து சுயேட்சை வேட்பாளர்களில் ஒருவருக்கு எனது முழு ஆதரவைத் தந்து ஜெயிக்கவைத்து மக்களுக்கு நல்லது செய்வேன் என கூறியுள்ளார்.
கையெடுத்து கும்பிட்டு கெஞ்சும் விஷால்- உள்ளே நடந்தது இது தான்
December 05, 2017விஷால் ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் மனுவை பார்த்த தேர்தல் ஆணையர் இரண்டு பேர் விஷாலுக்கு எதிராக கையெழுத்...
இதனால், விஷால் மட்டுமின்றி அனைவருமே அப்செட் ஆனார்கள். இதை தொடர்ந்து தேர்தல் ஆணையிரிடம் விஷால் கையெட்டுத்து கும்பிட்டு கெஞ்சினார்.
அவர் பேசுகையில் ‘மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் தான் வந்திருக்கின்றேன், எல்லா போட்டியாளர்களையும் அனுமதித்த நீங்கள், எனக்கு மட்டும் ஏன் வெளியே போன் செய்துவிட்டு வந்து நிராகரித்தீர்கள்’ என கெஞ்சினார்.
இதை தொடர்ந்து பலரும் விஷாலுக்காக தேர்தல் ஆணையிரிடம் கெஞ்சி கேட்டும் அவருடைய வேட்புமனுவை நிராகரித்துள்ளனர்.
விஜய் சேதுபதியின் ரூ 200 கோடி பட்ஜெட் படத்தின் படப்பிடிப்பு தேதி வெளிவந்தது
December 05, 2017தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் விஜய் சேதுபதி. இவர் திரைப்பயணத்தில் மிக முக்கிய படமாக SyeRaa அமையவ...
ஆம், ரூ 200 கோடி பட்ஜெட்டில் உருவாகவிருக்கும் இப்படத்தில் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்க, அமிதாப் பச்சன், சுதீப்புடன் முக்கியமான கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும் நடிக்கவுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு நாளை பிரமாண்டமாக ஐதராபாத்தில் தொடங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்படம் தான் அடுத்த வருடம் இந்திய ரசிகர்களால் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் படமாக இருக்கும் என்று தெரிகின்றது.
விஜய் ஆண்டனிக்கு முதன் முறையாக வந்த சோகம்
December 05, 2017விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர். இவர் நடித்தாலே அந்த படம் தரமானதாக தான் இருக்கும் என்று பலரும் நம்பி செல்வார...
அப்படியிருக்கையில் இவர் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த அண்ணாதுரை அவர் திரைப்பயணத்தில் சந்தித்த மிகப்பெரும் தோல்வி படமாக அமைந்துள்ளது.
இதனால், விஜய் ஆண்டனி கடும் வருத்தத்தில் உள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது, எப்போதும் தரமான கதைகளை தேர்ந்தெடுப்பவர், தற்போது மசாலா பக்கம் சென்று கொஞ்சம் சறுக்கியுள்ளது பலருக்கும் அதிர்ச்சி தான்.
ஆனால், இவர் கையில் தொடர்ந்து படங்கள் இருப்பதால் உடனே கம்பேக் கொடுப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
மனைவியின் ஆசையை நிறைவேற்றாத அம்பேத்கர்! நினைவு தினச் சிறப்புப் பகிர்வு!
December 05, 2017‘‘அய்யா... உங்களால் அதிக நேரம் சலிப்பின்றி, களைப்பின்றி புத்தகங்களை எப்படி வாசிக்க முடிகிறது? அதன் ரகசியத்தை எங்களுக்குச் சொல்லுங்கள். இடைய...
அதே நண்பர்... அவரிடம், ‘‘உங்கள் நூலகம்தான் பெரிய தனியார் இல்ல நூலகம் என்று கூறப்படுகிறதே’’ என்று கேட்கிறார். அதற்கு அந்த நபர், ‘‘அப்படி நான் உங்களிடம் பெருமையாக, இதுதான் உலகின் மிகச் சிறந்த தனியார் நூலகம் என்று கூறிக்கொள்ள மாட்டேன். அதில், சிறந்த தொகுப்புகளைச் சேகரித்து வைத்திருக்கிறேன் என்பதுதான் உண்மை. பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்துக்கு இதனை அளித்துவிடுங்கள். இதை, விலைக்குத்தான் என்னிடம் அவர்கள் கேட்டார்கள். நான் மறுத்துவிட்டேன்’’ என்கிறார் பெருமைபொங்க.
இப்படிப்பட்ட பெருமைக்குரிய மனிதரைப் பற்றி தந்தை பெரியார், ‘‘அவர், இந்தியாவிலேயே தலைசிறந்த அறிவாளிகள் என்று கருதப்படும் சிலரில் ஒருவர். அவர், தனது வாழ்நாள் முழுவதும் மக்களை, அறிவைப் பயன்படுத்துகிறவர்களாகவும் அறிவுக்கு முழுச் சுதந்திரம் கொடுப்பவர்களாகவும் ஆக்கவேண்டும் என்பதற்காகவே பாடுபட்டவர். அவர் நம்மைப்போலவே சாதாரண மனிதர்களில் ஒருவர். சக்திக்கு மேற்பட்ட எந்தவித தெய்வீக சக்தி என்பதோ, தன்மையோ எதுவும் அவரிடத்தில் கிடையாது. அவர் ஒரு மகானோ, மகாத்மாவோ, முனிவரோ, ரிஷியோ, தவசிரஷ்டரோ, வரப்பிரசாதியோ அல்ல... சித்தார்த்தர் எப்படி ஒரு சாதாரண மனிதராக இருந்து மனிதச் சமுதாயத்துக்கு எப்படிப்பட்ட தொண்டு ஆற்றமுடியுமோ, அப்படிப்பட்ட தொண்டாற்றியவர்’’ என்கிறார்.
காலம் கடக்கிறது... நேருவின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கிறார் அந்த நபர். கம்யூனிஸ்ட் கட்சியினர் அவரை, ‘‘காங்கிரஸில் ஐக்கியமாகிவிட்ட பூஷ்வா அமைச்சர்’’ என்று கிண்டலடிக்கின்றனர். அதற்கு அந்த நபர், ‘‘எளிதில் தண்ணீரில் கரைந்தோடும் களிமண்ணைப்போல் நான் இருக்கவில்லை. நான், ஆறுகளைத் திசைதிருப்பிவிடும் உருகிவிடாத கற்பாறை போன்றவன். நான் எங்கிருந்தாலும், எப்படிப்பட்டவரின் நட்பு கிடைத்தாலும் என்னுடைய தனித்தன்மையை எப்போதும் இழக்கமாட்டேன்’’ என்று சாட்டையடி கொடுக்கிறார்.
இப்படிச் சாட்டையடி கொடுத்த அந்த நபர் பின்னாளில் உலகம் மதிக்கும் அளவுக்கு மாமேதையாகிறார். உலகத்தையும், மக்களையும் எப்படி நேசித்தாரோ, அதுபோல் தன் மனைவியையும் நேசித்தார். இப்போதெல்லாம் அரசியல் தலைவர்கள் எங்கே மக்களை நேசிக்கிறார்கள்? பேரம் பேசவும், விடுதியில் இருக்கவும்தானே ஆசைப்படுகிறார்கள். இதைத்தான் பெரியார் அன்றே, “இன்றைக்கு இருக்கும் பெருந்தலைவர்கள் எனப்படும் பலரும் விளம்பரத்தாலும் மற்றவர்களுடைய பாராட்டினாலும் பெரிய ஆள்கள் ஆனார்களே தவிர, தங்களது அறிவினாலோ, அனுபவ ஆராய்ச்சி காரணமாகவோ அல்லது மக்களுக்குப் பயன்படும் வகையில் தொண்டாற்றியமை காரணமாகவோ கிடையாது. அப்படி உண்மையான தொண்டு புரிபவர்களுக்கு மக்களிடத்தில் செல்வாக்கும் புகழும் கிடைப்பதற்குப் பதில் எதிர்ப்பும் வசவுகளும்தான் கிடைக்கும்” என்றார். அதைத்தானே இன்று நம் அமைச்சர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள்.
அம்பேத்கர்பெருமையான விஷயங்களைப் பேசிக்கொண்டிருக்கும்போது சில பிரச்னையான விஷயங்களும் வரத்தானே செய்யும். நெற்கதிரோடு இருக்கும் களைபோல... நாம் களையை நீக்கிவிட்டு மீண்டும் அந்த நபரின் கதைக்குள் வருவோம்... அந்த நபருடைய முதல் மனைவி மிகுந்த கடவுள் பக்திகொண்டவர். ஆகையால், பந்தார்பூர் என்ற ஊரில் இருக்கும் கோயிலுக்குச் செல்ல வேண்டும் ஆசைப்படுகிறார். அதை, தன் கணவரிடம் தெரிவிக்கிறார். அந்தக் கோயிலுக்குள் தாழ்த்தப்பட்டவருக்கு அனுமதி இல்லை... இதனால் தன் மனைவியை அங்கு அழைத்துச் சென்று அவமானப்பட வேண்டாம் என்று நினைக்கிறார். ஆதலால், அவரிடம் அன்புடன் வேண்டுகோள் வைக்கிறார்... அவரும், கணவனின் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து கேட்கிறார். ‘‘கடவுள் சிலையை வணங்குவதை மறந்துவிடு... நம்முடைய ஒழுக்கமான வாழ்வின்மூலம் அடித்தட்டு மக்களுக்குச் சுயநலமின்றிப் பணிபுரிவதன் வழியாக என்றாவது ஒருநாள் நாம் வணங்கக்கூடிய கடவுளை நம்மிடத்திலேயே உருவாக்குவோம்’’ என்கிறார்.
என்ன செய்வார் மனைவி? கணவரின் பேச்சுக்கு எதிர்ப் பேச்சு இல்லாமல் மெளனம் காக்கிறார்; கடைசிவரை தன் ஆசை நிறைவேறாமல் ஒருநாள் மரணித்தே விடுகிறார் அந்த நபரின் மனைவி. தன் மனைவியின் ஆசையை அவர் நிறைவேற்றாதபோதிலும், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக இறுதிவரை போராடினார்; அதில் வெற்றியும் பெற்றார். தாழ்த்தப்பட்ட மக்களுக்காகத் தன் இன்னுயிரையும் ஈந்த அந்த நபர் வேறு யாருமல்ல.. நம் சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர்தான். அவருடைய நினைவுதினம் இன்று. அவர் மறைந்து ஆண்டுகள் எத்தனை கடந்தால் என்ன? அவர் உதிர்த்துவிட்டுச் சென்ற கருத்துகள் இன்னும் பல அம்பேத்கர்களை உருவாக்கிக்கொண்டுதானே இருக்கின்றன.
‘‘ஆடுகளைத்தான் கோயில்களுக்கு முன்பாகப் பலியிடுவார்கள்... சிங்கங்களை அல்ல; நீங்கள் சிங்கங்களாய் இருங்கள்” - ஆம்... அம்பேத்கரைப்போன்று!
அறிஞர்கள் வாழ்வில் சுவையான சம்பவங்கள் - சர். ஐசக் நியூட்டன்
December 05, 2017அமெரிக்க விஞ்ஞானி சர். ஐசக் நியூட்டன் பூமிக்கு புவியீர்ப்பு சக்தி இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்துச் சொன்னவர். அவர் ஒரு சமயம் ஆராய்...
அமெரிக்க விஞ்ஞானி சர். ஐசக் நியூட்டன் பூமிக்கு புவியீர்ப்பு சக்தி இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்துச் சொன்னவர்.
அவர் ஒரு சமயம் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த பொழுது அவரைப் பார்க்க நண்பர் ஒருவர் வந்திருந்தார். அவர் அங்கிருந்த அறைக் கதவில் பெரியதும் சிறியதுமாக இரண்டு துவாரங்கள் வட்டமாக இருந்ததைப் பார்த்தார்.
'அறைக் கதவில் இரண்டு துவாரங்கள் போட்டிருக்கின்றீர்களே அது ஏன்?' என்று நியூட்டனிடம் கேட்டார். அதற்கு நியூட்டன் சொன்னார்: நான் சிறியதும், பெரியதும் என்று இரண்டு பூனைகள் வளர்க்கின்றேன். வீட்டின் அந்த அறையைப் பூட்டிக் கொண்டு வெளியில் போய் விட்டால் பெரிய துவாரம் வழியாக பெரிய பூனையும், சிறிய துவாரம் வழியாக சிறிய பூனையும் அறைக்குள் வருவதற்காகவே இந்த இரண்டு துவாரங்களையும் போட்டிருக்கிறேன்' என்று.
அதற்கு இரண்டு துவாரங்கள் தேவையில்லையே? பெரிய துவரம் வழியாகவே இரண்டு பூனைகளும் வந்து விடலாமே' என்று நண்பர் கூறியதும், விஞ்ஞானி நியூட்டன் திடுக்கிட்டார். 'ஆமாம், நீங்கள் சொல்வது சரி தான். எனக்கு இந்த யோசனை தோன்றவில்லையே' என்று கூறியவர் சிறிய துவாரத்தையும் அடைக்கச் சொன்னார்.
அண்ணாதுரை அனைவருக்கும் பிடிக்கும். பார்க்கலாம்.
December 05, 2017இப்போதெல்லாம் படங்களுக்கு கடும் போட்டி உண்டு. போட்டிக்கு நடுவிலும் சில படங்களுக்கு சற்று எதிர்ப்பார்ப்பு அதிகம் உண்டு. நடிகர் என்பதால் மட்ட...
அப்படியாக விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் அண்ணாதுரை. சரி இந்த துரை என்ன சொல்கிறார் என பார்க்க படத்திற்குள் போவோமா...
கதைக்களம்
படத்தில் அண்ணாதுரை, தம்பிதுரையாக இருவரும் விஜய் ஆண்டனி தான். எளிமையான குடும்பம். அப்பா துணிக்கடை நடத்தி வருகிறார். அண்ணன் விஜய் ஆண்டனிக்கு பித்து பிடித்தது போல வேலையில்லாமல் குடியே குடி என இருப்பார். அவருக்கு ஒரு சோக பின்னணி இருக்கிறது.
தம்பி விஜய் பள்ளிக்கூடத்தில் வாத்தியார். உடனே சைத்தான் படத்தை நினைத்து விடாதீர்கள். இவர் வேறு துறையில் வாத்தியார். இவருக்கு ஒரு காதல் பின்னணி. டயானாவுடன் போகிற போக்கில் வந்த காதல் தான்.
போலிஸ் பெண் ஒருவர் காம வக்ர புத்தி கொண்ட கயவர்கள் இடத்தில் மாட்டிக்கொள்கிறார். அவர்களிடம் இருந்து அப்பெண்ணை காப்பாற்றி வீடு சேர்க்கிறார். விஜய் ஆண்டனியின் அப்பா ஊரில் வியாபாரிகள் நல சங்க தலைவர்.
தன் நண்பன் காளி வெங்கட்க்காக கடன் வாங்கி கொடுத்து உதவி செய்ய போய் கந்து வட்டி கும்பலிடம் சிக்குகிறார். ஆனால் அந்த கும்பல் வேறு விதத்தில் காய் நகர்த்துகிறது. எதிர்பராத விதமாக அண்ணா மீது கொலை பழி விழுகிறது.
இதற்கிடையே குடும்பத்திற்குள் சிக்கல், போலிஸ் வலை வீச்சு, எதிர்பாராத சோகங்கள், தம்பியின் திருமணம் என எல்லாம் கேள்விக்குறியாகி இருக்கிறது. அண்ணன் விஜய் என்ன ஆனார், அவரின் குடும்பம் என்ன ஆனது. அண்ணாதுரை பித்தன் போல் இருப்பதன் பின்னணி என்ன என்பது தான் கதை.
படத்தை பற்றிய அலசல்
விஜய் ஆண்டனியின் படங்கள் என்றால் மக்கள் மத்தியில் இடம் பிடிக்கும் என்ற நம்பிக்கை சினிமாவில் உள்ளது. கதையின் தாக்கம் நாட்கள் நகர்ந்தாலும் நிற்கும் என சொல்லலாம். அப்படியாக அவரின் பிச்சைக்காரன் இடம் பிடித்தது. இந்த அண்ணாதுரை அரசியல் படமாக இருக்கும் என செவி வழி செய்தியாக சொல்லப்பட்டது.
ஆனால் இப்படத்தில் எதிர்பாராத ட்விஸ்ட் வைத்திருக்கிறார். அவரின் நடிப்பு எப்போது எதார்த்தம் என்பதை இப்படமும் சொல்லியிருக்கிறது. படத்தில் நடிகர் காளி வெங்கட் உடன் இயல்பான காமெடி.
கதைக்குள் தான் காமெடி என்ற லாஜிக்கை சரியாக காண்பித்திருக்கிறார் இயக்குனர். அண்ணன் விஜய்யின் ஆண்டனி மீது ஜீவல் மேரியின் காதல் காளி வெங்கட்க்கு ஷாக். ஏன் என்பதை படத்தில் பாருங்கள். ஓகே.
சில இடங்களில் தானாக சிரிப்பு வந்து விடும். தம்பியாகவும் அண்ணாகவும் இவர் டூயல் ரோலில் காண்பித்ததில் கூர்மையாக கவனித்தால் தான் வித்தியாசம் புரியும் என சொல்லுமளவுக்கு நடித்திருக்கிறார்.
விஜய் ஆண்டனியின் படத்தில் வரும் ஹிரோயின்கள் எங்கிருந்தாவது வருவார்கள் என்பது போல இங்கே வந்திருக்கும் தியானா தன்னுடைய ரோலை சரியாக அவருக்கு ஈடுகொடுத்திருக்கிறார்.
படத்தில் ஸ்டோரிக்கேற்ற பிஜிஎம். ஜி.எஸ்.டி டூயட் பாடல் என சில விசயங்கள் நினைவில் நிற்கும். முன் பாதி மெதுவாக நகர்ந்தாலும் இரண்டாம் பாதி ஜூட் ஆகிறது.
கிளாப்ஸ்
விஜய் ஆண்டனியின் ரியாக்ஷன் இரண்டு ரோலிலும் குட். நூலிழையில் தான் வித்தியாசம்.
கதையை தேர்வு செய்த விதம் ஓகே. அவருக்கான படம் இது என நினைவூட்டுகிறார்.
இயக்குனர்கள் காட்சிகளை கனெக்ட் செய்தவிதம் ஓகே. ட்விஸ்ட் ரிவீல் ஒர்க்கவுட் செட்டானது.
பல்பஸ்
அண்ணன் விஜய்யை காண்பித்திருக்கும் போது திடீரென தம்பிக்கு இண்ட்ரோ கொடுப்பது மிஸ் மேட்சிங்.
முதல் பாதி மென்மையாக போய் மெதுவாக இண்டர்மிஷன் கொடுப்பது சம்திங் டிஃப்ரண்ட்.
படத்தை இன்னும் கொஞ்சம் கிரிஷ்ப் ஆக்கியிருக்கலாம். பாடல்கள், காமெடி என கூடுதல் கவனம் இல்லை.
மொத்தத்தில் அண்ணாதுரை அனைவருக்கும் பிடிக்கும். பார்க்கலாம்.
திரைவிமர்சனம் -திருட்டு பயலே-2 - அறிமுகம் இல்லாத நபர் யார் கொஞ்சம் உரிமை எடுத்து நம்மிடம் பேசினாலும் ஒரு நொடி திருட்டு பயலே-2 நினைவிற்கு வரும்.
December 05, 2017தமிழ் சினிமாவில் ஒரு படம் ஹிட் ஆனால், அதன் இரண்டாம் பாகம் வருவது தான் ட்ரெண்ட். இவை ஹாலிவுட்டில் மட்டும் இத்தனை நாட்கள் நிகழ்ந்து வர தற்போத...
கதைக்களம்
பாபி சிம்ஹா காவல்துறையில் நேர்மையாக ஒரு நபராக தன் வாழ்க்கையை ஆரம்பிக்கின்றார். தன் பணியில் என்றும் நேர்மையாக உள்ளதால் பல ஊர்களுக்கு மாற்றுகின்றனர், காரைக்குடியில் இருக்கும் அமலா பாலை காதலித்து திருமணம் செய்து சந்தோஷமாக வாழ்கின்றார்.
அப்போது பெரிய மந்திரி, முக்கிய பிரமுகர்கள் செய்யும் திருட்டு வேலையை கண்டுபிடிக்க பாபி சிம்ஹாவை ஒரு ரகசிய வேலையை செய்ய சொல்கின்றனர். அதாவது அவர்கள் பேசும் போன் கால்களை ஒட்டு கேட்கும் வேலை.
அப்படி பாபி சிம்ஹா ஒட்டு கேட்கும் போது அதில் பிரசன்னா பல திருமணம் ஆன பெண்களை மயக்கி பேசி வருவது தெரிகின்றது. ஒரு நாள் யதார்த்தமாக அந்த போன் காலில் அமலா பால் வாய்ஸ் கேட்க, அதை தொடர்ந்து பாபி சிம்ஹாவிற்கும், பிரசன்னாவிற்கும் நடக்கும் ஆடுபுலி ஆட்டமே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
பாபிசிம்ஹா தன் திரைப்பயணத்தில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளார் போல, கருப்பனை தொடர்ந்து இதிலும் தனக்கான கதாபாத்திரத்தில் நன்றாக நடித்துள்ளார். ரொமான்ஸில் கொஞ்சம் முன்னேற்றம் அடைந்துள்ளார், ஆனால், இன்னும் சில இடங்களில் சொதப்பல் தெரிகிறது.
பிரசன்னா இவரை இதுபோல் ஒரு சில படங்களில் பார்த்திருப்போம், ஆனால், ஒரு சாப்ட்வேர் இன்ஜினியராக இருந்துக்கொண்டு பல பெண்களை இவர் மயக்குவது, பாபிசிம்ஹாவிடம் மாட்டிக்கொண்டு கூட அவர் அலட்டிக்கொள்ளாமல் அவரிடமே டீல் பேசுவது என மிரட்டியுள்ளார். இன்னமும் பிரசன்னாவை தமிழ் சினிமா எப்போது தான் நன்றாக பயன்படுத்துமோ? என்று கேட்க தோன்றுகின்றது.
முதல் பாகத்தில் அப்போது பேமஸாக இருந்த வீடியோ மூலம் பணம் பறிக்கும் வேலையை காட்டிய சுசி, இந்த படத்தில் அட்வான்ஸ் டெக்னாலஜி மொபைலை கையில் எடுத்திருப்பது சூப்பர். அதிலும் அறிமுகம் இல்லாத நபர்கள் எப்படி ஒரு பெண்ணை மயக்க திட்டம் போடுகின்றார்கள், பேஸ்புக்கில் எப்படியெல்லாம் வேலை செய்கின்றார்கள் என்று காட்டிய விதம் பலருக்கும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் கொடுக்கலாம், ஒரு சிலர் உஷார் ஆகி திருந்த கூட செய்யலாம்.
நிகழ்காலத்தில் நம் வாழ்க்கையில் பயன்படுத்தும் டெக்னாலஜிகளின் ஆபத்தை காட்டியதற்காகவே பாராட்டலாம். அதே சமயத்தில் திருட்டு பயலே முதல் பாகத்தில் ஒரு எளிமை, யதார்த்தம் இருந்தது, அந்த விஷயத்தில் திருட்டு பயலே 2 கொஞ்சம் செயற்கை மிஞ்சி உள்ளது. படத்தின் முதல் பாதி பிரசன்னா அறிமுகம் வரை மெதுவாகவே நகர்கின்றது.
வித்யாசாகர் நீண்ட இடைவேளைக்கு பிறகு கலக்கியுள்ளார், அதிலும் பின்னணி இசையில் ஒலிக்கும் அந்த திருட்டு பயலே பாடல் ரசிக்க வைக்கின்றது, செல்லத்துரை ஒளிப்பதிவும் சிறப்பு.
க்ளாப்ஸ்
இன்றைய தலைமுறைகள் சந்திக்கும் பிரச்சனையை அழகாக எல்லோருக்கும் புரியும் படி திரைக்கதை அமைத்து எடுத்தது.
பிரசன்னாவின் நடிப்பு, சைக்கோத்தனமாக அவர் செய்யும் வேலைகள், நிதானமாக பாபி சிம்ஹாவை டீல் செய்து அலையவிடும் இடம் என கலக்கியுள்ளார்.
பாபிசிம்ஹா, அமலா பால், பிரசன்னா மூவரும் ஒரு இடத்தில் சந்தித்து ஒருவரை ஒருவர் ஏமாற்றுவதாக நினைத்து நடிக்கும் காட்சி விசில் பறக்கின்றது.
பல்ப்ஸ்
முதல் பாதி திரைக்கதை கொஞ்சம் மெதுவாக செல்கின்றது.
கிளைமேக்ஸ் இன்னமும் அழுத்தமாக இருந்திருக்கலாம்.
மொத்தத்தில் அறிமுகம் இல்லாத நபர் யார் கொஞ்சம் உரிமை எடுத்து நம்மிடம் பேசினாலும் ஒரு நொடி திருட்டு பயலே-2 நினைவிற்கு வரும்.
விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதன் பின்னணி! நடந்தது என்ன
December 05, 2017நடிகர் விஷால் சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனுதாக்கல் செய்திருந்தார். மாலை 5 மணியளவில் எடுத்துக்கொள்ள...
மேலும் காவல் துறையால் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து தரப்பில் சில விசயங்கள் வெளியாகியுள்ளது. இதன் படி வேட்பு மனுவில் விஷாலுக்கு ஆதரவாக முன்மொழிந்தவர்களில் இருவரின் கையெழுத்து போலி என கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த இருவர் நேரில் வந்து இது தங்கள் கையெழுத்து அல்ல என கூறினார்களாம்.
மேலும் விஷால் பல்வேறு வங்கிகணக்குகளை மறைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் அவர் மீது வழக்கு பாயும் நிலை உள்ளது
மீண்டும் முருங்கை மரம் ஏறிய நயன்தாரா!
December 04, 2017தங்கம் தங்கம் என்று தாங்கிக் கொண்டிருந்தது வேலைக்காரன் டீம். இதற்கு முன் நயன்தாரவை விக்னேஷ் சிவன் பட ஷுட்டிங்கில் கூட அப்படி தாங்கியிருக்க ...
பல கட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பிறகுதான் இப்படத்தில் நடிக்கவே ஒப்புக் கொண்டார் நயன். அதுவும் சிவகார்த்திகேயனுக்காக. மற்ற படங்களை விட, இங்கு சற்று அதிகமாக படியளந்தார்கள். ஏராளமான சுதந்திரம் இருந்தது அவருக்கு.
இதற்கு நடுவில்தான் அறம் படம் வெளிவந்தது. முதன்முறையாக அப்படத்தின் பிரமோஷன் விவகாரங்களில் கலந்து கொண்டார் நயன். படம் வெளியான அதே தினம் அவர் சில தியேட்டர்களுக்கும் நேரடி விசிட் அடித்தார். இதையடுத்து மீடியாவில் ஒரே நயன்தாரா புராணம்தான். அவர் மாறிவிட்டார். இனி அவர் நடிக்கும் பட பிரமோஷன்களில் கலந்து கொள்வார் என்றெல்லாம் எழுதினார்கள். பேசினார்கள். காத்திருந்தார்கள் வேலைக்காரன் ஆடியோ ரிலீசுக்காக.
ஆனால் எல்லாம் மாயை என்பது நேற்றுதான் உரைத்தது. யெஸ்… சென்னையிலேயே பிரமாண்டமான ஓட்டலில் ஏராளமான பொருட் செலவில் நடத்தப்பட்ட அந்த விமர்சையான விழாவுக்கு வரவேயில்லை நயன்தாரா. ‘மேம்… நீங்களும் இங்கு வந்திருந்தா எவ்வளவு நல்லாயிருந்திருக்கும்? நாங்க உங்களை மிஸ் பண்றோம்’ என்று மேடையிலேயே தன் கவலையை வெளிப்படுத்தினார் தொகுப்பாளினி டி.டி.
சிவகார்த்திகேயன் மாதிரியான ‘பிரண்ட்லி’ ஹீரோக்களுக்கே ‘அக்லி’ முகம் காட்றீங்களே… உங்களையெல்லாம் எந்த லிஸ்டில் வைப்பது தலைவி?
இனி நடிக்கப் போவதில்லை! சிவகார்த்திகேயன் அறிவிப்பு!
December 04, 2017‘அட… உங்க தலைப்புல தீய வைக்க’ என்று அதிர்ச்சி வருகிறதல்லவா? அந்த அதிர்ச்சி இனிமேல் ரங்கநாதன் தெரு வியாபாரிகளுக்கு வந்தால் ஆச்சர்யமில்லை. ஏன...
தமிழின் முன்னணி ஹீரோக்கள் பலர், எக்ஸ்ட்ரா துட்டு பார்த்து வருவதே விளம்பர படங்களில்தான். அதுவும் தமிழ் ஹீரோ யாருமே வாங்காத பெருத்த சம்பளத்தை போத்தீஸ் விளம்பரத்திற்காக வாங்கினார் கமல். நான்கு நாட்கள் கால்ஷீட். பத்து கோடி சம்பளம்! அஜீத் ‘ம்….’ சொல்வாரா என்று காத்துக்கிடக்கின்ற கார்ப்பரேட் விளம்பரக் கம்பெனிகள் ஏராளம். எப்பவோ விஜய் நடித்த கோக் விளம்பரத்தை இப்பவும் இழுத்து வச்சு செய்கிறார்கள் அஜீத் ரசிகர்கள்.
இந்த லிஸ்ட்டில் சிவகார்த்திகேயனுக்கும் ஒரு இடம் இருக்கிறது. ஆனால் குழியில் விழுவதற்கு முன்பே சுதாரித்துக் கொண்டிருக்கிறார் அவர். நேற்று சென்னையில் மிக மிக பிரமாண்டமாக நடந்த ‘வேலைக்காரன்’ ஆடியோ வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் அறிவித்த விஷயம் நிஜமாகவே பாராட்டுக்குரியதுதான்.
நான் இதுவரைக்கும் ஒரேயொரு விளம்பர படத்தில்தான் நடிச்சுருக்கேன். இனிமேல் எந்த விளம்பரப் படங்களிலும் நடிக்கப் போவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன். அதற்கு காரணம் வேலைக்காரன் படத்தின் கதைதான். இது குறித்து நான் அதிகம் விளக்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறேன். விளக்கினால் கதையை சொன்ன மாதிரி ஆகிவிடும். படம் வந்த பின்பு நான் ஏன் இப்படியொரு முடிவெடுத்தேன் என்பது உங்களுக்கு தெரியும் என்றார் சிவா.
திரையுலகத்தின் முக்கிய இடத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனின் இந்த முடிவை, பாரபட்சமில்லாமல் அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள் என்பது நிச்சயம்.
ஆர்.கே.நகர் தேர்தலில் நிற்பதே இதற்காக தான்! விஷாலின் உண்மை
December 04, 2017நடிகர் விஷால் ஏற்கனவே தென்னிந்திய நடிகர் சங்கத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் செயலாளர் ஆனார். பின் அதிரடி நடவடிக்கைகள் பலவற்றை எடு...
அதன் பின் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிட்டு தலைவராக வெற்றி பெற்றார். இந்நிலையில் அவர் தற்போது சென்னை ஆர்.கே நகர் தேர்தலில் சுயேட்சையாக நிற்கிறாராம்.
வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். தற்போது அவர், தேர்தலில் போட்டியிடுவது அரசியல்வாதியாக ஆக வேண்டும் என்பதற்கல்ல. அங்குள்ள மக்களில் ஒருவனாக தான் நான் நிற்கிறேன்.
அவர்களின் தேவைகளை செய்து கொடுக்கும் பிரதிநிதியாக தான் நான் இருப்பேன். அந்த மக்கள் தங்கள் அடிப்படை தேவைகளுக்காக தான் போராடுகிறார்கள்.
அதை செய்துகொடுக்க வேண்டும் என்பதே என் எண்ணம். ஜெயிக்கிறோம், தோற்கிறோம் என்பது முக்கியமல்ல என அவர் இன்று காலை FM ஒன்றில் போன் மூலம் தெரிவித்திருந்தார்.
இந்தியாவில் மட்டும் இத்தனை கோடிகள் வசூலா தோர் மற்றும் Justice league
December 04, 2017இந்தியாவை பொறுத்தவரை ஹாலிவுட் படங்களுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வகையில் மார்வல் மற்றும் டிசி காமிக்ஸ் படங்களுக்கு உலகம் ம...
இந்நிலையில் டிசி காமிக்ஸ் வெளியிடான Justice league உலகம் முழுவதும் பல ஆயிரம் கோடி வசூல் செய்துள்ளது நிலையில் இந்தியாவில் மட்டும் இப்படம் ரூ 45 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.
அதேபோல் மார்வல் காமிக்ஸின் தோர் மூன்றாவது பாகம் இந்தியாவில் மட்டும் ரூ 65 கோடி வரை வசூல் செய்துள்ளது. இன்று வரை ஹாலிவுட் படங்களில் இந்தியாவில் அதிகம் வசூல் செய்த படங்களில் தி ஜங்கிள் புக் ரூ 250 கோடி வசூல் செய்ததே இன்றும் முதலிடத்தில் உள்ளது.
விஷாலுக்கு வேற லெவல் வரவேற்பு, டெல்லியில் இருந்து வந்த வாழ்த்து
December 04, 2017விஷால் தொட்டதெல்லாம் வெற்றி என்பது போல் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கத்தில் வெற்றி பெற்றார். அதை தொடர்ந்து தற்போது ஆர்.கே.நகர் தேர்தலிலு...
இன்று நாமினேஷன் தாக்கல் செய்ய வந்த விஷாலுக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுத்தனர், இதை தொடர்ந்து மக்கள் கூட்டம் அங்கு அலை மோதியது.
மேலும், விஷால் தேர்தலில் நிற்பதற்கு பல பகுதிகளில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது, குறிப்பாக டெல்லியில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் விஷால் அரசியலுக்கு வருவது இளைஞர்களுக்கு ஒரு முன் உதாரணமாக இருக்கும் என்று கூறி தன் வாழ்த்தை பதிவு செய்துள்ளார்.
எந்த பக்கம் தலை வைத்து படுக்க வேண்டும்?
December 03, 2017எந்த பக்கம் தலை வைத்து படுக்க வேண்டும்? தன்னுடைய சொந்த வீட்டில் கிழக்கு திசையில் தலை வைத்து படுக்க வேண்டும். மாமனார் வீட்டில் தெ...
எந்த பக்கம் தலை வைத்து படுக்க வேண்டும்?
தன்னுடைய சொந்த வீட்டில் கிழக்கு திசையில் தலை வைத்து படுக்க வேண்டும்.
மாமனார் வீட்டில் தெற்கு திசையில் தலை வைத்து படுக்க வேண்டும்,
வெளியூரில் தங்கும்போது மேற்கு திசையில் தலை வைத்து படுக்க வேண்டும்,
ஆனால் எக்காரணம் கொண்டும் எப்போதும் வடக்கு திசையில் தலை வைத்து படுக்கக் கூடாது என்று கூறுகின்றனர் சான்றோர்கள்.
கெட்ட கனவு வருகிறதா:
சிலருக்கு அடிக்கடி கெட்ட கனவுகள் வந்து தொல்லை கொடுக்கும் அவர்களின் அலைபாயும் மனது தெளிந்த நீரோடை போல் இருந்தால் அந்த பிரச்சினை வரவே வராது. அதற்கு ஒரு சுலோகமும் உள்ளது.
ராமம் கிருஷ்ணம் ஹனுமந்தம்
வைணதேயம் விருகோதரம் சயனே,
யஸ் ஸ்மரேன் நித்யம்
துஸ்வட்னம் தஸ்ய நஸ்யதி.
தூங்கும் முன் இந்த சுலோகத்தை சில முறை மனதார கூறி பிரார்த்தனை செய்யுங்கள். ஆழ்ந்த தூக்கம் வரும். கெட்ட கனவுகள் வரவே வராது
தவறாக புரிந்து கொண்டுள்ள ஏழு அறிவியல் உண்மைகள்!
December 03, 2017என்னதான் அறிவியல் வளர்ந்தாலும், மக்கள் சில விடயங்களை தவறாக புரிந்து கொண்டுள்ளனர். வைரம் வைரம் என்பது மிக உயர்ந்த விலையுள்ள ஆப...
என்னதான் அறிவியல் வளர்ந்தாலும், மக்கள் சில விடயங்களை தவறாக புரிந்து கொண்டுள்ளனர்.
வைரம்
வைரம் என்பது மிக உயர்ந்த விலையுள்ள ஆபரணம் ஆகும் . இது எங்கிருந்து கிடைக்கிறது என்று தெரியுமா, ஆம் பூமிக்கு அடியில் புதைந்துள்ள இறுகிப்போன நிலக்கரியில் இருந்து தான் இந்த அரிய வகை வைரம் நமக்கு கிடைக்கிறது.
ஆனால் இது எந்த ஆழத்திலிருந்து கிடைக்கிறது என்பது எத்தைனை பேருக்கு தெரியும்.
அனைவரும் இது பூமிக்கு அடியில் 2 மையில் தொலைவில் கிடைக்கும் என்று கருதியிருப்பார்கள்.
ஆனால் பூமிக்கு அடியில் 90 மையில் தொலைவில் தான் இந்த வைரம் இருக்கும்.
வௌவால்
வௌவால் ஒரு வித்தியாசமான உயிரினம், இவைகளுக்கு கண்கள் இல்லை என்பது உண்மைதான்.
ஆனால் இந்த உரினத்தால் பார்க்கவும் முடியும் . இவைகள் தங்கள் மீஒலி எனப்படும் சத்தத்தை எழுப்பி அதன் மூலம் தனக்கு எதிரில் என்ன பொருள்கள் இருக்கின்றது என்பதை உணர்ந்து கொள்ளும் தன்மை கொண்டது.
சுத்தமான தண்ணீர்
சுத்தமான தண்ணீரில் அவ்வளவாக மின்சாரம்பாயாது. ஆனால் தண்ணீரில் நின்று மின்சாரக் கம்பியய் பிடித்தால் மின்சாரம் பய்கிறதே அது ஏன் என்று கேட்கலாம்.
பொதுவாக தண்ணீரில் பல வகையான மினரல்கள் மற்றும் அழுக்குகள் படிந்திருப்பதால் அதில் மின்சாரம் பாய்கிறது.
ஆனால் சுத்தமான நீரில் இப்படிப்பட்ட தாதுக்கள் இல்லாதிருப்பதால் மின்சாரம் பாய்வதில்லை.
மருக்கள்
மனிதனின் மருக்கள் உருவாகக் காரணம் தவளைகள் மற்றும் தேரைகள் என்று பலரும் கருதுகின்றனர் இது தவறான கூற்றாகும்.
இதற்கு காரணம் தேரைகள் அல்ல, மனிதர்கள் தான், மருக்கள் இருக்கின்ற ஒருவரிடம் கைகளைக் குலுக்கினால் இவ்வாறான மருக்கள் தோன்றும் என்று அறிவியல் அறிஞர்கள் பலர் கூறியுள்ளார்கள்.
தீக்கோழி
தீக்கோழியை யாராவது அச்சுறுத்தினால் அவற்றின் தலையை மணலில் புதைத்துக்கொள்ளும் என்று சிலர் கூறுவார்கள்.
ஆனால் அவற்றினை அச்சுறுத்தினால் அவைகள் இறந்தவைகளைப் போல செயல்பட்டு தப்பிக்க முயலுமாம்.
மனித இரத்தம்
மனிதன் இறந்த பின்பு மனித இரத்தம் பார்ப்பதற்க்கு நீலமாகவோ அல்ல அடர்ந்த சிவப்பு நிறமாகவோ இருக்காது.
ஆனால் தோலின் வழியாக பார்த்தால் இரத்தமானது எப்பொழுதும் நீல நிறமாகவே காட்சியளிக்கும்.
வெத்துவேட்டு நகுலின் குத்துப்பாட்டில் எம்.ஜி.ஆர்! அடுக்குமா இது?
December 03, 2017எம்.ஜி.ஆர் காலத்தில் குத்துப்பாட்டு இல்லைதான். (ஆடலுடன் பாடலைக் கேட்டு… பாடல் ஃபார்ஸ்ட் பீட். ஆனால் குத்துப்பாட்டு இல்லை) அப்படியே இருந்தால...
மலையாளத்தில் முன்னணி ஹீரோக்களை வைத்து ஐந்து படங்களை இயக்கியிருக்கும் ராஜ்பாபு என்பவர்தான் இப்படத்தை இயக்கியிருக்கிறார். ஒரு பாடல் காட்சியில் நகுல் எம்.ஜி.ஆர் போல தொப்பி, வேஷ்டி, கண்களில் கூலிங் கிளாஸ் அணிந்தபடி குத்துப்பாட்டுக்கு ஆடுகிறார். ஒரு முழு பாடலில் சிறிதளவே வரும் இந்த காட்சி ரசிகர்களை கவலைப்பட வைக்கும் என்பது மட்டும் நிச்சயம்.
ஆனால் இது குறித்தெல்லாம் நகுல் கவலைப்பட்டதாக தெரியவில்லை. இந்தப்படத்தின் பிரஸ்மீட்டில் பேசிய நகுல், இந்த எம்ஜிஆர் வேஷம் குறித்த எந்த விபரங்களையும் பதிவு செய்யாமல் கவனமாக இருந்தார்.
சரவெடி சரவணன் என்ற சாதாரண இளைஞன் எப்படி சினிமா நட்சத்திரம் ஆகிறான் என்பதுதான் கதையாம். நீங்க நடிகனாகுங்க…. சூப்பர் ஸ்டாரா கூட ஆகுங்க…. எதுக்கு எம்ஜிஆரை அவமானப்படுத்தணும்?
அரசியலுக்கு வரும் ரஜினி கமல்! சத்யராஜ் செம நக்கல்!
December 03, 2017அமைதிப்படை மாதிரியான அதிரடி அரசியல் படங்களில் நடித்தவர்தான் சத்யராஜ். அவருக்கே சில ஹீரோக்களின் அரசியல் என்ட்ரி ஐயே என்று இருக்கிறது போலும்....
ரம்யா நம்பீசன், ஆனந்தராஜ், படத்தின் இசையமைப்பாளர் சைமன் கே கிங் ஆகியோர் பேசி முடித்ததும் மைக்கை தொட்டார் சத்யராஜ். ‘இங்கு சிபிராஜ் நல்லா பேசினார். ஆர்.கே.நகர்ல போய் பேசுற அளவுக்கு கூட அவருக்கு திறமை வந்திருச்சோன்னு நினைச்சேன். ஆனால் அரசியல் ஆசையெல்லாம் இப்ப வேணாம். அதுக்கெல்லாம் வயசாகியிருக்கணும்…’ என்று கூறிவிட்டு உதட்டை கடித்துக் கொண்டவர், ‘நான் வேற… என்னென்னவோ பேசிகிட்டு’ என்றார் புன்னகை வழிய. அவர் ரஜினியையும் கமலையும்தான் கிண்டல் செய்கிறார் என்பதை புரிந்து கொண்டு சிரித்தது கூட்டம். சினிமாவிலிருந்து ஓய்வு பெற்றபின் ஒரே போக்கிடம் அரசியல்தான் என்பதை போல சத்யராஜ் பேசியது நகைச்சுவை என்றாலும் நிஜமும் அதுதானே?
தெலுங்கில் வெளிவந்து ஹிட்டடித்த ஷனம் படத்தைதான் சத்யா என்ற தலைப்பில் ரீமேக் செய்திருக்கிறார்கள். படத்தின் ரீமேக் ரைட்ஸ் வாங்குவதற்கு முன் பாகுபலி படப்பிடிப்பில் இருந்தாராம் சத்யராஜ். படத்தின் ஹீரோ பிரபாஸ்சிடம் இந்த விஷயத்தை தெரிவிக்க, அவர்தான் ஷனம் படத்தை நம்பி வாங்குங்க என்றாராம் சத்யராஜிடம்.
விஜய் ஆன்டனியின் சிபாரிசின் பேரில் சைத்தான் பட இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தியை இயக்க வைத்திருக்கிறார் சிபிராஜ்.
இவருக்கு ஜோடி ரம்யா நம்பீசன். பேசும்போது, மிகவும் ஒழுக்கமான நேர்மையான சத்யா படத்தின் டீமுடன் பணியாற்றியது எனக்கு மகிழ்ச்சி என்றார். இந்த வார்த்தைகளில் அடங்கிய பாராட்டுகள் ஓகே. ஒழுக்கமான நேர்மையான என்று சொன்னீங்களே… அப்படின்னா நீங்க நடிச்ச முந்தைய படங்கள்ல?
டவுட்டை கிளம்பிட்டீங்களே தாயீ?
கொழுப்பைக் குறைக்க ஒரு டஜன் டிப்ஸ்!
December 03, 2017'இன்றைக்கு 'கொலஸ்ட்ரால்’ என்ற பெயரைச் சொன்னாலே, ஏதோ மிகப் பெரிய அபாயகரமான நோயாகத்தான் பார்க்கப்படுகிறது. உண்மையில் கொலஸ்ட்ரால் அ...
நம் உடல் செல்கள் உற்பத்தி செய்வதற்கும், சில ஹார்மோன்கள் சுரப்பதற்கும் கொலஸ்ட்ரால் அவசியம். மொத்தக் கொழுப்பும் எல்டிஎல் கொலஸ்ட்ரால், எச்.டி.எல். கொலஸ்ட்ரால், ட்ரைகிளிசரைட்ஸ் என்று பிரிக்கப்படுகிறது. நகர்ப்புற இந்தியர்கள் மத்தியில் நல்ல கொழுப்பான ஹெச்.டி.எல். 35 மி.கி என்ற மிகக்குறைந்த அளவிலேயே காணப்படுகிறது' .
.
கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த எளிய வழிகள்
அதிகப்படியான உடல் எடையைக் குறைப்பது, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது, உடற்பயிற்சி என வாழ்க்கை முறையில் நாம் செய்யும் சின்னச் சின்ன மாற்றங்கள், கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும்.
1. கொலஸ்ட்ரால் அளவை அறிந்துகொள்ளுதல்
கொலஸ்ட்ரால் அளவு எவ்வளவு உள்ளது என்பது தெரிந்தால்தான், அதை எவ்வளவு கட்டுப்படுத்த வேண்டும் என்பதைத் திட்டமிட முடியும். எனவே, குறைந்தது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை முதலில் பரிசோதிக்க வேண்டும். உடலில் கெட்ட கொழுப்பு அதிகரிப்பதைத் தடுத்து, நல்ல கொழுப்பு அதிகரிக்கச் செய்ய, பரிசோதனை முடிவுகள் உதவும்.
2. நல்ல கொழுப்பைத் தேர்ந்தெடுத்தல்
நாம் என்ன சாப்பிடுகிறோமோ, அது நேரடியாக நம் உடலில் கொழுப்பு சேருவதில் தாக்கத்தை ஏற்படுத்திவிடும். நார்ச் சத்துள்ள உணவு, கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும். சாச்சுரேட்டட் ஃபேட் (நிறைவுற்ற கொழுப்பு) மற்றும் டிரான்ஸ் ஃபேட் (மாறுதல் அடையும் கொழுப்பு) இவை உடலில் கெட்ட கொழுப்பு அளவை அதிகரிக்கச் செய்யும். தினசரி உணவில் 10 சதவிகிதத்துக்கும் அதிகமாக சாச்சுரேட்டட் ஃபேட் மற்றும் டிரான்ஸ் ஃபேட் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மோனோசாச்சுரேட்டட் ஃபேட், உடல் ஆரோக்கியத்துக்கு உதவும். இது ஆலிவ், கடலை எண்ணெயில் அதிகம் உள்ளது. பாதாம், வால்நட்டில் உள்ள கொழுப்பும் ஆரோக்கியத்தைத் தரும்.
3. டிரான்ஸ் ஃபேட் தவிர்த்தல்
இது கெட்ட கொழுப்பு. நொறுக்குத் தீனிகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளில் மிக அதிக அளவில் இருக்கிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பை அதிகரிப்பதோடு, நல்ல கொழுப்பு அளவையும் குறைக்கிறது. எனவே, உணவுப் பொருட்களை வாங்கும்போது, அதில் 'டிரான்ஸ் ஃபேட்’ என்று இருந்தால் அதைத் தவிர்த்துவிடுங்கள்.
4. கொலஸ்ட்ராலின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துங்கள்
வயதானவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 300 மி.கி. அளவு கொழுப்பு தேவை. இதய நோயாளிகளுக்கு 200 மி.கி. போதுமானது. முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், மூளை போன்ற விலங்குகளின் இறைச்சி, பால் பொருட்களில் இருந்து அதிக அளவில் கொழுப்பு கிடைப்பதால், கொழுப்பு அதிகம் சேர்ந்த உணவுப் பொருட்களைக் குறைத்துக்கொள்வது நல்லது.
5. நார்ச் சத்து தினமும் தேவை
உணவில் குறைந்தது ஐந்து முதல் 10 கிராம் அளவுக்கு நார்ச் சத்து தேவை. முட்டைக்கோஸ், சுரைக்காய், முள்ளங்கி, பீன்ஸ் போன்ற நார்ச் சத்து நிறைந்த காய்கறிகளை, தினசரி எடுத்துக்கொள்ள வேண்டும். இது கொலஸ்ட்ராலின் அதிகரிப்பை ஐந்து சதவிகிதம் வரைக்கும் குறைக்கும். அன்றாடம், போதுமான நார்ச் சத்துள்ள உணவை எடுக்காதவர்கள், இனியாவது உணவில் காய்கறிகளை அதிக அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
6. குறைந்த அளவு அசைவ உணவு
'ரெட் மீட்’ எனப்படும் மாட்டு இறைச்சி போன்றவற்றில் கொழுப்பு அளவு அதிகமாக இருக்கிறது. முடிந்தவரை இறைச்சி உணவுகளைத் தவிர்த்துவிடுவது நல்லது. இறைச்சிக்குப் பதில் அதிக அளவில் மீன் உணவை சேர்த்துக்கொள்ளலாம். இதய நோயாளிகள் மட்டுமல்ல, மற்றவர்களும் உணவில் முட்டை சேர்ப்பதைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
7. மீன் உணவு
எண்ணெய்த்தன்மை கொண்ட மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிக அளவில் இருப்பதால், இது கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. வாரத்துக்கு இரண்டு, மூன்று முறை மீன் உணவை எடுத்துக்கொள்வதன் மூலம் கெட்ட கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைட் அளவையும் குறைக்க உதவும்.
8. முழு தானியங்கள்
தினசரி உணவில் அவசியம் சேர்த்துக் கொள்ளவேண்டும். இதில் அதிக அளவில் வைட்டமின் மற்றும் மினரல் உள்ளது. சிவப்பு அரிசி, முழு தானிய பிரட் மற்றும் ஃபிளாக்சீட்ஸ் எனப்படும் ஆளி விதைகளை எடுத்துக்கொள்வது, கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவும். ஒமேகா 3 கொழுப்பு அமிலம் ஆளி விதையில் அதிகமாக இருக்கிறது
9. உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருங்கள்
உயரத்துக்கு ஏற்ற எடையில் இருக்கிறோமா என்பதைப் பார்க்க வேண்டும். பி.எம்.ஐ. அதிகமாக இருந்தால் உடல் எடையைக் குறைப்பதற்கான முயற்சிகளை உடனடியாக எடுக்க வேண்டும். இரண்டு கிலோ எடை குறைத்தாலும்கூட, இது உடலில் கொழுப்பு அளவைக் குறைப்பதில் பேருதவியாக இருக்கும். சீக்கிரமாக உடல் எடையைக் குறைக்க முயற்சிக்கக் கூடாது. வாரத்துக்கு அரை கிலோ என்ற அளவில் நிதானமாக உடல் எடையைக் குறைக்க முயற்சிக்க வேண்டும்.
10. தொடர் உடற்பயிற்சி
தினசரி குறைந்தது 30 நிமிடங்களுக்காவது உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இதனால் தேவையற்ற கொழுப்பு எரிக்கப்பட்டு, உடல் ஃபிட்-ஆகும். கொழுப்பால் ஏற்படும் பாதிப்புகளும் குறையும். இதய நோய் வருவதற்கான வாய்ப்பையும் பெருமளவு குறைக்கும்.
11. மது மற்றும் சிகரெட் தவிர்த்தல்
அதிக அளவில் சிகரெட் புகைப்பது நம் உடலில் உள்ள எச்.டி.எல் எனப்படும் நல்ல கொழுப்பு அளவைக் குறைத்துவிடும். இதனால் மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. இதேபோல ஆல்கஹால் அருந்தும்போதும் அதிக அளவில் கொழுப்பு உற்பத்தியாகிறது. எனவே, அதைத் தவிர்த்துவிடுவது நல்லது.
12. மாத்திரை
ரத்தத்தில் கொழுப்பு அளவு அதிகமாக உள்ளவர்களுக்கு 'ஸ்டேடின்’ என்ற மாத்திரை பரிந்துரைக்கப்படுகிறது. இது கொழுப்பைக் குறைக்க உதவும். மருத்துவரின் பரிந்துரையின்பேரில் இதை எடுத்துக்கொள்ளலாம்.
எந்தெந்த காய் கனிகளை, எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம்?
December 03, 2017எந்தெந்த காய் கனிகளை, எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம்? பழங்கள்: திராட்சை, ஏப்ரிகாட், பேரிக்காய், பிளம்ஸ் 3-5 நாட்கள் ஆப்பிள்கள் ஒ...
பழங்கள்:
திராட்சை, ஏப்ரிகாட், பேரிக்காய், பிளம்ஸ் 3-5 நாட்கள்
ஆப்பிள்கள் ஒரு மாதம்
சிட்ரஸ் பழங்கள் 2 வாரங்கள்
அன்னாசி (முழுசாக) 1 வாரம்
(வெட்டிய துண்டுகள்) 2-3 நாட்கள்
காய்கறிகள்:
புரோக்கோலி, காய்ந்த பட்டாணி 3-5 நாட்கள்
முட்டைகோஸ், கேரட், முள்ளங்கி,
ஓம இலை 1-2 வாரங்கள்
வெள்ளரிக்காய் ஒரு வாரம்
தக்காளி 1-2 நாட்கள்
காலிபிளவர், கத்தரிக்காய் 1 வாரம்
காளான் 1-2 நாட்கள்
அசைவ உணவுகள்:
வறுத்த இறைச்சி மற்றும் கிரேவி 2-3 நாட்கள்
சமைத்த மீன் 3-4 நாட்கள்
பிரஷ் மீன் 1-2 நாட்கள்
மூலிகை மருத்துவத்தில் நீரிழிவுக்கு தீர்வு!
December 03, 2017கள்ளிமுடையான் கள்ளிமுடையானின் மெல்லிய தண்டை நீரில் சுத்தம் செய்து, 3 அங்குலத் தண்டுகள் இரண்டை தினமும் அதிகாலை வெறும் வயிற்றில் சா...
கள்ளிமுடையான்
கள்ளிமுடையானின் மெல்லிய தண்டை நீரில் சுத்தம் செய்து, 3 அங்குலத் தண்டுகள் இரண்டை தினமும் அதிகாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உடல் மெலிவதுடன் நீரிழிவையும் கட்டுப்படுத்துகிறது.
இன்சுலின் செடி
இன்சுலின் செடியின் இலை ஒன்றை தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுப் பாருங்கள்... பலன் அறியலாம். இந்த இலையைத் தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார்கள் ஐரோப்பிய, அமெரிக்க விஞ்ஞானிகள். ஆரம்ப நிலை சர்க்கரையாளர்களுக்கு காஸ்டஸ்பிக்டஸ் எனும் இன்சுலின் செடி அதிக பலன் தருகிறது என அவர்களின் ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர். இச்செடி கேரளாவில் அதிகம் உபயோகிக்கப்படுகிறது.
சர்க்கரைக்கொல்லி
கசப்புச் சுவையுடையது. பெயருக்கேற்ப இலையை சாப்பிட்ட பின் சர்க்கரையை வாயிலிட்டால் இனிப்புச்சுவை தெரிவதில்லை. இலையை உலர வைத்து பொடியாக்கி தினமும் அருந்தலாம். இது கொடிவகை தாவரம்.
சிறியாநங்கை
கசப்புச் சுவையுடையது. இதன் இலையையும் சாப்பிடுகிறார்கள். சிறு செடி வகையை சார்ந்தது.
ஸ்டீவியா என்னும் சீனித்துளசி
தென்அமெரிக்காவை தாயகமாகக் கொண்ட இனிப்புச்சுவையுடைய இதன் இலைகள் சர்க்கரைக்கு மாற்று. இலையை உலர வைத்து பொடியாக்கி, டப்பாக்களில் அடைத்து வைத்து சர்க்கரைக்குப் பதிலாக பயன்படுத்தலாம். இது பூஜ்யம் கலோரி (ஞீமீக்ஷீஷீ சிணீறீஷீக்ஷீவீமீ) மதிப்புடையது. அதனால், இனிப்புக்குப் பதிலாக தாராளமாக உபயோகிக்கலாம். அதிக சூரிய ஒளியை விரும்பும் இத்தாவரம், தமிழகத்தில் நன்கு வளர்கிறது. இவற்றோடு காலையில் வெந்தயப் பொடி சாப்பிடுதல், பாகற்காய் சாறு அருந்துதல், வெள்ளரி விதைகளை சாப்பிடுதல், சீந்தில் சர்க்கரை பொடி என நிறைய தாவரங்கள் சார்ந்த எளிய வழிமுறைகள் நீரிழிவைக் கட் டுக்குள் வைக்க உதவுகின்றன.
பெண்களுக்கான பாட்டி வைத்தியம்!
December 03, 2017பெண்கள் கண்டிப்பாக ஆறு மாதங்களாவது குழந்தைகளுக்கு தாய்ப்பால் தர வேண்டும். மார்பகங்கள் எடுப்பான தோற்றம் பெற அமுக்காரா, அதிமதுரம், முல்தா...
பெண்கள் கண்டிப்பாக ஆறு மாதங்களாவது குழந்தைகளுக்கு தாய்ப்பால் தர வேண்டும். மார்பகங்கள் எடுப்பான தோற்றம் பெற அமுக்காரா, அதிமதுரம், முல்தானி மட்டி மூன்றையும் சம அளவில் எடுத்து அரைத்துக் கொள்ளவும். பின்பு பருப்பு வேகவைத்த தண்ணீரில் இந்தக் கலவையை குழைத்து பற்று போட்ட வேண்டும்.
* மாதவிலக்கு நேரங்களில் ஏற்படும் மார்பக வலியைக் குறைக்க சுடுதண்ணீர் ஒத்தடம் கொடுக்கலாம்.
* மார்பக வலியைக் குறைக்க உளுந்தை அரைத்து பற்றுப் போட்டு அதன் மீது வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம்.
* வைட்டமின் ஏ சத்துள்ள கீரை வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அகத்திக் கீரை மற்றும் முருங்கைக் கீரையை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் புற்றுநோய் வாய்ப்புகளை குறைக்க முடியும்.
* இரவு நேரத்தில் பப்பாளிப் பழம் ஒரு துண்டு சாப்பிடுவதன் மூலம் மாதவிலக்கு பிரச்சனைகள் வருவதைத் தடுக்கலாம். ரத்தம் சுத்தம் அடையும். புற்றுநோயையும் தவிர்க்கலாம்.
* அதிகாலை வெறும் வயிற்றில் சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவது நல்லது.
* கொதிக்கும் பாலில் பூண்டைப் போட்டு வெந்த பின்னர் அதனை குழைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தில் உள்ள கொழுப்பு கரையும், புற்றுநோய்க்கான வாய்ப்பும் குறையும்.
சிறுமியின் உயிரை கொடூரமாக பறித்த தொலைக்காட்சி தொடர் - பெற்றோர்களே உஷார்!
December 03, 2017ஒவ்வொரு குடும்பத்திலும் உறுப்பினராக மாறிவிட்டது தொலைக்காட்சி தொடர்கள். பெண்கள் மட்டுமல்ல ஆண்களும், குழந்தைகளும் கூட சீரியலை பார்க்க தொடங்கி...
சினிமாவுக்கு இருப்பதுபோல் சின்னத்திரைக்கு சென்சார் இல்லாததால் பல நேரங்களில் அத்துமீறுகின்றனர். குறிப்பாக குழந்தைகளுக்கு தொலைக்காட்சிகளில் வரும் விஷயங்களில் எது உண்மை என்பது தெரியாமல் அதை முயற்சி செய்து பார்ப்பார்கள்.
அந்தவகையில் சில வருடங்களுக்கு முன்பு ஷக்திமான் பார்த்து மாடியிலிருந்து கீழே விழுந்து குழந்தைகள் இறந்த சம்பவம் நடந்தது.
இந்நிலையில் சமீபத்தில் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த பிரார்த்தனா என்ற 7 வயது சிறுமி ஒருவர் தமிழ் சீரியலின் கன்னட டப்பிங் தொடர் ஒன்றில் வரும் நாயகி நெருப்பில் நடனமாடுவதை பார்த்து முயற்சி செய்துள்ளார்.
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமி செய்த காரியத்தால் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சீரியலை கடந்த ஒரு வாரமாக சிறுமி தீவிரமாக பார்த்துள்ளார். நான் தான் அலட்சியமாக இருந்துவிட்டேன் என சிறுமியின் தாயார் கதறியுள்ளார்.
பெற்றோர்களே குழந்தைகள் விஷயத்தில் கவனமாக இருங்கள்..
பாகுபலி 2 பட இடத்தை பிடித்த ரஜினியின் 2.0- சூப்பர் ஸ்பெஷல்
December 03, 2017அதிக பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமாக தயாராகி வரும் 3D படம் ரஜினியின் 2.0. இந்த படம் ஆரம்பித்த நாளில் இருந்தே ரசிகர்களிடம் பெரிய எதிர்...
அதேபோல் துபாயில் நடந்த இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட் சினிமாவும் எப்படி வரவேற்றது என்பது நமக்கு நன்றாகவே தெரியும்.
படத்தில் VFX வேலைகள் நிறைய இருப்பதால் படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் தயாரிப்பு நிறுவனம் லைகா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் இப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் என்று உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதற்கு நடுவில் படம் ஏப்ரல் 27ம் தேதி வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த வருடம் ஏப்ரல் 28ம் தேதி பாகுபலி 2 ரிலீஸாகி மிகப்பெரிய வசூல் சாதனை செய்தது. அடுத்த வருடம் அதே நாளில் 2.0 ரிலீஸ் ஆவதால் எப்படிபட்ட வசூல் சாதனை நடக்கப்போகிறது என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.
எந்த பக்கம் தலை வைத்து படுக்க வேண்டும்?
November 28, 2017எந்த பக்கம் தலை வைத்து படுக்க வேண்டும்? தன்னுடைய சொந்த வீட்டில் கிழக்கு திசையில் தலை வைத்து படுக்க வேண்டும். மாமனார் வீட்டில் தெ...
எந்த பக்கம் தலை வைத்து படுக்க வேண்டும்?
தன்னுடைய சொந்த வீட்டில் கிழக்கு திசையில் தலை வைத்து படுக்க வேண்டும்.
மாமனார் வீட்டில் தெற்கு திசையில் தலை வைத்து படுக்க வேண்டும்,
வெளியூரில் தங்கும்போது மேற்கு திசையில் தலை வைத்து படுக்க வேண்டும்,
ஆனால் எக்காரணம் கொண்டும் எப்போதும் வடக்கு திசையில் தலை வைத்து படுக்கக் கூடாது என்று கூறுகின்றனர் சான்றோர்கள்.
கெட்ட கனவு வருகிறதா:
சிலருக்கு அடிக்கடி கெட்ட கனவுகள் வந்து தொல்லை கொடுக்கும் அவர்களின் அலைபாயும் மனது தெளிந்த நீரோடை போல் இருந்தால் அந்த பிரச்சினை வரவே வராது. அதற்கு ஒரு சுலோகமும் உள்ளது.
ராமம் கிருஷ்ணம் ஹனுமந்தம்
வைணதேயம் விருகோதரம் சயனே,
யஸ் ஸ்மரேன் நித்யம்
துஸ்வட்னம் தஸ்ய நஸ்யதி.
தூங்கும் முன் இந்த சுலோகத்தை சில முறை மனதார கூறி பிரார்த்தனை செய்யுங்கள். ஆழ்ந்த தூக்கம் வரும். கெட்ட கனவுகள் வரவே வராது
சமையலறை பூச்சிகளை இயற்கை முறையில் அழிக்க சில வழிகள்!!!
November 28, 2017சமையலறை பூச்சிகளை இயற்கை முறையில் அழிக்க சில வழிகள்!!! ஒரு வீட்டின் மிக முக்கியமான பகுதியாக சமையலறை விளங்குகின்றது. வீட்டில் உள்ள விர...
சமையலறை பூச்சிகளை இயற்கை முறையில் அழிக்க சில வழிகள்!!!
ஒரு வீட்டின் மிக முக்கியமான பகுதியாக சமையலறை விளங்குகின்றது. வீட்டில் உள்ள விருந்தாளிகள் தங்கும் அறைக்கு நாம் சில நாட்கள் செல்லாமல் இருக்கக்கூடும் அல்லது மிகுந்த குளிர் காலத்தில் வீட்டின் மாடிக்கும் கூட செல்லாமல் இருக்கலாம். ஆனால் யாராலும் சமையலறைக்கு செல்லாமல் இருக்க முடியாது. ஆகையால் தான் வீட்டின் மற்ற பகுதியில் நாம் செலுத்தும் கவனத்தை சமையல் அறையில் சற்றே அதிகமாக செலுத்த வேண்டும். மற்ற அறைகளை போல் இதையும் அழகாக வைக்க வேண்டும்.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சமையலறை சாதனங்களையும் நவீன கட்டமைப்புடன் சமையல் அறையையும் நாம் அலங்கரிப்பது வீட்டிற்கு மேலும் அழகூட்டும். இவைகளை செய்தால் மட்டும் போதாது, அவற்றை எந்த வித பூச்சிகளும் பாழ்படுத்தாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு என்ன செய்வது? பெருமளவில் பணம் செலவு செய்து பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தும் போது அவை பூச்சிகளுக்கு மட்டுமின்றி நமக்கும் அதே அளவு கேடு விளைவிப்பதாக இருக்கின்றன. அப்படி என்றால் நாம் எப்படி இயற்கை முறையில் இத்தகைய பூச்சுகளை தவிர்க்க முடியும் என்று காண்போம்.
சோள மாவு
சோளத்திலிருந்து செய்யப்பட்ட இவை அதிக அளவு உணவு தயாரிப்பில் பயன்படுகின்றது. கிரேவி வகைகள், பஜ்ஜி, போண்டா போன்ற உணவுகளை தயாரிக்க மற்றும் பலவற்றில் இவை பயன்படுகின்றது. ஆனால் இவை எறும்புகளை கொள்ளுவதற்கும் உதவும் என்றும் பலருக்கு தெரியாது. இந்த மாவிற்கு ஒரு இனிப்பு தன்மை உண்டு. சோள மாவு விஷம் கிடையாது. ஆனால் அவைகள் செரிக்க சிறிது காலமாகும். எறும்புகள் இவற்றை உண்டால் அவைகளால் இந்த உணவை செரிக்க முடியாமல் போய்விடும். ஆகையால் சோள மாவு சாப்பிட்ட எறும்பு இறந்து விடும். எறும்பு தனக்கு மட்டுமில்லாமல் தன்னுடன் இருக்கும் சக எறும்புகளுக்கும் இதை கொடுப்பதால் அவையும் உண்டு இறந்துவிடும், சமையல் அறையில் மற்றும் எறும்பு இருக்கும் பகுதியில் இந்த மாவை சிறிதளவு தெளித்து வைத்தால் போதும். உங்கள் நோக்கம் நிறைவேறும்.
பூண்டு
பூண்டின் வாசனையும் அதை உண்டால் நமக்கு கிடைக்கும் சுகாதார பலன்களும் வியப்பூட்டுபவை. இவை எறும்புகளையும் கரப்பான்களையும் இந்த அறைக்குள் வரவிடாமல் தடுக்கும் என்ற விஷயம் நமக்கு தெரியாது. புதிதாக வாங்கிய பூண்டு பற்களை சமையல் அறையை சுற்றிலும் வைத்தால் போதும். இந்த வாசனை தாங்காமல் அவை தங்களுடைய உயிரை காக்க ஓடி விடும். பூண்டு பற்கள் கொஞ்சம் காயும் நிலையில் இருந்தால் வேறு புதிய பற்கள் மாற்றுவது நல்லது. இவை பூச்சிகளை மிரண்டு ஓட வைக்கும். பூண்டை அறைத்து அதில் தண்ணீர், தாது எண்ணைய் மற்றும் சோப் ஆகிய கலவையை தெளிக்கவும் செய்யலாம். இந்த வகை பாதுகாப்பு முறை மிகவும் பயனளிக்கக் கூடியதாக இருக்கும். இந்த பூண்டு ஸ்பிரே உங்கள் சமையலறையை சுத்தமாக வைத்திருக்கவும், சமையலறை தோட்டத்தின் செடிகளை பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.
லகிரி தைலம்
யூகலிப்டஸ் மரத்திலிருந்த எடுக்கப்படும் எண்ணையானது மிகுந்த நறுமணம் கொண்ட வாசனை பொருளாகும். இவை பூச்சிகளை கட்டுபடுத்துவதில் சிறந்த பலனளிக்கின்றன. இந்த எண்ணையை சிறிது தண்ணீரில் கலக்கி ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி அதை அடுப்பறைக்குள் வரும் கரப்பான்கள், சிலந்திகள் மற்றும் சிறிய பூச்சிகள் மீது தெளித்தால் அவை உடனே இறந்து விடும்.
போரிக் அமிலம்
பூச்சிகளை கொல்லும் மற்றொரு வழி போரிக் அமிலமாகும். இதை மாவுடன் சேர்த்து உள்ளே வரும் பூச்சிகள் மேல் தெளித்தால் உடனடியாக அவை இறந்து விடும். இந்த அமிலத்தை அருகில் உள்ள மருந்து கடைகளில் வாங்க முடியும். இது இல்லை என்றால் போரக்ஸ் டிடர்ஜென்ட்டை பயன்படுத்தலாம். இதை நாம் சர்கரை மற்றும் தண்ணீரில் கூட கலந்து பயன்படுத்துவது மிகுந்த பலனளிக்கும். இவை பொதுவாக மக்கள் பயன்படுத்தும் மருந்தாக அமைகின்றது.
நடுத்தெருவில் நிற்கும் காக்கா முட்டை இயக்குனர்! காரணம் இவர்தான்..
November 28, 2017சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கந்துவட்டி கொடுமை தான் தயாரிப்பாளர் அசோக் குமார் தற்கொலைக்கு காரணம் என கூறப்பட்டுவரும் நிலையில், அவரால்...
ஆண்டவன் கட்டளை படத்தை ஃபர்ஸ்ட் காப்பி முறையில் ரூ.5.5 கோடிக்கு செய்து கொடுப்பதாக அன்புச்செழியனுடன் மணிகண்டன் ஒப்பந்தம் போட்டுள்ளார்.
தனியாக சம்பளம் ஏதும் பேசாமல் லாபத்தில் 40% ஷேர் என்று மணிகண்டனுடன் அன்புச்செழியன் ஒப்பந்தம் செய்திருக்கிறார்.
படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நன்றாக சென்ற நிலையில் தன் 40% பங்கை இயக்குனர் கேட்டிருக்கிறார், ஆனால் படம் ஓடவில்லை என கூறிவிட்டாராம் அன்புச்செழியன்.
பின்னர் படத்தின் டிவி உரிமை, டிஜிட்டல் உரிமை விற்று அதிக பணம் ஈட்டியுள்ளார் அன்புச்செழியன். இருப்பினும் தற்போதுவரை மணிகண்டனுக்கு தர வேண்டிய காசை கொடுக்கவில்லையாம், முறையான கணக்கும் காட்டவில்லையாம்.
இதனால் தற்போது பணகஷ்டத்தில் இருக்கும் மணிகண்டன் ஸ்க்ரிப்ட் எழுதுவது போன்ற சின்னசின்ன வேலைகளை செய்து வருகிறார். அத்தியாவசிய தேவைகளுக்கு கூட பணம் இல்லாததால், தான் வாங்கிய சில சினிமா உபகரணங்களையும் விற்றுவிட்டாராம்
உலக அழகி மனுஷி சில்லருக்கு யாருடன் நடிக்க ஆசை தெரியுமா?
November 28, 2017உலக அழகியாக மகுடம் சூட்டப்பட்டுள்ள இந்தியாவின் மனுஷி சில்லர், தனக்கு எந்த நடிகரின் திரைப்படத்தில் நடிக்க விருப்பம் என்பதைக் கூறியுள்ளார். ச...
சீனாவின் சான்யா சிட்டியில், நவம்பர் 18-ம் தேதி உலக அழகிப் போட்டி நடைபெற்றது. அதில், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மனுஷி சில்லர் (20) உலக அழகியாகப் பட்டம் சூட்டப்பட்டார். மருத்துவக் கல்லூரி மாணவியான இவர், இறுதிப்போட்டியில் இங்கிலாந்து, பிரான்ஸ், கென்யா, மெக்ஸிகோ நாடுகளின் அழகிகளைத் தோற்கடித்து பட்டம் வென்றார். இவர், இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவில் பிரபலமாகிவருகிறார்.
இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த மனுஷி சில்லர், தனக்கு எந்த நடிகரின் படத்தில் நடிக்கப் பிடிக்கும் என்பதுகுறித்து மனம்திறந்து பேசியுள்ளார். `எனக்கு, இந்தித் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில், அமீர் கானின் திரைப்படத்தில் நடிக்க விரும்புகிறேன். அவர் திரைப்படங்களில் தோன்றும் கதாபாத்திரங்கள் மிகவும் நன்றாகவும் சவாலானதாகவும் இருக்கின்றன. அவரது திரைப்படங்கள், மக்களிடம் நேர்மறையான முறையில் கனெக்ட் ஆகிறது என்று நினைக்கிறேன்' என்று கூறியுள்ளார்.
ஓசியில கொடுத்தால் கூட வேணாம்! இதென்ன பாலாவுக்கு வந்த சோதனை?
November 28, 2017நல்லா வாழ்ந்த சசிகுமாருக்கு குரு வைத்த ஸ்குருதான் தாரை தப்பட்டை. ‘பத்தரை கோடியில் முடிச்சுரலாம்டா…’ என்று உரிமையோடு காதில் ஓதி, பட்ஜெட்டை 3...
அவரது அத்தை மகன் அசோக் குமாரும் இந்த கடன் விவகாரத்தால்தான் தற்கொலை செய்து கொண்டார். சரி போகட்டும்… நாம் மேலே சொன்ன தலைப்புக்கு வருவோம்.
தாரை தப்பட்டைக்கு பொதுமக்கள் கொடுத்த மரியாதைதான் ஊருக்கே தெரியுமே? இந்த நிலையில் இந்த படத்தை ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு விற்க முயன்றார்களாம். அந்தப்படமா? வேணாம் சார்… என்று எடுத்த எடுப்பிலேயே என்ட் கார்டு போட்டுவிட்டது சேனல். இருந்தாலும், பின்னாளில் சேனலுக்கும் நமக்குமான ரிலேஷன்ஷிப்பாவது வலுக்குமே என்று எண்ணிய சசிகுமார், ‘பணமே வேணாம்ணே. சும்மா போட்டுக்கோங்க’ என்று சேனல் சிஇஓ விடம் சொல்ல, ‘இருக்கட்டும் சார். நமக்கு விருப்பமில்ல’ என்று ஸ்ரிக்டராக கூறிவிட்டாராம் அவர்.
இப்படியாக பல் இளித்துக் கொண்டிருக்கிறது பாலாவின் மவுசு!
ரஜினிக்கு சரிந்தது செல்வாக்கு! அரசியல் கணக்கெடுப்பில் திடுக் திடுக்
November 28, 2017கடந்த பல வருடங்களாக விளக்கெண்ணையில் வாழைப் பழத்தை பிசைந்து மக்களுக்கு ஊட்டி வருகிறார் ரஜினி. ‘வருவேன்… வந்தாலும் வருவேன்’ டைப்பான இவரது அரச...
குமுதம் வார இதழும் நியூஸ் 7 தொலைக்காட்சியும் இணைந்து மக்களிடம் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தியிருக்கிறார்கள். அதில் ரஜினி, கமல், விஜய் குறித்த அரசியல் கேள்விகளுக்கு நெற்றிப் பொட்டில் அடித்தது போல வாக்களித்து கமல்ஹாசனை கை தட்டி வரவேற்கிறார்கள் மக்கள்.
திமுக- அதிமுக வுக்கு சவாலாக இருக்கப் போகும் நடிகர் யார்? என்ற கேள்விக்கு ஏராளமான வாக்காளர்கள் கமலுக்கே ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். கமலுடன் ஒப்பிட்டால் பல மடங்கு சரிந்தேயிருக்கிறது ரஜினியின் வாய்ஸ்.
மூன்றாவது இடத்திலிருக்கிறார் விஜய்.
2.0 படத்தை வீடியோ மூலம் இனி நீங்களும் பார்க்கலாம்! லேட்டஸ்ட் தகவல்
November 28, 2017இயக்குனர் சங்கர் ரூ 400 கோடி செலவில் ரஜினி நடித்துள்ள எந்திரன் 2.0 படம் வெளியாகவுள்ளது. இப்படம் வெளியான 25 நாட்களில் இனி நீங்களும் வீடியோ ஸ...
படங்களை டிஜிட்டல் முறையில் வெளியிடும் அமேசான் பிரைம் நிறுவனம் தற்போது 2.0 படத்தின் உரிமத்தை பெற்றுள்ளது. இத்தகவலை படத்தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே அதே நிறுவனம் தீரன் அதிகாரம் ஒன்று, துப்பறிவாளன், கபாலி, தெறி, வேலையில்லா பட்டதாரி 2, சி 3, மாநகரம், துருவங்கள் 16, காற்று வெளியிடை, காஷ்மோரா, ஜோக்கர் என பல படங்களில் உரிமையையும் பெற்றுள்ளது.
சாமி 2 படத்திலிருந்து விலகியதன் பின்னணி உண்மை! திரிஷா விளக்கம்
November 28, 2017ஹரி இயக்கத்தில் வெளியான சாமி படம் இன்னும் பலரால் மறக்க முடியாது. 2003 ல் ரூ 5 கோடி பட்ஜெட்டில் வெளியாகி ரூ 30 கோடி வசூலை பாக்ஸ் ஆஃபிஸில் ...
இந்நிலையில் சாமி 2 மீண்டும் எடுப்பதற்காக வேலைகள் தொடங்கியது. முதலில் ஓகே சொன்ன திரிஷா பின் இப்படத்திலிந்து திடீரென விலகினார்.
ஆனால் இதற்காக படக்குழு சார்பாக தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதற்கு அவர் படத்தில் ஒரு காட்சியில் கூட நான் நடிக்கவில்லை. எனவே அதிலிருந்து விலக உரிமையுள்ளது.
வாங்கிய பணத்தை திரும்ப கொடுத்துவிடுகிறேன். என்னுடைய சொந்த காரணங்களுக்காக படத்திலிருந்து விலகி விட்டேன் என அவர் கூறினார்.
பெட்ரோல் பங்கில் ஏமாறாமல் இருப்பதற்கு! ! ! !
November 28, 2017தயவு செய்து நண்பர்களுடன் இத்தகவலை பகிர்ந்துகொள்ளுங்கள்.... படத்தில் காட்டப்பட்டுள்ளது போல் மேலே இருந்து பெட்ரோல் நிரப்புமிடத்தில் நீங...
தயவு செய்து நண்பர்களுடன் இத்தகவலை பகிர்ந்துகொள்ளுங்கள்....
படத்தில் காட்டப்பட்டுள்ளது போல் மேலே இருந்து பெட்ரோல் நிரப்புமிடத்தில் நீங்கள் பெட்ரோல் போட்டுக்கொள்கிறீர்களா...?
உங்களுக்கான எச்சரிக்கை இது...
நீங்கள் ஏமாற்றப்படுகிறீர்கள்...
இது போன்ற இடங்களில் மீட்டர் பெட்ரோல் நிரப்பும் நாசில் மீது இருக்கும்...
பெட்ரோல் நிரப்பும் நபர் உங்களிடம் எவ்வளவு என்று கேட்பார்...
நீங்கள் 100.00 ரூபாய் அல்லது 200.00 ரூபாய் என்று கூறுவீர்கள்...
மீட்டரில் இரண்டு வரிசைகளில் எண்கள் ஓடும்...
முதலில் உள்ளது லிட்டர் அளவு...
அதற்குக் கீழே உள்ளது தொகை...
பெட்ரோல் நிரப்பத் தொடங்குகையில் 0.0000 என்று இரண்டு வரிசைகளிலும் இருக்கும்...
நீங்கள் நூறு ரூபாய் என்று கூறினால்
பெட்ரோல் நிரப்பத் தொடங்கியதும்
லிட்டர் அளவு வருமிடத்தில் 1.0000 என்று வந்ததும் பெட்ரோல் நிரப்பும் நபர் நிறுத்தி விடுவார்...
நமக்கு அது ஒரு லிட்டர் என்பது தெரியாமல் நகர்ந்துவிடுவோம்...
அவ்வளவுதான் 100.00 ரூபாய்க்கு 30.00 ரூபாய் உங்களிடமிருந்துஉங்கள் அனுமதியுடன் திருடப்பட்டுவிட்டது...
200.00 ரூபாய்க்கு 60.00 ரூபாய் உங்களிடமிருந்துஉங்கள் அனுமதியுடன் திருடப்படும்...
நீங்கள் கூறும் 100.00-இன் மடங்குகளுக்கு ஏற்ப நீங்கள் ஏமாறும் தொகை 30.00-இன் மடங்குகளில் அதிகரிக்கும்...
ஏற்கனவே பெட்ரோல் விலை சுமை போதாதென்று இது வேறு...
சென்னையில் உள்ள நண்பர்கள் (குறிப்பாக பத்திரிகை நண்பர்கள்)யாரேனும் டெமோ பார்க்க ஆசைப்பட்டால்...
சென்னை, ஈக்காடுதாங்கல்,ஐ சி ஐ சிஐ வங்கிக்கு (ICICI BANK ) அருகில்,
VIRTUSA TOWER -க்கு எதிரில் (காசி தியேட்டர் பாலம் அருகில்) உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுங்கள்...
இன்று நண்பரும் நானும் அனுபவப்பூர்வமாகஇதனை உணர்ந்தோம்...
உரிமையுடன் கேட்டு மீதத்தொகைக்கு பெட்ரோல் வாங்கினோம் ...
மேலும் யாரும் ஏமாறாமல் இருப்பதற்கு...
பாம்பு வீட்டினுள் வந்துவிட்டால் என்ன செய்யலாம் அருமையான தகவல்!
November 28, 2017கண்டு கொள்வாய் சொல்லுகின்றேன் . . . . உலகோர்க் கெல்லாம் காரமா மூலியடா பங்கம்பாளை கொண்டு . . . . வந்து உன் மனையில் வைத்திருந்தால்...
கண்டு கொள்வாய் சொல்லுகின்றேன்
. . . . உலகோர்க் கெல்லாம் காரமா
மூலியடா பங்கம்பாளை கொண்டு
. . . . வந்து உன் மனையில் வைத்திருந்தால்
கொடிய விடம் அணுகாது குடியோடிப்போம்
. . . . நன்றானநாகதாளிக்கிழங்கு தானும்
நன்மனையிலிருக்க விடம் நாடாதப்பா
. . . . அன்றான ஆகாசகருடன் மூலி
அம்மனை யிலிருக்க விடமற்றுப்போம்
- சித்தர் பாடல்.
ஆடு தீண்டாப்பாளை, நாகதாளிக் கிழங்கு, ஆகாச கருடன் கிழங்கு, சிறியா நங்கை, இம் மூலிகைகளை வீட்டில் வளர்த்து வந்தால் இதன் வாசனைக்கு விச ஜந்துக்கள், பாம்புகளை நெருங்க விடாது என்கிறது பாடல்.
பாம்பு வீட்டினுள் வந்துவிட்டால் சோற்றுக் கஞ்சியில் உப்பைக் கரைத்து அதனுடன் பூண்டை அரைத்துக் கரைத்து இதில் சிறிது மண்ணெண்ணெய் சிறிது கலந்து பாம்பு இருக்கும் பகுதியில் சுற்றி தெளித்து விட பாம்பு சீராது ,கடிக்காது, ஓடாது அங்கேயே மயங்கி கிடக்கும்.
கமல் அடித்தது உண்மையா- வெளிவந்த நிஜத்தகவல்
November 27, 2017கமல்ஹாசன் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் கடும் வைரலாகி வருகின்றது. இதில் கமல்ஹாசன் ரசிகர் ஒருவரை தாக்குவது போல் தெரிகின்றது. இந்த சம்பவம்...
இந்த சம்பவம் நடந்து பல வருடம் கழித்து தற்போது சமூக வலைத்தளத்தை சுற்றி வருகின்றது, இதற்கு கமல் தரப்பி விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் ‘கமல் அவர்களுக்கு காலில் விழுவது பிடிக்காது, அவரை கமல் தள்ளி தான் விடுவார், ஆனால், அடிப்பது போல் சித்தரித்துள்ளனர்’ என்று கூறியுள்ளனர்.
மேலும், அதை உற்று கவணிக்கும் போது அந்த போலிஸ்க்காரர் தான் அவரை தள்ளி விடுகிறார், கமலின் கை அவரை காலில் விழ வேண்டாம் என்று சைகை காட்டுவது போல் தான் இருக்கும்.
ஆனால், சிலர் அதை தங்களுக்கு சாதகமாக எடிட்டிங் செய்து வெளியிட்டுள்ளனர் என்பது தெரிகின்றது.
சூப்பர் மேன் நடிகரின் மீசையை ஷேவ் செய்ய இத்தனை கோடியா? ஹாலிவுட் அட்ராசிட்டி
November 27, 2017ஹாலிவுட் படங்கள் எந்த லெவலில் எடுக்கப்படும் என்பது ஆங்கில பட பிரியர்களுக்கு நன்கு தெரியும். சமீபத்தில் வெளியான படம் ரசிகர்களை கவர்ந்த படம் ...
இதில் சூப்பர் மேனாக நடித்தவர் ஹென்றி கவில். இதில் மீசையை கிளீன் ஷேவ் செய்திருப்பார். இங்கு தான் விசயமே இருக்கிறது. இவரே மிஷன் இம்பாசிபிள் 6 படத்திலும் நடித்துள்ளார்.
இந்த பட கேரக்டரில் நடிக்க மீசை வைக்க வேண்டிய கட்டாயமாம். மீசையில்லாமல் நடிக்க படக்குழு அனுமதிக்கவில்லையாம். எனவே ஹென்றி மிஷன் இம்பாசிபிள் படம் முழுக்க மீசையுடன் நடித்திருப்பார்.
ஆனால் ஜஸ்டிஸ் லீக் படத்தில் அதே லுக்கில் தான் நடித்து இருந்ததால் இப்படக்குழு படத்தில் அவரின் மீசையை CGI கிராஃபிக்ஸ் மூலம் நீக்கி கிளீன் ஷேவ் போல் காண்பித்திருக்கிறார்கள்.
இதற்காக அவர்கள் செலவு செய்த தொகை நம் நாட்டு மதிப்பில் ரூ 125 கோடி. அதாவது $25 million. ஹாலிவுட்டில் இது லேட்டஸ்ட் அட்ராசிட்டி ஆகியுள்ளது.
நாங்கள் அதிர்ஷ்டசாலிகளா இல்லையா?
November 27, 20171930- 1980 வரை பிறந்த நம்மை போன்றவர்களை இந்த கால குழந்தைகள் அல்லது இந்த ஜெனரேஷன் மக்கள நம்மைபற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் ...
WE ARE AWESOME !!!! OUR LIFE IS A LIVING PROOF
· தனி படுக்கையில் அல்ல அம்மா அப்பாக்கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான்
· எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.
· கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை.
· புத்தகங்களை சுமக்கும்பொதிமாடுகளாகஇருந்ததில்லை.
· சைக்கிள் ஒட்டும் போது ஹெல்மேட் மாட்டி ஒட்டி விளையாண்டது இல்லை.
· பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரே விளையாட்டுதான் ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்ப்பதில்லை.
· நாங்கள் விளையாடியது நிஜ நண்பர்களிடம் தான் நெட் நண்பர்களிடம் இல்லை.
· தாகம் எடுத்தால் தெரு குழாய்க்களில் தண்ணிர் குடிப்போம் ஆனால் பாட்டில் வாட்டர் தேடியதில்லை.
· ஒரே ஜூஸை வாங்கி நாலு நண்பர்களும் மாறி மாறி குடித்தாலும் நோய்கள் எங்களை வந்தடைந்ததில்லை.
· அதிக அளவு இனிப்பு பண்டங்களையும் தட்டு நிறைய சாதம் சாப்பிட்டுவந்த போதிலும் ஒவர் குண்டாக இருந்ததில்லை.
· காலில் ஏதும் அணியாமல் இருந்து நாள் முழுவதும் சுற்றி வந்தாலும் காலுக்கு ஏதும் நேர்ந்ததில்லை.
· சிறு விளக்கு வெளிச்சத்தில் படித்து வந்தாலும் கண்ணாடி அணிந்ததில்லை.
· உடல் வலிமை பெறஊட்டசத்து பானங்கள்அருந்தியதில்லை .மிஞ்சிய சாதத்தில் ஊற்றி வைத்த நீரைச் சாப்பிட்டே உடல் வலிமை பெற்றவர்கள்.
· எங்களுக்கு வேண்டிய வீளையாட்டு பொருட்களை நாங்களே உருவாக்கி விளையாடி மகிழ்வோம்
· எங்கள் பெற்றோர்கள் பண வசதி மிக்க லட்சாதிபதிகள் அல்ல, ஆனாலும் அவர்கள் பணம் பணம் என்று அதன் பின்னால் ஒடுபவர்கள் அல்லர். அவர்கள் தேடுவதும் கொடுப்பதும் அன்பை மட்டுமே பொருட்களை அல்ல
· அவர்கள் தொடர்பு கொள்ளும் அருகாமையில்தான் நாங்கள் இருந்து வந்தோம் அவர்கள் எங்களை தொடர்பு கொள்ள ஏலேய்ய்ய் என்ற ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது அதனால் தொடர்பு கொள்ள செல்போனை தேட அவசியமில்லை.
· உடல் நலம் சரியில்லை என்றால் டாக்டர் வீடு தேடி வருவார் டாக்டரை தேடி ஒடியதில்லை
எங்களது உணர்வுகளை போலியான உதட்டசைப்பினால் செல்போன் மூலம் பறிமாறவில்லைஉள்ளத்தில் இருந்து வரும் உண்மைகளை எழுத்தில் கொட்டி கடிதமாக எழுதி தெரிவித்து வந்தோம். அதனால் சொன்ன சொல்லில் இருந்து என்றும் மாறியதில்லை.
· எங்களிடம் செல்போன் டிவிடி, ப்ளை ஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ், வீடியோ கேம் பெர்சனல் கம்பியூட்டர், நெட், சாட் போன்றவகள் இல்லை ஆனால் நிறைய நிஜமான நண்பர்கள் இருந்தனர்
· வேண்டும் பொழுது நினைத்த நண்பர்கள் வீட்டிற்கு சென்று உணவுண்டு உரையாடி மகிழந்து வந்தோம். அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில் அனுமதி பெற தேவையில்லை.
· எங்கள் காலங்களில் திறமை மிக்க தலைவர்கள் இருந்தனர். அவர்கள் சமுகத்திற்காக தங்கள் செல்வங்களை செலவிட்டனர் இந்த காலம் போல சமுக செல்வங்களை கொள்ளை அடித்தவர்கள் அல்லர்.
· உறவுகள் அருகில் இருந்தது உள்ளம் நன்றாக இருந்ததால் உடல் நலம் காக்க இன்சூரன்ஸ் எடுத்தத்தில்லை
· நாங்கள் எடுத்த புகைபடங்கள் கருப்பு வெள்ளையாக இருந்தாலும் அதில் உள்ளவர்களிடம் வண்ணமயமான நல்ல எண்ணங்கள் இருப்பதை உணரலாம். ஆனால் இப்போது எடுக்கப்படும் படங்கள் கலராக இருக்கலாம் ஆனால் அதில் உள்ளவ்ர்களின் எண்ணங்கள் கருப்பாகவே இருக்கின்றன.
· இலவசம் பெறும் பிச்சைகாரர்களாக இருந்ததில்லை.
· இந்த காலங்களில் பிறந்து வளர்ந்த வந்த நாங்கள் அதிர்ஷ்டசாலிகளா இல்லையா என்பதை இப்ப சொல்லுங்கள் .
தலைவலியை நிரந்தரமாக போக்க வேண்டுமா..?
November 27, 2017தலைவலி வந்துவிட்டால் போதும், உடனே மாத்திரை போடும் பழக்கம் பலரிடம் உள்ளது. அதுவும் "பெனடோல்' பலரிடமும் கைவசம் இருக்கும் தலைவ...
தலைவலி வந்துவிட்டால் போதும், உடனே மாத்திரை போடும் பழக்கம் பலரிடம் உள்ளது. அதுவும் "பெனடோல்' பலரிடமும் கைவசம் இருக்கும் தலைவலிக்கு வலி நிவாரணியாக விழங்கும் "பெய்ன்கில்லர்'எல்லாம், உடலுக்கு கேடானது. 40 வயதைத் தாண்டினால், நரம்புத் தளர்ச்சியில் கொண்டு போய் விட்டு விடும் என்பது பலருக்கு தெரிவதில்லை. அதிலும், "மைக்ரேன்' என்று சொல்லப் படும், ஒற்றைத் தலைவலி வந்து விட்டால் போதும், உயிரே போகும் அளவுக்கு வலி இருக்கும்.
அமெரிக்காவில், தலைவலி ஆராய்ச்சிக்காகவே, "தேசிய தலைவலி ஆராய்ச்சி பவுண் டேஷன்' என்ற அமைப்பு உள்ளது.
தலைவலியைப் போக்க, பல ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட ஆய்வு முடிவுகளை வைத்து, பத்து எளிய வழிகளை இவ்வமைப்பு தொகுத்து வெளியிட்டுள்ளது.
அவை என்ன தெரியுமா?
* அமெரிக்காவில், "பீவர் பியூ' என்ற மூலிகை கிடைக்கிறது. ஒரு சில நாள் தொடர்ந்து அதை சாப்பிட்டு வந்தால், தலைவலி திரும்பியே பார்க்காது. நம்மிடம் சுக்கு முதல் ஏகப்பட்ட மூலிகைகள் உள்ளன. அன்றாடம், உணவில் இவற்றை நாம் சேர்த்துக் கொண்டாலே போதும். தலைவலி மட்டுமில்லை, எந்த கோளாறும் அண்டாது.
*"பெப்பர்மென்ட்ஆயில்' என்று சொல்லப்படும், வாசனைத் தைலத்தை தொடர்ந்து தடவி வந்தால், மூளையில் உள்ள நரம்புகளை முடுக்கி விடும். மூளையில் உள்ள குறிப்பிட்ட நரம்புதான் வலி சிக்கலைதத் தடுக்கும். அதை முடுக்கி விடுவது தான் இந்த வாசனைத் தைலத்தின் வேலை.
* சில விட்டமின்கள், உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்லாமல், மூளை நரம்புகளை முடுக்கி, முழு அளவில் இயங்கச் செய்கின்றன. அதனால், விட்டமின் சத்துகள் தரும் பச்சைக் காய்கறிகள், பழங்கள் போன்ற உணவு வகைகளை அதிகம் சேர்த்துக்கொள்ளவேண்டும். அதிலும், பி 12 போன்ற விட்டமின்கள் அதிக பலன் தரும்.
*விட்டமின்கள் போல, கனிம சத்துக்கள் மிக முக்கியம். அதுவும், தலைவலி போன்ற வலிகள் வராமல் தடுக்கின்றன.
* தலைவலிக்கு முக்கிய காரணம், சோர்வு தான். போதுமான தூக்கமின்மையால் சோர்வு ஏற்படுகிறது. குறைந்தபட்சம் ஒருவருக்கு நாள் தோறும் ஏழு மணி நேர தூக்கம் தேவை. அது கிடைத்து விட்டால், தலைவலி வரவே வராது.
* மீன் உணவு சாப்பிடும் பழக்கம் இருப்பவர்களை கேட்டுப் பாருங்கள், "தலைவலியா... அப்படீன்னா?' என்று கேட்பர். ஆம், மீன் உணவில் உள்ள, "ஒமேகா 3' எண்ணெய், உடலின் சுகாதாரத்துக்குபல அரிய பலன்களைத் தருகிறது.
* செயற்கை இனிப்புகள் சேர்ந்த உணவுப் பண்டங்களைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அப்படி செய்தாலே, தலைவலி வராது. செயற்கை இனிப்புகள், இரத்த நாளங்களை விரிவடையச் செய்து விடுகிறது. அதனால், தலைவலி வருகிறது.
* அக்குபஞ்சர் சிகிச்சை முறை, எந்தப் பாதிப்பும் இல்லாதது. லேசாக எறும்பு கடிப்பது போல தான் இருக்கும். தலைவலி இருக்கும் இடமே தெரியாது.
* யோகா பயிற்சி செய்து வந்தால், "மைக்ரேன்' தலைவலி கூட விழுந்தடித்துக்கொண்டு ஓடி விடும்.
* கடும் வேலை இருந்தாலும், அதை செய்துவிட்டு, சில நிமிடங்கள் கால் ஆற திறந்த வெளியில் நடக்கவும். ஏ.சி.,யை விட்டு வெளியில் வந்து இயற்கை காற்றை சுவாசியுங்கள். தலைவலி வந்த வழியே சென்று விடும்.
இப்போது புரிகிறதா... இனி மாத்திரை போடாதீர்கள், இந்த வழிகளில் ஏதாவது ஒன்றைப் பின்பற்றுங்கள்,தலைவலி, அடுத்த சில மாதங்கள் நிரந்தரமாக போயே போய் விடும்.
அற்புதமான விளக்கம் அவசியம் படிக்கவும்!
November 27, 2017ஆசிரியர் வகுப்பறைக்குள் நுழைந்தார். மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ப்ளரை எடுத்து தூக்கிக் காட்டினார். “இது எவ்வளவு வெயிட் இருக்கும்?” 100...
ஆசிரியர் வகுப்பறைக்குள் நுழைந்தார். மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ப்ளரை எடுத்து தூக்கிக் காட்டினார்.
“இது எவ்வளவு வெயிட் இருக்கும்?”
100 கிராம், 50 கிராம் என்று மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு எடையை சொன்னார்கள்.
“இதோட சரியான எடை எனக்கும் தெரியாது. ஆனா என்னோட கேள்வி அதுவல்ல”
வாத்தியார் தொடர்ந்தார். “இதை அப்படியே நான் கையிலே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா என்ன ஆகும்?”
“ஒண்ணுமே ஆகாது சார்”
”வெரிகுட். ஆனா ஒரு மணி நேரம் இப்படியே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா...?”
“உங்க கை வலிக்கும் சார்”
“ஒருநாள் முழுக்க இப்படியே வெச்சிருந்தேன்னா...”
“உங்க கை அப்படியே மரத்துடும் சார்”
“வெரி வெரி குட். ஒரு மணி நேரத்துலே என் கை வலிக்கறதுக்கும், ஒரு நாளிலே மரத்துப் போகிற அளவுக்கு மாறுறதுக்கு இந்த தம்ப்ளரோட வெயிட் கூடிக்கிட்டே போகுமா என்ன?”
“இல்லை சார். அது வந்து...”
“எனக்கு கை வலிக்காம, மரத்துடாம ஆகணும்னா நான் என்ன பண்ணனும்?”
“கிளாஸை உடனே கீழே வெச்சுடணும் சார்”
”எக்ஸாக்ட்லி. இந்த கிளாஸ்தான் பிரச்சினை. ஒரு பிரச்சினை நமக்கு வந்ததுன்னா அதை அப்படியே மண்டைக்கு ஏத்தி ஒரு மணி நேரம் வெச்சிருந்தோம்னா வலிக்க ஆரம்பிக்கும். ஒரு நாள் முழுக்க அப்படியே வெச்சிருந்தா மூளை செயலிழந்து மரத்துடும். அதனாலே உங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்துடிச்சின்னா தூக்கி ஒரு ஓரமா கடாசிடுங்க. அதுவே சரியாயிடும். சரியா?”
பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள்!
November 27, 2017மரியாதை நிமித்தமாகவும், அன்பை வெளிப்படுத்துவதாகவும் மலர்களைக் கொடுப்பது உலகெங்கும் ஆண்டாண்டு கால வழக்கமாக உள்ளது. கொடுக்கும் மலர்களின் வண...
உதாரணமாக, சிவப்பு மலர்கள் காதல், மரியாதை, நேசம், தைரியம் ஆகியவற்றையும்,
இளஞ்சிவப்பு வண்ண மலர்கள் முழுமையான மகிழ்ச்சி, நளினம், நன்றியுணர்வு அல்லது பாராட்டு ஆகியவற்றோடு நேசத்துக்கான விண்ணப்பமாகவும் கருதப்படுகின்றன.
வெள்ளைநிறப் பூக்கள், கள்ளங்கபடமற்ற தன்மை, தூய்மை, ரகசியம் அல்லது மவுனம் ஆகியவற்றையும்,
பீச் அல்லது பவழ வண்ண மலர்கள் உற்சாகம், ஆசை, மகிழ்ச்சியான அடக்கம், வெட்கம் ஆகியவற்றையும் வெளிப்படுத்துகின்றன.
கருஞ்சிவப்பு வண்ணம், நேசத்தோடு கூடிய நம்பிக்கை, கற்பு ஆகியவற்றை அறிவிக்கிறது.
விதவிதமான பூக்கள், அதைப் பெறுபவர் களுக்கு உரிய ஒரு தனியான செய்தியையும் வெளிப்படுத்துகின்றன.
ரோஜா மலர்கள், `நான் உன்னை விரும்புகிறேன் என்பதைத் தெரிந்துகொள்’ என்றும்,
கார்னேஷன் பூக்கள், `நீ அழகாக இருக்கிறாய், உன்னைப் பார்த்து நான் பெருமிதம் அடைகிறேன்’ என்றும்,
டபோடில் பூக்கள், `நீ தைரியசாலி என்பதோடு, நல்லவன்’ என்பதையும்,
சாமந்தி, `நான் உனக்கு உண்மையாக இருப்பேன்’ என்பதையும்,
கிளாடியோலி, `உன் குணத்தைக் கண்டு நான் பெருமிதம் அடைகிறேன்’ என்றும்,
ஐரிசஸ், `என் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் அனுப்புகிறேன்’ என்றும்,
ஆர்க் கிட் மலர்கள், `நீ என் இதயத்தில் இருக்கிறாய்’ என்றும்,
ஸ்னேப் டிராகன்ஸ், `நான் உன்னை விரும்புகிறேன்’ என்றும்,
சூரியகாந்திப் பூக்கள், `என் எண்ணங்கள் தூய்மையானவை’ என்றும்,
டூலிப் மலர்கள், `நான் உன்னை விரும்புவதை அறிவிக்கிறேன்’ என்றும் சொல்கின்றன.
துடைக்கும் துண்டு பளிச்சென்று மின்னுவதற்கு, இதோ சில எளிய வழிகள்!!!
November 27, 2017அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று தான் துண்டு. இத்தகைய துண்டை புதிதாக வாங்கி, ஒரு மாதத்திற்கு பின் பார்த்தால், அதனை எப்போது வாங்கின...
அதிலும் அத்தகைய கறைகளைப் போக்க பெரும்பாலானோர் பின்பற்றும் ஒரு செயல் தான், சுடு தண்ணீரில் துண்டை ஊற வைத்து, சோப்பு போட்டு பிரஷ் கொண்டு தேய்த்து துவைப்பது. இருப்பினும், சில நேரங்களில் துண்டில் உள்ள கறைகள் அவ்வளவு எளிதில் நீங்காமல் இருக்கும். அதுமட்டுமின்றி, இவ்வாறு தேய்ப்பதால் துண்டில் இருந்து நூலானது வெளிவர ஆரம்பிக்கும்.
ஆகவே துண்டு பாழாகாமல் இருக்கவும், துண்டில் உள்ள கறைகளை எளிதில் போக்கவும் ஒருசில எளிய வழிகளை கீழே கொடுத்துள்ளோம். அதைப் படித்து அதன் படி துண்டை சுத்தம் செய்து பாருங்கள்.
சுடுநீர்
சில நேரங்களில் புதிய துண்டு நீரை உறிஞ்சாமல் இருக்கும். அத்தகைய துண்டை சுடுநீரில் 25 நிமிடம் ஊற வைத்து அலசினால், துண்டு தளர்ந்துவிடும். அதுமட்டுமல்லாமல், அழுக்கு அதிகம் உள்ள துண்டாக இருந்தால், சுடுநீரில் நன்கு ஊற வைத்து, கைகளாலேயே தேய்த்து துவைத்தால், அழுக்கு போவதோடு, துண்டும் பாழாகாமல் இருக்கும்.
டிடர்ஜெண்ட்
வேண்டுமெனில், சுடு தண்ணீரில் சோப்புத்தூள் போட்டு கலந்து, அக்கலவையில் துண்டை நன்கு 30 நிமிடம் ஊற வைத்து, இறுதியில் சோப்பு போட்டு நன்கு துவைத்தால், அழுக்கு நீங்கிவிடும்.
பேக்கிங் சோடா
பேக்கிங் சோடா கொண்டும் துண்டில் உள்ள கறைகளைப் போக்கலாம். அதிலும் நிறம் மாறி உள்ள வெள்ளை நிறத் துண்டை, பேக்கிங் சோடா பயன்படுத்தி துவைத்தால், வெள்ளை நிறத் துண்டை பளிச்சென்று மாற்றலாம்.
வினிகர்
வினிகர் கூட கறைகளைப் போக்க உதவும் ஒரு சூப்பரான பொருள். அதற்கு நீரில் வினிகரை ஊற்றி, அதில் கறையுள்ள துண்டை ஊற வைத்து துவைக்க வேண்டும்.
எலுமிச்சை
எலுமிச்சையின் நன்மைக்கு அளவே இல்லை. அதிலும் சோப்பு நீரில் சிறிது எலுமிச்சை சாற்றினை கலந்து, கறை படிந்த துண்டை ஊற வைத்து துவைத்தால், கறை நீங்குவதோடு, துண்டும் நல்ல மணத்தோடு இருக்கும்.
உப்பு
பெரும்பாலான மக்கள் வெள்ளை நிற துண்டைத் தான் பயன்படுத்துகிறார்கள். முக்கியமாக வெள்ளை நிற துண்டில் உள்ள கறைகளைப் போக்குவது என்பது கடினம். ஆனால் அந்த வெள்ளைத் துண்டை உப்பு பயன்படுத்தி துவைத்தால், துண்டில் உள்ள மஞ்சள் கறைகள் நீங்கி துண்டு சுத்தமாக இருக்கும்.
ஃபேப்ரிக் சாஃப்ட்னர்
மேற்கூறியவாறெல்லாம் துண்டை துவைத்தப் பின்னர், துண்டில் நல்ல நறுமணம் இருக்க வேண்டுமெனில், துண்டை துவைத்த பின்பு, நீரில் சிறிது ஃபேப்ரிக் சாஃப்னரை கலந்து, அந்த நீரில் துண்டை நனைத்து பிழிந்தால், துண்டு நன்கு மணத்துடன் இருக்கும்.
பிரிட்ஜில் வைக்கக் கூடாத 10 பொருட்கள்!
November 27, 2017பொதுவாக நாம் சமைக்க பயன்படும், சமைத்த பொருட்களை பிரிட்ஜில் வைத்து பல நாட்களுக்கு பாதுகாக்கிறோம். ஆனால், சில பொருட்களை பிரிட்ஜ் எனப்ப...
பொதுவாக நாம் சமைக்க பயன்படும், சமைத்த பொருட்களை பிரிட்ஜில் வைத்து பல நாட்களுக்கு பாதுகாக்கிறோம். ஆனால், சில பொருட்களை பிரிட்ஜ் எனப்படும் குளிர்பதனப் பெட்டியில் வைக்கக் கூடாது. வைக்கக் கூடாது மட்டும் அல்ல, வைக்கவேக் கூடாது என்றும் சொல்லலாம்.
அது போன்ற போருட்களின் பட்டியலை பார்க்கலாம்.
வெங்காயம்
வெங்காயம் பொதுவாக காற்றோட்டமான சூழ்நிலையில் இருக்க வேண்டும். பாலீதீன் பையில் அடைத்து விற்கப்படும் வெங்காயத்தையும் நான் வாங்கி வீட்டுக்கு கொண்டு வந்த பிறகு அதனை காற்றோட்டமாக வைக்க வேண்டும்.
பூண்டு
பூண்டை எப்போதுமே பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அப்படி வைத்தால் அது பூரணம் பிடிக்க ஆரம்பித்துவிடும். அதனை காற்றோட்டமான சூழலில் வைக்க வேண்டும். பூண்டுகளை வாங்கி வந்ததும், அதனை தனித்தனி பல்லாக பிரித்து எடுத்து வைக்கலாம்.
உருளைக் கிழங்கு
உருளைக் கிழங்குகளை பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அதுபோலவே அதனை கழுவியும் எடுத்து வைக்கக் கூடாது. உருளைக் கிழங்குகளில் பச்சை வேர்கள் மற்றும் பச்சை நிறம் இல்லாமல் பார்த்து வாங்க வேண்டும். காற்றோட்டமான சூழலில் வைக்க வேண்டும். பாலீதீன் பையில் வைக்கக் கூடாது.
தேன்
உலகத்திலேயே கெட்டுப் போகாத உணவு பொருள் என்று ஒன்று உண்டு என்றால் அது தேன்தான். ஆனால், நாம் இப்போது கடைகளில் வாங்கப்படும் தேன், சுமை மற்றும் பலவற்றுக்காக பல வித பொருட்கள் கலக்கப்பட்டு வருகிறது. எனினும், தேனை பிரிட்ஜில் வைத்து பராமரிக்கக் கூடாது.
வாழைப்பழம்
வாழைப் பழத்தை பிரிட்ஜில் வைத்தால் அது விரைவில் கெட்டுப் போய் தோல் கருத்து விடும். எனவே வாழைப் பழத்தை பிரிட்ஜில் வைக்கக் கூடாது.
பூசணிக்காய்
பூசணிக்காயை நன்கு காற்றோட்டமான இடத்தில் வைக்க வேண்டும்.
மெலாம்பழம்
கடையில் இருந்து முழுதாக வாங்கி வந்த மெலாம்பழத்தை பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அவ்வாறு வைத்தால், மெலாம் பழத்தில் இருக்கும் சில சத்துக்களை பழம் இழந்து விடுகிறது. ஆனால், நறுக்கிய மெலாம்பழத்தை டப்பாவிலோ பாலிதீன் பையிலோ போட்டு பிரிட்ஜில் வைக்கலாம்.
இதேப்போல, அன்னாசி, கிவி பழம், பிலம் பழம், மாங்காய் போன்றவற்றையும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது.
தினமும் பல் துலக்க பயன்படுத்தும் டூத் பிரஷ்ஷின் அசிங்கமான ரகசியங்கள்!!!
November 27, 2017வாயை சுத்தமாக வைத்துக் கொள்ளவும், பிளேக்கை அகற்றவும் தினசரி பல் துலக்குவது அவசியம். வாயின் சுகாதாரத்தைப் பேணுவதற்கு டூத் பிரஷை சரியான ...
வாயை சுத்தமாக வைத்துக் கொள்ளவும், பிளேக்கை அகற்றவும் தினசரி பல் துலக்குவது அவசியம். வாயின் சுகாதாரத்தைப் பேணுவதற்கு டூத் பிரஷை சரியான முறையில் பராமரிப்பது மிகவும் அவசியம். மேலும் 3-4 மாதங்களுக்கு ஒரு முறை அல்லது பிரிஸில்கள் தேய ஆரம்பித்தவுடன் டூத் பிரஷை மாற்றுவது அவசியம் என்று டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
அதுமட்டுமின்றி, உங்கள் டூத் பிரஷ், கிருமிகளின் பண்ணையாக இருக்கிறது என்று இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அதிலும் மூடி வைக்கப்படாத ஒரு டூத் பிரஷில் 100 மில்லியன் பாக்டீரியாக்கள் வசிக்கின்றன. வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும் ஈ-கோலி பாக்டீரியாவும், தோல் தொற்று நோயை ஏற்படுத்தும் ஸ்டாபில்கோலி பாக்டீரியாவும் இதில் அடங்கும்.
உங்கள் டூத் பிரஷில் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருப்பது என்ன தெரியுமா?
ஏராளமான கிருமிகளின் பண்ணையே அதற்குள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். மூடி வைக்கப்படாத ஒரு டூத்பிரஷில் 100 மில்லியன் பாக்டீரியாக்கள் வசிக்கின்றன. வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும் ஈ-கோலி பாக்டீரியாவும், தோல் தொற்று நோயை ஏற்படுத்தும் ஸ்டாபில்கோலி பாக்டீரியாவும் இதில் அடக்கம்.
வாய் நிறைய பாக்டீரியா
ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான நுண்ணுயிர்கள் நம் வாயில் உற்பத்தியாகி, வாடகை கொடுக்காமல் வசிக்கின்றன. இது ஒரு பெரிய விஷயமில்லை. பிரச்சனை எப்பொழுது தொடங்குகிறது என்றால், இந்த பாக்டீரியாக்களின் எண்ணிக்கை வழக்கத்துதிற்கு மாறாக அதிகரிக்கும் போது தான். பல்லைத் துலக்கும் போது நீங்கள் அகற்றுகிறீர்களே மஞ்சள் படிவுகள், அவை எல்லாமே பாக்டீரியாக்கள் தான். அவை உங்கள் வாய் என்ற வாடகை வீட்டிலிருந்து டூத் பிரஷ் என்ற அவுட் ஹவுஸுக்கு இடம் மாறுகின்றன.
பல் துலக்குவதால் எப்படி காயம் ஏற்படுத்துகிறது?
டூத் பிரஷ் மேலும் கீழும் இயங்கும் போது ஈறுகளைப் பின்னுக்கு அழுத்துவதால் காயம் ஏற்படுகிறது. இப்பொழுது டூத் பிரஷில் உள்ள கிருமிகள் மீண்டும் உங்கள் வாய்க்கு இடம் மாறுகிறது. உங்கள் வாய் பழக்கப்பட்ட இடம் தான் என்பதால், அவை பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படுத்துவதில்லை. ஆனால் டூத் பிரஷை மற்றவர்கள் பயன்படுத்தினால் அவ்வளவு தான். கிருமிகள் ஜம்மென்று புது இடத்துக்குக் குடி போய்விடும். மேலும் குணமாகிவிட்ட வியாதிகள் கூட சந்தோஷமாகத் திரும்பி வந்துவிடும்.
டூத் பிரஷால் நீங்கள் நோயாளி ஆக வாய்ப்பிருக்கிறதா?
அநேகமாக இல்லை. என்ன தான் உங்கள் வாய் ஒரு கிருமிப் பண்ணையாக இருந்தாலும், உங்கள் வாய்க்கும் டூத் பிரஷுக்கும் இடையே கிருமிகள் தினசரி போக்குவரத்து நடத்தினாலும், உங்கள் உடலில் உள்ள இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி எப்போதும் செயல்பாட்டில் இருப்பதால், பல் துலக்குவதன் மூலம் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பு குறைவு.
கழிவறை இருக்குமிடத்தில் பல்துலக்காதீர்கள்
பெரும்பாலான குளியலறைகள் மிகச் சிறியவை. நிறைய வீடுகளில், கழிப்பிடமும், குளியலறையும் ஒன்றாகவோ அல்லது மிக அருகிலோ இருக்கும். ஒவ்வொரு முறையும் கழிப்பறையைப் பயன்படுத்தும் போது, அதன் மூலம் காற்றில் ஏராளமான பாக்டீரியாக்கள் சுற்றுலா செல்கின்றன. அதனால் டூத் பிரஷ்கள் அருகில் இருக்கும் போது, அவற்றின் மேல் ஏற்கெனவே பாக்டீரியா நண்பர்கள் இருப்பதால், அங்கேயே தங்கிவிடுகின்றன. அதனால் டூத் பிரஷ்களை உங்கள் கழிப்பறையிலிருந்து எவ்வளவு தூரம் தள்ளி வைக்க முடியுமோ அவ்வளவு தூரம் தள்ளி வையுங்கள்.
டூத் பிரஷ் ஸ்டாண்டுகள் மற்றும் ஹோல்டர்கள்
பலரின் வாய்க்கிருமிகளும், கழிப்பறையிலிருந்து காற்றில் கலந்து வரும் கிருமிகளும் ஒன்றாய்ச் சங்கமிக்கும் இடமாக இது இருக்கிறது. வீட்டிலேயே மூன்றாவது அசுத்தமான இடம் இதற்குத் தான்.
டூத் பிரஷ் வைக்கும் குறிப்புகள்
* ஒவ்வொரு முறை பல் துலக்கியதும் குழாய்த் தண்ணீரில் நன்கு அலசிக் கழுவி உதறி வையுங்கள்.
* ஒரு முறை பிரஷ் செய்துவிட்டு, அடுத்த முறை பிரஷ் செய்வதற்கு இடைப்பட்ட நேரத்தில் அது நன்கு உலர்ந்திருக்க வேண்டும். ஏனெனில் ஈரப்பதமான டூத் பிரஷ், பாக்டீரியாக்களுக்கு ஜாலியான தங்குமிடம் ஆகும்.
* தலைப்பாகம் மேலே வரும்படி நிறுத்தி வையுங்கள். டூத் பிரஷ்களை தனித்தனியாக நிறுத்தி வைக்கும் ஸ்டாண்டுகளை உபயோகியுங்கள்.
* உங்கள் டூத் பிரஷ் உங்களுடையது மட்டுமே. உங்கள் சகோதரி, சகோதரன், கணவன், மனைவி, ரூம் மேட் ஆகியோரிடம் நீங்கள் எவ்வளவு அன்புடையவராக இருந்தாலும் சரி, டூத் பிரஷ் ஒரு பகிர்ந்து கொள்ளும் விஷயம் இல்லை. இல்லை. இல்லை.
எப்பொழுது உங்கள் டூத் பிரஷை மாற்ற வேண்டும்?
ஒவ்வொரு மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை உங்கள் டூத் பிரஷை மாற்றி விட வேண்டும். உங்கள் டூத் பிரஷ் தேய ஆரம்பிப்பது, நீங்கள் நோயுற்றிருப்பதற்கோ அல்லது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைந்திருப்பதற்கோ அது அறிகுறி. அப்பொழுது நீங்கள் அடிக்கடி உங்கள் டூத் பிரஷை மாற்ற வேண்டும்.
வாயை நல்ல படியாகப் பராமரியுங்கள்
ஈறு சம்பந்தமான நோய்கள், பற்சிதைவு, பல் சொத்தை மற்றும் வாய் துர்நாற்றம் ஆகியவை ஏற்படக் காரணம் பாக்டீரியாக்களே. எவ்வளவு முடியுமோ அவ்வளவு முறைகள் பல் துலக்குவதும், ஃப்ளாஸ், வாயில் எண்ணெய் கொப்பளிப்பதும் பெரும்பாலான பாக்டீரியாக்களை வெளியேற்றிவிடும். பல் துலக்கும் முன்பாக பாக்டீரியாவை எதிர்க்கக் கூடிய மௌத் வாஷ் பயன்படுத்தி வாய் கொப்பளிப்பதன் மூலம், வாயிலிருந்து பாக்டீரியா டூத் பிரஷுக்கு டிரான்ஸ்பர் ஆவதைத் தடுக்கலாம்.
Search This Blog
Blog Archive
- ► 2018 (454)
-
▼
2017
(521)
-
▼
December
(32)
-
►
Dec 05
(9)
- என்னை நிற்கவிடவில்லை, ஆனால் இவரை ஜெயிக்க வைப்பேன் ...
- கையெடுத்து கும்பிட்டு கெஞ்சும் விஷால்- உள்ளே நடந்த...
- விஜய் சேதுபதியின் ரூ 200 கோடி பட்ஜெட் படத்தின் படப...
- விஜய் ஆண்டனிக்கு முதன் முறையாக வந்த சோகம்
- மனைவியின் ஆசையை நிறைவேற்றாத அம்பேத்கர்! நினைவு தின...
- அறிஞர்கள் வாழ்வில் சுவையான சம்பவங்கள் - சர். ஐசக் ...
- அண்ணாதுரை அனைவருக்கும் பிடிக்கும். பார்க்கலாம்.
- திரைவிமர்சனம் -திருட்டு பயலே-2 - அறிமுகம் இல்லாத ந...
- விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதன் பின்னணி! ந...
-
►
Dec 03
(10)
- எந்த பக்கம் தலை வைத்து படுக்க வேண்டும்?
- தவறாக புரிந்து கொண்டுள்ள ஏழு அறிவியல் உண்மைகள்!
- வெத்துவேட்டு நகுலின் குத்துப்பாட்டில் எம்.ஜி.ஆர்! ...
- அரசியலுக்கு வரும் ரஜினி கமல்! சத்யராஜ் செம நக்கல்!
- கொழுப்பைக் குறைக்க ஒரு டஜன் டிப்ஸ்!
- எந்தெந்த காய் கனிகளை, எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்...
- மூலிகை மருத்துவத்தில் நீரிழிவுக்கு தீர்வு!
- பெண்களுக்கான பாட்டி வைத்தியம்!
- சிறுமியின் உயிரை கொடூரமாக பறித்த தொலைக்காட்சி தொடர...
- பாகுபலி 2 பட இடத்தை பிடித்த ரஜினியின் 2.0- சூப்பர்...
-
►
Dec 05
(9)
-
►
November
(167)
-
►
Nov 28
(10)
- எந்த பக்கம் தலை வைத்து படுக்க வேண்டும்?
- சமையலறை பூச்சிகளை இயற்கை முறையில் அழிக்க சில வழிகள...
- நடுத்தெருவில் நிற்கும் காக்கா முட்டை இயக்குனர்! கா...
- உலக அழகி மனுஷி சில்லருக்கு யாருடன் நடிக்க ஆசை தெரி...
- ஓசியில கொடுத்தால் கூட வேணாம்! இதென்ன பாலாவுக்கு வந...
- ரஜினிக்கு சரிந்தது செல்வாக்கு! அரசியல் கணக்கெடுப்ப...
- 2.0 படத்தை வீடியோ மூலம் இனி நீங்களும் பார்க்கலாம்!...
- சாமி 2 படத்திலிருந்து விலகியதன் பின்னணி உண்மை! திர...
- பெட்ரோல் பங்கில் ஏமாறாமல் இருப்பதற்கு! ! ! !
- பாம்பு வீட்டினுள் வந்துவிட்டால் என்ன செய்யலாம் அரு...
-
►
Nov 27
(10)
- கமல் அடித்தது உண்மையா- வெளிவந்த நிஜத்தகவல்
- சூப்பர் மேன் நடிகரின் மீசையை ஷேவ் செய்ய இத்தனை கோட...
- நாங்கள் அதிர்ஷ்டசாலிகளா இல்லையா?
- தலைவலியை நிரந்தரமாக போக்க வேண்டுமா..?
- அற்புதமான விளக்கம் அவசியம் படிக்கவும்!
- பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள்!
- துடைக்கும் துண்டு பளிச்சென்று மின்னுவதற்கு, இதோ சி...
- பிரிட்ஜில் வைக்கக் கூடாத 10 பொருட்கள்!
- தினமும் பல் துலக்க பயன்படுத்தும் டூத் பிரஷ்ஷின் அச...
-
►
Nov 28
(10)
-
▼
December
(32)