­
June 2018 - !...Payanam...!

முருகதாஸ் இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் ஒரு இயக்குனர். ஏனெனில் கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என அனைத்து மொழிகளிலும் ஹிட் கொடுத்த இயக்கு...

<
முருகதாஸ் இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் ஒரு இயக்குனர். ஏனெனில் கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என அனைத்து மொழிகளிலும் ஹிட் கொடுத்த இயக்குனர்.ஆனால், கடந்த சில வருடங்களாக இவருக்கு கொஞ்சம் சறுக்கலாகவே உள்ளது, பாலிவுட்டில் இவர் இயக்கத்தில் வந்த அகிரா, டோலிவுட்டில் ஸ்பைடர் இரண்டுமே படுதோல்வியை அடைந்தது.இந்நிலையில் முருகதாஸ் இயக்கிய ஸ்பைடர் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஒருவரை கொலை செய்து, மற்றவர்கள் அழுவதை ரசிக்கும் ஒரு சைக்கோவாக நடித்திருப்பார்.தற்போது வெளிவந்துள்ள இமைக்கா நொடிகள் படத்தின் ட்ரைலரிலும் இதே போல் ஒரு கதாபாத்திரத்தில் தான் அனுராக் காஷ்யூப் நடித்துள்ளார்.மேலும், முருகதாஸின் உதவி இயக்குனர் தான் இமைக்கா நொடிகள் இயக்குனர் அஜய் ஞானமுத்து என்பது குறிப்பிடத்தக்கது, இதனால், இந்த கதையை யார், யாரிடமிருந்து காப்பியடித்தார்கள் என்று தெரியவில்லை.இது மட்டுமின்றி இமைக்கா நொடிகள் படம் இரண்டு வருடங்களுக்கு முன்பே தொடங்கியது குறிப்பிடத்தக்கது. ...

Read More

காலை விட்டு ஆழம் பார்க்கலாம் என்று நினைத்த விஜய்யை ஆனந்தப்படுத்திவிட்டார்கள் ரஜினியும் கமல்ஹாசனும்! எம்.ஜி.ஆருக்குப் பின் ஜெயலலிதா. ஜெ. வுக...

<
காலை விட்டு ஆழம் பார்க்கலாம் என்று நினைத்த விஜய்யை ஆனந்தப்படுத்திவிட்டார்கள் ரஜினியும் கமல்ஹாசனும்! எம்.ஜி.ஆருக்குப் பின் ஜெயலலிதா. ஜெ. வுக்கு பின் சினிமாவிலிருந்து யாராலும் அரசியலில் வென்று ஆட்சி மெத்தையில் உருள முடியாது என்ற கருத்து தானாக கிளம்பியதா, அல்லது கிளப்பி விடப்பட்டதா? என்பதெல்லாம் பூதக்கண்ணாடிக் கேள்விகள்.அதை டெஸ்ட் பண்ணி பார்க்கலாம் என்றால், இருக்கிற இடமே இதமாக இருக்கிறது. இதைவிட்டு அதை முயல்வது அநாவசியம் என்று இரு மனதாக இருந்தார் விஜய். ஆனால் இவருக்கு முன் அரசியலில் திடீர் குதியல் போட்ட ரஜினியும் கமலும் விஜய்க்கு ஒரு தீர்க்கமான முடிவை கொடுப்பார்கள் என்பதுதான் நிஜம். சம்பந்தப்பட்ட இருவரும் தேர்தலில் நிற்பது ஒரு பக்கம் இருக்கட்டும். அதுவரை யுத்த களத்தை சூடாக வைத்திருக்க வேண்டுமே? அதற்காகவும் சில பல டயலாக்குகளை தன் படங்களில் சேர்த்து வருகிறார் விஜய்.‘சர்க்கார்’ படத்தில் அப்படியொரு டயலாக் இருக்கிறதாம். கேட்டால் ஆடிப்போய் விடுவீர்கள்.“நான் ஒரு தொகுதியில்தான்...

Read More

தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன் சமூகவலைதள ஸ்டாராக உருவெடுத்து வருகிறார். அவர் எது பேசினாலும் வைரலாகிவிடுகிறது. சட்டப்பேரவையில் அவ...

<
தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன் சமூகவலைதள ஸ்டாராக உருவெடுத்து வருகிறார். அவர் எது பேசினாலும் வைரலாகிவிடுகிறது. சட்டப்பேரவையில் அவர் அடிக்கும் ஜோக்குகளுக்கு சிரிப்பலைகள் எழும். அவையில் தான் கூறவரும் விஷயங்களை நகைச்சுவை கலந்து முன்வைப்பதுதான் இவரின் தனிச்சிறப்பு.சட்டப்பேரவையில் இன்று கிராமிய கலைஞர்களின் வாழ்வாதாரம் குறித்து துரைமுருகன் பேசினார். அப்போது கிராமியப் பாடல்களைப் பாடிக்காட்டினார். அவரின் பாட்டைக் கேட்டு அசந்துப்போன சபாநாயகர் தனபால்,  `நீங்கள் நாடகங்களில் நடித்தது உண்டா?’ என்று துரைமுருகனைப் பார்த்துக் கேள்வியெழுப்பினார். அதற்குப் பதிலளித்த துரைமுருகன்  `நான் சிறுவயதில் நாடகங்களில் நடித்திருக்கிறேன். ஷேக்ஸ்பியர் சொன்னதுபோல் இந்த உலகமே நாடக மேடை. இங்கு நாம் அனைவருமே நடித்துக்கொண்டிருக்கிறோம். அனைத்து எம்.எல்.ஏ-க்களும் நடிக்கிறோம். சபாநாயகர் ஆகிய நீங்களும் நடித்துக்கொண்டு இருக்கிறீர்கள்’ என்றார். அப்போது உறுப்பினர்களின் சிரிப்பலையில் அவையே அதிர்ந்தது.துரைமுருகனைப் பாராட்டும்விதமாக பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  `மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2001-ம் ஆண்டு அவையில் பேசும்போது, துரைமுருகன் நவரசம்...

Read More

எந்த கிளையில் உட்கார்ந்தால் பழம் கிடைக்கும் என்பது கிளிக்குத் தெரியும். கிளிக்கு தெரிந்த உண்மை கிளி மாதிரி நடிகைகளுக்கு தெரியாமல் போகுமா? ச...

<
எந்த கிளையில் உட்கார்ந்தால் பழம் கிடைக்கும் என்பது கிளிக்குத் தெரியும். கிளிக்கு தெரிந்த உண்மை கிளி மாதிரி நடிகைகளுக்கு தெரியாமல் போகுமா? சமீபத்தில் அஞ்சலி எடுத்த ஒரு அதிரடி முடிவு… அவருக்கு முழு பழத்தை கொடுக்குமா? இல்லை… அணில் கடித்த பழத்தைதான் கொடுக்குமா? போக போகதான் தெரியும்.வேறொன்றுமில்லை. தனது பழைய மேனேஜரை மாற்றிவிட்டு கீர்த்தி சுரேஷின் மேனஜரிடம் தனது கால்ஷீட் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டார். தற்போது டாப் கிளாஸ் நடிகையாக இருப்பவர் கீர்த்திசுரேஷ்தான். முன்பெல்லாம் கவர்ச்சியான கேரக்டர்களில் நடிக்க சம்மதித்து வந்த கீர்த்தி, ‘நடிகையர் திலகம்’ படத்தின் வெற்றிக்குப்பின் அடக்க ஒடுக்கமாக மட்டுமே நடிப்பது என்ற முடிவை எடுத்திருக்கிறார். இதன் விளைவாக தன்னை தேடி வரும் பல படங்களை வேண்டாம் என்று மறுத்தும் வருகிறாராம்.இப்படி அணில் கடித்த கால்ஷீட்டுகள் தன் மடியில் விழாதா என்பதால்தான் இப்படியொரு முடிவை அஞ்சலி எடுத்திருக்கிறார். கீர்த்தி சுரேஷிடம் இருந்து மறுக்கப்படும் படங்களை அப்படியே தள்ளிக்...

Read More

சர்கார் தளபதி விஜய் நடிப்பில் இந்த தீபாவளிக்கு வரவிருக்கும் படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் தற்போதே மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளது....

<
சர்கார் தளபதி விஜய் நடிப்பில் இந்த தீபாவளிக்கு வரவிருக்கும் படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் தற்போதே மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளது.இதற்கு முக்கிய காரணம் முருகதாஸுடன் விஜய் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார், இந்நிலையில் சர்கார் படத்தின் கதையே தற்போது இருக்கும் தமிழக முதல்வரை எதிர்க்கும் வகையில் தான் இருக்கும் என கிசுகிசுக்கப்படுகின்றது.இவர்களை எல்லாம் எதிர்த்து விஜய் கடைசியில் எப்படி வெற்றி பெறுகின்றார் என்பதே கதை என நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றது.விஜய் படம் என்றாலே ஏற்கனவே சர்ச்சை நிரம்பியிருக்கும், தற்போது இப்படி ஒரு கதை கண்டிப்பாக பல சர்ச்சைகள் வெடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. ...

Read More

முருகதாஸ் இயக்கும் விஜய் நடித்து வரும் படத்திற்கு சர்க்கார் என டைட்டில் வைத்து விட்டார்கள். விஜய் பிறந்தநாள் ஸ்பெஷலாக இது அறிவிக்கப்பட்டதும...

<
முருகதாஸ் இயக்கும் விஜய் நடித்து வரும் படத்திற்கு சர்க்கார் என டைட்டில் வைத்து விட்டார்கள். விஜய் பிறந்தநாள் ஸ்பெஷலாக இது அறிவிக்கப்பட்டதும் ரசிகர்கள் கொண்டாடிவிட்டார்கள்.ஆனால் போஸ்டரில் விஜய் கையில் சிகிரெட் வைப்பது போல இருந்தது சர்ச்சையாகியுள்ளது. இந்நிலையில் வழக்கறிஞர் தமிழ்வேந்தன் என்பவர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.இதில் அவர் சினிமா பிரபலங்களை பலரும் தங்கள் ரோல் மாடலாக பின்பற்றி வருகிறார்கள். இன்று புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது.விஜய்யின் சர்க்கார் போஸ்டரில் சிகிரெட் இடம் பெற்றுள்ளது. இதை இயக்குனரிடம் சொல்லி நீக்க வேண்டும். இது போன்ற காட்சிகளை பார்க்கும் இளம் தலைமுறையினரை சிகிரெட் பிடிக்க தூண்டும்.இதனால் இளைய தலைமுறை சீரழிய வாய்ப்புள்ளது. புகையிலைப்பொருட்களை தடை செய்யப்பட்டுள்ளது. பல கொள்ளைகளுக்கு சினிமாதான் காரணமாக இருக்கிறது என அவர் கூறியுள்ளார். ...

Read More

அபூர்வ சகோதரர்கள் இந்திய சினிமாவில் பிரமாண்ட வெற்றியை பெற்ற படம். இப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தியிலும் செம்ம ஹிட் அடித்தது. இந்...

<
அபூர்வ சகோதரர்கள் இந்திய சினிமாவில் பிரமாண்ட வெற்றியை பெற்ற படம். இப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தியிலும் செம்ம ஹிட் அடித்தது.இந்நிலையில் இப்படம் ஏன் உருவானது என்ற கதையை கமலே சமீபத்தில் கூறினார், இதில் ‘நான் பாலிவுட்டில் நடித்த போது பலரும் நீங்கள் அமிதாப் பச்சன் போல் உயரமாக இருந்திருக்க வேண்டும்.அல்லது இன்னும் கொஞ்சம் உயரமாக இருந்திருந்தால் கூட பாலிவுட்டில் நீங்கள் தான் சூப்பர் ஸ்டார் என்று ஒரு சிலர் சொன்னார்கள். அது என்னை மிகவும் பாதித்தது.அப்போது தான் எனக்கு ஒன்று தோன்றியது, திறமை இருக்க உயரம் ஒரு தடையா, அதன் காரணமாக இன்னும் உயரத்தை குறைத்து அபூர்வ சகோதரர்கள் படத்தில் நடித்தேன்’ என்று கமல் கூறினார். ...

Read More

தமிழ் சினிமா தற்போதெல்லாம் புதிய புதிய கதை களங்களில் அடுத்தக்கட்டத்தை நோக்கி பயணிக்கின்றது. அந்த வகையில் நாய்கள் ஜாக்கிரதை, மிருதன் என தொடர...

<
தமிழ் சினிமா தற்போதெல்லாம் புதிய புதிய கதை களங்களில் அடுத்தக்கட்டத்தை நோக்கி பயணிக்கின்றது. அந்த வகையில் நாய்கள் ஜாக்கிரதை, மிருதன் என தொடர்ந்து புதிய முயற்சிகளை எடுத்து வரும் சக்தி சௌந்தர்ராஜன் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுக்கும் ஜெயம் ரவியுடன் கூட்டணி வைத்துள்ள ஸ்பேஸ் கதைக்களம் தான் டிக் டிக் டிக். ரசிகர்களை இந்த வித்தியாச கதைக்களம் கவர்ந்ததா, பார்ப்போம்.கதைக்களம்படத்தின் ஆரம்பக்காட்சிலேயே 8 டன் எரிகல் சென்னையில் வந்து விழுகின்றது. இதனால் ஒரு சில உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றது.அதை தொடர்ந்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அதை விட பெரியளவில் ஒரு எரிகல் மோதவருவதாக தகவல் கிடைக்கின்றது.அது வந்து மோதினால் தமிழகம், இலங்கை, ஆந்திரா ஆகிய இடங்கள் அழியும், இதை தடுக்க மெஜிசிஷியன் மற்றும் திருடனான ஜெயம் ரவி உதவியுடன் ஒரு சில அமைப்பினரை விண்வெளிக்கு அனுப்பி அந்த எரிகல்லை உடைத்து கல்லை திசை திருப்ப ப்ளான் செய்கின்றனர். ரவி இந்த...

Read More

“விவசாயிக்கு ஒண்ணுன்னா என் ஹீமோ குளோபின் ஹீட்டாயிடும். ஹார்மோன் நரம்பு கட் ஆயிடும்” என்று உதடு துடிக்க, தொண்டை புடைக்கச் சொல்கிற நடிகர்களைய...

<
“விவசாயிக்கு ஒண்ணுன்னா என் ஹீமோ குளோபின் ஹீட்டாயிடும். ஹார்மோன் நரம்பு கட் ஆயிடும்” என்று உதடு துடிக்க, தொண்டை புடைக்கச் சொல்கிற நடிகர்களையெல்லாம், “ஓரமா போயி விளையாடு தம்பி” என்று அதே விவசாயிகள் எச்சரிக்க ஆரம்பித்து வெகு நாளாயிற்று. சப்போர்ட் பண்ணுகிறேன் பேர்வழி என்று இவர்கள் பண்ணுகிற கூத்தை ரசிக்க முடியாமல்தான் அப்படி கோபப்பட ஆரம்பித்திருக்கிறார்கள் அவர்கள். அண்மையில் கர்நாடக முதல்வர் குமாரசாமியை சந்தித்து காவேரி நீர் வேண்டி கெஞ்சினார் கமல்.“உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பை செயல்படுத்த சொல்லாமல் இதென்னய்யா புதுக்கூத்து?” என்று கமல்ஹாசனை கண்டித்தார்கள் விவசாய சங்கத்தினர். அவர் பண்ணிய காமெடி அப்படி என்றால், மைக் கிடைத்தால் போதும். விவசாயிகளுக்காக உருகி உருகி வேடிக்கை காட்டி வருகிறார் விஷால். ‘துப்பறிவாளன்’ படக் கலெக்ஷனில் ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் ஒரு ரூபாய் விவசாயிகளுக்கு தருவேன் என்று அவர் அறிவித்து இத்தனை நாளாச்சு. இன்னும் பத்து பைசா கூட ஒரு விவசாயிக்கும்...

Read More

ஷாரிக் ஹாசன் பிரபல நடிகர் ரியாஸ்கானின் மகன். இவர் சமீபத்தில் பிக்பாஸ்-2 வீட்டிற்குள் சென்றுள்ளார், பல பெண்களுக்கு பிடித்த போட்டியாளர் இவர் ...

<
ஷாரிக் ஹாசன் பிரபல நடிகர் ரியாஸ்கானின் மகன். இவர் சமீபத்தில் பிக்பாஸ்-2 வீட்டிற்குள் சென்றுள்ளார், பல பெண்களுக்கு பிடித்த போட்டியாளர் இவர் தான்.இந்நிலையில் ஷாரிக்கின் அம்மா பிரபல தொகுப்பாளராக இருந்து நடிகையான உமா ரியாஸ் அவர்கள் தான்.உமாவின் அம்மா யார் தெரியுமா, சம்சாரம் அது மின்சாரம் படத்தில் விசுவின் மனைவியாக நடித்த கமலா தான், மேடைக்கு ஷாரிக் தன் பாட்டியை அழைத்து வந்த போது அவரை யாருக்குமே அடையாளம் தெரியவில்லை. ...

Read More

கமல்ஹாசனும், கௌதமியும் ஒரு சில வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தனர். ஆனால், என்ன ஆனது என்று தெரியவில்லை, இடையில் இருவரும் பிரிந்துவிட்டனர். அதை தொடர...

<
கமல்ஹாசனும், கௌதமியும் ஒரு சில வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தனர். ஆனால், என்ன ஆனது என்று தெரியவில்லை, இடையில் இருவரும் பிரிந்துவிட்டனர்.அதை தொடர்ந்து கௌதமி கமல் எனக்கு சம்பளமே தரவில்லை என்று புகார் அளிக்க, பிரச்சனை பெரிதாகியது.கமல் அரசியலுக்கு வரும் நேரத்தில் கௌதமி வேண்டுமென்றே இப்படி செய்கின்றார் என்றெல்லாம் கூறப்பட்டது.இந்நிலையில் கௌதமிக்கு சம்பளம் கொடுக்காதது குறித்து கமலிடம் இன்று கேட்கையில் ‘கௌதமிக்கு சரியாக சம்பளம் கொடுக்கப்பட்டுவிட்டது.சம்பளம் கொடுக்கவில்லை என்று சொன்னவர், பிறகு நான் சம்பளம் கொடுத்ததை ஏன் வெளியே சொல்லவில்லை’ என்று அதிரடியாக பதில் அளித்தார். ...

Read More

மத்திய ஆசிரியர் தகுதி தேர்விலிருந்து தமிழ் மொழி நீக்கப்பட்டதாக தகவல் வெளியானது. `இந்தத் தகவல் உண்மையில்லை' என்று மறுத்துள்ளார் மத்திய அ...

<
மத்திய ஆசிரியர் தகுதி தேர்விலிருந்து தமிழ் மொழி நீக்கப்பட்டதாக தகவல் வெளியானது. `இந்தத் தகவல் உண்மையில்லை' என்று மறுத்துள்ளார் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர். மத்திய அரசு நடத்தி வரும் கேந்திரிய வித்யாலயா, நவோதயா உள்ளிட்ட பள்ளிகள் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை ஆசிரியராகப் பணியாற்ற, மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் (சி.டி.இ.டி) தேர்ச்சிபெற வேண்டும். இதைத் தவிர, அரசு உதவிப் பெறும் பள்ளிகள் சைனிக் உள்ளிட்ட பள்ளிகளும் ஆசிரியராகப் பணியாற்ற இந்தத் தேர்வு மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இத்தேர்வினை, மத்திய இடைநிலை கல்விவாரியம் சி.பி.எஸ்.இ எடுத்து நடத்தி வருகிறது. தாள் 1, தாள் 2 என இரண்டு தாள்களை கொண்ட சி.டி.இ.டி தேர்வில் மொழித் தேர்விலிருந்து தமிழ் மொழி நீக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது.தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம், குஜராத்தி உள்ளிட்ட 17 மொழிகள் நீக்கப்பட்டதாகவும், கடந்த ஆண்டு வரை தமிழ் மொழி உட்பட...

Read More

தமிழ் ஒளிபரப்பான முதல் பிக்பாஸ் சீசனில் ரசிகர்களின் பேவோரைட் நடிகை ஓவியா தான். அவர் போட்டியில் இருந்து பாதியில் விலகியது அவரது ரசிகர்கள் பல...

<
தமிழ் ஒளிபரப்பான முதல் பிக்பாஸ் சீசனில் ரசிகர்களின் பேவோரைட் நடிகை ஓவியா தான். அவர் போட்டியில் இருந்து பாதியில் விலகியது அவரது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.இந்நிலையில் தற்போது அவர் இரண்டாவது சீசனிலும் போட்டியாளராக நுழைந்துள்ளார். அவரை கமல்ஹாசன் நேற்று பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பிவைத்தார்.இந்நிலையில் அவர் விருந்தினராக மட்டுமே வீட்டுக்குள் சென்றுள்ளாரா என்ற சந்தேகம் அதிகமாகியுள்ளது. இன்று ஒளிபரப்பப்பட்ட டீசரில் ஓவியா கதவின் அருகே நின்றுகொண்டு வெளியேறுவதற்கு ரெடியாக உள்ளது போல தெரிகிறது. மற்றவர்கள் துரத்தில் நின்று வழியனுப்புவது கண்ணாடியில் தெரிகிறது. போகும் முன் அவர் மற்றவர்களை பார்த்து "உங்களை பார்த்தால் பாவமாக உள்ளது" என அவர் கூறியுள்ளார். ...

Read More

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற வருடமே சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் மக்களிடம் அமோக வரவேற்பு கிட...

<
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற வருடமே சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் மக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்ததால் தற்போது அடுத்த சீசனும் துவங்கவுள்ளது.இந்நிலையில் இந்த 2வது சீசனின் போட்டியாளர்கள் யார் யார் என பல்வேறு யூகங்கள் உலா வருகின்றன. நடிகர் பவர் ஸ்டார், மும்தாஜ், தாடி பாலாஜி மற்றும் அவர் மனைவி, எங்க வீடு மாப்பிள்ளை அபர்ணதி, இருட்டு அறையில் முரட்டு குத்து பட நடிகை யாஷிகா உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிகிறது.இந்நிலையில் தற்போது புதிய இரண்டு பெயர்கள் பற்றிய உறுதியான தகவல் வெளிவந்துள்ளது. பிரபல நடிகை ஜனனி ஐயர் மற்றும் வாணி ராணி சீரியலில் நடிக்கும் மமதி சாரி அகியோர் போட்டியாளர்களாக வீட்டுக்குள் நுழைவார்கள் என்று தகவல் வந்துள்ளது. ...

Read More

ஷங்கர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர். இவர் படம் எப்போது வரும் என அனைவரும் காத்திருப்பார்கள். இவர் இயக்கத்தில் ஆசிய கண்டத்திலேயே அதிக ...

<
ஷங்கர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர். இவர் படம் எப்போது வரும் என அனைவரும் காத்திருப்பார்கள்.இவர் இயக்கத்தில் ஆசிய கண்டத்திலேயே அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட 2.0 படம் எப்போது வரும் என்று படக்குழுவிற்கே தெரியாது.ஆம், படத்தை பல இடங்களில் கிராபிக்ஸ் அமைக்கும் பணிக்கு கொடுத்துள்ளனர், இதில் ஒரு இடத்தில் கம்பெனிக்கு சீல் வைத்து பூட்டியேவிட்டார்களாம்.இதனால், ஒரு சில காட்சிகள் அந்த இடத்திலேயே மாட்டிக்கொண்டதாக முன்னணி பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.இதன் காரணமாக ஷங்கர் மிகவும் வருத்தத்தில் இருக்க, இனி இது வேலைக்கு ஆகாது என இந்தியன்-2விற்கு அவர் சென்றுவிட்டதாக கூறப்படுகின்றது. ...

Read More

பிக்பாஸ் முடிந்து தற்போது இரண்டாவது சீசன் தொடங்கிவிட்டது. பலரும் இந்த வீட்டிற்குள் யார் வரப்போகிறார்கள் என்று ஆவலுடன் காத்திருக்கின்றனர். அ...

<
பிக்பாஸ் முடிந்து தற்போது இரண்டாவது சீசன் தொடங்கிவிட்டது. பலரும் இந்த வீட்டிற்குள் யார் வரப்போகிறார்கள் என்று ஆவலுடன் காத்திருக்கின்றனர்.அந்த வகையில் தற்போதைக்கு பவர்ஸ்டார் கண்டிப்பாக இந்த வீட்டிற்குள் வருவதை அவரே ஒரு பேட்டியில் உறுதியளித்துள்ளார்.அதுமட்டுமின்றி பிக்பாஸ் வீட்டில் ஜெயில் போல் ஒரு செட் உள்ளதை நம் தளத்திலேயே தெரிவித்து இருந்தோம்.இதுக்குறித்து பவர்ஸ்டாரிடம் கேட்கையில் ‘நம்ம பார்க்காத ஜெயிலா, அந்த வீட்டில் எனக்காக மட்டும் தான் அதை வைத்துள்ளார்கள் போல’ என்று கூறியுள்ளார். ...

Read More

விஜய் மில்டன் ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனராக அவதாரம் எடுத்தவர். தன் முதல் படத்தில் சறுக்கினாலும் கோலிசோடா என்ற படத்தின் மூலம் வெற்றிக்கொ...

<
விஜய் மில்டன் ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனராக அவதாரம் எடுத்தவர். தன் முதல் படத்தில் சறுக்கினாலும் கோலிசோடா என்ற படத்தின் மூலம் வெற்றிக்கொடி நாட்டியவர். கோலிசோடா என்றாலே எளியவரை வலியவர் மிதிக்க, அவர்களை ஒரு கட்டத்தில் எளியவர் எப்படி திரும்பி அடிக்கின்றார் என்பதே கதை. இதே பார்முலா தான் கோலிசோடா-2வில் என்றாலும், இது எந்த விதத்தில் ரசிகர்களை கவர்ந்தது பார்ப்போம்.கதைக்களம்சமுத்திரக்கனி ஆரம்பத்திலேயே போலிஸாரால் கைது செய்யப்படுகின்றார், கௌதம் மேனன் அவரை விசாரிக்கின்றார்.இதை தொடர்ந்து மூன்று இளைஞர்களை சமுத்திரக்கனி குறிப்பிட்டு பேச ஆரம்பிக்கின்றார். அந்த மூன்று இளைஞர்களுமே வாழ்க்கையில் அடுத்தக்கட்டத்திற்கு வர முயற்சி செய்கின்றார்கள், அவர்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் கனி உதவுகின்றார்.ஒருவர் ஆட்டோவிலிருந்து கார் வாங்க வேண்டும், மற்றொரு இளைஞர் ரவுடியிடமிருந்து விலகி நல்ல வேலைக்கு போகவேண்டும், இன்னொருவர் பேஸ்கட்பால் ப்ளேயர் ஆக வேண்டும்.ஆனால் இவர்கள் வாழ்க்கையில் ஒரு சில அதிகார வர்க்கத்தால் திசை மாறுகின்றது. முன்னவே சொன்னது போல்...

Read More

பிக்பாஸ் நிகழ்ச்சி பட்டித்தொட்டியெல்லாம் பிரபலம். அந்த வகையில் தற்போது பிக்பாஸ்-2 இந்த வாரம் தொடங்கவுள்ளது. இதில் 60 கேமராக்கள் இருக்க, இந்...

<
பிக்பாஸ் நிகழ்ச்சி பட்டித்தொட்டியெல்லாம் பிரபலம். அந்த வகையில் தற்போது பிக்பாஸ்-2 இந்த வாரம் தொடங்கவுள்ளது.இதில் 60 கேமராக்கள் இருக்க, இந்த முறை போட்டியாளர்களுக்கு கடும் சவால்கள் காத்திருக்கின்றதாம்.ஆம், பிக்பாஸ் வீட்டிற்குள் சிறை போல் ஒரு ரூமை தயார் செய்துள்ளனர், இனி கொடுத்த டாஸ்கை செய்யாமல் இருப்பவர்கள் இந்த சிறையில் அடைக்கப்படுவார்களாம்.அதுமட்டுமின்றி பிக்பாஸ் ரூல்ஸை மீறுபவர்களுக்கும் இது தான் தண்டனை என கூறியுள்ளனர். ...

Read More

விஜய் சேதுபதி இன்று தமிழ் சினிமாவில் தரமான படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர். இவருக்கு என்று பெரிய மாஸ் ரசிகர்கள் வட்டம் உருவாகிவிட்டது. இந்...

<
விஜய் சேதுபதி இன்று தமிழ் சினிமாவில் தரமான படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர். இவருக்கு என்று பெரிய மாஸ் ரசிகர்கள் வட்டம் உருவாகிவிட்டது.இந்த நிலையில் விஜய் சேதுபதி தான் ஹீரோவாக நடித்த முதல் படமான தென்மேற்கு பருவக்காற்று படப்பிடிப்பில், சரண்யா பொன்வண்ணனிடம் ‘என்னை எல்லாம் யாருக்காவது பிடிக்குமா அம்மா?’ என்று கேட்பாராம்.அப்போது சரண்யா ‘கண்டிப்பாக நீங்கள் ஒரு நாள் உயர்ந்த இடத்திற்கு செல்வீர்கள்’ என்று நம்பிக்கை கொடுத்தாராம், இதை இன்று நடந்த ஜுங்கா இசை வெளியீட்டு விழாவில் பகிர்ந்துக்கொண்டனர். ...

Read More

ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படத்திற்காக வட இந்தியாவில் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில் காலா...

<
ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படத்திற்காக வட இந்தியாவில் முகாமிட்டுள்ளனர்.இந்நிலையில் காலா படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது, நீண்ட நாட்களுக்கு பிறகு சூப்பர் ஸ்டாரை இப்படி அதிரடியாக திரையில் பார்ப்பது அனைவருக்கும் விருந்து தான்.ஆனால், படத்தை தாணு அளவிற்கு தனுஷ் முறையாக ப்ரோமோஷன் செய்யாததால், படம் பல இடங்களில் வசூலில் பின் தங்கியே உள்ளது.இது ரஜினிக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாம், தனுஷிடம் கூட கோபித்துக்கொண்டதாக கூறப்படுகின்றது. ...

Read More

 கமல்ஹாசன் நடிப்பில் விரைவில் விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகம் திரைக்கு வரவுள்ளது. நேற்று இப்படத்தின் ட்ரைலர் வெளிவந்து செம்ம ஹிட் அடித்த...

<
 கமல்ஹாசன் நடிப்பில் விரைவில் விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகம் திரைக்கு வரவுள்ளது. நேற்று இப்படத்தின் ட்ரைலர் வெளிவந்து செம்ம ஹிட் அடித்தது.இந்த ட்ரைலர் ரசிகர்களிடம் செம்ம வரவேற்பு அடைந்ததால் படக்குழு செம்ம சந்தோஷத்தில் உள்ளது.இந்நிலையில் கமலிடம் இந்தியன் இரண்டாம் பாகம் குறித்து கேட்க, அதற்கு அவர் ‘இந்தியன் இரண்டாம் பாகம் முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த படம்.ஒரு கோபத்தின் வெளிப்பாடகவே அப்படம் இருக்கும், பல அரசியல்வாதிகளுக்கு எரிச்சலை தரலாம்’ என்று கூறியுள்ளார். ...

Read More

தமிழ் சினிமாவில் திரைப்படங்களை தாண்டி சீரியல்களுக்கு ரசிகர்கள் அதிகம். ஒரு சீரியல் முடிந்துவிட்டால் அதற்கு மக்கள் எப்படி வருத்தப்படுவார்கள்...

<
தமிழ் சினிமாவில் திரைப்படங்களை தாண்டி சீரியல்களுக்கு ரசிகர்கள் அதிகம். ஒரு சீரியல் முடிந்துவிட்டால் அதற்கு மக்கள் எப்படி வருத்தப்படுவார்கள் என்பதை நாம் சில சீரியல் பிரியர்களை பார்த்தால் தெரியும்.இப்படி மக்களை அன்றாடம் சந்தித்து வரும் சீரியல் பிரபலங்களுக்கு எவ்வளவு சம்பளம் என்ற விவரத்தை பார்ப்போம்.ரூ. 1 லட்சம்ராதிகாதேவயாணிரூ.40 முதல் 50 ஆயிரம்ரம்யா கிருஷ்ணன்சோனியா அகர்வால்மதுமிதாரூ. 25,000சன் மியூசிக் மஹேஸ்வரி பாரதிதென்றல் சுருதிமௌன ராகம் ஷமிதாவாணி போஜன்ரக்ஷிதாரூ. 15,000நளினிசந்திரன்அபிதா (திருமதி செல்வம்)ரூ. 10,000வடிவுக்கரசிஷாந்தி வில்லியம்ஸ்மோனிகா மேக்னாநிஷா ரேகா (அண்ணியார்)ஆல்யா மானசா ...

Read More

காலா படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. வெளிநாடுகளில் படம் வெளியாகிவிட்டது. பல இடங்களில் அதிகமான...

<
காலா படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. வெளிநாடுகளில் படம் வெளியாகிவிட்டது. பல இடங்களில் அதிகமான எண்ணிக்கைகளில் தியேட்டர்கள் இதற்கு கிடைத்துள்ளன.இந்தியாவில் நாளை ஜூன் 7 ல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் 45 நிமிட காட்சிகள் சில மணிநேரத்திற்கு முன் இணையதளத்தில் சட்டவிரோதமாக நேரலை செய்யப்பட்டது.இதை அதிக எண்ணிக்கையில் பார்த்து ஷேர் செய்திருந்தனர். இந்நிலையில் இப்படியான தகாத செயலில் ஈடுப்பட்ட பிரவீன் என்ற இளைஞரை சிங்கப்பூர் போலிசார் கைது செய்துள்ளார்களாம். ...

Read More

காலா படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. வெளிநாடுகளில் படம் வெளியாகிவிட்டது. பல இடங்களில் அதிகமான...

<
காலா படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. வெளிநாடுகளில் படம் வெளியாகிவிட்டது. பல இடங்களில் அதிகமான எண்ணிக்கைகளில் தியேட்டர்கள் இதற்கு கிடைத்துள்ளன.இந்தியாவில் நாளை ஜூன் 7 ல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் 45 நிமிட காட்சிகள் சில மணிநேரத்திற்கு முன் இணையதளத்தில் சட்டவிரோதமாக நேரலை செய்யப்பட்டது.இதை அதிக எண்ணிக்கையில் பார்த்து ஷேர் செய்திருந்தனர். இந்நிலையில் இப்படியான தகாத செயலில் ஈடுப்பட்ட பிரவீன் என்ற இளைஞரை சிங்கப்பூர் போலிசார் கைது செய்துள்ளார்களாம். ...

Read More

ரஜினியின் காலா பாக்ஸ் ஆபிஸை திணறடிக்க தயாராக இருக்கிறது. இன்று வெளிநாடுகளில் வெளியாகவுள்ள நிலையில், நாளை தமிழகம் மற்றும் எல்லா இடங்களிலும் ...

<
ரஜினியின் காலா பாக்ஸ் ஆபிஸை திணறடிக்க தயாராக இருக்கிறது. இன்று வெளிநாடுகளில் வெளியாகவுள்ள நிலையில், நாளை தமிழகம் மற்றும் எல்லா இடங்களிலும் வெளியாக இருக்கிறது.கர்நாடகாவில் ரிலீஸ் இல்லை என்று கூறப்பட்ட நிலையில் அங்கும் 130 திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில் சென்னையில் உள்ள உதயம் மற்றும் கமலா திரையரங்குகளில் வியாபார ரீதியிலாக உடன்பாடு ஏற்படாத காரணத்தால் அந்த இரண்டு திரையரங்குகளில் மட்டும் ரஜினி காலா ரிலீஸ் ஆகவில்லையாம்.இதனால் ரசிகர்கள் கொஞ்சம் வருத்தத்தில் உள்ளனர். ...

Read More

காலா ரஜினிகாந்த் நடிப்பில் நாளை மறுநாள் உலகம் முழுவதும் வருகின்றது. இப்படத்திற்கு உலகம் முழுவதுமே நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால், சமீபத்தில்...

<
காலா ரஜினிகாந்த் நடிப்பில் நாளை மறுநாள் உலகம் முழுவதும் வருகின்றது. இப்படத்திற்கு உலகம் முழுவதுமே நல்ல வரவேற்பு இருந்தது.ஆனால், சமீபத்தில் ரஜினியின் சமூக விரோதிகள் பேச்சு, எல்லோரையும் காயப்படுத்தியுள்ளது.இதை தொடர்ந்து ரஜினி படம் போலவே இல்லை புக்கிங் என்று பேசி வருகின்றனர், இந்நிலையில் ரஜினிகாந்த் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.அப்போது காலா எதிர்ப்பு குறித்து கேட்ட போது ‘அட இவ்ளோ தான் எதிர்ப்பா, நான் நிறைய வரும் என்று தானே நினைத்தேன்’ என கிண்டலாக பதில் அளித்தார். ...

Read More

10வது விஜய் அவார்ட்ஸ் கடந்த ஞாயிறு அன்று நடந்து முடிந்தது. இந்த விருது விழாவில் பல நட்சத்திரங்கள் பங்கேற்றனர். இதில் நடிகர் பாலா விருது கொட...

<
10வது விஜய் அவார்ட்ஸ் கடந்த ஞாயிறு அன்று நடந்து முடிந்தது. இந்த விருது விழாவில் பல நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.இதில் நடிகர் பாலா விருது கொடுக்க வந்த போது ‘கோபி நீங்கள் பெரிய எழுத்தாளர், உங்கள் புத்தகங்களை பலரும் வாசிக்கிறீர்கள், அப்படியிருக்க இப்படி ஸ்டார் போட்ட கோட் எல்லாம் போடாதீர்கள்’ என்று கலாய்த்தார்.அதை தொடர்ந்து கோபிநாத் ‘பாலா சார் இப்படி கோட் போடவில்லை என்றால் என்னை மக்கள் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள்’ என்று தெரிவித்தார். ...

Read More

கடந்த சில நாள்களுக்கு முன்பு `இமயமலையில் ரஜினிபட ஷூட்டிங்' என்ற செய்தியை வெளியிட்டிருந்தோம். குறிப்பிட்டபடி, ஜூன் 6-ம் தேதியான நாளை கார...

<
கடந்த சில நாள்களுக்கு முன்பு `இமயமலையில் ரஜினிபட ஷூட்டிங்' என்ற செய்தியை வெளியிட்டிருந்தோம். குறிப்பிட்டபடி, ஜூன் 6-ம் தேதியான நாளை கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தான் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்புக்காக இமயமலை செல்கிறார் ரஜினிகாந்த்.வழக்கமாக ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டால், அந்தப் படம் ரிலீஸாகும் முன்பே இமயமலைக்குச் சென்று வருவது ரஜினியின் பழக்கம். இப்போதும் `காலா' வெளிவருவதற்கு முன்பாகவே இமயமலை செல்கிறார். தவிர, முன்பெல்லாம் பாபா குகைக்குச் சென்று தியானம் செய்வார், ஆன்மிகப் பயணம் மேற்கொள்வார். இந்தமுறை சினிமா படப்பிடிப்புக்காக இமயமலை செல்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் விஜய் சேதிபதியும் நடிப்பதால், இந்தப் படத்துக்கு ரஜினி ரசிகர்களைத் தாண்டி மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு படப்பிடிப்பு நடத்தவிருக்கும் லொக்கேஷன்களைத் தேடி இயக்குநர் கார்த்திக் சுப்பராஜும் ஒளிப்பதிவாளர் திருவும் இணைந்து இமயமலை, நேபாளத் தலைநகர் காட்மண்ட் ஆகிய இடங்களுக்குச் சென்றிருக்கிறார்கள்....

Read More

நடிகர் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் அரசியல் களத்தில் போட்டியாளர்களாக இருபார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இருவரும் இன்று கா...

<
நடிகர் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் அரசியல் களத்தில் போட்டியாளர்களாக இருபார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இருவரும் இன்று காலா பட சர்ச்சை பற்றி பேசியுள்ளனர்.கர்நாடக முதலமைச்சரை சந்துவிட்டு சென்னை வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.தடைகளை தாண்டி கர்நாடகாவில் காலா படம் வெளியாகி வெற்றி பெறும் என அவர் கூறினார்.கமல் கர்நாடக முதலமைச்சரை சந்தித்து பேசியது பற்றி கருத்து தெரிவித்துள்ள ரஜினிகாந்த் "கமல் சந்தித்து பேசியதில் தவறில்லை. இது ஆரோக்கியமான ஒன்று. காலா படம் கர்நாடகாவில் நிச்சயம் வெளியாகும் என நினைக்கிறேன்" என பேசினார். ...

Read More

காலா படம் திட்டமிட்டபடி வெளியாகி வெற்றிபெற்று நல்ல வியாபாரம் ஆகும் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கருத்துத் தெரிவித்துள்ளார...

<
காலா படம் திட்டமிட்டபடி வெளியாகி வெற்றிபெற்று நல்ல வியாபாரம் ஆகும் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கருத்துத் தெரிவித்துள்ளார். காவிரி தொடர்பாக கர்நாடக முதல்வர் குமாரசாமியை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். குமாரசாமி பதவியேற்பு விழாவுக்குப் பின் இன்று இரண்டாவது முறையாகச் சந்தித்தார். அப்போது இருவரும் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினர். ஆலோசனைக்குப் பின் இருவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய கமல்,  ``குறுவை சாகுபடி தொடங்குவதால் காவிரியில் நீர் திறக்க நினைவூட்ட வந்தேன். இந்தச் சந்திப்பு கூட்டணிக்கானதோ திரைப்படம் தொடர்பானதோ இல்லை முற்றிலும் மக்களுக்கானது" என்றார். இதன்பின் சென்னைத் திரும்பிய அவர், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் ரஜினிகாந்தின் காலா படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர்,  ``என்னுடைய படத்துக்கும் கர்நாடகாவில் தடை விதிக்கப்பட்டது. நியாயமே வெல்லும்...

Read More

ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்த விஜய் விருதுகள் நீண்ட காலத்திற்கு பிறகு இந்த வருடம் நடக்கிறது. அதில் சென்ற வருடம் சிறப்பாக பணியாற்றிய நட...

<
ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்த விஜய் விருதுகள் நீண்ட காலத்திற்கு பிறகு இந்த வருடம் நடக்கிறது. அதில் சென்ற வருடம் சிறப்பாக பணியாற்றிய நடிகர், நடிகைகள், படங்கள், இயக்குனர் மற்றும் டெச்னீசியன்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.இந்த வருடம் விருது வென்றவர்களின் முழு பட்டியல் இதோ..Best Editor : Philomin Raj (Maanagaram)Favorite Movie : MersalBest Cinematography : Ravi Verman (Kaatru Veliyidai)Best Director: Pushkar Gayatri (Vikram Vedha)Best Supporting Actor (Male): Vivek Prasanna (Meyaadha Maan)Best Debut (Female): Aditi Balan (Aruvi)Best Comedian: Soori (Sangili Bungili Kadhava Thorae)Lifetime Achievement Award: SivakumarBest Actor Female : Nayanthara (Aramm)Best music director: A.R.Rahman (Kaatru Veliyidai)Favorite Song: AalaPoran Tamizhan (Mersal)Best Playback Singer (Male): Anirudh for Iraivaa (Velaikkaran)Best Actor (Male): Vijay Sethupathi (Vikram Vedha)Best...

Read More

பிரம்மாண்டமாக நடந்து முடிந்த விஜய் விருது விழா பற்றி நிறைய தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. இப்போது சமீபத்தில் மக்களை சோகத்தில் ஆழ்த்திய து...

<
பிரம்மாண்டமாக நடந்து முடிந்த விஜய் விருது விழா பற்றி நிறைய தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.இப்போது சமீபத்தில் மக்களை சோகத்தில் ஆழ்த்திய துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து நடிகர் பார்த்திபன் விஜய் விருது விழா மேடையில் பேசியுள்ளார்.அதில் அவர், விஜய் அவார்ட்ஸ் குழுவினருக்கு ஒரு வேண்டுகோள். சிறந்த முறையில் துப்பாக்கியில் சுட்டவருக்கு விருது கொடுக்க வேண்டும்.பொது மக்களுக்கு நடுவிலே ரொம்ப தூரம் தாண்டி வேன் மீது ஏறி நின்று சரியாக குறிப்பார்த்து சுட்ட, உரிமைக்காக குரல் கொடுத்தவர்களை வாயிலேயே சுட்ட, வயித்துக்காக போராடியவர்களை வயிற்றிலேயே சுட்ட அந்த துப்பாக்கி சுடுபவருக்கு விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் விருது கொடுக்க வேண்டும்.யாரை அழைத்து கொடுக்க வேண்டுமானால் பாதிக்கப்பட்ட அந்த மக்களை மேடைக்கு அழைத்தே கொடுக்க வைக்க வேண்டும். இது எனது வேண்டுகோள்.பிறகு சமூக விரோதிகள் அனைவரையும் சுட்டுத்தள்ளி விட வேண்டும். நான் பொதுமக்களைச் சொல்லவில்லை, சமூக விரோதிகளைச் சொல்கிறேன். இந்த மாதிரி...

Read More

கமல் இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா நடிகர். தற்போது இவர் சினிமாவில் இருந்து முற்றிலுமாகவே வெளியேறவுள்ளார். இனி என் வேலை மக்கள் பணி ஆற்றுவத...

<
கமல் இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா நடிகர். தற்போது இவர் சினிமாவில் இருந்து முற்றிலுமாகவே வெளியேறவுள்ளார்.இனி என் வேலை மக்கள் பணி ஆற்றுவது தான் என அரசியல் கட்சி தொடங்கினார், அதற்கு மக்கள் நீதி மய்யம் என்று பெயர் வைத்தார்.கட்சி தொடங்கி வெறுமென போஸ்ட்டர், பேனர் அடிக்காமல் தமிழக மக்களுக்காக கர்நாடகா முதலமைச்சரை சந்தித்து பேசினார்.இதில் முக்கியமாக காவேரி பிரச்சனை குறித்து கமல் முதல்வர் குமாரசாமியிடம் பேச, அதற்கு குமாரசாமி டுவிட்டரில் ‘வரும் நாட்களில் காவேரி பிரச்சனை சுமூகமாக தீர்க்கப்படும்.இரண்டு மாநில நலன் அறிந்து தண்ணீர் பகிர்ந்து அளிக்க பேச்சுவார்த்தை நடைபெறும்’ என்று தெரிவித்துள்ளார். ...

Read More

பாலிவுட்டில் ஹிட்டடித்த ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ். அங்கு 11 சீசன் வரை நிகழ்ச்சி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழ் மற்றும் தெலுங்கில் கட...

<
பாலிவுட்டில் ஹிட்டடித்த ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ். அங்கு 11 சீசன் வரை நிகழ்ச்சி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழ் மற்றும் தெலுங்கில் கடந்த வருடம் தொடங்கப்பட்டு மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றது.தமிழில் எப்போது ஆரம்பமாகிறது என்பது சரியாக தெரியவில்லை. இந்த நேரத்தில் பிக்பாஸ் 2 சீசனில் நடிகர் பரத், பவர்ஸ்டார் பவன் கல்யாண் மற்றும் ஒரு பிரபல DJ கலந்து கொள்கிறார்கள் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.இதற்கு முன் எங்க வீட்டு மாப்பிள்ளை புகழ் அபர்ணதியும் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது ...

Read More

இசை என்றதும் இந்திய மக்களின் நினைவுக்கு வருவது இசைஞானி தான். இவரது சாதனையை பற்றி சொல்லி தெரியவேண்டியதில்லை. 1000 படங்களுக்கு மேல் இசையமைத்த...

<
இசை என்றதும் இந்திய மக்களின் நினைவுக்கு வருவது இசைஞானி தான். இவரது சாதனையை பற்றி சொல்லி தெரியவேண்டியதில்லை. 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து உலக சாதனை படைத்தவர்.இன்று 75வது பிறந்தநாள் கொண்டாடும் என்றும் “இளைய” ராஜாவுக்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை தங்கள் வாழ்த்துக்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.இவரது இசைப்பயணத்துக்கு சமர்ப்பணம் செய்யும் விதமாக, நெல்லை சிவராம் கலைகூடத்தை சேர்ந்த 60 மாணவர்கள் இணைந்து அவரின் 1000 திரைப்படங்களை நினைவு கூறும் வகையில் 1000 அடி நீளத்துக்கு அவரது பல்வேறு உருவத்தை ஓவியங்களாக வரைந்துள்ளனர். இதை பொது மக்களின் பார்வைக்கும் வைத்துள்ளனர்.நாம் எந்தவித மனநிலையில் இருந்தாலும் நம் மனதை சாந்தப்படுத்தும் இளையராஜா என்றும் இளமை ராஜாவாகவே வாழ  நமது பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். ...

Read More

ரஞ்சித்தின் இயக்கத்தில் ரஜினி இரண்டாவது முறையாக காலா என்ற படத்தில் நடித்திருக்கிறார். தனுஷ் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு மக்களிடையே பெ...

<
ரஞ்சித்தின் இயக்கத்தில் ரஜினி இரண்டாவது முறையாக காலா என்ற படத்தில் நடித்திருக்கிறார். தனுஷ் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு மக்களிடையே பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது.வரும் ஜுன் 7ம் தேதி படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் கதையை அமெரிக்க திரையரங்கம் லீக் செய்துள்ளது.இப்படத்தை திரையிடும் அமெரிக்க திரையரங்கான சினிமார்க் என்ற திரையரங்கத்தின் சமூக வலைத்தள பக்கத்தில் காலா படத்தின் கதைச்சுருக்கம் வெளியாகியுள்ளது.திருநெல்வேலியில் இருந்து சிறுவயதில் மும்பைக்கு செல்லும் காலா, அங்குள்ள தாராவி என்ற ஸ்லம் பகுதியில் டானாக மாறி அப்பகுதி மக்களுக்காக கேங்ஸ்டராக மாறி போராடுவதே காலா பட கதை என்று பதிவு செய்துள்ளனர். ...

Read More

ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்கள் மிகவும் ஆவலாக எதிர்ப்பார்ப்பது பிக்பாஸ் 2. இந்த சீசனில் யார் யார் பங்குபெறுகிறார்கள் என்பது இன்னும் தெரிய...

<
ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்கள் மிகவும் ஆவலாக எதிர்ப்பார்ப்பது பிக்பாஸ் 2. இந்த சீசனில் யார் யார் பங்குபெறுகிறார்கள் என்பது இன்னும் தெரியவில்லை, மிகவும் சீக்ரெட்டாக வைத்துள்ளனர்.கடந்த சில மாதங்களாகவே பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து தான் நிறைய பேச்சுகள்.இந்த நேரத்தில் பஞ்சு மிட்டாய் படத்தின் புரொமோஷக்காக கலந்து கொண்ட சென்ட்ராயன் ஒரு பேட்டியில், என் பெயரை மாகாபா ஆனந்த் அவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கொடுத்திருக்கிறார். அவர்களும் என்னை கேட்டார்கள், ஆனால் முடியாது. ஒருவேளை பிக்பாஸ் 2 விற்கு போனால் நான் தான் ஜுலியாக இருப்பேன் என்று காமெடியாக பேசியுள்ளார்.நான் மிகவும் வெகுளி, ஆனால் நான் போகவில்லை என்பது மிகவும் வருத்தமாக தான் இருக்கிறது என்றார். ...

Read More

விஜய் விருது விழா பல வருடங்களாக நடந்து வந்தது. என்ன ஆனது என்று தெரியவில்லை, ஒரு சில பிரச்சனைகளால் கடந்த இரண்டு வருடம் இந்த விருது விழா நடக்...

<
விஜய் விருது விழா பல வருடங்களாக நடந்து வந்தது. என்ன ஆனது என்று தெரியவில்லை, ஒரு சில பிரச்சனைகளால் கடந்த இரண்டு வருடம் இந்த விருது விழா நடக்கவில்லை.தற்போது இந்த வருடம் மீண்டும் பிரமாண்டமாக இந்த விருது விழா வரும் ஞாயிறு அன்று நடக்கவுள்ளது.இந்த விருது விழாவில் பல திரைப்பிரபலங்கள் கலந்துக்கொள்ள இருப்பதாக கூறப்படுகின்றது, மேலும், ரசிகர்கள் அனைவரும் எதிர்ப்பார்ப்பது பேவரட் நடிகர் யார் என்பது தான்.இந்த வருடம் பேவரட் நடிகர் கண்டிப்பாக மெர்சல் படத்திற்காக தளபதி விஜய் தான் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் அடித்து சொல்கின்றது. ...

Read More

ராஜமௌலி படம் என்றாலே தற்போது ஒட்டு மொத்த இந்தியாவும் கவனிக்க ஆரம்பித்துவிட்டது. அந்த அளவிற்கு பாகுபலி வெற்றி அவரை உச்சத்திற்கு கொண்டு சென்ற...

<
ராஜமௌலி படம் என்றாலே தற்போது ஒட்டு மொத்த இந்தியாவும் கவனிக்க ஆரம்பித்துவிட்டது. அந்த அளவிற்கு பாகுபலி வெற்றி அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.பாகுபலி-2 ரிலிஸாகி ஒரு வருடம் ஆகிவிட்டது, இன்னும் ராஜமௌலி அடுத்தப்படத்திற்கான படப்பிடிப்பிற்கு செல்லவில்லை.தற்போது திரைக்கதை அமைக்கும் பணியில் தான் இருக்கின்றார், இப்படத்தில் ஜுனியர் என்.டி.ஆர், ராம்சரண் நடிக்கவுள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது.இந்நிலையில் முன்னணி ஆங்கில பத்திரிகை ஒன்றில் ராஜமௌலி அடுத்து இயக்கும் படத்தில் இரண்டு ஹீரோ நடிக்கவுள்ளனர்.இருவரும் அண்ணன், தம்பியாக நடிக்க, அண்ணன் போலிஸ், தம்பி கேங்ஸ்டர் இவர்களுக்குள் நடக்கும் ஆடுபுலி ஆட்டம் தான் படம் என கூறியுள்ளது. ...

Read More

தனியார் தொலைக்காட்சி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் ஐ பற்றிய செய்திகள் தான் இப்போது வைரலாகி வருகிறது. இவர் வருவாரா ? அவர் வரமாட்டாரா? யா...

<
தனியார் தொலைக்காட்சி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் ஐ பற்றிய செய்திகள் தான் இப்போது வைரலாகி வருகிறது. இவர் வருவாரா ? அவர் வரமாட்டாரா? யார் யார் கலந்து கொள்ள போகிறார்கள்? என்று தமிழ் நாட்டு மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அபர்ணதி வருவார் என்று உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரின் நேருக்கு நேரான பேச்சு, எதையும் மனதில் வைக்காமல் வெளிப்படையாக பேசும் குணம் என்று நடந்து முடிந்த எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் இவர் தான் ஹை லைட்.இந்நிலையில் இவரின் மனம் கவர்ந்த நாயகன் ஆர்யாவும் பிக் பாஸ் இல் கலந்து கொண்டால் நிகழ்ச்சி வேற லெவலுக்கு போகும் என்பதில் கொஞ்சமும் சந்தேகம் இல்லை.இருப்பினும், இவர் ஒரு பிரபல நடிகர் என்பதால் இவரின் வருகை பிக் பாசில் சந்தேகமாக இருந்தாலும், நகைச்சுவை உணர்வு கொண்ட ஆர்யா பிக் பாஸ் வீட்டுக்கு வந்தால்...

Read More

தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் வித்தியாசமான முயற்சிகள் வரும். அப்படி தற்போதெல்லாம் இளம் இயக்குனர்கள் பல வித்தியாச படைப்புக்களை கோலிவுட்டி...

<
தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் வித்தியாசமான முயற்சிகள் வரும். அப்படி தற்போதெல்லாம் இளம் இயக்குனர்கள் பல வித்தியாச படைப்புக்களை கோலிவுட்டிற்கு தந்து வருகின்றனர், அந்த வகையில் இன்று திரைக்கு வந்துள்ள படம் தான் ஆண்டனி, இந்த ஆண்டனி எடுத்த வித்தியாசமான முயற்சி கவர்ந்ததா? பார்ப்போம்.கதைக்களம்ஹாலிவுட்டில் இது போல் பல திரைப்படங்கள் வந்துள்ளது, அந்த வகையில் தமிழ் சினிமாவில் முதன் முறையாக இப்படி ஒரு கதைக்களத்தை கொண்டு வந்ததற்கே இயக்குனர் குட்டி குமாருக்கு பாராட்டுக்கள்.படத்தின் துவக்கத்திலேயே ஹீரோ ஆண்டனி(நிஷாந்த்) ஒரு காரில் மயக்கத்துடன் இருக்கின்றார். விடிந்தால் ஆண்டனிக்கு திருமணம்.ஆனால், இவர் காருடன் மண்ணில் புதைந்து கிடக்கின்றார், யார் தன்னை இப்படி செய்தது, ஏன் இப்படி ஆனது என்று ஆண்டனிக்கே ஆச்சரியம்.இரவு முழுவதும் தன்னுடன் இருந்த மகன் எங்கே போனான் என்று அவரை தேடி ஆண்டனியின் தந்தை முன்னாள் போலிஸ் அதிகாரி லால் தேடி செல்ல, ஆண்டனி அதிலிருந்து வெளியே வந்தாரா,...

Read More

Search This Blog

Blog Archive

About