­
May 2018 - !...Payanam...!

பிக்பாஸ் நிகழ்ச்சி மற்ற சானல்களையும் பிரம்மிக்க வைத்த ஒன்று. இதனால் சானல்களுக்கிடையே கடும் போட்டி என்றே சொல்லலாம். தமிழ், தெலுங்கு இரண்டிலு...

<
பிக்பாஸ் நிகழ்ச்சி மற்ற சானல்களையும் பிரம்மிக்க வைத்த ஒன்று. இதனால் சானல்களுக்கிடையே கடும் போட்டி என்றே சொல்லலாம். தமிழ், தெலுங்கு இரண்டிலும் ஒரே மாதத்தில் வெளியாகவுள்ளது.தெலுங்கில் இந்த சீசன் 2 ஐ பிரபல நடிகர் நானி தொகுத்து வழங்குகிறார். முதன் முதலாக அவர் இதை செய்யவுள்ளார். இதனால் மக்களிடயே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.இந்நிலையில் தெலுங்கு பிக்பாஸ் வரும் ஜூன் 10 ம் தேதி இந்நிகழ்ச்சி ஆரம்பமாகவுள்ளது என நானி அறிவித்துள்ளார். 16 போட்டியாளர்கள் கொண்ட இந்த போட்டி 100 நாட்களை கொண்டதாம்.தற்போது இதில் கலந்துகொள்பவர்களின் முழுபட்டியலும் வெளியாகியுள்ளது.    Hero Raj Tarun    Singer Geetha Madhuri    Anchor Syamala    Anchor Lasya    Heroine Raashi    Heroine Charmee Kaur    Dhanya Balakrishna    Junior. Sridevi    Heroine Gajala    Chandini Chowdary    Sri Reddy    Varun Sandesh    Taneesh    Viva Harsha    Comedian Venu ...

Read More

ரஜினிகாந்த் எங்கு சென்றாலும் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. அப்படித்தான் நேற்று தூத்துக்குடியில் போராட்டத்தில் காயமடைந்தவர்களை ரஜினி சந்திக...

<
ரஜினிகாந்த் எங்கு சென்றாலும் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. அப்படித்தான் நேற்று தூத்துக்குடியில் போராட்டத்தில் காயமடைந்தவர்களை ரஜினி சந்திக்க சென்றார்.அப்போது ஒரு இளைஞன் யார் நீங்க? என்று கேட்டார். உடனே அந்த வீடியோ இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது.அதை தொடர்ந்து பல மீம்ஸுகள் வெளிவர தொடங்கியுள்ளது. ஆனால், ரஜினி ரசிகர்கள் அதையும் பாசிட்டிவாக மாற்றினார்கள்.ஆம், ரஜினி அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகமாகும் போது முதல் காட்சியிலேயே கமல் ரஜினியை பார்த்து ‘யார் நீங்க?’ என்று தான் கேட்பார்.அப்போது ஆரம்பித்தது ரஜினியின் ஆட்சி சினிமாவில், அதேபோல் நேற்றே ஆரம்பித்துவிட்டது அரசியலிலும் ரஜினியின் ஆட்சி என்று அவருடைய ரசிகர்கள் கூறி வருகின்றனர். ...

Read More

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதியாகிவிட்டது. அவர் இன்று தூத்துக்குடி சென்று துப்பாக்கிச்சூடால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று விசார...

<
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதியாகிவிட்டது. அவர் இன்று தூத்துக்குடி சென்று துப்பாக்கிச்சூடால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று விசாரித்ததோடு ஆறுதல் கூறினார்.இந்நிலையில் அவர் தூத்துக்குடியில் சமூக விரோதிகள் காவல்துறையை தாக்கியதால்தான் பிரச்னை ஆரம்பித்தது. எதற்கெடுத்தாலும் போராட்டம் போராட்டம் என்றால் தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடும்.ஜல்லிக்கட்டு போராட்டத்தை போல் ஸ்டெர்லைட்டிலும் கடைசிநாளில் சமூகவிரோதிகளால் பிரச்னை. ஸ்டெர்லைட் ஆலையை இனி திறக்கவேண்டும் என்ற எண்ணமே யாருக்கும் வரக்கூடாது.தமிழகத்தில் சமூக விரோதிகள் அதிகமாகியுள்ளனர் என அவர் கூறியுள்ளார். ...

Read More

இன்று நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடிக்கு சென்று போலீஸ் தப்பாக்கிசூடு மற்றும் தாக்குதலில் அடிபட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்தார். ...

<
இன்று நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடிக்கு சென்று போலீஸ் தப்பாக்கிசூடு மற்றும் தாக்குதலில் அடிபட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்தார். அப்போது ஒருவர் "நீங்க யாரு?" என கேட்ட வீடியோ வைரலாக பரவி வருகிறது.”போலீஸ் துப்பாக்கிசூடு நடத்த காரணம் முதலில் சமூக விரோதிகள் அவர்களை தாக்கி, கலெக்டர் அலுவலகத்தை தாக்கியது தான்” என ரஜினி பத்ரிகையாளர்களிடம் ஆவேசமாக பேசினார்.மேலும் இப்போது சினிமா துறையில் உள்ள பிரபலங்கள் பலரும் ரஜினிக்கு எதிராக பேசி வருகின்றனர். நடிகர் சித்தார்த் ரஜினியை ட்விட்டரில் மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார்."இவர்கள் அடுத்து என்ன சொல்வார்கள் தெரியுமா.. இத்தனை வருடமாக தூத்துக்குடியை மாசு படுத்தியது ஸ்டெர்லைட் இல்லை சமூக விரோதிகள் தான்" என சித்தார்த் தெரிவித்துள்ளார். ...

Read More

இந்திய மாநிலமான தமிழகத்தில் திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் உள்ள பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 8 கோடி ரூபாய் ம...

<
இந்திய மாநிலமான தமிழகத்தில் திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் உள்ள பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 8 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த வழக்கில் அந்த வங்கியில் பணி புரியும் ஊழியர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 32 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் சூப்பர் மார்கெட் கட்டிடம் ஒன்று உள்ளது. அந்த கட்டிடத்தின் மாடி பகுதியில் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி இயங்கி வருகிறது. நேற்று வழக்கம் போல் வங்கியை திறக்க முயன்றபோது பூட்டு திறந்தே இருந்ததது.இதனால் அதிர்ச்சியடைந்த மேனேஜர், பணம் வைக்கப்பட்டிருந்த லாக்கர் மற்றும் அறைகளை சென்று பார்த்த போது லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 6 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைககள் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.உடனடியாக பொலிசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து அவர்கள் வந்து விசாரணை நடத்தியுள்ளனர். வங்கியின் பூட்டுக்கள் உடைக்கப்படவில்லை, சுவற்றில் ஓட்டை எதுவும் போடப்படவில்லை....

Read More

மகாராஷ்டிர மாநிலத்தில் அரசு அளித்த இழப்பீடு தொகையால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஒரே நாளில் லட்சாதிபதிகளாக மாறியுள்ளனர். மகாராஷ்டர மாநிலத்தி...

<
மகாராஷ்டிர மாநிலத்தில் அரசு அளித்த இழப்பீடு தொகையால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஒரே நாளில் லட்சாதிபதிகளாக மாறியுள்ளனர்.மகாராஷ்டர மாநிலத்தில் 5,44,517 ஹெக்டேர் விவசாய நிலத்தை அரசு கையகப்படுத்தியது. இதில், 69,905 ஹெக்டேர் நிலத்தை 13 கிராமங்களிலிருந்து மட்டுமே பெற்றிருக்கிறது.இதற்கு இழப்பீடாக அவற்றின் உரிமையாளர்களான விவசாயிகளுக்கு மொத்தம் 79,157,590 ரூபாய் வழங்கியுள்ளது.இதன் மூலம் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் லட்சாதிபதிகளாக மாறியுள்ளனர். குறிப்பாக மாரத்வாடாவில் உள்ள ஹட்கோன் கிராமத்தில் பல விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனர்.அங்கு இந் இழப்பீட்டைப் பெற்ற அனைத்து விவசாயிகளும் லட்சாதிபதியாக மாறியிருக்கிறார்கள். ஆனால், சில விவசாயிகளுக்கு நிலம் தொடர்பான சில விவகாரங்களால் இழப்பீட்டுத் தொகை கிடைக்காமல் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. ...

Read More

ரஞ்சித் தமிழ் சினிமாவில் எப்போதும் தரமான படங்களை எடுப்பவர். இவர் தமிழகத்தில் சாதியே இருக்க கூடாது என்று எப்போதும் குரல் கொடுத்து வருபவர். இ...

<
ரஞ்சித் தமிழ் சினிமாவில் எப்போதும் தரமான படங்களை எடுப்பவர். இவர் தமிழகத்தில் சாதியே இருக்க கூடாது என்று எப்போதும் குரல் கொடுத்து வருபவர்.இந்நிலையில் சமீபத்தில் தமிழகத்தில் உள்ள சிவகங்கையில் ஆதிக்க சாதியினர், ஒடுக்கப்பட்ட மக்கள் சிலரை வெட்டி கொலை செய்துள்ளனர்.இதை ரஞ்சித் தன் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு ’தமிழர் என்றோர் இனமுண்டு! தனியே அவர்களுக்கோர் குணம் உண்டு! சாதிவெறி’என்று குறிப்பிட்டுள்ளார். ...

Read More

 நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கவுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி விரைவில் துவங்கவுள்ளது. இதில் யார் யாரெல்லாம் போட்டியாளர்களாக கலந்துகொள்ள போகின்றன...

<
 நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கவுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி விரைவில் துவங்கவுள்ளது. இதில் யார் யாரெல்லாம் போட்டியாளர்களாக கலந்துகொள்ள போகின்றனர் என அறிய ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.சில நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளத்தில் ஒரு பட்டியல் வலம் வந்தது. அது போலி என்பது பின்னர் தான் தெரியவந்தது.தற்போது வந்துள்ள தகவல் படி, 90களில் முன்னணி ஹீரோயினாக இருந்த நடிகை சிம்ரன் பிக்பாஸ் 2ல் கலந்துகொள்வார் என்று கூறப்படுகிறது.இதற்குமுன் நடிகை கஸ்தூரி பங்கேற்பார் என்று தகவல் பரவிய நிலையில், அவர் அதை மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ...

Read More

2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அப்போலோ மருத்துவமனையில் இருந்தபோது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது. முன்னாள் முதல...

<
2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அப்போலோ மருத்துவமனையில் இருந்தபோது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி காலமானார். ஜெயலலிதா மரணத்துக்குப் பின் நிலவி வந்த குழப்பங்களுக்கு பிறகு ஓ.பி.எஸ் - சசிகலா தலைமையில் கட்சி இரண்டாகப் பிரிந்தது. ஓ.பி.எஸ் நடத்திய தர்மயுத்தத்தின் விளைவாக ஆறுமுகசாமி ஆணையம் கொண்டுவரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று ஆறுமுகசாமி கமிஷன் ஜெயலலிதா தொடர்பான முக்கிய விவரங்களை வெளியிட்டுள்ளது. அது, செப்டம்பர் மாதம் 27-ம் தேதி அதாவது இறப்பதற்கு 68 நாள்களுக்கு முன்பு அப்போலோ மருத்துவமனையில் இருந்தபோது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பேசிய ஆடியோ ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அப்போலோ மருத்துவமனையில் மூச்சுத்திணறலின்போது ஜெயலலிதா பேசிய 52 வினாடிகள் கொண்ட அந்த ஆடியோவில், முதலில் மருத்துவர் சிவகுமாரிடமும், பின்னர் மருத்துவர் அர்ச்சனாவிடமும் ஜெயலலிதா பேசுகிறார். ஜெயலலிதா : oh sad...

Read More

ரகுவரன் இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா நடிகர். இவர் வில்லத்தனத்தை ஈடுக்கட்ட இன்று வரை யாருமில்லை என்பதே உண்மை. இந்நிலையில் இவருடைய மனைவி ர...

<
ரகுவரன் இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா நடிகர். இவர் வில்லத்தனத்தை ஈடுக்கட்ட இன்று வரை யாருமில்லை என்பதே உண்மை.இந்நிலையில் இவருடைய மனைவி ரோகினி சமீபத்தில் ஒரு பேட்டியில், மிகவும் உணர்ச்சிவசப்பட்டு சில கருத்துக்களை கூறியுள்ளார்.இதில், ‘ரகுவரன் மரணத்தின் போது பத்திரிகையாளர்கள் யாரும், வீட்டின் உள் வந்து புகைப்படம் எடுக்கவேண்டாம் என்றேன்.எல்லோரும் சரி என்றார்கள், ஆனால், நான் என் மகனை அழைத்து வந்த போது அனைவரும் உள்ளே வந்துவிட்டார்கள்.உண்மையாகவே எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது, அதை தொடர்ந்து சில வருடங்கள் நான் எந்த பத்திரிகையிலும் பேசவில்லை.அந்த நேரத்தில் கூட தனிமை இல்லையென்றால் என்ன செய்வது, இனி எந்த ஒரு இடத்திலும் இப்படி நடக்கக்கூடாது ’ என்று ரோகினி கூறியுள்ளார். ...

Read More

தூத்துக்குடி துப்பாக்கி சூடு நிகழ்வு அனைவரையும் செம்ம கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த வகையில் இன்று திரை கலைஞர்கள் பலரும் கூடி இதற்கு கண்டனம...

<
தூத்துக்குடி துப்பாக்கி சூடு நிகழ்வு அனைவரையும் செம்ம கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த வகையில் இன்று திரை கலைஞர்கள் பலரும் கூடி இதற்கு கண்டனம் தெரிவித்தனர்.இதில் இயக்குனர் பாண்டிராஜ் கலந்துக்கொண்டு பேசுகையில் ‘பள்ளி மாணவன் எப்படி லீவு நாட்களை காலேண்டரில் பார்த்துக்கொண்டு இருப்பானோ, அதேபோல் தான் உங்கள் ஆட்சி முடிவை நாங்கள் பார்த்து வருகின்றோம்.உங்களை எதிர்த்து கேள்வி கேட்டால் சுடுவீர்கள், அப்படி பார்த்தால் உங்களை எப்போதும் எதிர்த்து கேள்வி கேட்கும், சீமான் அண்ணன், ஸ்டாலின் சாரையும் நீங்கள் சுட தயங்க மாட்டீர்கள்’ என கோபமாக பேசினார். ...

Read More

வடிவேலு பலரின் வாழ்க்கையை மாற்றியவர். ஆம், நம் மனதளவில் மிகவும் சோகத்தில் இருந்த போது கூட சிரிக்க வைத்து, நமக்கு புத்துணர்ச்சி கொடுத்தவர். ...

<
வடிவேலு பலரின் வாழ்க்கையை மாற்றியவர். ஆம், நம் மனதளவில் மிகவும் சோகத்தில் இருந்த போது கூட சிரிக்க வைத்து, நமக்கு புத்துணர்ச்சி கொடுத்தவர்.ஆனால், அவர் அரசியல் சென்று படமே நடிக்க முடியாமல் இருந்தது எல்லாம் அனைவரும் அறிந்ததே.நீண்ட இடைவேளைக்கு பிறகு வந்த வடிவேலு இனி கலக்குவார் என்று எதிர்ப்பார்த்தால், மீண்டும் பெரும் பிரச்சனையில் சிக்கியுள்ளார்.இம்சை அரசன் இரண்டாம் பாகத்தில் வடிவேலு நடிக்க முடியாது என்று சென்றதால் சுமார் ரூ 9 கோடி வரை நஷ்டம், இப்படத்தின் தயாரிப்பாளர் ஷங்கர் அவர் நடித்து கொடுக்கவேண்டும் என்கின்றார்.வடிவேலு மேலும் ரூ 2 கோடி கொடுங்கள் நடிக்கின்றேன் என்கின்றார், இவை தயாரிப்பாளர் சங்க பஞ்சாயத்திற்கு வர, விஷால், வடிவேலுவிடம் பேசியும் சுமூகமாக முடியவில்லையாம்.இதனால், வடிவேலு ரூ 9 கோடி கொடுக்க வேண்டும், இல்லையென்றால் படத்தில் நடிக்கவேண்டும், இது நடக்கவில்லை என்றால், வடிவேலுவிற்கு ரெட் போட்டு, இனி படங்களிலேயே நடிக்க முடியாதப்படி செய்துவிடுவார்கள் என...

Read More

பொதுவாக இந்தியாவில் பெண் கர்பமாக இருக்கும் போது கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை மருத்துவர்கள் கூறமாட்டார்கள். இது சட்டபடி குற்றமும்...

<
பொதுவாக இந்தியாவில் பெண் கர்பமாக இருக்கும் போது கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை மருத்துவர்கள் கூறமாட்டார்கள். இது சட்டபடி குற்றமும் ஆகும். ஆனால் உடலில் தோன்றும் ஒருசில அறிகுறிகளை வைத்து கூட நமது முன்னோர்கள் பிறக்க போவது ஆணா, பெண்ணா என்பதை கண்டறிந்தனர். மேலும் அவர்கள் சில விசித்திரமான சோதனைகள் மூலமாகவும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்தனர். சருமம்நீங்கள் ஆண் குழந்தையை கருவில் சுமப்பவராக இருந்தால், உங்களது சருமம் வறட்சியாக இருக்கும். உங்களது சருமம் மிகவும் பளப்பளப்பாகவும், மிருதுவாகவும் இருந்தால், உங்களுக்கு பிறக்க போவது பெண் குழந்தை என்பதை கணிக்கலாம். தலைமுடிஉங்களது தலைமுடி மிகவும் பளப்பளப்பாகவும், அடர்த்தியாகவும் இருந்தால், உங்களுக்கு பிறக்கப்போவது ஆண் குழந்தை என்பதை கண்டு பிடிக்கலாம். உங்களது தலைமுடி வறட்சியாகவும், அதிகமாக உதிர்ந்தாலும் உங்களுக்கு பிறக்க போது பெண் குழந்தையாக இருக்கும். உடல் முடிஉங்களது உடலில் உள்ள முடிகள் மிகவும் வேகமாகவும், அடர்த்தியாகவும் வளர்ந்தால், உங்களுக்கு பிறக்க...

Read More

பிரபல தொலைக்காட்சியில் சரிகமபா என்ற பாடல் நிகழ்ச்சி மூலம் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மனதை கவர்ந்தவர் ரமணி அம்மாள். இவர் நிகழ்ச்சிக்கு பிறகு ...

<
பிரபல தொலைக்காட்சியில் சரிகமபா என்ற பாடல் நிகழ்ச்சி மூலம் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மனதை கவர்ந்தவர் ரமணி அம்மாள்.இவர் நிகழ்ச்சிக்கு பிறகு நிறைய படங்களில் பாடுவார் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.தற்போது அவரை பற்றி ஒரு தகவல் வந்துள்ளது. என்னவென்றால் விஜய் சேதுபதி நடித்துள்ள ஜுங்கா படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை பாடி முடித்துள்ளாராம். இந்த தகவலை இப்பட இசையமைப்பாளர் சித்தார் விபின் அவர்களே தன்னுடைய டுவிட்டரில் புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார். ...

Read More

வாரம் வாரம் வெளியாகும் படங்களின் எண்ணிக்கைக்கு குறைவில்லை. ஆனால் பெரிதளவில் சில படங்களுக்கு விளம்பரம் இல்லையென்றாலும் கதையால் ஈர்க்கப்படுகி...

<
வாரம் வாரம் வெளியாகும் படங்களின் எண்ணிக்கைக்கு குறைவில்லை. ஆனால் பெரிதளவில் சில படங்களுக்கு விளம்பரம் இல்லையென்றாலும் கதையால் ஈர்க்கப்படுகின்றன. அந்த வகையில் ஒரு குப்பை கதை வெளியாகியுள்ளது. வாருங்கள் குப்பைக்குள் என்ன கிடக்கிறது என கிண்டி பார்க்கலாம்.கதைக்களம்படத்தின் ஹீரோ தினேஷ் ஒரு சாதாரண கார்ப்பொரேஷன் தொழிலாளி. குப்பை அள்ளும் தொழில் செய்து வருகிறது. ஒரே ஒரு அம்மாவுடன் கூவத்தில் வாழ்ந்து வருகிறார்.எங்கெங்கோ பெண் தேடி அலைந்த இவருக்கு கடைசியில் மலைவாழ் கிராம பெண் மனைவியாகிறார். அதுவும் எப்படி? ஆயிரம் பொய்களை சொல்லி கல்யாணம் செய்வார்களே அது போல தான்.தன் கணவர் மீதான வேறொரு கனவுடன் அழகான கிராமத்திலிருந்து முற்றிலும் வித்தியாசமான கூவத்திற்கு குடும்பம் நடத்த வருகிறார் ஹீரோயின் மனிஷா (பூங்கொடி கேரக்டர்).கணவர் பற்றி சில உண்மைகள் தெரியவர பிரச்சனை வெடிக்கிறது. ஆனாலும் காலப்போக்கில் குழந்தை பிறக்க வேறு இடத்திற்கு தம்பதியாக அடுக்கு மாடி குடியிருப்பில் குடிபெயர்கிறார்கள்.ஒரு நாள் திடீரென...

Read More

இந்தியாவுக்காக ஒலிம்பிக் பதக்கம் வென்றவரும், பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் ராஜ்யவர்தன் சிங் ரத்த...

<
இந்தியாவுக்காக ஒலிம்பிக் பதக்கம் வென்றவரும், பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், கடந்த 22-ஆம் தேதி (22.05.2018) கிரிக்கெட் வீரர் விராட் கோலி, பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் உள்ளிட்ட விளையாட்டுத் துறையினருக்கு ஒரு சவாலை முன் வைத்திருந்தார். விளையாட்டுத் துறையில் உள்ள வீரர்-வீராங்கனைகள் தாங்கள் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை சமூக வலைதளங்களில் பதிவிடுமாறு ராஜ்யவர்தன் சிங் கேட்டுக் கொண்டிருந்தார். இதையடுத்து, விராட் கோலி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் "உங்கள் சவாலை ஏற்றுக் கொண்டேன்" என்று தெரிவித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு, இதுபோன்ற சவாலை விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா, பிரதமர் மோடி, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஆகியோரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். விராட் கோலியின் பதிவு வெளியிடப்பட்ட 24 மணி நேரத்திற்குள், "உங்கள் சவாலை...

Read More

விஜய் சேதுபதி எப்போதும் தரமான படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர். மேலும், சமூகத்தில் நடக்கும் நிறைய விஷயங்களுக்கு தைரியமாக குரல் கொடுப்பவர். ...

<
விஜய் சேதுபதி எப்போதும் தரமான படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர். மேலும், சமூகத்தில் நடக்கும் நிறைய விஷயங்களுக்கு தைரியமாக குரல் கொடுப்பவர்.இந்நிலையில் தூத்துக்குடி தாக்குதல் குறித்து விஜய் சேதுபதி பேசுகையில் ‘இத்தனை நாட்கள் அமைதியாக இருந்த போராட்டம், பெரும் பிரச்சனையாக முடிக்கப்பார்க்கின்றனர்.அதுமட்டுமின்றி இதன் மூலம் மக்களுக்கு ஓர் அச்சத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதை முன்பே முடிவு செய்துள்ளது போல் எனக்கு சந்தேகம் வருகின்றது’ என கூறியுள்ளார். ...

Read More

நார்த் மெட்ராஸ் கதையென்றாலே வேர்த்துக் கொட்டுகிற அளவுக்கு முந்தைய ‘அருவா மார்க் ’ அனுபவங்கள் இருக்க…. மறுபடியும் ஒரு நார்த் மெட்ராஸ் படமா? ...

<
நார்த் மெட்ராஸ் கதையென்றாலே வேர்த்துக் கொட்டுகிற அளவுக்கு முந்தைய ‘அருவா மார்க் ’ அனுபவங்கள் இருக்க…. மறுபடியும் ஒரு நார்த் மெட்ராஸ் படமா? சற்றே தடதடப்போடு முதல் சில காட்சிகளை கடக்கிற நமக்கு, செம ட்விஸ்ட்! இது நாம நினைக்கிற மாதிரி அருவா இல்லை. ஆறுதல், அசத்தல்!மார்க்கெட் ஏரியாவையே தன் கைக்குள் வைத்திருக்கிற சமக் சந்திரா, தனது அல்லக்கைகள் சகிதம் மாமூல் வசூலில் கொடி கட்டி பறக்கிறான். ஏதோ ஒரு வேலையாக மேற்படி மார்க்கெட்டுக்குப் போகும் ஹீரோ ராஜன் தேஜேஸ்வர் சம்பந்தமில்லாமல் தன்னிடம் முண்டா தட்டும் சமக்கை போட்டு புரட்டி எடுக்க…. ஏரியாவே துவம்சம் ஆகிறது. அதுவரை அலறிக் கொண்டு மாமூல் கொடுத்தவர்கள் எல்லாம், “போங்கடா… உங்க அண்ணன் ஒரு சின்ன பையன்ட்ட அடி வாங்குனவன்தானே?” என்று வில்லனின் அடியாட்களை துரத்தி துரத்தி அவமானப்படுத்துகிறார்கள்.“அண்ணே… அதே ஏரியாவுல அவனை வச்சு தூக்கலேன்னா நமக்கு மாமூலும் இல்ல. மரியாதையும் இல்ல”...

Read More

முகப்பரு தொல்லையே இல்லாத ஆளே இருக்க துமுடியாது. சிலர் அந்த பருக்களை கிள்ளி வைத்து அது அப்படியே கருப்பாக மாறிவிடும். சிலருக்கு நாளடைவில் முக...

<
முகப்பரு தொல்லையே இல்லாத ஆளே இருக்க துமுடியாது. சிலர் அந்த பருக்களை கிள்ளி வைத்து அது அப்படியே கருப்பாக மாறிவிடும். சிலருக்கு நாளடைவில் முகத்தில் பருக்கள் இருந்த இடங்கள் குழிக்குழியாக மாறியிருக்கும்.இதற்கென பெரிதாக கெமிக்கல் கலந்த கண்ட க்ரீம்களையும் வாங்கிப் பயன்படுத்தத் தேவையில்லை. வீட்டிலுள்ள வெந்தயத்தை வைத்தே குழிகுழியாக இருக்கும் சருமத்தை சீராக்க முடியும்.வெந்தயத்தை இரவு முழுவதும் நீர்விட்டு ஊற வைத்து காலையில் மைய அரைத்து வைத்துக் கொண்டு அதனோடு சிறிது தயிர் சேர்த்து நன்கு குழைத்து தலை முடிக்கும் தலையின் மேற்புறத்தும் தடவி நன்றாக மசாஜ் செய்து வைத்திருந்து 20 நிமிடங்களுக்குப் பிறகு தலைக்கு குளிக்க பொடுகுகள் போகும்.வெந்தயத்தை இரவு ஊற வைத்து காலையில் முகத்துக்கு தடவி வைத்திருந்து குளித்து விடுவதால் முகத்தில் உள்ள மருக்கள், கரும்புள்ளிகள், தழும்புகள் மறைந்து போகும்.வெந்தயத்தோடு தேன் சேர்த்து முகப்பருக்களின் மீது பூசி வைத்திருந்து இளஞ்சூடான நீரில் கழுவி வர முகப்பருக்கள்...

Read More

பிக்பாஸ் 2 நிகழ்ச்சி வரும் ஜூன் மாதம் தொடங்கவுள்ளது. மக்கள் பலரும் இதை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார்கள். தமிழில் மட்டுமல்ல, தெலுங்கிலும் ...

<
பிக்பாஸ் 2 நிகழ்ச்சி வரும் ஜூன் மாதம் தொடங்கவுள்ளது. மக்கள் பலரும் இதை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார்கள். தமிழில் மட்டுமல்ல, தெலுங்கிலும் இதன் மீது ஆர்வம் அதிகரித்துள்ளது.போட்டியாளர்கள் யாராக இருப்பார்கள் என தெரிந்துகொள்ள மக்களுக்கு பொறுமையில்லை என்றே சொல்ல வேண்டும். இந்நிலையில் தெலுங்கு பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியை நானி தொகுத்து வழங்கவுள்ளார்.கடந்த சீசனில் இதன் மொத்த நாட்கள் 70 ஆக இருந்தது. இந்நிலையில் தமிழை போலவே தற்போது இதையும் 100 நாட்களாக மாற்றிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ...

Read More

ஹாலிவுட்டில் ஸ்பூவ் மூவி என்றே தனியாக உள்ளது. ஸ்கேரி மூவி என்று தலைப்பிட்டு பல படங்களை வெளியிட, 1000 கோடி ரூபாய் செலவு செய்து ஒரு சூப்பர் ஹ...

<
ஹாலிவுட்டில் ஸ்பூவ் மூவி என்றே தனியாக உள்ளது. ஸ்கேரி மூவி என்று தலைப்பிட்டு பல படங்களை வெளியிட, 1000 கோடி ரூபாய் செலவு செய்து ஒரு சூப்பர் ஹீரோவை வைத்து ஸ்பூவ் மூவி எடுத்தால் எப்படியிருக்கும், அது தான் இந்த Deadpool 2. Deadpool அளவிற்கு Deadpool 2 இருக்குமா? என்று படத்திலேயே ஒரு வசனம் வரும், அந்த வசனத்தை படம் பூர்த்தி செய்ததா? பார்ப்போம்.கதைக்களம்Deadpool தன் மனைவியிடம் சந்தோஷமாக வாழ, வழக்கம் போல் ஒரு வில்லன் கும்பல் இவர் சந்தோஷமான வாழ்க்கையை கெடுக்க வர, அந்த மோதலில் தன் மனைவியை இழக்கின்றார்.இதனால், தானும் இறக்கவேண்டும் என்று அவர் நினைத்தாலும், மரணம் அவரை நெருங்கவே முடியவில்லை, அந்த சமயத்தில் தான் ஒரு அமைதிக்காக எக்ஸ் மேன் டீமுடன் இணைகின்றார்.அப்போது ரசல் என்ற சிறுவன் தனக்கு இருக்கும் நெருப்பு சக்தியை மிகவும் மோசமாக பயன்படுத்துகின்றான், அவனை கட்டுப்படுத்த Deadpool அங்கு...

Read More

தமிழகத்தில் தற்போது வெளியாகியுள்ள இருட்டு அறையில் முரட்டு குத்து என்று திரைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்கள் மத்தியில் ப...

<
தமிழகத்தில் தற்போது வெளியாகியுள்ள இருட்டு அறையில் முரட்டு குத்து என்று திரைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்று பெற்று வெற்றியாக படம் ஓடிக்கொண்டிருந்தாலும், பல்வேறுபட்ட தரப்பினரும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.இந்தத் திரைப்படம் ஆபாசம் நிறைந்து காணப்படுவதாகவும் சமூகத்தை சீர்கெடுப்பதாகவும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை நடத்தி வரும் நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார்.இதற்கு பதிலளிக்கும் வகையில் பிரபல இணைய ஊடகத்தில் திரைப்படத்தின் இயக்குநர் சந்தோஷ் பல கருத்துக்களை முன்வைத்தார்.இயக்குநரின் கருத்துக்கு லக்ஷ்மி ராமகிருஷ்ணன் மீண்டும் பதிலடி கொடுக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளார்.பகிரங்க சவால் விட்டுள்ளதுடன், தமிழ்நாட்டை விட்டு போவதாகவும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ...

Read More

சீரியல் நடிப்பவர்களும் மக்கள் மத்தியில் சீக்கிரம் பிரபலமாகிவிடுகிறார்கள். ஹிந்தியில் கவர்ச்சியாக, கலர் கலராக சீரியல் எடுக்கப்பட்டு தமிழில் ...

<
சீரியல் நடிப்பவர்களும் மக்கள் மத்தியில் சீக்கிரம் பிரபலமாகிவிடுகிறார்கள். ஹிந்தியில் கவர்ச்சியாக, கலர் கலராக சீரியல் எடுக்கப்பட்டு தமிழில் டப்பிங் ஆகி வரும் சீரியலும் நல்ல வரவேற்பை பெறுகிறது.இதற்கு ஒரு உதாரணம் நாகினி சீரியல். எந்த நேரமும் குடும்ப சண்டை என்று பார்த்தாலும் முகம் சுளித்துவிடும். ஆனால் ஹிந்தியில் வரலாறுகள், சரித்திரங்களை சீரியலாக்க ஆர்வம் காட்டுகிறார்கள்.இந்நிலையில் ராமாயணம் சீரியலில் ராமராக நடித்தவர் அனீஷ் ஷர்மா. பிரபல நடிகரான இவர் தற்போது பிரிதிவ் வல்லப் என்ற வரலாற்று சீரியலில் அரசன் பிரித்வியாக நடித்து வருகிறார்.அடுத்ததாக புதிய சீரியலில் கமிட்டாகியுள்ளார். இதில் அவர் திருநங்கையாக நடிக்கிறாராம். ...

Read More

காலம்காலமாக மற்ற மொழிப்படங்களில் சில நம் ரசிகர்களை ஈர்த்து விடுகிறது. அவை நம் மொழியிலும் பார்த்தால் நன்றாக இருக்குமே என்ற எதிர்பார்ப்பும் இ...

<
காலம்காலமாக மற்ற மொழிப்படங்களில் சில நம் ரசிகர்களை ஈர்த்து விடுகிறது. அவை நம் மொழியிலும் பார்த்தால் நன்றாக இருக்குமே என்ற எதிர்பார்ப்பும் இருக்கும்.அப்படி ஒரு ரசனையுடன் மலையாளத்தில் இருந்து வந்திருக்கிறான் இந்த பாஸ்கர் ஒரு ராஸ்கல். யார் இவன், மக்களிடம் இடம் பிடிப்பானா என உள்ளே சென்று பார்க்கலாம்.கதைக்களம்அரவிந்த் சாமி ஒரு சாதாரண பிசினஸ் மேன். ஆனால் இவர் வம்பு என வந்துவிட்டால் முரடன். இவருக்கு ஆகாஷ் என்ற பையனும், அப்பா நாசரும் இருக்கிறார்கள். அப்பா மீது பாசமாக இருந்தாலும் சில விசயங்களால் அவனுக்கு அரவிந்த் சாமியை பிடிக்கவில்லை.நடிகை அமலா பால் ஒரு எதிர்பாராத விதமாக ஒரு கட்டத்தில் தன் காதல் கணவரை இழக்கிறார். பின் வேறொரு ஊரில் தன் மகள் நைனிகாவுடன் தனியே வாழ்கிறார். இந்நிலையில் அரவிந்த் சாமிக்கு தன் மகன் மூலம் அமலா பாலின் அறிமுகம் கிடைக்கிறது. பின் இரு குடும்பமும் ஒன்றாக நட்புறவாக மாறுகிறார்கள்.பின்...

Read More

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் காலா படம் வரும் ஜூன் 7 ம் தேதி வெளியாகவுள்ளது. ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்...

<
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் காலா படம் வரும் ஜூன் 7 ம் தேதி வெளியாகவுள்ளது. ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா அண்மையில் நடந்தது.ஏற்கனவே ஏப்ரல் மாதம் வெளியாக இருந்த இப்படம் ஸ்டிரைக் காரணாமாக தள்ளிப்போனது. ரஜினி படங்களுக்கு உலகளவில் நல்ல வரவேற்பு இருக்கிறது என்பதை கபாலி ஏற்கனவே நிரூபித்து விட்டது.இந்நிலையில் இப்படத்திற்கு பெரும் சவாலாக ஹாலிவுட் சினிமாவில் அதிக கலெக்‌ஷன்களை பெற்ற ஜூராசிக் பார்க் படத்தின் அடுத்த பாகம் ஜூன் 8 ல் 2300 தியேட்டர்களில் உலகம் முழுக்க வெளியாகவுள்ளது.ஜூராசிக் வேர்ல்ட் ஃபாலன் கிங்டம் என்ற இப்படத்தை ஃபயோனா இயக்கியுள்ளார். இவர் ஜுராசிக் பார்க் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பில்ஸ்பெர்க்கிடம் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவராம்.இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் என 4 மொழிகளில் வெளியாகிறது. எனவே காலாவுடன் போட்டியில் இறங்கும் இந்த பிரம்மாண்ட படத்தால் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.ஜெயிக்கப்பபோவது யார் என பொறுத்திருந்து பார்ப்போம். ...

Read More

அனைவரும் தற்போது ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருப்பது பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசனை தான். அண்மைகாலமாகவே நிகழ்ச்சி குறித்த தகவல்கள் வெ...

<
அனைவரும் தற்போது ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருப்பது பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசனை தான். அண்மைகாலமாகவே நிகழ்ச்சி குறித்த தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.கடந்த சிலநாட்களுக்கு முன் தான் மராத்தியில் முதல் சீசன் தொடங்கியது. அடுத்து தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2 ம் சீசன் டீசர் வெளியானது. கமல் மீண்டும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார்.தமிழ் பிக்பாஸின் முதல் சீசனை தொடர்ந்து தெலுங்கிலும் நடத்தப்பட்டது. நடிகர் சிவபாலாஜி வெற்றி பெற்றார். ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கியிருந்தார்.இந்த நிகழ்ச்சியின் அடுத்த சீசன் வரும் ஜூன் மாதமே தொடங்கவுள்ளதாம். நடிகர் நானி இதை தொகுத்து வழங்கவுள்ளார். இதன் புரமோ, போஸ்டருக்கான ஷூட்டிங் அவரை வைத்து எடுத்து முடித்துவிட்டார்களாம்.எனவே எந்த நேரத்திலும் இந்த டீசர் வரலாம் என எதிர்பார்க்கபடுகிறது.இந்நிலையில் இந்த போட்டியில் பாடகி கீதா மாதுரி, நிகழ்ச்சி தொகுப்பாளர் சியாமளா, தேஜஸ்வி மடிவடா ஆகியோர் கலந்துகொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. மற்ற போட்டியாளர்களுக்கான தேர்வுகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறதாம்....

Read More

     Google AdSense is a better way to make money online. But many of them are tired with low CPC Rates. Even I am also a beginner of my ca...

<
     Google AdSense is a better way to make money online. But many of them are tired with low CPC Rates. Even I am also a beginner of my carrier, started wondering that sometimes I got many clicks, but still my earnings are low and sometimes only few clicks, but earnings are much higher. These advertisements are administered, sorted, and maintained by Google. They can generate revenue on either a cost per-click or per-impression basis. In 2016, peoples not get very high CPC Keywords. But Now in 2017 I will provide you to a list of high CPC...

Read More

கீர்த்தி சுரேஷிற்கு தென்னிந்திய முழுவதும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது. இவை அனைத்திற்கும் காரணம் நடிகையர் திலகம் படம் தான். அந்த அளவிற...

<
கீர்த்தி சுரேஷிற்கு தென்னிந்திய முழுவதும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது. இவை அனைத்திற்கும் காரணம் நடிகையர் திலகம் படம் தான்.அந்த அளவிற்கு சாவித்ரியாகவே கீர்த்தி சுரேஷ் வாழ்ந்து இருந்தார், இப்படத்தை தொடர்ந்து கீர்த்தி ஜெயலலிதா வாழ்க்கை வரலாறில் நடக்கவுள்ளதாக ஒரு செய்தி பரவியது.இதுக்குறித்து அவரிடம் கேட்கையில் ‘அதெல்லாம் வதந்தி தான், அப்படி வந்த செய்தி எதிலும் உண்மையில்லை.மேலும், கமல் சார் இன்னும் படம் பார்க்கவில்லை, இந்த கதாபாத்திரத்தில் நடித்ததற்காக அழைத்து பாராட்டினார்’ என்று கூறியுள்ளார். ...

Read More

சினிமா தியேட்டரில் தாயின் கண்முன்னே 60 வயது தொழிலதிபர் 10 வயது சிறுமிக்கு பாலியல் கொடுமை செய்த சம்பவம் நடந்திருக்கிறது. இதில் தொழிலதிபர் ம...

சினிமா தியேட்டரில் தாயின் கண்முன்னே 60 வயது தொழிலதிபர் 10 வயது சிறுமிக்கு பாலியல் கொடுமை செய்த சம்பவம் நடந்திருக்கிறது. இதில் தொழிலதிபர் முகைதீன் குட்டியும் அவருக்கு ஆதரவாக செயல்பட்ட சிறுமியின் தாயும் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் எடப்பாலில் உள்ள ஒரு சினிமா தியேட்டர் உரிமையாளர் கடந்த மாதம் காவல் நிலையத்தில் ஒரு சி.சி.டி.வி. காட்சியை ஒப்படைத்தார். அதில் தியேட்டரில் சினிமா ஓடிக்கொண்டிருக்கும்போதே 60 வயதுள்ள முகைதீன் குட்டி 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்துகொண்டிருந்தார். இதை அருகில் இருந்த சிறுமியின் தாய் கண்டும் காணாமல் இருந்தார். இதுகுறித்து உடனடியாக விசாரிக்காமல் போலீஸார் அமைதியாக இருந்தனர். இந்தப் பிரச்னை மெல்ல வெளியில் கசிந்ததை அடுத்து நேற்று முன்தினம் சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த முகைதீன் குட்டி கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து முகைதீன் குட்டிக்கு உடந்தையாகச் செயல்பட்ட சிறுமியின் தாயும் கைதுசெய்யப்பட்டார்....

Read More

`காலா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கடந்த 9-ம் தேதி நடைபெற்றது. ரஜினியின் அரசியல் பிரவேசத்து...

<
`காலா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கடந்த 9-ம் தேதி நடைபெற்றது. ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்கு வெளியாகும் முதல் படம் என்பதால், ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. காலா இசை வெளியீட்டு விழாவுக்காக தமிழகம் முழுவதிலுமிருந்து அவரது ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் கலந்துகொண்டார்கள்.காலா இசை வெளியீட்டு விழா முடிந்து, அன்றிரவு சென்னையிலிருந்து மதுரைக்கு ரயிலில் சென்றார், மதுரையைச் சேர்ந்த காசி விஸ்வநாதன். ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால், அவர் படிக்கட்டில் அமர்ந்து சென்றார். இரவு 2.30 மணிக்கு, அந்த ரயில் மறைமலைநகர் ரயில் நிலையம் வரும்போது, நடைமேடையில் அவரின் கால் உரசியது. இதனால் அவரது இரண்டு கால்களும் துண்டாயின. இதையடுத்து அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகிறார். இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காசிவிஸ்வநாதனை சந்தித்த ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி வி.எம். சுதாகர், மருத்துவ சிகிச்சைக்குத்...

Read More

கமல்ஹாசன் தொகுத்து வழங்கவிருக்கும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் யார், யார் என்ற பட்டியல் வெளியாகியுள்ளது. பிரபல தொலை...

<
கமல்ஹாசன் தொகுத்து வழங்கவிருக்கும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் யார், யார் என்ற பட்டியல் வெளியாகியுள்ளது.பிரபல தொலைக்காட்சியில் கடந்த வருடம் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் கவனத்தையும் ஈர்த்தது. ஆரம்பத்தில் பல எதிர்ப்புக்கள் இருந்தாலும், பிறகு ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது.பிக்பாஸ் முதல் சீசனை தொடர்ந்து இரண்டாவது சீசன் வரும் ஜூன் மாதம் தொடங்கவிருக்கிறது. இந்த சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கவுள்ளார். இதற்கான டீஸர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த சீசனில் கலந்துகொள்ள பல பிரபலங்களுக்கு பிக்பாஸ் குழு அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.ராய்லஷ்மி, ஜனனி ஐயர், சொர்ணமால்யா, கீர்த்தி சாந்தனு, லட்சுமி மேனன், இனியா, ரக்‌ஷிதா, பூனம் பாஜ்வா, ஆலியா மானசா, பரத், ஷாம், ஜித்தன் ரமேஷ், ப்ரேம்ஜி, பவர் ஸ்டார் சீனிவாசன், தாடி பாலாஜி, பாலசரவணன், அசோக் செல்வன் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த பட்டியலில் உள்ளவர்கள் பாதி...

Read More

அட்லீ தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம். இவர் எடுக்கும் படங்கள் எல்லாமே பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும். அந்த வகையில் இவர் அடுத்து யா...

<
அட்லீ தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம். இவர் எடுக்கும் படங்கள் எல்லாமே பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும்.அந்த வகையில் இவர் அடுத்து யாருடன் கூட்டணி அமைப்பார் என்று பலரும் காத்திருக்கின்றனர், இந்நிலையில் சரவெடி அப்டேட் ஒன்றை அட்லீ வெளியிட்டுள்ளார்.இதில் ‘அஜித், விஜய் இருவரை வைத்து ஒரு படம் இயக்க போகிறேன்’ என்று இவர் கூறியுள்ளதாக ஒரு செய்தி உலா வருகின்றது.இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவி வருகின்றது. ஆனால், அந்த செய்தியை வெளியிட்ட சன் நிறுவனமே இதை டெலிட் செய்துவிட்டது.ஆனால், அட்லீ சொன்னது உண்மை தான், இன்று அவர் திருப்பதி சென்றுள்ளார், அங்கு அவர் இப்படி தெரிவித்ததாக முன்னணி பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ...

Read More

சுந்தர்.சி-குஷ்பு ரசிகர்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஜோடி. இவர்களுக்கு இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில் சுந்தர்.சி சமீபத்தில் ஒரு ...

<
சுந்தர்.சி-குஷ்பு ரசிகர்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஜோடி. இவர்களுக்கு இரண்டு மகள்களும் உள்ளனர்.இந்நிலையில் சுந்தர்.சி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட போது, அவரிடம் சில நாயகிகளின் புகைப்படங்களை காட்டினர்.அப்போது மறைந்த நடிகை சௌந்தர்யா புகைப்படத்தை காட்ட, அந்த நேரத்தில் சுந்தர்.சி கொஞ்சம் எமோஷ்னல் ஆனார்.பிறகு ‘குஷ்பு என் வாழ்க்கையில் வரவில்லை என்றால் கண்டிப்பாக இந்த பெண்ணிடம் என் காதலை கூறியிருப்பேன்.அந்த அளவிற்கு எனக்கு பிடித்த நாயகி அவர், எப்போதும் சௌந்தர்யாவுடன் அவருடைய அண்ணன் இருப்பார், இறக்கும் போது கூட இருவரும் சேர்ந்து இறந்துவிட்டனர்’ என்று உருக்கமாக பேசினார். ...

Read More

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா. அவர் நடித்துள்ள கோலமாவு கோகிலா படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. அனிருத் இந்த படத்திற்காக...

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா. அவர் நடித்துள்ள கோலமாவு கோகிலா படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. அனிருத் இந்த படத்திற்காக இசையமைத்து வருகிறார். ஒரு பாடலுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் பாடல் எழுதியுள்ளார். அந்த பாடலின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. அதில் நடிகர் யோகி பாபு நயன்தாராவிடம் ப்ரொபோஸ் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. ...

Read More

நீட் தேர்வில் முழு மதிப்பெண்ணைப் பெறும் வகையில் பாடத்திட்டத்தை வடிவமைத்திருப்பதாகப் பெருமைகொள்கிறது தமிழகப் பள்ளிக்கல்வித்துறை. இந்த ஆண்டு ...

<
நீட் தேர்வில் முழு மதிப்பெண்ணைப் பெறும் வகையில் பாடத்திட்டத்தை வடிவமைத்திருப்பதாகப் பெருமைகொள்கிறது தமிழகப் பள்ளிக்கல்வித்துறை. இந்த ஆண்டு நீட் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் பெரும்பாலும் புதிய பாடத்திட்டத்தில் இடம்பிடித்திருப்பதே பெருமைக்கான காரணம். நீட்`தமிழக மாணவர்கள் போட்டித்தேர்வுகளில் மிகவும் பின்தங்கியிருக்கின்றனர். இதற்குக் காரணம் 12 வருடங்களாக மாற்றப்படாமல் இருக்கும் பாடத்திட்டங்களே' என்று கல்வியாளர்கள் குற்றம்சாட்டினர். இதன் அடிப்படையில் கடந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அனந்த கிருஷ்ணன் தலைமையில் புதிய பாடத்திட்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. கடந்த மாதம் 1,6,9 மற்றும் 11-ம் வகுப்புக்கான பாடப்புத்தகங்கள் வெளியிடப்பட்டன. இதர வகுப்புக்கான புத்தகங்கள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் புதிதாகத் தயாரிக்கப்பட்ட 11-ம் வகுப்புப் பாடப்புத்தகங்களில், நீட் தேர்வுக்கான கேள்விகள் எத்தனை இடம்பெற்றிருக்கின்றன என்பது குறித்து தமிழகப் பள்ளிக்கல்வித்துறை ஆராய்ந்தது. பொதுவாக, நீட் தேர்வில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பிலிருந்து சம அளவில் கேள்விகள்...

Read More

டி.ஆர் எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர். ஆனால், இதுவே ஒரு சில இடத்தில் பெரும் பிரச்சனையாகிவிடும். அப்படித்தான் சமீபத்தில் நடிக...

<
டி.ஆர் எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர். ஆனால், இதுவே ஒரு சில இடத்தில் பெரும் பிரச்சனையாகிவிடும்.அப்படித்தான் சமீபத்தில் நடிகர் விஷால் நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.அதனால் அவர் பதவி விலகவேண்டும் என டி.ஆர், பாரதிராஜா, சுரேஷ் காமாட்சி, ரித்திஷ் என அனைவரும் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் பேசினர்.அப்போது பேசிய டி.ஆர் ‘நீ துப்பறிவாளனா, தமிழ் ராக்கர்ஸை பிடிப்பேன் என்றாயே, என்ன ஆனது, எதற்கு லைகாவுடன் வைத்தாய் கூட்டு, அதற்கு காரணம் காட்டு’ என்று கோபமாக பேசினார்.அதுமட்டுமின்றி ‘கத்தி படம் வந்த போது லைகாவுடன் கூட்டணி என்று கத்தினீர்களே, தற்போது ரஜினி, கமல் படங்களுக்கு பேசாமல் இருப்பது ஏன்?’ என்றும் கேட்டுள்ளார். ...

Read More

பிக்பாஸ் 2 நிகழ்ச்சி பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய சீசன் ஒன்று நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் இந்த வருடத்திற்...

<
பிக்பாஸ் 2 நிகழ்ச்சி பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய சீசன் ஒன்று நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் இந்த வருடத்திற்கான சீசனுக்கு அதிக போட்டிகள் உள்ளது.அண்மையில் கமல்ஹாசன் இதன் புரொமோ ஒன்றை வெளியிட்டு அசத்தினார். மேலும் சமீபகாலமாக இந்த சீசன் 2 ல் யாரெல்லாம் கலந்துகொள்வார்கள் என ஒரு பெரிய லிஸ்ட் பரவிவருகிறது.உண்மையை தெரிந்துகொள்ள ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் இருந்து வருகிறது. அதே நேரத்தில் பிரபல பத்திரிக்கை ஒன்று அந்த பட்டியலை கொண்டு ஒரு சர்வே நடத்தியுள்ளது.இதில் பதிவான ஓட்டுக்களில் அதிக சதவீத ஓட்டுக்கள் நடிகர் தாடி பாலாஜிக்கும், நடிகை சொர்ணமால்யாவுக்கும் விழுந்துள்ளது. ஆனால் நிகழ்ச்சிக்குழுவின் முறையான அறிவிப்புக்களுக்காக காத்திருப்போம். ...

Read More

இந்த வார படங்கள் மூணுமே மூணு ரகம்! ஹிட்டா, சுமாரா என்கிற ஆராய்ச்சியெல்லாம் ஒரு பக்கம் போய் கொண்டிருக்க… அடுத்த வார படங்களுக்கு அலங்கார வளைவ...

<
இந்த வார படங்கள் மூணுமே மூணு ரகம்! ஹிட்டா, சுமாரா என்கிற ஆராய்ச்சியெல்லாம் ஒரு பக்கம் போய் கொண்டிருக்க… அடுத்த வார படங்களுக்கு அலங்கார வளைவை ரெடி பண்ணிவிட்டது கோடம்பாக்கம். அதில் பூத்துக்குலுங்குகிற முக்கியமான படம் காளி.கிருத்திகா உதயநிதி இயக்கம், விஜய் ஆன்ட்டனி ஹீரோ, அஞ்சலி, சுனைனா ஹீரோயின்ஸ் என்று அறிமுகச் செய்தியே அமர்க்களப்பட வைக்க… பெரும் எதிர்பார்ப்புடன் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. ஸ்பாட்டில் அஞ்சலியை தவிர அத்தனை பேரும் ஆஜர். முன்னதாக சுமார் 20 நிமிட காட்சியை திரையிட்டார்கள். பிச்சைக்காரன் பட வெற்றிக்கு பெரிய காரணமே அதில் நிறைந்து வழிந்த அம்மா சென்ட்டிமென்ட்தான். விடுவாரா விஜய் ஆன்ட்டனி?இதிலும் அம்மா சென்ட்டிமென்ட் அமர்க்களம். வெளிநாட்டில் மருத்துவராக இருக்கும் விஜய் ஆன்ட்டனிக்கு நாள்தோறும் ஒரு கனவு. அந்த கனவில் வருகிற சம்பவங்களுக்கும் தனது கடந்த காலத்திற்கும் ஏதோ ஒரு தொடர்பு இருப்பதாக நினைத்து சொந்த ஊருக்கு வருகிறார். வந்த...

Read More

தமிழ்நாட்டில் ஏற்கெனவே பல பேர் அரசியல் களத்தை ஒருவிதமாக வழி நடத்தி வருகிறார்கள். அதுவே மக்களுக்கு பெரிய பிரச்சனையாக இருக்கிறது, இந்த ந...

தமிழ்நாட்டில் ஏற்கெனவே பல பேர் அரசியல் களத்தை ஒருவிதமாக வழி நடத்தி வருகிறார்கள். அதுவே மக்களுக்கு பெரிய பிரச்சனையாக இருக்கிறது, இந்த நேரத்தில் பிக்பாஸ் மூலம் பலரின் வெறுப்புக்கு ஆளான ஜுலி கடந்த சில நாட்களாக வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார். அதில் நானும் அரசியல் கட்டி தொடங்க போகிறேன் என்பது போல் பேசி வருகிறார். அவர் ஒரு பட புரொமோஷனுக்காக இப்படி பேசுகிறார் என்று பலர் கூறுகின்றனர். ஆனால் அவரின் டுவிட்டர் பதிவிற்கு ரசிகர்கள் பலரும் தங்களது கோபத்தை வெளிக்காட்டி வருகின்றனர். கீழே இருக்கும் அவரது வீடியோவிற்கு வந்த கமெண்ட்டுகளை நீங்களே பாருங்கள். ...

Read More

விஜய் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர். இவர் படங்கள் எப்போதும் பிரச்சனைகளை சந்தித்து தான் வந்தது. அதற்காக தான் விஜய், ...

<
விஜய் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர். இவர் படங்கள் எப்போதும் பிரச்சனைகளை சந்தித்து தான் வந்தது.அதற்காக தான் விஜய், ஜெயலலிதாவிற்கே ஆதரவு தந்தார் என்பது அனைவரும் அறிந்ததே, ஆனால், ஜெயலலிதாவே விஜய்க்கு பிறகு பிரச்சனை கொடுத்தது வேறுக்கதை.இந்நிலையில் ஜெயலலிதாவே விஜய்யிடம் அரசியல் கூட்டணி அமைக்க பேச்சு வார்த்தை நடத்தியதாக, விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.இச்செய்தி பலருக்கும் ஆச்சரியத்தை தான் வர வைத்துள்ளது. மேலும், எங்களுக்கு ஆதரவு தந்தால் உங்கள் படங்களுக்கு எந்த பாதிப்பும் வராமல் தான் பார்த்துக்கொள்வதாக ஜெயலலிதா சொன்னதாகவும் கூறியுள்ளார். ...

Read More

ஏ.ஆர். ரகுமான் என்றாலே மிகவும் அமைதியாக இருப்பார், எந்த நிகழ்ச்சிக்கு போனாலும் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்வார். அப்படிபட்ட அவர் தற்...

<
ஏ.ஆர். ரகுமான் என்றாலே மிகவும் அமைதியாக இருப்பார், எந்த நிகழ்ச்சிக்கு போனாலும் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்வார்.அப்படிபட்ட அவர் தற்போது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சிக்கு 2 முறை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளார்.சமீபத்திய நிகழ்ச்சியில் தொகுப்பாளினி பிரியங்கா, உங்களது இளம் வயதில் யாருடைய காதலுக்காக டியூன் இசைத்து கொடுத்தது எல்லாம் இருக்கிறதா என்று கேட்டார். அதற்கு அவர் சிவமணி அவர்களுக்காக செய்துள்ளதாக கூறியுள்ளார். ...

Read More

தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து ஹீரோக்களுக்கும் அம்மாவாக நடித்தது என்றால் சரண்யா பொன்வண்ணன் தான். அந்த அளவிற்கு அம்மா கதாபாத்திரம் என்றாலே இவ...

<
தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து ஹீரோக்களுக்கும் அம்மாவாக நடித்தது என்றால் சரண்யா பொன்வண்ணன் தான். அந்த அளவிற்கு அம்மா கதாபாத்திரம் என்றாலே இவர் தான் நம் நினைவிற்கு வருவார்.இவர் நடிப்பில் யாராலும் மறக்க முடியாத படம் என்றால் தவமாய் தவமிருந்து தான். இப்படத்திற்காக இவரை பாராட்டாதவர்கள் இல்லை.அந்த அளவிற்கு சிறப்பாக நடித்திருப்பார், ஆனால், இப்படத்தின் படப்பிடிப்பின் போது இவருக்கும், சேரனுக்கும் தினமும் சண்டை தான் நடக்குமாம்.ஏன் என்றே காரணம் தெரியாமல் சண்டை வருமாம், தினமும் படப்பிடிப்பில் அழுவாராம், ஒரு கட்டத்தில் சேரனை வெட்டி கொல்ல வேண்டும் என்று கூட நினைத்துள்ளாராம் சரண்யா.மேலும், அந்த படத்தில் நடித்தது மிகவும் மோசமான நாட்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.அதே நேரத்தில் அந்த படப்பிடிப்பு முடிந்த அடுத்த நாளே நானும் சேரனும் நல்ல நண்பர்கள் ஆகிவிட்டோம்.அது எப்படியென்றே தெரியவில்லை, இன்று வரை அவரை பார்த்தால் எனக்கு சிரிப்பு வந்துவிடும் என்றும் கூறியுள்ளார். ...

Read More

இயக்குநர் பாரதிரஜா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது பழிவாங்கும் செயல் அவரை சட்டப்படி மீட்டெடுப்போம் எனக் கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்...

<
இயக்குநர் பாரதிரஜா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது பழிவாங்கும் செயல் அவரை சட்டப்படி மீட்டெடுப்போம் எனக் கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.திரைப்பட இயக்குநர் பாரதிராஜா கடந்த ஜனவரி மாதம் சென்னை வடபழனியில் நடைபெற்ற திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில், ஆண்டாளை விமர்சித்ததாக எழுந்த சர்ச்சையில் வைரமுத்துவுக்கு ஆதரவாகப் பேசினார். அப்போது அவர் பேசுகையில் போது கடவுளை பற்றி அவதூராக பேசியதாகக் கூறி இந்து மக்கள் முன்னணியினர் பாரதிராஜா மீது வடபழனி காவல் நிலையத்தில் தற்போது புகார் தெரிவித்துள்ளனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில் மத நம்பிக்கைக்கு எதிராகப் பேசுவது, மத உணர்வுகளைப் புண்படுத்தும் விதத்தில் பேசுவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.பாரதிராஜா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதுக்குக் கண்டனம் தெரிவித்து  பாடலாசிரியர் வைரமுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில்  “பாரதிராஜா மீது வழக்கு பழிவாங்கும் செயலாகும். வழக்கு பெரிதல்ல;ரப்பர் மரத்துக்கு ரணங்கள் புதிதல்ல. அவரை...

Read More

"ம்மா... இங்க ரேணுகாம்பாள் கோயிலுக்குப் போற வழி எது?" காரிலிருந்தபடி அந்த டிரைவர் கேட்கிறார். பக்கத்தில் குழந்தைகள் விளையாடிக்க...

"ம்மா... இங்க ரேணுகாம்பாள் கோயிலுக்குப் போற வழி எது?" காரிலிருந்தபடி அந்த டிரைவர் கேட்கிறார். பக்கத்தில் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருக்கின்றனர். காரிலிருந்து 65 வயது அந்த அம்மா கீழே இறங்குகிறார். ``ஏப்பா...மோகன்...மலேசியாவுலருந்து சாக்லேட் வாங்கிட்டு வந்திருந்தீங்களே. அத எடுப்பா, இந்தக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்..." தன் பையிலிருந்த சாக்லேட்களை எடுத்துக் கொடுக்கிறார் மோகன். அதை அந்தக் குழந்தைகளுக்குக் கொடுக்கப் போகிறார் அந்த அம்மா. அவ்வளவுதான். ``ஐயோ...குழந்தைங்கள கடத்துற கும்பல் வந்திருக்கு. எல்லோரும் ஓடிவாங்க...``அந்த ஊரிலிருந்த ஒரு பெண்,  பெரும் குரலெடுத்துக் கத்துகிறார். திருவண்ணாமலை பெண் கொலைஅதன்பின்னர் அங்கு நடந்த அத்தனையுமே அராஜகம்...அநியாயம்...அபத்தம்... ஆபத்து... அசிங்கம்... அநீதி... கும்பலாக ஓடி வந்தவர்களில் ஒருவர் கூட...இவர்களை யார்? என்ன? என்பது குறித்து எதையுமே விசாரிக்கவில்லை. இழுத்துப் போட்டு அடிக்கத் தொடங்கினர். அவர்களிடமிருந்து தப்பி, காரை எடுத்துக்கொண்டு புறப்பட்ட அவர்களைத் தடுத்து நிறுத்தி, மீண்டும் அடித்து, உதைத்து கடைசியில்... 65 வயதான ருக்மணியைக் கொன்றே விட்டார்கள்....

Read More

கடன் என்றாலே கடுப்பாகும் இராணுவ அதிகாரி, தன் தங்கையின் திருமணத்திற்காகப் போலி ஆவணங்களை சமர்ப்பித்து வங்கியில் கடன் பெறுகிறார். ஒட்டுமொத்த...

தமிழ் சினிமாவில் 90களிலிருந்து தற்போது வரை உலகளவில் புகழ்பெற்ற கலைஞர்களாக திகழ்பவர்கள் ரஹ்மான் மற்றும் இளையராஜா. கல்விக்கு சம்பந்தமில்லா...

தமிழ் சினிமாவில் 90களிலிருந்து தற்போது வரை உலகளவில் புகழ்பெற்ற கலைஞர்களாக திகழ்பவர்கள் ரஹ்மான் மற்றும் இளையராஜா. கல்விக்கு சம்பந்தமில்லாதவர் சில பிரபலங்களை பற்றி பள்ளி புத்தகத்தில் பாடமாக வருவது என்றால் பெரிய பாக்கியம்.அந்த பாக்கியத்தை நம் இளையராஜா மற்றும் ரஹ்மான் அவர்கள் பெற்றுள்ளனர். நீட் மற்றும் மத்திய அரசால் நடத்தப்படும் நுழைவு தேர்வுகளை எதிர்கொள்ளும் விதத்தில் 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.அதன்படி 11ம் வகுப்புக்கான தமிழ் பாடத்தில் இசைத்தமிழர் இருவர் என்ற பாடப் பிரிவில் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் வாழ்க்கை இடம் பெற்றுள்ளது. இவர்கள் இருவருமே பலமுறை தேசிய விருதுகளை வென்றவர்கள் குறிப்பிடத்தக்கது. ...

Read More

கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி கிட்டத்தட்ட 4 மாதங்கள் ஆகப்போகிறது. சமீபத்தில் மக்கள் நீதி மய்யத்தின் செயலியை கமல்ஹாசன் அ...

<
கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி கிட்டத்தட்ட 4 மாதங்கள் ஆகப்போகிறது. சமீபத்தில் மக்கள் நீதி மய்யத்தின் செயலியை கமல்ஹாசன் அறிமுகப்படுத்தினார்,இந்த செயலி நம்மைச் சுற்றி நடக்கும், நமது சூழலில் நடக்கும் மாசு, குற்றங்கள், ஊழல்கள் இவற்றை எல்லாம் தனி மனிதன் ஒரு அபாயச் சங்கு ஊதி தெரியப்படுத்தும் கருவி தான் இந்த விசில் என கூறினார்.இதன் மூலம் மக்கள் தங்களது நகரத்தில் நடக்கும் பிரச்சன்னைக்குரிய விஷ்யங்களை தெரியப்படுத்தலாம் என்று கூறினார். இந்த செயலி மூலம் தற்போது பல புகார்கள் மக்களிடமிருந்து குவிந்துள்ளன, குறிப்பாக டாஸ்மாக் மற்றும் லஞ்ச புகார்கள் அதிகமாக வந்துள்ளதாக மக்கள் நீதி மய்யம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த பிரச்சனைகளை ஆய்வு செய்து அந்தந்த தொகுதி நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பிரச்சனைக்கான தகுதியை நன்கு அறிந்து அதை சம்மந்தப்பட்ட அரசு நிர்வாகிகளிடம் கொண்டுசேர்க்கப்படும் என தெரிவித்துள்ளனர். ...

Read More

  தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற நடிகர்களுள் ஒருவர் ஜெமினி கணேசன். காதல் மன்னன் என அழைக்கப்பட்ட இவருக்கு வாழ்க்கையிலும் சில பிரச்சனைகளை சந...

  தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற நடிகர்களுள் ஒருவர் ஜெமினி கணேசன். காதல் மன்னன் என அழைக்கப்பட்ட இவருக்கு வாழ்க்கையிலும் சில பிரச்சனைகளை சந்தித்தார்.நிறைய ஹிட் படங்களை கொடுத்த இவருக்கு சில தோல்விப்படங்களும் அமைந்தன. இவர் பிரபல நடிகையான சாவித்திரியை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு விஜய் சாமுண்டீஸ்வரி என்ற மகள் இருக்கிறார். அதே வேளையில் அவரின் மூத்த மனைவி புஷ்பவள்ளிக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.அதில் ஒருவர் பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையான ரேகா. இவர் ஏற்கனவே தன் அப்பா ஜெமினி, சித்தி சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு மகாநதி படமாக எடுக்கப்பட்டத்தை கேள்விப்பட்டிருக்கிறாராம்.தற்போது அந்த படத்தை அவர் பார்க்க ஏற்பாடு செய்ய படக்குழுவிடம் கேட்டுள்ளாராம். ...

Read More

தமிழ் சினிமாவிலிருந்து ஹாலிவுட் படத்தில் முன்னணி கதாபத்திரியத்தில் நடித்த ஒரே நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் உருவாகியுள்ள “தி எக்ஸ்ட்ராடி...

தமிழ் சினிமாவிலிருந்து ஹாலிவுட் படத்தில் முன்னணி கதாபத்திரியத்தில் நடித்த ஒரே நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் உருவாகியுள்ள “தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் தி பகிர்" இந்த படம் வருகிற மே 30 ம் தேதி வெளிவரவுள்ளது.இந்நிலையில் பிரான்ஸில் நடக்கும் உலகப்புகழ்ப்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தாண்டு, தனுஷின் “தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் தி பகிர்" படமும் திரையிடப்பட இருக்கிறது. இதற்காக தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் பிரான்ஸ் புறப்பட்டு சென்றுள்ளனர்.கேன்ஸ் பட விழாவில் தனுஷ் பங்கேற்பது இதுவே முதல்முறையாகும். பிரான்ஸ் சென்றுள்ள தனுஷ், அங்கு படக்குழுவுடன் எடுத்து கொண்ட போட்டோவை தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் . ...

Read More

ஸ்ரீதேவி இழப்பு பலருக்கும் சோகம் தான். இவர் மாரடைப்பால் தான் இறந்தார் என மருத்துவர்களேகூறப்பட்டுவிட்டது. ஆனால், அவர் இயற்கையாக இறக்கவில்லை ...

<
ஸ்ரீதேவி இழப்பு பலருக்கும் சோகம் தான். இவர் மாரடைப்பால் தான் இறந்தார் என மருத்துவர்களேகூறப்பட்டுவிட்டது.ஆனால், அவர் இயற்கையாக இறக்கவில்லை என பிரபல இயக்குனர் சுனில் சிங் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில் அவர் ஸ்ரீதேவி கொலை தான் செய்யப்பட்டார் என்று வழக்கு தொடுத்தார்.மேலும், ஸ்ரீதேவி இறப்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் புகார் கொடுக்க, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ‘துபாய் போலிஸார் தெளிவாக சொல்லிவிட்டனர்.அவர் இயற்கையாக தான் இறந்தார் என்று’ என கூறி இந்த வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்தார். ...

Read More

தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் மக்களின் பிரச்சனை குறித்து படங்கள் பேசும். அதிலும் தற்போது நிகழும் பிரச்சனைகளை தைரியமாக சொல்லும் படங்கள் ம...

<
தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் மக்களின் பிரச்சனை குறித்து படங்கள் பேசும். அதிலும் தற்போது நிகழும் பிரச்சனைகளை தைரியமாக சொல்லும் படங்கள் மிகவும் அரிது.அந்த வகையில் தன் முதல் படத்திலேயே டிஜிட்டல் வளர்ச்சியால் ஏற்படும் அழிவு குறித்து இரும்புத்திரை படத்தை இயக்கியுள்ளார் மித்ரன். ரசிகர்கள் இந்த இரும்புத்திரையை சந்தோஷமாக திறந்தார்களா? பார்ப்போம்.கதைக்களம்டிஜிட்டல் இந்தியாவின் வளர்ச்சி எவ்வளவு பாதிப்பு என்பதே படத்தின் ஒன் லைன். விஷால் ஆர்மி ட்ரெயினிங் ஆபிசர், எதற்கெடுத்தாலும் கோபம், கடன் கொடுப்பவர்களை கண்டால் கடுங்கோபம் என இருப்பவர் விஷால்.(அதற்கான காரணமும் படத்தில் உள்ளது).ஒரு கட்டத்தில் தன் தங்கையின் திருமணத்திற்காக விஷாலே லோன் வாங்கும் நிலைமை வந்துவிட்டது. எங்கு தேடியும் லோன் கிடைக்காததால், ஒரு ப்ரோக்கர் கொடுக்கும் ஐடியாவை வைத்து போலி ஆவணங்கள் தயார் செய்து லோன் பெறுகிறார் விஷால்.ஆனால், அவர் லோன் வாங்கிய அடுத்த சில நாட்களில் விஷால் கணக்கில் இருக்கும் அனைத்து பணமும் வேறு...

Read More

ஆர்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ்..அல்லது ஏ.ஐ. எனப்படும் ‘செயற்கை நுண்ணறிவு’ இனியும் அறிவியல் புனைகதையில் மட்டுமே சாத்தியமாகக்கூடிய விஷயம் என்ற நி...

ஆர்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ்..அல்லது ஏ.ஐ. எனப்படும் ‘செயற்கை நுண்ணறிவு’ இனியும் அறிவியல் புனைகதையில் மட்டுமே சாத்தியமாகக்கூடிய விஷயம் என்ற நிலை மாறிவிட்டது. இந்தத் துறையில் ஆய்வுகள் தீவிரமாக நடைபெற்றுவருவதோடு, இந்த நுட்பம் சார்ந்த சோதனை வடிவிலான சேவைகளும் அறிமுகமாகிக் கொண்டிருக்கின்றன.. அதன் நவீன வடிவமாக இந்த செயற்கை நுண்ணறிவு மூலம் உணவு விடுதி, மருத்துவ மனைகளில் நமக்காக செல்போனில் பேசி அப்பாயின்ட்மென்ட் வாங்கித் தரும் வசதியை கூகுள் அறிமுகப் படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு சவுதி அரேபிய அரசு, சோபியா என்ற பெண் வடிவ ரோபோவை, தன் நாட்டின் முதல் ரோபோ குடி மகளாக அறிவித்த. ஆச்சரியம் அடங்குவதற்குள், நியூசிலாந்தில் செயற்கை நுண்ணறிவு படைத்த, ‘சாட் பாட்’ எனப்படும், பேசும் மென்பொருளை, அந்த நாட்டின் முதல் அரசியல்வாதியாக ஆக்கியிருக்கிறார் அங்குள்ள தொழிலதிபர் நிக் கெர்ரிட்சென் என்ற செய்தி வந்தது நினைவிருக்கலாம். இதனிடையே அமெரிக்காவின் கலிபோர்னி யாவில் நடந்த கணினி மென்பொருள் மாநாட்டில்...

Read More

அண்டத்தைப் பற்றி ஆராயத் தொடங்கினால் நம் ஆயுள் போதாது. இவ்வண்டத்தைப் பற்றி நாம் தெரிந்து வைத்திருப்பது ஒரு சதவிகிதத்திற்கும் கீழ்தான். அந்த ...

<
அண்டத்தைப் பற்றி ஆராயத் தொடங்கினால் நம் ஆயுள் போதாது. இவ்வண்டத்தைப் பற்றி நாம் தெரிந்து வைத்திருப்பது ஒரு சதவிகிதத்திற்கும் கீழ்தான். அந்த அளவிற்குக் கோடிக்கணக்கான விஷயங்களை தன்னுள் புதைத்து வைத்திருக்கிறது பேரண்டம்.  கருந்துளை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா என்றால், நல்லா தெரியுமே என்று பதில் வரும். அந்தளவுக்குச் சாமானியன் வரை கருந்துளையைக் கொண்டு சேர்த்திருக்கிறார் ஸ்டீஃபன் ஹாக்கிங். சரி, வெண்துளையை (White hole) பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? "என்ன ப்ரோ புது ஐட்டமா கேக்குறீங்க" என்கிறீர்களா? கருந்துளை, வெண்துளை எல்லாம் அண்ணன் தம்பிகளைப் போலத்தான். தன் அருகில் இருக்கும் எந்தவொரு பொருளையும் தன்னுள்ளே ஈர்த்துக் கொள்வதைத்தான் கருந்துளை என்கிறோம். கருந்துளையினுள் ஈர்க்கப்பட்ட பொருளால் மறுபடியும் வெளியேற முடியாது, அது ஒளியாக இருந்தாலும் சரி. அந்த அளவிற்கு வலிமையானது கருந்துளையின் ஈர்ப்புவிசை. இப்போது வெண்துளை என்பது கருந்துளையின் அப்படியே நேரெதிர். வெண்துளை தன்னுள் இருக்கும் பொருளை வெளியே கக்கிக் கொண்டே இருக்கும். வெளியில்...

Read More

ரஜினிகாந்த் நடிப்பில் காலா படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் பிரமாண்டமாக நடந்தது. இதில் பல திரை நட்சத்திரங்கள் கலந்துக்கொண்டனர்...

<
ரஜினிகாந்த் நடிப்பில் காலா படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் பிரமாண்டமாக நடந்தது. இதில் பல திரை நட்சத்திரங்கள் கலந்துக்கொண்டனர்.இதில் ரஜினிகாந்த் பேசுகையில் ‘இது ஆடியோ விழா போலவே தெரியவில்லை, படத்தோட வெற்றிவிழா போல் உள்ளது.ஏன் வெற்றிவிழா போல், இது வெற்றிவிழா தான், கடைசியாக நான் கொண்டாடிய வெற்றிவிழா சிவாஜி தான், அதற்கு கலைஞர் கலந்துக்கொண்டு பல விஷயங்களை பேசினார்.அவரின் குரல் இன்னும் மறக்க முடியாது, கூடிய விரைவில் அந்த குரல் மீண்டும் கேட்க வேண்டும், அது தான் என் விருப்பம்.சிவாஜிக்கு பிறகு ரோபோ பெரிய வெற்றியடைந்தது, அந்த படத்திற்கு வெற்றிவிழா கொண்டாட முடியவில்லை, ஏனெனில் எனக்கு உடல் நலம் சரியில்லை.அதை தொடர்ந்து உங்கள் ஆசீர்வாதத்தால் தான் என் உடல் நலம் நன்றாக ஆனது, அதன் பின் மீண்டும் நடித்தால் தான் மனம், உடல் நன்றாக இருக்கும் என்று எண்ணினேன்.நானும் அதை தொடர்ந்து ஒரு சிலர் பேச்சை...

Read More

Search This Blog

Blog Archive

About